சோதனையின் நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் யாவை?


ஒரு சோதனையின் நம்பகக் குணகத்தை அறிவதன் மூலம் இக்கருவி அளிக்கும் அளவீடுகளில் எத்தகைய நம்பிக்கையை மேற் கொள்ளலாமென அறிய முடியும். அத்துடன், சோதனையின் நம்பகம் தாழ்வாகக் காணப்படின் அதனை உயர்த்துவதற்கான வழிமுறை களை மேற்கொள்ள வேண்டியும் ஏற்படலாம். எனவே, சோதனை யின் நம்பகப் பெறுமதியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனி நோக்குவோம்.

1. சோதனையின் நீளம்: சோதனை ஒன்றில் வினாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம்

அ. அளவிடப்படுகின்ற மாணவர் நடத்தைகளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கின்றது.

ஆ. தற்செயல் வழுக்களின் செல்வாக்கு வீழ்ச்சியடைகின்றது. இவை காரணமாகச் சோதனையின் நம்பகத்தன்மை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

2. சோதனைக் குழுவின் ஆற்றல் வீச்சு: சோதனைக்குட்படுத்தப் படும் மாணவர்களது ஆற்றல்கள் பரந்த வீச்சிற் காணப்படு மாயின் ஒவ்வொரு மாணவனதும் சார்நிலையிலும் அளவீட்டு வழுக்களின் செல்வாக்குக் குறைந்து காணப்படும்.

3. சோதனையின் கடினத் தன்மை: மாணவர் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட சோதனையானது மிகக் கடினமாகவோ அல்லது மிக இலகுவாகவோ காணப்படுமாயின் தாழ் நம்பகமுடைய புள்ளிகளையே அது வழங்கும். மேலும், சோதனையின் நம்பகமானது அதன் வெவ்வேறு கடின மட்டத்தில் வெவ்வேறு பெறுமதிகளை ஏற்கும். கடின வீச்சு குறுகியதாயின் அதன் நம்பகம் உயர்வாவதற்கு வாய்ப்புண்டு.

4. ஒன்றிலொன்று தங்கியிருக்கும் வினாக்கள்: ஒரு வினாவுக்கான பதில் இன்னொரு வினாவில் தங்கியிருக்கு மாயின், இரு வினாக்களுக்கும் சரியான விடை அளிக்கப்பட்டி ருக்கலாம் அல்லது இரண்டுக்கும் சரியான விடை அளிக்கப் படாதிருக்கலாம் அல்லது இரண்டுக்கும் சரியான விடை அளிக் கப்படாதிருந்திருக்கலாம். நிலைமை எதுவாயினும், இதன் விளைவு சோதனையின் வினாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குச் சமனாகும்.

5.வினாக்களின் ஓரினத்தன்மை: சோதனை வினாக்கள் ஓரினத்தன்மையுடையனவாயின் அதன் நம்பகம் உயர்வாகக் காணப்படும்.

6. வினாவின் அமைப்பு: வினாவில் பயன்படுத்தப்படும் உள எழுச் சியைத் தூண்டும் சொற்கள், வாக்கிய அமைப்பு, வினாவின் நீளம் போன்ற காரணிகள், வினாவைச் சரியாக விளங்கிக் கொள் வதற்குத் தடையாக இருப்பதுடன், சில சமயம் பிழையான விளக்கத்தினையும் பெற வைக்கின்றன. இதன் காரணமாகவும் சோதனையின் நம்பகம் தாழ்த்திக் காட்டப்படுகின்றது.

7. பயிற்சியும் பழக்குதலும்: சோதனைக்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதாலும் அதன் நம்பகம் குறைவதற்கு இடமுண்டு. மாணவரிடையே விரைவாக விடையிறுக்கும் திறனை எதிர் பார்க்கும் பயிற்சி, பழக்குதல் ஆகியவற்றின் விளைவு கூடுதலாகப் புலப்படுகின்றது.

