மனப்பாங்கு என்றால் என்ன? -What is attitude?

மனப்பாங்கு என்றால் என்ன
www.edutamil.com

 

மனப்பாங்கு என்றால் என்ன?

 
பின்வருவன மனப்பாங்குகளுக்குச் சில உதாரணங்களாகும்.

  • புகைத்தல் கேடு விளைவிக்கும்.
  • எனக்கு வேக ஓத்திசைச் சங்கீதம் விருப்பமில்லை.
  • ‘பாவைவிளக்கு’ சிறந்த நாவலாகும்.
  • அதிகாலையில் எழும்புதல் சிறந்த பழக்கமாகும்.

மேலேயுள்ள கூற்றுக்களில் முதலாவதும் இரண்டாவதும் எதிர்மறை மதிப்பீடுகளாகும். மூன்றாவதும் நான்காவதும் உடன்பாட்டு மதிப்பீடுகளாகும். மனப்பாங்கு என்பது தனியாள். பொருட்கள், செயல்கள், நிகழ்வுகள். கருத்துக்கள் என்பன பற்றி உடன்பாடாகவோ எதிர்மறையாகவோ சிந்திப்பதற்கு அல்லது செயற்படுவதற்குத் தனியாளைத் திசைப்படுத்துகின்ற மதிப்பீடாகும் என்பது மேலேயுள்ள கூற்றுக்களிலிருந்து விளங்கிக் கொள்வீர்கள். வேறு சொற்களில் கூறுவதானால் மனப்பாங்கு என்பது எப்பொருளின் மீதும் செலுத்தப்படுகின்ற மதிப்பீட்டுக் கண்ணோட்டமாகும். இக்கண்ணோட்டம் அது சம்பந்தமாகத் தனியாள் செயற்படும் விதத்தைத் தீர்மானிக்கும். மனப்பாங்கிற்கும் விழுமியத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு சிறியதே. அதாவது மனப்பாங்கு என்பது எப்போதும் ஒரு விடயம் பற்றி எடுக்கப்படும் மதிப்பீடாகும். உதாரணமாக, ‘பல்துலக்குதல்’ நல்லது. தலைமயிரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் நல்லது’. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத் தொகுப்பை அமைத்துக்கொள்வதன் மூலம் விழுமியங்கள் உருவாகின்றன. ‘பல்துலக்குதல் அதன் அடிப்படை எண்ணக்கருவாக நல்லது’ கைகால்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் நல்லது’ போன்ற மனப்பாங்குகளிலிருந்து ‘உடற்சுத்தம்’ என்ற விழுமியம் தோன்றுவதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.

பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதற்கு முதலில் மனப்பாங்கைக் கட்டியெழுப்ப வேண்டும். என்பது இதிலிருந்து புலனாகும். உடனடியாக விழுமியங்களைக் கட்டியெழுப்புதல் எவருக்கும் முடியாத காரியம். அதனோடு சம்பந்தப்பட்ட அலகினை மதிப்பீடு செய்வதன் மூலமே அது ஆரம்பிக்கப்பட வேண்டும். அடுத்து மனப்பாங்கை அல்லது விழுமியத்தைக் கட்டியெழுப்புகின்ற இணைவைப் பகுதிகளாகப் பார்ப்போம். ஒவ்வொரு மனப்பாங்கிலும் விழுமியத்திலும் அறிவு, மனவெழுச்சி, நடத்தை என்ற மூன்று பிரிவுகள் உள்ளன.

