விழுமியங்கள் சம்பந்தமாக ஆசிரிய அணுகுமுறைகள் யாவை?

விழுமியங்கள் சம்பந்தமாக ஆசிரிய அணுகுமுறைகள்
www.edutamil.com


மாணவர்களின் விழுமிய வளர்ச்சிக்கு ஆசிரியர்களால் செய்யக்கூடியவை எவை? பாடசாலைகளில் அது சம்பந்தமாக ஆசிரியர்கள் செயற்படும் விதத்தைப் பார்க்கும்பொழுது மூன்று அணுகல்களைக் காணக் கூடியதாக உள்ளது. அவையாவன –

(மெரில் ஹாமின் என்பவரும் சிட்னி சைமன்)

1. எதையும் செய்யாதிருத்தல்

2. முன் நிச்சயித்த விழுமியக் கோவையைச் சமர்ப்பித்தல்

3. தனக்கேயுரித்தான விழுமியக் கோவையொன்றைத் தேடிக் கொள்வதற்கு வழிகாட்டுதல்

1. எதையும் செய்யாதிருத்தல்

மாணவர்களின் விழுமிய வளர்ச்சிக்கு எதையும் செய்யாமல் ஆசிரியர்கள் இருப்பர். அவர்கள் தமது கொள்கையை நியாயப்படுத்துவதற்குப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

1.தமது கடமை தமக்களிக்கப்பட்ட பாடத்தைக் கற்பித்தல் என்பதும் விடயங்களைச் செய்வதற்குத் தமக்கு நேரம் இல்லையென்பதும். வேறு

2. தமக்கு விழுமியப் பாடப் பொருள் பற்றி சரியான அறிவோ பயிற்சியோ இல்லையென்பதும் அது தமக்குப் பழக்கமற்ற தென்பதும்.

3. விழுமியங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்பவைகளே தவிர கற்பிக்கக்கூடியவை அல்ல என்பதும்.

4. தற்போதுள்ள பிழையான சமூக முறையினுள் இருந்து கொண்டு விழுமியங்களைக்

கற்பித்தல் பயனற்றது என்பது. முதலில் சமூக முறையைத் திருத்தியமைக்க வேண்டும். இது பெரும்பாலும் எதிர்மறையான அல்லது சோம்பலான கொள்கையாக இருப்பதைக் காணலாம்.

முன் நிச்சயித்த விழுமியக் கோவையைச் சமர்ப்பித்தல் இது மரபு முறையான அணுகலாகும். சமூகத்திற் பெரியவர்களால் விதந்துரைக்கப்பட்ட விழுமியங்கள் அப்படியே பிள்ளைகளுக்கு மாற்றப்படுவதை நாம் காணலாம். இங்கு பிள்ளைகள் இனம் அல்லது மதம் என்ற வட்டத்துள் செயற்படுத்தப்படுகின்றனர். மேலும் சில ஆசிரியர்கள் தாங்கள் சரியானவையெனக் கருதும் விழுமியங்களை அப்படியே மாணவர் மனதில் பதியச் செய்வதற்கு முயல்கின்றனர். இவ்வாறு சமூகம் விதந்துரைத்த விழுமியக் கோவையைப் பிள்ளைகளுக்குப் புகட்டுவதற்கு முக்கியமாகக் கையாளப்படும் முறைகள் பின்வருமாறு.

ஆசிரிய முன்மாதிரி நிச்சயிக்கப்பட்ட விழுமியங்களை ஆசிரியர் தம் நடத்தை மூலம் முன்மாதிரியாகக் கொள்கிறார். முன்மாதிரி பிரபல கற்றல் முறையாகும். எல்லா முன்மாதிரியாக இருக்கவேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கின்றன. நாடுகளும் ஆசிரியர் மாணவர்களுக்கு அது ஆசிரியரின் முக்கிய கடமையாகும்.