8. மாணவனின் உடல்நிலையும் உளநிலையும்: தேர்வின் போது மாணவரிடத்தே காணப்படும் ஊக்கிகள், கவனச்சிதைவுகள், நோய் கவலை, பதற்றம், ஏமாற்று நடவடிக்கைகள் போன்ற உடல், உள நிலைப்பாடுகள் சோதனையின் புள்ளிகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணத்தினால் சோதனைகளின் நம்பகம் பெரிய பாதிப்புக்குள்ளாகின்றது.

9. புள்ளி வழங்கலில் குறைபாடு: புள்ளி வழங்குதலில் பல குறை பாடு உண்டு. இக்குறைபாடுகள் காரணமாக ஒரு மாணவனுடைய விடைக்குக் கிடைக்க வேண்டிய புள்ளி அப்படியே கிடைப்ப தில்லை. சில சமயம் கூடியும், வேறு வேளைகளில் குறைந்தும் கிடைக்கின்றது. இவ்வழு காரணமாக ஏற்படுவது புள்ளியிடு வோனின் நம்பகத்தன்மை சார்பானதே தவிரச் சோதனை சார்ந்த குறைபாடல்ல எனக் கருதுவோரும் உளர். நிலைமை எதுவாயி னும் மாணவனது உண்மை ஈட்டைப் புலப்படுத்தாத புள்ளிக ளைப் பயன்படுத்திக் கணிக்கப்படும் சோதனையின் நம்பகமா னது உண்மைப் பெறுமதியினின்றும் வேறுபட்டே காணப்படும்.

10. நம்பகக் கணிப்பு முறைகள்: வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்திச் சோதனையின் நம்பகக் குணகத்தைக் கணிப் பிடும்போது வெவ்வேறு பெறுமதிகள் கிடைக்கின்றன. கணிப்பு முறை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான நம்பகக் குண கத்தை அளிப்பதால், இப்பெறுமதிகளை அவற்றின் எண் பெறு மானம் சார்பாக ஒப்பிடுதல் பொருத்தமற்றதாகும். நம்பகத்தைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அளவைகளின் எண்ணிக் கையைப் பொறுத்தும் நம்பகக் குணகப் பெறுமதிகள் வெவ்வேறு விளக்கம் பெறுகின்றன. பெருந்தொகையான அளவைகளைப் பயன்படுத்திக் கணிக்கப்பட்ட நம்பகக் குணகத்தின் எண் பெறு மானம் சிறிதாக இருப்பினும் சோதனையின் நம்பகம் உயர்வா கக் கருதப்படலாம். நம்பகக் கணிப்பு முறைகள் சார்பாகச் சில கருத்துக்களை இங்கு நோக்குவோம்.

அ. சோதனை மறுசோதனை முறையில் நம்பகக் குணகப் பெறுமதிகள் சாராசரியிலிருந்து உயர் பெறுமானம் வரை காணப்படும். இரு சோதனை நிலைமைகளுக்கிடையி லான கால இடை பெரிதாகிச் செல்ல நம்பகக் குணகத்தின் பெறுமதி சிறிதாகிச் செல்லும்.

ஆ. சமவலுச் சோதனை அமைப்பு முறையில், கால இடை இல்லாத நிலைமைக்கு நம்பக் குணகப் பெறுமதியானது சராசரியிலிருந்து உயர் பெறுமானம் வரை காணப்படும். கால இடையிருப்பின் நம்பகக் குணகப் பெறுமதியானது சிறிதாகக் காணப்படும். கால இடை அதிகரித்துச் செல்லும் போது நம்பகக் குணகப் பெறுமதி சிறிதாகிச் செல்லும்.

இ. இருபாதி முறையில், நம்பகக் குணகப் பெறுமதி உயர் வாகப் பெறப்படும். விரைவு போன்ற காரணிகள் நம்பகக் குணகத்தைப் பெருப்பித்துக் காட்டுகின்றன.

