மீடிறன் பரம்பல் தயாரித்தல்

மீடிறன் பரம்பல்

  மீடிறன் பரம்பல் தயாரித்தல் என்பது ஒரு புள்ளித் தொகுதியை ஒழுங்கமைத்துச் சமர்ப்பிப்பதனால் அதன் பரம்பலை மிக இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இச்செயலை இலகுபடுத்திக்கொள்வதற்கு நாம் பயன்படுத்தும் இலகுவான முறை புள்ளிகளை நிரைப்படுத்தலாகும். இதற்கு முதற்கட்டமாகப் புள்ளித் தொகுதியிலுள்ள கூடிய புள்ளியிலிருந்து குறைந்த புள்ளிவரை இறங்குநிரையில் ஒழுங்குபடுத்தல் வேண்டும். அப்போது அப்புள்ளிகளை மிகவும் விளக்கமாக அவதானிக்கலாம். www.edutamil.com அட்டவணை இல: 2.1 இல் 40 பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகள் இறங்கு நிரையில் வரிசை நிலைய்ப்படுத்தப்பட்டுள்ள விதம் … Read more

மீடிறன் பரம்பலை வரைபுகளில் காட்டலும் விளக்கம் பெறலும்

www.edutamil.com மீடிறன் பரம்பலை வரைபுகளில் காட்டலும் விளக்கம் பெறலும் வரைபு என்பது மீடிறன் பிரதிபிம்பம் ஆகும். ஒரு மீடிறன் பரம்பலைப் பார்வைக்குரிய முறையில் வரைபுகளில் காட்டுவதனால் அதன் இயல்பை மிகவும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அத்துடன் வரைபுகளினூடாக மீடிறன் பரம்பலிலும் பார்க்க மிக இலகுவாகவும், துரிதமாகவும் அனுமானங்களை (Inferences) பெற்றுக்கொள்ளவும் முடியும். ஒரு மீடிறன் பரம்பலை எவ்வாறு வரைபுகளில் காட்டலாம் என்பதை அறிந்துகொள்வோம். பொதுவாக இரு மாறிகளுக்கிடையில்தொடர்பு காணப்படும் வரைபுகளால் தெளிவுபடுத்தப்படுகின்றது. ஒரு மீடிறன் பரம்பல் வகுப்பாயிடை, … Read more

மையநிலையின் அளவைகள் என்றால் என்ன?

www.edutami.com மையநிலையின் அளவைகள் என்றால் என்ன? மையநிலையின் அளவைகள் என்றால் என்ன? என்பதைக் கலந்துரையாடும்போது முதலில் மையநிலை என்பதனால் கருதப்படுவது யாது? என்பதை அறிந்துகொள்ளல் முக்கியமாகும். இலகுவாகக் கூறுவதானால் மையநிலை என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான பரம்பலின் மையத்தைக் காட்டுவதற்குப் பொருத்தமான, மையத்துக்கு அண்மையான அளவீடு எனக் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு பரம்பலின் மையம் அதன் கூடிய குறைந்த பெறுமானங்களுக்குச் சமமான தூரத்தில் அமைந்துள்ளதால் புள்ளிகளின் சிதறலை விளங்கிக்கொள்ளப் பொருத்தமான அளவீடு அச்சிதறலின் மையநிலையைக் காட்டும் … Read more

செவ்வன் நிகழ்தகவு வளையி

www.edutamil.com செவ்வன் நிகழ்தகவு வளையி நிகழ்தகவு வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நிச்சயம் நடைபெறும் என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, ஏதும் ஒரு பொருளை மேலே எறிந்தால் அது கீழே வந்து விழும். அதுபோல் வேறுசில நிச்சயம் நடைபெறாது என்பதும் நமக்குத் தெரியும். நதி ஒருபோதும் மேல் நோக்கி ஓடமாட்டாது. இது நிச்சயம் நடைபெறாத ஒரு நிகழ்வாகும். இன்னும் சில விடயங்கள் நிகழுமா அல்லது நிகழ மாட்டாதா என்பதை நமக்கு நிச்சயம் கூறமுடியாதிருக்கும். உதாரணமாக, ஒரு நாணயத்தை மேலே … Read more

கல்வி மதிப்பீட்டின் பயன்கள்

 கல்வி மதிப்பீட்டின் பயன்கள் கல்வி மதிப்பீட்டின் பயன்கள் என்னென்ன நோக்கங்களுக்காகக் கல்வி மதிப்பீடு பயன்படுத் தப்படுகின்றதோ அதற்கொப்ப மதிப்பீட்டின் பயன்களும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. எனினும் இவற்றினைக் கற்போன் சார்பா னவை, கற்பிப்போன் சார்பானவை கல்வித்திட்டம் சார்பானவை நிர்வாகம் சார்பானவை என நான்கு பிரதான பிரிவுகளாக வகைப் படுத்தி இனங்காணமுடியும். கற்போன் சார்பானவை: கற்றற் பணியில் ஈடுபடும் மாணவன் தன்னிடமிருந்து என் னென்ன விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதனை அறிவா னாயின் அது அவனது கற்றல் முயற்சிக்கு உகந்ததாக அமையும். … Read more