ஆனால் இதில் பிரச்சினைகளும் எல்லைகளும் இல்லாமல் இல்லை. ஆசிரியர் ஒரு வகையான முன்மாதிரியைக் கொடுக்கும் பொழுது அதனிலும் வேறான வகையில், சில வேளைகளில் அதற்கு முற்றிலும் மாறான முன்மாதிரிகளை அளிப்போரைப் பிள்ளைகள் சந்திப்பர். இங்கு ஆசிரியர் முன்மாதிரியாக மட்டும் இருந்தால் வேறு முன்மாதிரிகள் சம்பந்தமாக எவற்றைத் தெரிவு செய்தல் வேண்டும் என்று தெரியாமல் மாணவர் திண்டாடக் கூடிய நிலை ஏற்படக் கூடும். மேலும் ஆசிரியரின் ஆளுமைச் செல்வாக்கின் கீழ் எந்தநாளும் மாணவர்களை வைத்துக்கொண்டிருக்கவும் முடியாது.

மறுபுறம். வேண்டுமென்றே முன்மாதிரியாக நடக்க முயலும் ஆசிரியர் மனநோயாளியைப் போல் நடப்பதாக மாணவர் எண்ணக்கூடும். அதேபோல் சில ஆழமான விழுமியங்களை முன்மாதிரிமூலம் எடுத்துக்காட்டுதல் முடியாத காரியம். ஆனாலும் இதன்மூலம் ஆசிரிய முன்மாதிரியைக் குறைவாக மதிப்பிடல் எமது நோக்கமன்று.

பரிசுகளை வழங்கலும் தண்டனை வழங்கலும்

இது நடத்தைவாத அணுகலாகும். பிள்ளை எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் செயற்பட்டவிடத்து ஆசிரியர் புகழ்தல், பரிசு, புள்ளிகள் வழங்குதல், பதக்கம் அணிவித்தல் போன்ற பயன்களை வழங்குதல் வேண்டும். அதனால் பிள்ளைகள் அச்செயலை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டப்படுகின்றனர். இதனையே ஸ்கின்னர், அல்பர்ட் பந்துரா போன்ற உளவியலறிஞர்கள் ‘தூண்டுதல்’ என்று கூறுகின்றனர்.

தண்டனை வழங்குதல் எதிர்மறையான தூண்டுதல் முறையாகும். இதன்மூலம் தேவையற்ற நடத்தைகளைக் குறைத்துக் கொள்ள அல்லது கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்நடத்தைவாத அணுகலுக்காக எதிர்பார்த்த விதத்தில் பிள்ளைகள் நடந்து கொள்வதற்கு வெளிவசதிகள், உபகரணங்கள், தூண்டுதல், சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவற்றை வழங்குதல் அவசியமாகும். தேவையற்ற நடத்தைகளைக் கவனிக்காது விடுவதும் இங்கு கையாளக்கூடிய ஒரு நுட்பமுறையாகும்.

ஆரம்ப வகுப்புக்களில் இது பயனுள்ளதாக இருந்தாலும் அறிவு விரிந்து செல்லும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு அது அவ்வளவு பயனற்றதாக அமையலாம். இங்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகள் தனியே வெளிப்புற நடத்தையைச் சரிப்படுத்துவனவாகவே உள்ளன. மனிதனின் உள்ளத்தில் தோன்றுகின்ற கருத்துக்கள், உணர்வுகள், மனப்பாங்குகள் போன்றவற்றை மாற்றுவதற்கு இவ்வணுகல் முயற்சியெடுப்பதில்லை. அதனால் வெளிப்புறத்தில் ஏற்படுத்துகின்ற நடத்தைச் சரிப்படுத்துகை காலப்போக்கில் இல்லாமற் போவதற்கு இடமுண்டு.

