கல்வி மதிப்பீட்டின் பயன்கள்

 கல்வி மதிப்பீட்டின் பயன்கள் கல்வி மதிப்பீட்டின் பயன்கள் என்னென்ன நோக்கங்களுக்காகக் கல்வி மதிப்பீடு பயன்படுத் தப்படுகின்றதோ அதற்கொப்ப மதிப்பீட்டின் பயன்களும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. எனினும் இவற்றினைக் கற்போன் சார்பா னவை, கற்பிப்போன் சார்பானவை கல்வித்திட்டம் சார்பானவை நிர்வாகம் சார்பானவை என நான்கு பிரதான பிரிவுகளாக வகைப் படுத்தி இனங்காணமுடியும். கற்போன் சார்பானவை: கற்றற் பணியில் ஈடுபடும் மாணவன் தன்னிடமிருந்து என் னென்ன விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதனை அறிவா னாயின் அது அவனது கற்றல் முயற்சிக்கு உகந்ததாக அமையும். … Read more

மதிப்பீட்டு வகைகளும் பயன்பாடும்

மதிப்பீட்டின் பலதரப்பட்ட பயன்களையும் நோக்கும்போது இவற்றிற்கேற்ப மதிப்பீட்டு வகைகளும் பலதரப்பட்டவையாக அமைய வேண்டியது அவசியமாகின்றது. அப்படியாயின் ஒவ்வொரு பயனுக்கும் ஒவ்வொரு வகை மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுதல் வேண்டும். எனினும் நடைமுறையில் குறிப்பிட்ட மதிப்பீட்டு வகையானது ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவ தையே நாம் காண முடிகின்றது. பாடசாலைகளில் மேற்கொள்ளப் படும் மதிப்பீட்டு வகைகளை நான்காக வகுக்கலாம்.   (1) அமைப்பு மதிப்பீடு (2) கூட்டு மதிப்பீடு (3) தகுதிநிலைகாண் மதிப்பீடு (4) ஆய்ந்தறி மதிப்பீடு இவற்றுள் முன்னைய … Read more

அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?

www.edutamil.com கட்டுரை அடைவுச் சோதனைகள் மாணவனின் பாட அடைவை மதிப்பிடுகையில் இரு பிரதான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். மாணவன், தனக்குரிய அறிவையும் உளத்திறன்களையும் வெளிப்படுத்துவதற் கான ஆற்றலில் அவனது மனவெழுச்சித் தளம்பல்கள், ஆசிரிய மாணவ தொடர்பு, உடல்நலம் முதலிய காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றால் ஏற்படும் விளைவு கணிசமான அளவா யின் மதிப்பீடு சரியாக அமையாது. எனவே மேற்குறிப்பிட்ட காரணி களினால் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்னும் கருது கோளை ஆதாரமாகக் கொண்டு அடைவின் மதிப்பீடு … Read more

அளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ?

www.edutamil.com   அளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ? கல்வி சார்பான தகவல்களை அல்லது அளவீடுகளை அளிக்கும் சிறந்த அளவிடு கருவிகளைத் தெரிவு செய்தல் அல்லது ஆக்குதல் கல்வி மதிப்பீட்டுத் தொழிற்பாட்டின் முக்கிய அம்சமாகும். எனவே சிறந்த அளவிடு கருவியின் இயல்புகளை அறிதல் அவசியமாகின்றது. ஏனைய நாடுகளிலுள்ளது போன்று நமது நாட்டில் நியமப்படுத்திய சோதனைகளின் பயன்பாடு வழக்கில் இல்லை. ஆகக்கூடிய நிலை யில், நாடு முழுவதுக்குமான பொதுச் சோதனைகள் குறிப்பிட்ட சில மட்டங்களில் மட்டும் உண்டு. பெரும்பாலான … Read more

வழிகாட்டல் ஆலோசனை சேவையின் கோட்பாடுகள் எவை ?