ஈ. சூத்திரம் K-R_ மூலம் பெறப்படும் நம்பகக் குணகம் பெரும் பாலும் இருபாதி முறைப் பெறுமதியை ஒத்ததாகக் காணப்படும். ஆனால், அதே சோதனைக்குரிய K-R, இன் மூலம் பெறப்படும் நம்பகக் குணகப் பெறுமதி தாழ்வாகப் பெறப்படும்.


தகுதி:

தகுதி என்பது ஓர் அளவிடு கருவியின் மிகப் பிரதானமான இயல்பு என முன்னர் குறிப்பிட்டோம். சோதனை சிறந்ததாக அமை வதற்கு நம்பகம் ஓர் அவசியமான நிபந்தனையே தவிரப் போதுமா னளவு நிபந்தனையல்ல. உயர் நம்பகத்தையுடைய சோதனை சிறந்த சோதனையாக இருக்க வேண்டுமென்னும் நியதியில்லை என்பது இதன் பொருளாகும். ஆனால், உயர் தகுதியுடைய சோதனை நம்பக முடையதாகவும் காணப்படும். அதாவது, சோதனையின் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுவதற்கு நம்பகத்துடன், தகுதி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

சோதனை எதனை அளவிடுகின்றது. எந்த அளவுக்கு அளவிடு கின்றது என்பதனைப் பற்றிக் குறிப்பிடுவது தகுதியாகும். அதாவது சோதனையானது எதனை அளவிடும் பொருட்டு ஆக்கப்பட்டதோ அத்தேவையை எந்த அளவுக்குத் திருப்திப்படுத்துகின்றது என்பத னைப் பற்றிய விளக்கம் அளிப்பதே, தகுதி என்பதனாற் கருதப்படு கின்றது. எது அளவிடப்படும் பொருட்டுச் சோதனை ஆக்கப்பட் டதோ அது தவிர வேறு எதனையும் அச்சோதனை அளவிடக்கூடாது என்னும் கருத்தும் இங்கு புலப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.

                     மேலும் வாசிக்க – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

தகுதி என்பது சோதனையில் உண்டா இல்லையா என்னும் வினாவுக்கு இங்கு இடமில்லை. எல்லாச் சோதனைகளும் ஏதோ ஒரு வகையிற் தகுதியைக் கொண்டுள்ளன. எனவே, உயர் தகுதி, தாழ்தகுதி எனக் குறிப்பிடுதலே பொருத்தமாகும். அளவீட்டின் நோக் கத்தைப் பொறுத்தே தகுதி தீர்மானிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு தேவையின் பொருட்டுத் தகுதி குன்றிக் காணப்படும் ஒரு சோதனை யானது இன்னொரு தேவையின் பொருட்டு உயர் தகுதியைக் கொண்டதாகக் காணப்படலாம். பெளதிக அளவிடு கருவி ஒன்றின் உதாரணம் மூலமாக இதனை நோக்குவோம். நிறுத்தற் கடிகாரம் ஒன்றின் பயன்பாட்டை நோக்குக. குறிப்பிட்ட ஒரு சம்பவம் எந்த நேரம் நடைபெற்றது என அறிவதற்கு இக்கடிகாரம் பயன்படாது. ஆனால் குறிப்பிட்ட ஒரு நேர இடையை உதாரணமாக நூறு மீற்றர் தூரத்தை ஒருவர் ஓடி முடிக்க எடுக்கும் நேரத்தை, மிக நுணுக்கமாக அளவிடுவதற்கு இது மிகவும் பொருத்தமான கருவியாகும். இங்கு, முதலாவது தேவையின் பொருட்டுத் தகுதி குன்றிக் காணப்படும் நிறுத்தற் கடிகாரமானது இரண்டாவது தேவையின் பொருட்டு உயர் தகுதியுடையதாகக் காணப்படுகின்றது.