விவரங்களை வழங்குதல்

பிள்ளைகளுக்கு ஏதாவது விதியொன்றை வழங்கும்போது அதற்கான காரணத்தை விளக்க வேண்டுமென உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

பொய் சொன்னால், சமூகம் உங்கள் சொற்களை நம்பமாட்டாது. நீங்கள் களவெடுத்தால், உங்கள் மனச்சாட்சி உங்கள் உள்ளத்தை உறுத்தும். அது உங்களை ஏளனம் செய்யும் பழக்கமாவதற்கும் இடமுண்டு. நீங்கள் களவெடுத்த விடயம் தெரிய வந்தால் சமூகம் என்ற வகையில் விழுமியச் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்ற காரணங்களைக் காட்டுதல் பெருமளவுக்குப் பயன்தரும். ஆனாலும் ஏதாவதொரு விழுமியத்துக்குரிய காரணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்காட்ட முடியாது. ஆசிரியர் கூறும் தீய விளைவுகள் கிடைக்காத சந்தர்ப்பம் ஏற்படுமேயானால், அதன்மூலம் பிழையான நடத்தைக்குத்தூண்டுதல் ஏற்பட இடமுண்டு.

நிந்தனை செய்தல்

பிள்ளை தவறான செயலைச் செய்தால் அதனை வளர்ந்தவர்கள் பொதுவாக இழிவாகக் கருதுகின்றனர்; நிந்திக்கின்றனர்; இழிவு படுத்துகின்றனர். சிலவேளைகளில் ஆசிரியர்களும் தம்மையறியாமலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றனர். இவ்வகைகளிலிருந்து புலப்படுவது யாதெனில் தமது ஆதிக்கத்திற்குட்பட்டுப் பிள்ளைகள் இருக்கவேண்டும் என்பதேயாகும். இதன்மூலம் ஓரளவுக்குக் கற்றல் நடைபெற்றாலும் அதன்மூலம் பிள்ளை அடைகின்ற மனவிரக்தியும் தூண்டப்படுகின்றது. மனக்கஷ்டமும் காரணமாக எதிர்மறையான மனப்பாங்குகளைப் பெறுகின்றனர்.

ஒருபுடை அணுகல்

பல சந்தர்ப்பங்களில் வளர்ந்தோரும் ஆசிரியர்களும் ஒரு விழுமியத்துக்குப் பிள்ளைகளைத் தூண்டுவதற்காக அதன் ஒரு புறத்தை மட்டும் விளக்கி, மறுபுறத்தை மூடிமறைக்கின்றனர். உண்மையைத் திரித்துக் கூறலும் இவ்வகையினுள் அடங்கும் செயலாகும்.

நன்றாகக் கற்றுப் பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை வெற்றிபெறும்

சர்வகலாசாலைக்குச் சென்றால் மட்டுமே உங்கள் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்”இத்தகைய கூற்றுக்கள் பிள்ளைகளைப் பிழையாக வழிநடத்துபவைகளாகும். இவை உண்மையானவையல்ல எனக் காணும்போது ஆசிரியர் பொய்காரர் என்ற உணர்வு மாணவர்

 

மனதினுள் ஏற்பட இடமுண்டு.

மாணவர்களை ஒரு விழுமியத்தில் வைத்திருப்பதற்கு அவர்களது கற்றலனுபவங்களை மட்டுப்படுத்தலும் ஒருபுடை அணுகலாகும்; மற்ற சமயப் புத்தகமொன்றை வாசிப்பதைத் தடுத்தல் இதற்கு உதாரணமாகும். இந்த முறையானது பெரும்பாலும் தற்காலிகமானதே. ஏனெனில் மாணவர்கள் அம்மட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தை விரைவில் கடந்து செல்வர்.

மேலே காட்டப்பட்ட முன் நிச்சயித்த விழுமியக் கோவையைச் சமர்ப்பிக்கும் எல்லாமுறைகளும் ஆசிரிய மையம், ஆசிரிய ஆதிக்கம் என்பவற்றை புலனாகும். அடிப்படையாகக் கொண்டவை என்பது பாடசாலையில் விழுமியம் விழுமியப் பாடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பு இல்லை. அதேபோல் விழுமியங்கள் பூரணமாக எமது உயிரியல் அமைப்பில் விலகியிருக்கவுமில்லை. அவை செயற்படுத்துவது எங்களுக்கிடையிலுள்ள பாலம் போன்றதான மாதிரியினூடாக எமது செயல்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு அவ்விழுமியங்கள் உதவுகின்றன. எமக்குத் தனியாள் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் விழுமியம் உதவுகின்றது. இதன்படி எந்தவொரு கல்வியிலும் காணக்கூடிய விழுமியங்கள் எமது கலாசாரம், நம்பிக்கை, செயன்முறைகள், நடத்தைக்கோலம் போன்ற அளவுகோல்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