  1. அறிவு
  2. மனவெழுச்சி
  3. நடத்தை

இதனை விளங்கிக் கொள்வதற்கு மீண்டும் ‘உடற்சுத்தம்’ என்ற விழுமியத்தைப் பற்றிப் பார்ப்போம். அதில் அறிவு என்ற பிரிவில் உடல் அசுத்தமாகும் விதம். அவ்வாறு அசுத்தமாவதன் மூலம் ஏற்படும் நோய்கள், அந்நோய்களின் தன்மைகள் என்பன அடங்கும். அதில் மனவெழுச்சி என்ற பிரிவில் உடற்சுத்தத்தின் காரணமாக ஏற்படுகின்ற மனமகிழ்ச்சி, சுகம், அது ஏனையோரின் மனமகிழ்ச்சிக்குக் காரணமாகும் விதம், அதனால் ஏற்படுகின்ற உடல் மலர்ச்சி போன்ற மனதோடியைந்த விடயங்கள் அடங்கும். அதிலுள்ள நடத்தைப்பிரிவில் தலைமயிர், பற்கள், நகங்கள், தோல் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கும் முறை, அதனோடு சம்பந்தப்பட்ட பழக்கங்கள் ஆகிய திறன்கள் அடங்கும்.

இதன்படி நீங்கள் ஒருவரிடம் மனப்பாங்கு அல்லது விழுமியத்தைக் கட்டியெழுப்ப முயற்சி எடுப்பதானால் முதலில் அதற்கு வழிவகுக்கின்ற அறிவைப் பெற்றுக்கொடுங்கள். இரண்டாவதாக அதனோடு தொடர்புடைய மனவெழுச்சியை மலரச் செய்யுங்கள். அவற்றில் அனுபவம்பெற உதவுங்கள். மூன்றாவதாக அவற்றிற்கேற்பச் செயற்படுவதற்குத் தேவையான நடத்தைசார் திறன்களை வளருங்கள்.

 

நல்லொழுக்கம்

 
விழுமியங்கள் நல்லொழுக்க நடத்தைக்குக் காரணியாவதை இதற்கு முன் காட்டப்பட்ட மாதிரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நல்லொழுக்கமென்றால் என்ன? ‘நல்லொழுக்கம்’ என்பது நல்லாசாரம், நல்ல நடத்தை எனப் பொருள்படும். இதன் ஆங்கிலச் சொல் Morality என்பதாகும். இது சமூக மரபுகள், சமூகம் ஏற்றுக் கொண்ட நடத்தைகள், நியமங்கள் என்ற கருத்துக்களைத் தருகின்ற Moralis என்ற இலத்தீன் சொல்லிலிருந்து திரிபடைந்து வந்த சொல்லாகும். கொலின்ஸ் கொப்லிட் அகராதியில் நல்லொழுக்கத்துக்குரிய கருத்துக்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
 
1. சொந்த அபிப்பிராயத்தின்படி சில நடத்தைகள் சரியானவை, பொருத்தமானவை – ஏற்றுக் கொள்ளக் கூடியவை எனவும் சில நடத்தைகள் பிழையானவை, பொருத்தமற்றவை, ஏற்றுக் கொள்ள முடியாதவையெனவும் எண்ணுதல்,
 
2. ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரால் செய்யப்பட்ட செயலினது பண்பும் பிழையற்ற தன்மையும் பொருத்தமான தன்மையும்.
 
3.பொதுவாக சமூகத்தால் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தினரால் தனியாள் நடத்தை சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளும் விழுமிய முறைமையும்

சிறுவர்களின் நல்லொழுக்க வளர்ச்சி பற்றி ஆராய்ந்த ஜீன் பியாஜே (1932) கூறுவதற்கேற்ப நல்லொழுக்கம் என்பது நடத்தை விதிமுறைமையாகும். அத்தகைய நடத்தை விதிகளைத் தனியாள் ஒருவர் தம்மகத்தாக்கிக் கொள்ளும் முறையை ஆராய்வதன் மூலம் அதன் அடிப்படைக் கருத்தைக் கண்டு கொள்ளலாம். தனியாள் வளர்ச்சிக் கட்டங்களுக்கேற்ப ஒருவர் நடத்தை விதிகளைப் பொருள் கொள்ளும் முறையும் வேறுபடும்.