தகுதியைத் துணிதல்:

அளவிடும் நோக்கத்தைப் பொறுத்தே சோதனையின் தகுதி பற்றிக் குறிப்பிட முடியும் என்பதிலிருந்து, தகுதியின் வகைகள் ஏராள மென்பது வெளிப்படை. எனினும், சோதனையின் தகுதியைத் தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள், நோக்கம் என்பவை சார்பாகத் தகுதியின் நான்கு பிரதான வகைகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. அவையாவன:

1.உள்ளடக்கத் தகுதி

2. அமைப்புத் தகுதி

3. முன்னறி தகுதி

4. உடன்நிகழ் தகுதி

இவற்றுள் முன்னைய இரண்டும் தருக்க முறையினால் தீர்மா னிக்கப்படுகின்றன. பின்னைய இரண்டும் புள்ளி விபரவியல் முறை களினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவையிரண் டும் நியதிசார் தகுதிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

1. உள்ளடக்கத் தகுதி:

குறிப்பிட்ட பாடப்பரப்பில் அல்லது கற்றல் நிலைமையில் மாண வனின் தற்போதைய நிலை எந்த அளவில் உண்டு என்பதனை அறிந்துகொள்ளுதல் சோதனையின் நோக்கமாயின், இங்கு அச்சோத னையின் உள்ளடக்கத் தகுதி கருதப்படுகின்றது எனலாம். குறிப்பிட்ட சில திறன்கள் அல்லது விடயங்களில் மாணவன் பெற்றுள்ள தேர்ச்சி யைத் தீர்மானிக்கும் பொருட்டுச் சோதனை அமைக்கப்பட்டதென்க. அளவிடப்பட வேண்டிய மாணவர் நடத்தைகளைப் பிரதிநிதித்துவம் செய்யுமளவுக்கான வினாக்களைச் சோதனை கொண்டுள்ளதா என் பது படிமுறையான பகுப்பாய்வொன்றின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.

மாணவன் ஈடுபடும் கற்றற் பணிகளைத் தீர்மானிக்கின்ற பாடத் திட்டங்கள், பாடநூல்கள், கைந்நூல்கள் என்பன விரிவாக ஆராயப்பட்டு, அவை சோதனை வினாக்களினால் புலப்படுத்தப் படும் பாடவிடயம், வெவ்வேறு பகுதிகளைக் குறிக்கும் வினாக்களின் விகிதாசாரம் என்பவற்றுடன் ஒப்பு நோக்கப்படுகின்றன. பாடத் தலைப்புகளை ஓர் அச்சிலும் உளத்திறன்கள் அல்லது உளத் தொழிற் பாடுகளை மறுஅச்சிலும் கொண்ட ஒரு விடய – திறன் அட்டவணை யின் பிரயோகம் தகுதியைத் தீர்மானிக்கும் பணியை இலகுவாக்கின்றது.

பொதுவாக உயர் உள்ளடக்கத் தகுதிகொண்ட சோதனைகளே மாணவரின் அடைவை அளவிடுதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நியதிசார் சோதனைகளுக்கு உள்ளடக்கத் தகுதி மிகவும் பொருத்தமானதாகும். பொருத்தமற்ற காரணிகள் சோதனைப் புள்ளி களில் பிரதிபலிக்கும் நிலைமையும் இங்குண்டு. உதாரணமாக விஞ்ஞானப் பாடத்தில் மாணவர் திறமையை அளவிடும் பொருட்டு ஆக்கப்பட்ட ஒரு சோதனையை நோக்குவோம். இதன் வினாக்களிற் காணப்படும் கடினமான சொற்கள் அல்லது வாக்கிய அமைப்பா னது மாணவர் வினாக்களை விளங்கிக் கொள்வதற்குத் தடையாக இருக்குமாயின் பெறப்பட்ட புள்ளிகள் விஞ்ஞான பாடத்தில் மாண வரின் திறமையை மட்டும் சுட்டிக்காட்டவில்லை அவனது மொழி யாற்றலையும் குறிப்பிடுகின்றன. எனவே, இவ்வாறான பிரச்சினை களும் சோதனையின் உள்ளடக்கத் தகுதியின் தீர்மானத்தின்போது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். உளச்சார்பு, ஆளுமைக் கூறுகள், மனப்பாங்குகள் என்பவற்றை அளவிடும் சோதனைக ளுக்கு இவ்வகை தகுதி பொருத்தமற்றதாகும்.