கல்வியில் விழுமியங்கள் தேவைப்படுவது ஏன்? இது பொருத்தமற்ற வினாவாகும். கல்வியில் விழுமியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிள்ளையை பாடசாலையில் செய்யப்படும் சகல செயல்களிலும் நல்ல முறையில் வளர்த்துக்கொள்வதற்கும் சமூகம் எடுக்கக்கூடிய சகல தீர்மானங்களிலும் விழுமியம் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாம் பேசுகையில் பயன்படுத்தக்கூடிய சகல வாக்கியங்கள் மூலமும் அணியும் ஆடைகள் மூலமாகவும் அந்நியோன்ய தொடர்புகள் மூலமாகவும்! மற்றவர்களைக் கணிப்பிடும்போதும் விழுமியம் அடங்கியுள்ளது.

இதன்படி பாடசாலையில் நிகழக்கூடிய சகல செயன்முறைகளிலும் விழுமியம் காணப்படுகின்றது. அது விவாதத்துக்குரிய விடயமாக இடம்பெறுகின்றது.

அறிவுடன் தொடர்பாக எழும் பிரச்சினைகள்

மிகவும் பெறுமதிமிக்க அறிவு யாது? எமது பாடசாலையில் எதைச் சமர்ப்பிக்க வேண்டும். காலங்கடந்த கலைத்திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமா? தகவல் தொழினுட்பத்தில் நுழைய வேண்டுமா?

பொருளியல் பிரச்சினைகள்

சுற்றாடல்சார் பிரச்சினைகள்

எல்லைப்படுத்தப்பட்ட வளங்கள் உள்ள உலகில், அவ்வளங்கள் முடிந்ததன் பின்னர் எமது எதிர்காலத்தை எவ்வாறு மாற்றியமைக்கலாம்?

சிறப்புத் தன்மை தொடர்பான பிரச்சினைகள் பாடசாலையில் வினைத்திறனைத் தீர்மானிக்கையில் எவ்வாறான செயன்முறைகள், மதிப்பீட்டு முறைகள் எவ்வாறான வினையாற்றல் எதிர்பார்க்க வேண்டும்? அவ்வாறான வினையாற்றல்களை எதனைக்கொண்டு தீர்மானிக்கலாம்?

சிறப்புக்குழுக்களின் தேவைகள் தொடர்பான பிரச்சினைகள் பாடசாலைக் குடித்தொகையின் 1/6 பங்கினை மட்டும் எவ்வாறான சவால்கள், தடைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் அவர்களின் சிறப்புத் தேவைகளை அபிவிருத்தியில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்?

சமூக சாதாரணத் தன்மை தொடர்பான பிரச்சினைகள் யுனெஸ்கோ போன்ற கல்வி நிறுவனங்களின் தகவல் தொழினுட்பம் கணினி வசதிகள் போன்றவை இன்றைய சமூகத்தில் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையில் இடைவெளி உள்ளதா? அவை கல்வியின் எதிர்காலத் தொழிற் சந்தர்ப்பம் இல்லாதவர்களுக்கு எல்லைப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற பிரச்சினைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறே கல்வியில் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சமூக சாதனத் தன்மை கவனத்திற்குட்படுகிறது.

தனியாட்களுக்கிடையிலான பிரச்சினைகள்

நிறுவனத்தில் நிகழும் எதிரான மனப்பாங்கினால் ஏற்படும். சண்டை சச்சரவுகள், சிறுவர் துஷ்பிரயோகம் நிகழும் சமூகத்தின் நடத்தைக்கோலம் போன்றன உருவாகின்றன. கல்விசார் நிறுவனங்களைப் போன்று சமூக நிறுவனங்களிலும் இந்நிலைமைகள் அந்நியோன்னியம் தொடர்பான பிரச்சினைகள் பல்லின் சமூகத்தில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஏற்படுத்தல் என்பது பாடசாலையில் ஆரம்பித்தல் வேண்டும்.