மதிப்பீட்டு வகைகளும் பயன்பாடும்

மதிப்பீட்டின் பலதரப்பட்ட பயன்களையும் நோக்கும்போது இவற்றிற்கேற்ப மதிப்பீட்டு வகைகளும் பலதரப்பட்டவையாக அமைய வேண்டியது அவசியமாகின்றது. அப்படியாயின் ஒவ்வொரு பயனுக்கும் ஒவ்வொரு வகை மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுதல் வேண்டும். எனினும் நடைமுறையில் குறிப்பிட்ட மதிப்பீட்டு வகையானது ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவ தையே நாம் காண முடிகின்றது. பாடசாலைகளில் மேற்கொள்ளப் படும் மதிப்பீட்டு வகைகளை நான்காக வகுக்கலாம்.   (1) அமைப்பு மதிப்பீடு (2) கூட்டு மதிப்பீடு (3) தகுதிநிலைகாண் மதிப்பீடு (4) ஆய்ந்தறி மதிப்பீடு இவற்றுள் முன்னைய … Read more

அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?

www.edutamil.com கட்டுரை அடைவுச் சோதனைகள் மாணவனின் பாட அடைவை மதிப்பிடுகையில் இரு பிரதான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். மாணவன், தனக்குரிய அறிவையும் உளத்திறன்களையும் வெளிப்படுத்துவதற் கான ஆற்றலில் அவனது மனவெழுச்சித் தளம்பல்கள், ஆசிரிய மாணவ தொடர்பு, உடல்நலம் முதலிய காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றால் ஏற்படும் விளைவு கணிசமான அளவா யின் மதிப்பீடு சரியாக அமையாது. எனவே மேற்குறிப்பிட்ட காரணி களினால் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்னும் கருது கோளை ஆதாரமாகக் கொண்டு அடைவின் மதிப்பீடு … Read more

வழிகாட்டல் ஆலோசனையும் மனித வாழ்வும்

www.edutamil.com வழிகாட்டல் ஆலோசனை சேவையானது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை பயக்கக்கூடிய ஒரு பாடநெறியாக உள்ளமையை அவதானிக்கலாம்  அந்த வகையில் கீழ்வரும் முறையில் நாம பயன்களை நோக்கலாம். மனநோய் இன்றைய சூழ்நிலையில் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அத்தகைய நபர்களோடு வாழவேண்டியவர்கள் உதவி. தேடி வருவதுண்டு. உதவியாளர் என்ற முறையில் மனநோய்க்கு மருத்துவம் பார்க்க இயலாது என்றாலும், ஆன்மிக, உளவியல் ரீதியாக உதவி செய்யலாம். நோயின் தன்மை புரிந்தால் மருத்துவரிடம் செல்ல வழிநடத்தலாம். பொதுவான காரணங்கள் மனநோய்க்கு இரண்டு … Read more

அளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ?

www.edutamil.com   அளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ? கல்வி சார்பான தகவல்களை அல்லது அளவீடுகளை அளிக்கும் சிறந்த அளவிடு கருவிகளைத் தெரிவு செய்தல் அல்லது ஆக்குதல் கல்வி மதிப்பீட்டுத் தொழிற்பாட்டின் முக்கிய அம்சமாகும். எனவே சிறந்த அளவிடு கருவியின் இயல்புகளை அறிதல் அவசியமாகின்றது. ஏனைய நாடுகளிலுள்ளது போன்று நமது நாட்டில் நியமப்படுத்திய சோதனைகளின் பயன்பாடு வழக்கில் இல்லை. ஆகக்கூடிய நிலை யில், நாடு முழுவதுக்குமான பொதுச் சோதனைகள் குறிப்பிட்ட சில மட்டங்களில் மட்டும் உண்டு. பெரும்பாலான … Read more

கல்வி வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும் என்பதன் விளக்கம் யாது?

www.edutamil.com கல்வி என்பது வழிகாட்டலாகும். வழிகாட்டல் என்பது கல்வியாகும். சமகாலத்திற் கல்வியும் வழிகாட்டலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலமைந்துள்ளன. கற்றல் – கற்பித்தல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு ஆசிரியருக்கு மிக முக்கியமாக வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் தொடர்பான தேர்ச்சி அவசியமானது. மனித வரலாற்றின் தொடக்கத்தில் மனிதர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தமக்குள் இருந்த அறிவு டையோரின் உதவியையும், சமயத் தாபனங்களைச் சேர்ந்தோரினது உதவியையும் பெற்றனர். அது அக்கால எளிமையான சமூகத்துக்குப் பொருத்தமானதாக இருந்துள்ளது. எனினும், பத்தொன்பதாம். … Read more