2. அமைப்புத் தகுதி:

நுண்மதி, மொழியாற்றல், விரைவாக எழுதுதல், விளக்கம் பெறும் திறன், இணக்கத்தன்மை, அகவயத்தன்மை என்பன உளவியலமைப்புக்கள் அல்லது உளவியற் கூறுகளுக்குச் சில உதார ணங்களாகும். இவை யாவும் உளவியற் துறையிலுள்ள அறிமுறை சார் எண்ணக்கருக்களாகும். குறிப்பிட்ட சில உள அமைப்புகள் அல் லது கூறுகளை ஒரு சோதனையானது எந்த அளவுக்கு அளவிடுகின் றது என்பதனைக் குறிப்பிடுதல் அமைப்புத் தகுதியாகும்.

வழமையாக உளச்சார்புச் சோதனைகள், ஆளுமைச் சோத னைகள் ஆகியவற்றிற்கு இவ்வகைத் தகுதி காணப்படுகின்றது. உதார ணமாக, நுண்மதிச் சோதனை ஒன்றினை நோக்குவோம். பிள்ளை களின் குறிப்பிட்ட வயதுவரை உள ஆற்றல்களாவன வயதுடன் அதிகரித்துச் செல்லும் தன்மைகொண்டன என நம்பப்படுகின்றது. எனவே, நுண்மதிச் சோதனையிற் கிடைக்கும் புள்ளிகள், வயது அதிகரிப்புடன் அதிகரித்துக் காணப்படின், அச்சோதனை உயர் அமைப்புத் தகுதி உடையதெனக் கருதப்படும். உளவியற் கூறுகளை இனங்காணுதலுக்கான புள்ளிவிபரவியல் முறையாகிய காரணிப் பகுப்பும் அமைப்புத் தகுதியின் தீர்மானத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது.

3. முன்னறி தகுதி :

குறிப்பான நிலைமைகளில் ஒருவனது நடத்தையானது எவ் வாறு அமையுமென்பதனை எதிர்வு கூறுவதில் சோதனை எத்தகைய திறமை வாய்ந்தது என்பதனை முன்னறி தகுதி சுட்டிக்காட்டவல்லது. ஒருவனது எதிர்கால நிலைபற்றி ஒரு நியதியை நாம் தீர்மானிப்பின், அதனுடன் இச்சோதனைப் புள்ளியானது கொண்டுள்ள இச்சோதனையின் முன்னறி தகுதிக்கான பெறுமதியாகும். உதாண ரமாக, விசேட விஞ்ஞான பாடநெறிக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு விஞ்ஞான உளச்சார்புச் சோதனை ஒன்று வழங் கப்பட்டதென்க. இச்சோதனையில் உயர் புள்ளிகள் பெறும் மாண வர் அப்பாடநெறியின் முடிவில் அப்பாடநெறி தொடர்பாக உயர் தேர்ச் சியைப் பெறுவரா என்பதனை எந்த அளவுக்குச் சுட்டிக்காட்டுகின் றதோ அதனைப் பொறுத்து அச்சோதனையின் தகுதி தீர்மானிக் கப்படும்.

முன்னறி தகுதி காணப்பட வேண்டிய சோதனையானது குறிப்பிட்ட கல்வித்திட்டம் ஒன்றில் உட்புகும் மாணவர் தொகுதிக்கு வழங்கப்பட்டுப் புள்ளிகள் பெறப்படுகின்றன. இவர்களின் முன்னேற் றப் போக்கு தொடர் நோக்கலுக்குட்படுத்தப்பட்டு அவர்கள் ஒவ்வொ ருவரினதும் தேர்ச்சிநிலை அல்லது வெற்றிநிலையின் நியதிசார் அளவீடு பெறப்படுகின்றது. முன்னர் பெறப்பட்ட சோதனைப் புள்ளி களுக்கும் பின்னர் பெறப்பட்ட தேர்ச்சி நிலை அளவீட்டுப் பெறுமதி களுக்குமிடையிலான இணைபுக் குணகம் கணிக்கப்படுகின்றது. கணிக்கப்பட்ட இணைபுக் குணகப் பெறுமதியானது சோதனையின் முன்னறி தகுதியைக் குறிப்பிடுகின்றது. குறிப்பான தேவைகளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ஆட்தெரிவு, குழுக்களாகப் பகுத்தல் ஆகியவற்றின் பொருட்டுச் சோதனையின் முன்னறி தகுதி பற்றிய அறிவு பயன்படுகின்றது.