அரசியலமைப்பை மாற்றுவதன் தேவை

எதிர்காலத்துக்குப் பொருத்தமான அரச முறைமை எவ்வாறு இருத்தல் வேண்டும்? ஆட்சியாளர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும்? அவர்களை எவ்வாறு தெரிவுசெய்தல் வேண்டும்? போன்ற இவ்வாறான வினாக்களுக்குத் தீர்வுகள் பாடசாலையில் கற்பிக்கப்படும் சமூகவியல், வரலாறு. அரசியல் போன்ற பாடங்களினூடாகக் கற்பிக்கப்படல் வேண்டும்.

சுகாதாரம், வாழ்க்கைத்தரம்

பாடசாலை மூலமாக சுகதேகியான வாழ்க்கைக் கோலத்தையும் சுகாதாரம் நடத்தைக்கோலத்தையும் பாடசாலை மாணவர்களில் அபிவிருத்தி செய்யவேண்டும். சார் மேற்கூறிய விடயங்களின்படி சமூக அபிவிருத்திக்காக நடைமுறை

படுத்தப்படவேண்டிய நடைமுறை விழுமியங்கள் அதிகரிப்பதுடன் பாடசாலையில் பங்குபற்றல் தேவை காட்டப்படுகின்றது.

பெற்றோர் பாடசாலையும் விழுமியமும்

பிள்ளைகளிடம் விழுமியத்தை விருத்திசெய்வதற்காகப் பாடசாலையின் கடமைகளுக்கு மேலதிகமாக மிக முக்கிய நடிபங்கினைப் பெற்றோர்கள் மூலம் நிறைவேற்றல் வேண்டும். 1994இல் மாணவர்களாலும் மற்றவர்களினாலும் நடாத்தப்பட்ட ஆய்வின்மூலம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் நிகழ்ச்சிகளில் கட்டாயமாக அடங்கியிருக்க வேண்டிய பிரதான பண்புகள் வருமாறு:

சிறந்த பெற்றோர்கள் பொறுப்புடையவர்களாவர். அதிகாரமும் நேர் மனப்பாங்கையும் ஜனநாயக சாதனத் தன்மை உடையவராகவும் . இருத்தல் வேண்டும்.

ஏகாதிபத்தியவாதியாகவோ கடினமான அதிகாரியாகவோ அல்லாதிருத்தல் வேண்டும். பெற்றொர்களின் நம்பிக்கை, சுயமதிப்பீடுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப் படல் வேண்டும்.

அறிவு, அனுபவம், தொடர்புகள் ஒன்றுக்கொன்று சமனாக அமைவதுடன் விளக்கத்தையும் விருப்பத்தையும் தருவதில் முக்கிய கவனம் செலுத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் ஆற்றல் சம்பந்தமாக பெபர், மெஸ்லிஸ் (1982) செய்யப்பட்ட ஆய்வில் பிள்ளைகளின் சுயதிறன்களை அபிவிருத்தி பெற்றோர்கள் எடுக்கக்கூடிய படிமுறைகளைப் பின்வருமாறு காட்டுகிறார். தெரிவுசெய்தலை மாணவர்களிடம் ஒப்படைத்தல் ஆகியவர்களால் செய்வதற்குப் மாணவர்கள் காட்டும் சிறந்த முயற்சிகளைக் கௌரவித்தல்

தேவையற்ற விதத்தில் வினாக்களை வினவுதலைத் தவிர்த்துக்கொள்ளல்

விடையளிக்கையில் அவசரப்படாதீர்கள் வீட்டிற்கு வெளியில் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு மாணவர்களை . ஊக்குவித்தல்,

எதிர்பார்ப்புகளைப் புறக்கணிக்காதீர்கள்.