எம்.வீ.சீ.ஜெப்ரீஸ் (1962)

“நல்லவை வளர்வதற்கும் தீயவை விலகிச் செல்வதற்கும் வழிகாட்டுகின்ற நடத்தைகளின் நியமத் தொகுதியாகும்” என்று நல்லொழுக்கம் பற்றி வரைவிலக்கணம் கூறுகிறார். நல்லொழுக்கம் மேலெழுந்தவாரியாக இலகுவான விடயமாகத் தெரிந்தாலும் ஆராய்ந்து

பொழுது கடினமான ஒரு விடயம் என்பது உங்களுக்குப் புலப்படும். தத்துவங்களின் இவ்விடயம் சந்தர்ப்பங்களில் சன்மார்க்க சாத்திரம் (ethics) 616 செய்யும் செயல்கள் அழைக்கப்படுகின்றது. மனிதர் சரியானவையா? பிழையானவையா? உயர்ந்தவையா? தாழ்ந்தவையா? நேர்மையானவையா? நேர்மையற்றவையா? நல்லவையா? கெட்டவையா? வகையில் மதிப்பிடும் தீர்மானிக்கும் மூலகங்களைத் தேடுவதும் கலந்துரையாடுவதும் சன்மார்க்க சாத்திரத்தின் செயல்களாகும். என்ற

நல்லொழுக்கம் பற்றிப் பல தத்துவ வாதங்கள் நிலவுகின்றன. ஒரு செயல் நல்லதா என்பதை நாம் அறிந்து கொள்வது எவ்வாறு? என்ற வினாவுக்குத் தத்துவ ஞானிகள் மூவகை விடயங்களைத் தருகின்றனர். நல்லொழுக்கம் என்பது பாடத்துடன் தொடர்பில்லாத, தனியாளின் அல்லது ஒரு குழுவினரின் உணர்வுகளினதும் மனப்பாங்குகளினதும் தொகுதி என்று சிலர் கூறுகின்றனர். நடத்தைக்கு வழிகாட்டுவதும் உபதேசிப்பதும் நல்லொழுக்க வெளிப்பாடுகளின் செயல்களாகும். என்று மேலும் சிலர் கூறுகின்றனர். நடத்தை விதிகள் தனியாகப் பாடத்துடன் தொடர்பில்லாத விழுமியங்களோ அல்ல. பொதுவாக ஆராய்ந்து பார்க்கும்பொழுது நல்லொழுக்கம் என்பதில் இரு கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். சமூகத்தில் நல்லவை என ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்தில் நடத்தை முதலாவதாகும். சரியானது எனத் தர்க்க ரீதியாகத் நிரூபிக்கக்கூடிய விதத்தில் நடத்தல் இரண்டாவதாகும். அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சுயமாக, புத்திசாதுரியமாகச் சிந்தித்துப் பல்வகை மாற்றீடுகளிலிருந்து நல்ல மாற்றீட்டைத் தெரிவுசெய்து செயற்படுவதாகும். இந்தவகையில் வெளிச் செல்வாக்கிற்குட்பட்டு அல்லது தன்னால் கட்டுப்படுத்த முடியாத நிலையின் கீழ், அல்லது அறியாமல் அல்லது சிந்தனை இல்லாமல், செய்யப்படுகின்ற செயல் எவ்வளவு ‘நல்லதாக’ இருந்தாலும் ‘கெட்டதாக’ இருந்தாலும் நல்லொழுக்கச் செயலாகக் கொள்ள முடியாது.

இறுதியாக நல்லொழுக்க மூலகங்களுக்கு விழுமியங்கள் அடிப்படையாகும் விதத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

  • நல்லொழுக்க மூலகம் விழுமியங்கள்
  • களவெடுத்தல் நன்றன்று
  • நேர்மை
  • நம்பிக்கைத் தன்மை
  • பொதுவான தன்மை
  • நற்செயல் சகோதரத்துவம்
  • பொறுப்பேற்றல்
  • துயரம்
  • உதவுதல்

இந்த வகையில் நல்லொழுக்கத்தின் அடிப்படை. விழுமியங்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்.