4. உடன் நிகழ் தகுதி:

எல்லா நிலைமைகளிலும் சோதனையின் முன்னறி தகுதியைப் பெறுதல் இயலாது. முன்னறிகாண் செயற்பாடுகளை நீண்ட காலத் துக்குத் தொழிற்படவைக்கவும் இயலாது. இவ்வாறான நிலைமை களில் உடன்நிகழ் தகுதி பயன்படுகின்றது. இது ‘உடன் பெறு தகுதி? எனவும் வழங்கப்படுவதுண்டு.

ஒரு தொகுதி மாணவருக்குச் சோதனை வழங்கப்பட்டு புள்ளிகள் பெறப்படுகின்றன. மாணவரின் என்னென்ன இயல்பு களை இச்சோதனை அளவிடுகின்றதோ அதே இயல்புகள் பற்றி வேறு அளவிடு முறைகளுக்கூடாகப் பெறப்படும் அளவீடுகளுக்கும் இச்சோதனைப் புள்ளிகளுக்குமிடையிலான இணைபுக் குணகம் கணித்தறியப்படுகின்றது. இப்பெறுமதி அச்சோதனையின் உடன் நிகழ் தகுதியைக் குறிப்பிடுகின்றது.

இங்கு, இணைபுக் குணகக் கணிப்பின் பொருட்டுப் பயன்படுத் தப்பட்ட இரு தொகுதி அளவீடுகளும் மாணவரின் ஒரே இயல்பி னைப் புலப்படுத்தும் சமகால அளவைகள் என்பது கவனிக்கப்பட வேண்டும். மாணவரின் சமகால அளவைகள் குறிப்பிட்ட ஓர் அடை வுச் சோதனையின்பாற் பெறப்பட்ட புள்ளிகளாகவோ அல்லது ஆசிரியரின் மதிப்பீட்டுத் தரங்களாகவோ இருக்கலாம்.

நடைமுறை இயல்புகள்:

சோதனையின் பிரதான இயல்புகளான நம்பகம், தகுதி என்பவற்றினை உயர்நிலையிற் பேணக்கூடியவாறு ஒரு சோதனை அமைக்கப்பட்டிருக்கலாம். ஆயினும், இதனை வழங்கிப் புள்ளியிட் டுப் பயன்படுத்துதல் தொடர்பாகப் பல பிரச்சினைகள் எழலாம்.

வினாத்தாளை எவ்வடிவில் வழங்கலாம்? சோதனையை எவ் வாறு நிர்வகிக்கலாம்? இதற்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய முடிகின்றதா? புள்ளியிடுதலை உரிய நேரத்துள் செய்ய முடியுமா? சோத னைக்கான நிதி, காகிதாதிகள் ஆகியன ஏற்றாற் போல் அமையுமா? மாணவர் இச்சோதனையை விருப்புடன் அணுகுவாரா? என்பன போன்ற பல்வேறு வினாக்கள் சோதனையை நடைமுறைப்படுத்து தல் தொடர்பாக எழலாம். இவ்வாறான வினாக்களின் தீர்வுக்கான எந்த நடவடிக்கையும் சோதனையின் பிரதான இயல்புகளாகிய நம்பகம், தகுதி என்பவை பாதிப்புறா வண்ணம் அமைதலே சிறந்தது.


Leave a Comment