பாடசாலையின் பங்களிப்பு

 

வொஸ்டன், ஏஸ்டன் (1945) காட்டியவாறு பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் விழுமியங்களில் அநேகமானவை அவர்கள் வளரும் சூழலின் மூலம் வளர்ந்தோரால் கொடுக்கப்படுபவையேயாகும். இதன்போது, என்பதேயாகும். உருவாகக்கூடிய பிரச்சினையானது, அவைகள் யாருடைய விழுமியங்கள் இது சிக்கலான பிரச்சினை எனக்கூறுவதுடன் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளாவன மாணவர்கட்கு விழுமியப் பொதியை (Package) முன்வைத்தலே ஆகும். கல்வியானது தனியாள் மையம் கவனத்திற் கொள்கிறார்கள். உடையதாக இருத்தல் வேண்டும் என அவர்கள் மேலும் அதேபோல் ஒவ்வொருவரும் முகங்கொடுக்கும் விழுமியங்களை இனங்காண்பதற்கு மாணவர்களுக்கு ஆதாரமாக அமைவது கல்வியேயாகும். இம்முறை வினைத்திறன் உடையதாக இருப்பதற்குப் பாடசாலையின் சகல பிரிவுகளிலும் அதாவது பாடங்களின் மூலமும் அதற்கு வெளியிலும் நம்பிக்கையும் மதிப்பீடும் ஒன்றிணைந்து சரியான முறையில் அமையவேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

விழுமியம் தொடர்பான ஆய்வுகளில் பாடசாலை ஒழுக்கத்தை முன்னேற்றுவதற்குப் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் சம்பந்தமான விடயங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே காட்டப்பட்டுள்ளன. பாடசாலையும் பெற்றோரும் இக்கடமைகளைச் செய்வதற்காக ஒன்றிணையும் சந்தர்ப்பங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் காட்டப்படவில்லை. வின்சன், டொம்லிக்ஸன்(1997) ஆகியோர் பாடசாலையில் பெற்றோர்களின் பங்குபற்றல்கள் தொடர்பான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு எனக்கூறுகின்றனர். அவர்கள் காட்டியவாறு “பங்குதாரராதல்” பெற்றோர்களைப் போன்றே மாணவர்களுக்கும் சமூகக் கிரகித்தலை ஏற்படுத்தலானது பாடசாலை மூலம் நடைபெறுகின்றது.

இவ்விரு பகுதியினரதும் ஒத்துழைப்புக்கான சிறந்த நடவடிக்கையானது மாணவர்களிடையே விருத்தி செய்யப்படவேண்டிய குணாம்சங்களை இரு பகுதியினரும் இனங்கண்டுகொள்வதன் மூலமே நிறைவேற்றப்பட முடியும். சாதாரணத்தன்மை, கீழ்ப்படிவு, சூழலுக்கு ஏற்றவாறான இசைவு, பாரம்பரியங்களைக் கௌரவித்தல் பொன்றவை அவற்றுள் சிலவாகும். “பெற்றொருக்கு அறிவுறுத்துவதில் சில பொறுப்புக்கள் ஆசிரியருக்கும் உள்ளன” ஹேடன் (1997) கூறியவாறு ஆசிரியர்கள், அவர்களின் விழுமியங்கள் தொடர்பாகக் கலந்துரையாடல் வேண்டும். அதேபோல்

பெற்றோர்களுடன் நடாத்தப்படும் கலந்துரையாடல்கள் மூலம் இருபாலாரும் ஒன்றிணையக்கூடிய விழுமியங்களை இனங்கண்டுகொள்ள வேண்டும்.