 

ஒழுக்காறு

ஒருவர் நல்லொழுக்கத் தீர்மானங்களுடன் நடத்தலை ஒழுக்காறு எனலாம். ஓர் உதாரணத்தைக் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்நடத்தையைத் தீர்மானித்தது. காலத்தை வீணாக்குதல் கூடாது’ ‘மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது’ என்ற நல்லொழுக்க மூலகங்களை அடிப்படையாகக் கொண்டேயாகும். இவை அவர்களது நடத்தை ஒழுக்காறு ஆகும். உண்மையில் விழுமியக் கல்வியின் நடத்தை விளைவு ஒழுக்காறாகும். பெற்றோர்கள் விழுமியக் கல்வியை வேண்டி நிற்பது, தம் பிள்ளைகளை ஒழுக்காறுள்ள மனிதர்களாகக் காணும் ஆசையினாலேயேயாகும். குறைந்து வருகின்ற மாணவர் ஒழுக்காற்றுக்குப் பரிகாரம் விழுமியக் கல்வியால் அளிக்கப்படுகின்றது. அதனால் ஒரு பாடசாலையின் ஒழுக்காற்றை அடிப்படையாகக் கொண்டே அப்பாடசாலையின் விழுமியக் கல்வியின் வெற்றியை அறிய முடியும்.

ஒழுக்காறு என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வோம். ஒருவரிடம் வளர்கின்ற கட்டுப்பாடே அவரது சிறந்த ஒழுக்காற்றைக் காட்டுகிறது” என்று ஹொல்லிடே (1961) கூறுகிறார். இதிலிருந்து புலப்படுவது யாதெனில் உண்மையான ஒழுக்காறு சுய கற்றலினால் தோன்றுகின்றது என்பதேயாகும். இன்னுமொரு பெண் ஆய்வாளர் ‘ஒழுக்காறு என்பது ஒருவரிடமுள்ள கட்டுப்பாட்டு முறைமையின் உயர் வளர்ச்சியின் பயனாகத் தோன்றுகின்ற தமது நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் உதவுகின்ற. சமுதாயம் ஏற்றுக்கொண்டவைகளினூடாகத் தமக்குப் பாதுகாப்புப் பெற்றுத்தருகின்றதுமான நடத்தைக் கோலமாகும்’ என்று கூறுகின்றார். எக்னில் (1964) அம்மையாரும் ஏற்கனவே கூறப்பட்டவாறே சுயகற்றலின் மூலம் ஒழுக்காறு தோன்றுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறார். உண்மையான ஒழுக்காறு தனியாளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் காரணமாகின்றது என்றும் இவ்வம்மையார் கூறுகின்றார்.

ஒழுக்காறு என்பதில் இரு அம்சங்கள் உள்ளன என்று பாலசூரிய (1997) கூறுகிறார். சுயவிளக்கம். பிழையற்ற செயல் என்பனவே அவை. செயலின் பிழையற்ற தன்மையிலேயே ஒழுக்காற்றின் சாரம் தங்கியுள்ளது என்று அவர் வாதாடுகின்றார். சுய விளக்கத்தோடு ஒருவருக்குத் திருட முடியும்- அதனால் ஒழுக்காற்றைத் தீர்மானிக்கும்போது செயலின் பிழையற்ற தன்மையையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

 

வாழ்க்கைத் தத்துவம்

 