www.edutamil.con 1.உளப்பகுப்பு அணுகுமுறைகள்         –     Psycho Analytic Approaches 2.நடத்தை வாத அணுகுமுறைகள்      –     Behavioral Approaches 3. புலக்காட்சி அணுகுமுறைகள்         –     Perceptual Approaches 4. இருத்தலியல் அணுகுமுறைகள்     –       Existential Approaches 5.நியாயித்தல் அணுகுமுறைகள் 1. உளப்பகுப்பு கோட்பாடு *சிக்மன் பிராய்ட், அட்லர், கால்யுவ், டட்டோ . ராங்க. போடீன், சுலிவான் போன்ற உளவியலாளர்களின் கருத்துகள் இக்கோட் பாட்டில் … Read more

தகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள் யாவை?

www.edutamil.com தகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள் பிரதானமாக இவை இரண்டு வகைப்படும். சோதனை முறைகள் சோதனையல்லாத முறைகள் 1.சோதனை முறைகள் நுண்மதிச் சோதனை, அடைவுச் சோதனை, திறன் சோதனை, உளச் சார்புச் சோதனை, சுகாதாரச் சோதனை போன்றவை இவ்வகையில் அடங்கும். கல்விசார் ஆற்றல்கள், பாட அடைவு மட்டம், அறிவாற் றல்கள், செயன்முறைத் திறன்கள், உடல் நிலைமைகள், முன்னேற்ற மட்டம் போன்றவை பற்றிய விளக்கங்களைப் பெறுவதற்காக இச் சோதனைகளைப் பயன்படுத்தலாம். குரோம்பாக் என்பார் சோதனை முறையைப் பயன்படுத்தி அடையத்தக்க … Read more

சோதனையின் நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் யாவை?

ஒரு சோதனையின் நம்பகக் குணகத்தை அறிவதன் மூலம் இக்கருவி அளிக்கும் அளவீடுகளில் எத்தகைய நம்பிக்கையை மேற் கொள்ளலாமென அறிய முடியும். அத்துடன், சோதனையின் நம்பகம் தாழ்வாகக் காணப்படின் அதனை உயர்த்துவதற்கான வழிமுறை களை மேற்கொள்ள வேண்டியும் ஏற்படலாம். எனவே, சோதனை யின் நம்பகப் பெறுமதியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனி நோக்குவோம். 1. சோதனையின் நீளம்: சோதனை ஒன்றில் வினாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அ. அளவிடப்படுகின்ற மாணவர் நடத்தைகளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கின்றது. ஆ. தற்செயல் வழுக்களின் … Read more

அளவீட்டின் வகைகள்

www.edutamil.com ஒரு பொருளைத் தொகையளவாற் குறிப்பிடுதல் என்பதிலிருந்து அளவீட்டின் பெறுபேறுகள் எப்பொழுதும் எண்களில் மட்டுமே தரப்படும். எண்களினாற் குறிப்பிடப்படுகின்ற பலவகையான அளவீடுகள் ஒவ்வொன்றும் பெயர் அளவிடை வரிசை அளவிடை ஆயிடை அளவிடை விகித அளவிடை என்னும் நான்கு வகை அளவீடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளடக்கப்படும்   பெயர் அளவிடை: பல்வேறு வகைகள் அல்லது வகுப்புக்களைக் குறிக்கின்ற எண்கள் பெயர் அளவிடையினுள் அடங்கும். அதாவது இவ்வெண்கள் பொருள்களைச் சுட்டி நிற்கும் பெயர்களாக அல்லது குறியீடுகளாகத் தொழிற்படுவனவேயன்றித் தமக்கிடையே வேறு … Read more

வினையாற்றல் அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?

www.edutamil.com வினையாற்றல் அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ? மாணவனின் அடைவை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு எழுத்துச் சோதனைகள் மூலம் பெறப்படும் தகவல்கள் போதுமான வையல்ல. மாணவனைப் பற்றிய சொல்சார், கணிதம்சார் அறிவை வைத்துக் கொண்டு அவனது உடல்சார் தொழிற்பாடுகள் பற்றிச் சரியான அனுமாங்களை மேற்கொள்ள முடியுமா என்பது ஒரு முக்கிய வினாவாகும். உதாரணமாக, விஞ்ஞான மாணவனொருவன் குறிப்பிட்ட சில விஞ்ஞான விதிகளைப் பற்றியும் அவற்றினைப் பிரயோகிப்பது பற்றியும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளான் என விஞ்ஞான பாட … Read more