 

விழுமியங்கள், மாணவர் பிரச்சினைகள், ஆசிரியர் கல்வி

பிரச்சினைகள் உள்ள மாணவர் தொடர்பான தீர்வுகளை எடுக்கும்போது கல்வியில் தோல்வி அடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்களின் வன்செயல்களைக் காலத்தின் பொதுப்பண்பாக நினைக்கிறார்கள். அவர்கள் விழுமியங்களை நீக்கல் தொடர்பாக உதாசீனம் செய்யக்கூடிய மனப்பாங்குகளின் அடிப்படையிலேயேயாகும். அதேபோல் ஆசிரியரும் தமது தொழில்சார் உரிமைகளை வெற்றியடையச் செய்வதற்காகப் போராட்டம் நடத்தலானது மாணவர்களின் ஒழுக்கமின்மைக்குக் காரணமாக அமைந்துள்ளதென டர்கிடைன்(1986) கூறுகின்றார். மேலும் பாடசாலை வன்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

ஆசிரியர் கல்வியில் உள்ள குறைபாடானது. அவர்களின் குறைந்தளவிலான சுயமதிப்பீட்டுக் காரணங்களின் அடிப்படையில் மாணவர்களின் வன்செயல் நடத்தை அல்லது விழுமியங்களை நீக்குவதனைத் தடுப்பதற்கு முடியாதுள்ளது. கூடியளவு புதிய அறிமுகப்படுத்துகையில், மத்திய கலைத்திட்டத்தை அரசு மிகவும் கவனம் செலுத்துவது தேசிய கலைத்திட்டத்தைத் ஸ்தாபித்தலுக்கும் அதன்கீழ் உள்ள பாடசாலை மதிப்பீட்டுச் செயன்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கேயாகும். இங்கு பாடசாலை “சமூக நடத்தைக் கோலத்தை உருவாக்க ஆசிரியரின் கவனம் விலகிவிடுகின்றது.

“விசேட தேவையுடைய, அதாவது கற்றல். நடத்தைக் குறைபாடுள்ள மாணவர் பாடசாலையில் உள்ளமை அதன் வினைத்திறன் அற்றமைக்கான காரணமாகும். ஆம்ஸ்ரோன், கொலோவே ஆகியோர் கூறுகின்றனர். பலர் என முன்சேவை, சேவைக்கால ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களிலும் கல்வியிலும் ஆசிரியருக்கு வகுப்பறை முகாமைத்துவம் உட்பட தொடர் ஆசிரியர் மாணவர் சம்பந்தமாகவும் விசேட பயிற்சி கொடுக்கப்படல் வேண்டும். சமூகக் கல்விப் நடத்தை கலைத்திட்டத்திற்கு விழுமியங்களைத் தெரிவுசெய்தலுக்கு யாதாயினும் குறிப்பான மாதிரிமூலம் செய்தல் வேண்டும். கல்வி நோக்கங்களிலும் விழுமியங்களை உள்ளடக்க பாடசாலைக் மாணவர்களின் நடத்தை விருத்தி தேவைகளின் அடிப்படையில் யாதாயினும் விழுமியங்களில் கவனம் செலுத்தவேண்டியேற்படும். முடியும்

பாடசாலைகளில் ஆசிரியர் விழுமியம் கற்பித்தல் தொடர்பாகப் பல்வேறு அணுகுமுறைகளை பின்பற்றுகின்றனர். அவைகளிற் சில ஆசிரியரின் மேலாதிக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையாகும். அதிலும்பார்க்க வெற்றியளிக்கக்கூடியது மாணவர் மைய அணுகுமுறையாகும். விழுமியங்களை மதிப்பிடுதல் முக்கிய கல்விச் செயன்முறையாகும். அம்மதிப்பீட்டின் மூலம் பின்னூட்டல், எதிர்கால ஊட்டல், மீளமைத்தலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்களுக்கிடையே விழுமியங்களை உருவாக்குகையில் பாடசாலைக்கு மிகப்பெரிய பொறுப்புண்டு. அதேபோன்று பெற்றோர்களின் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமானதாகும். பாடசாலையினுள்ளே அபிவிருத்தி செய்யக்கூடிய குணாம்சங்கள் தொடர்பாகப் பெற்றோருக்கு அறிவுறுத்தல் செய்யப்படவேண்டும். விழுமியங்களை உருவாக்குகையில் மிகவும் பிரயோகமான நடவடிக்கையாக அமைவது ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் மாணவர்களில் விழுமியங்களை ஏற்படுத்தல் தொடர்பாக முறையான நிகழ்ச்சித்திட்டங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தலாகும்.

Leave a Comment