ஒருவனது வாழ்க்கைத் தத்துவமே அடிப்படையில் அவனது அறிவு சார் நடத்தையைச் செயற்படுத்துகின்றது. ஒருவன் தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டவைகளின் கூட்டுமொத்தமே அவனது வாழ்க்கைத் தத்துவமாகும். சூழலோடு அவன் வழிகாட்டுகின்ற அத்தத்துவம் அவனது உணர்வுகளின் சேரக்கையாகும். செயற்படுவதற்கு இதனை விளங்கிக் கொள்வதற்கு உதாரணமாக ஒழுக்காற்றுச் சீரழிவுள்ள ஒருவருடன் பேசிப்பார்த்தால், சிற்சில விடயங்கள் பற்றி அவர் எண்ணும் விதத்தையும் தமது செயல்கள் நியாயமானவை எனக் காட்டுவதற்கு வாதிடுவதையும் காணலாம். அவரது சீரழிவு அவரது வாழ்க்கைத் தத்துவத்தில் பிரதிபலிக்கின்றது. பொறுத்தவரையிலும் இவ்வாறேயாகும். முன்னேறிச் செல்லும் ஒருவரைப் பிறீட்ஸ் ஹெய்ட்டர் (1958), வில்லியம் மக்குயர் (1960) ஆகிய உளவியலாளர்கள் தனியாள் மனப்பாங்கு பற்றி அடிப்படை உண்மையை எடுத்துக் காட்டினர். அதாவது தனியாளின் மனப்பாங்குகள் அறிவுசார் அடிப்படையில் ஒன்றுசேர்ந்தவைகளாக விளங்குகின்றன. அவை ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன. தனியொருவர் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு மனப்பாங்குகளைக் கொண்டிருத்தல் கடினம். சில வேளைகளில் அவ்வாறான இரு மனப்பாங்குகள் நிலவும்போது மிக மோசமான மன அமைதியின்மை அவரிடம் ஏற்படும். இதன் காரணமாகவே தனியொருவரின் வாழ்க்கைத் தத்துவத்திற்கு நேரரெதிரான மனப்பாங்கைக் கட்டியெழுப்புவது கடினமாகவுள்ளது. அவன் அப்புதிய மனப்பாங்கை வெளியேற்றிக் கொள்வதற்குப் பல் நியாயங்களைக் கட்டியெழுப்புவான். இதன்படி ஒருவரின் மனப்பாங்கையும் விழுமியத்தையும் மாற்றுதல் மிகவும் நுணுக்கமாகவும் கவனமாகவும் செய்யவேண்டிய காரியமாகும். அவனது தற்போதைய வாழ்க்கைத் தத்துவத்துடன் முரணாகாதவாறு அது அவனால் ஏற்கக் கூடியவாறு செய்யப்படவேண்டியதாகும். எவ்வாறாயினும் அதைச்செய்வதற்கு வசதியான இடமாக அமைவது நல்லொழுக்கக் கற்றல் வட்டத்தில் மனப்பாங்குச் சந்தர்ப்பமாகும்.

அதில் உள்ள விழுமியக் கல்வி பற்றிய மூலகமாவது விழுமியக் கல்வியில், மாணவரிடம் நல்ல, பயனுள்ள வாழ்க்கைத் தத்துவத்தைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் செயற்படுத்துவதே முக்கிய கடமையாக இருத்தல் வேண்டும். விசேடமாக நவீன கட்டிளமைப்பருவ மாணவர்கள் உலகையும் வாழ்வையும் புரிந்துகொள்ளக்கூடிய, நல்லவை கெட்டவைகளை வேறுபடுத்துவதற்கு வழிகாட்டுகின்ற, அடிப்படை வாழ்க்கைத் தத்துவத்தைத் தேடுகின்றார்கள். இளைஞர்கள் தாழ்வான எண்ணங்களை நோக்கிச் செல்வது இத்தகைய அறிவுசார், கல்விசார் தேவைகள் காரணமாகவே. ஆனாலும் தற்காலக் கல்வியில் பாடங்கள் முக்கிய இடம்பெறுவதால் அவை பிள்ளைகளுக்குச் சரியான வாழ்க்கைத்தத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குச் செய்கின்ற என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

– ஆலோசனையும் வழிக்காட்டலும் 

– PDF தரவிறக்கம் 

– பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

 

Leave a Comment