ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை?

ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை
ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை?

கி.பி.1712-1778 வரை பிரான்சில் வாழ்ந்த ரூஸோ பிள்ளைகள் சார்பாகக் கூடுதலான பங்களிப் செய்த கல்வித் தத்துவஞானி என அழைக்கப்படுகின்றார். அவரால் எழுதப்பட்ட “சமூக ஒப்பந் Social contract) எனும் நூல் பிரெஞ்சுப் புரட்சிக்கும் அவரது Emile (எமிலி) எனும் நூல் க துறையில் ஒரு புரட்சிக்கும் அடிப்படையாக இருந்துள்ளன. பிளேட்டோ, அரிஸ்டோட்டல், லொக், டெஸ்காடேஸ், டேகா போன்றவர்கள் ரூஸோவின் தத்துவக் கருத்துக்களை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளனர், மற்றும் அக்காலத்தில் பிரான்சில் நிலவிய சமூக முறையும் பொதுக் கல்வி நிறுவனங்களில் காணப்பட்ட ரூஸோவின் கல்வித் தத்துவத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரூசோவால் முன்வைக்கப்பட்ட தத்துவம் இயற்கைவாதம் எனவும் அழைக்கப்படும். பிள்ளை இயற்கையின் போக்கிலேயே வளர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது ரூசோவின் நோக்காகும்.

ரூஸோவின் கல்விக் கருத்துக்கள்

ரூஸோ மனித நலனுக்கான மிகப் பிரதானமான அம்சம் தனியாளுக்குத் தேவையான கல்வியை வழங்குவதாகும் என நம்பினார். ரூஸோ எழுதிய எமிலி எனும் நூலில் அவரது கல்வித் தத்துவச் சிந்தனை விளக்கப்பட்டுள்ளது.

இயற்கை நியதியினடிப்படையில் வளர்ச்சியை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு. பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்றும் பிள்ளையை வளர்த்தெடுத்தலும் இயற்கை நியதிக்கு ஏற்றவாறு அமைய வேண்டுமென்றும் ரூஸோ நம்பினார்.

ஒரு பிள்ளை பிள்ளையென்றும் அவன் ஒரு சிறு வளர்ந்தவன் அல்லன் என்றும் ரூஸோ வலியுறுத்தினார். அதனால் ஒரு பிள்ளைக்கு அவன் ஒரு பிள்ளையாக வளர்வதற்கும் வாழ்வதற்கும் இடமளிக்கப்பட வேண்டும். இந்நிலையை மாற்றுவதால் பிள்ளையின் மனம் பாதிக்கப்படும்.

பிள்ளை உடலால் போலவே அறிவிலும் சமூகரீதியாகவும் உணர்ச்சிகளைப் பொறுத்த வரையிலும் ஒரு சிறு பிள்ளையாக இருப்பதோடு பிள்ளை சிந்திக்கும் முறை வளர்ந்தோர் சிந்திக்கும் முறையிலும் வேறுபட்டது. அதனால் பிள்ளையை விளங்கி அவனது திறமைகளுக்கு ஏற்ப அவனது கல்வியைத் திட்டமிட வேண்டும் என்பதை ரூஸோ வலியுறுத்தினார்.

பெற்றோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பிள்ளையை வழிநடத்துவதால் பிள்ளையின் வயது மட்டத்தைக் கவனியாது அநாவசியமான அமைத்துக் கொள்ளப்படும் நோக்கங்களுக்கு ஏற்ப பாரத்தைப் பிள்ளை மீது சுமத்துவதே நிகழுகின்றது. அந்தப் பிழையான முறையைப் பின்பற்றாது பின்னையின் இயல்பான வளர்ச்சிப்பாங்குக்கு ஏற்றவாறு பிள்ளையை வளர்த்து உருவாக்கி எடுக்க வேண்டுமென்பதை ரூஸோ எடுத்துக்காட்டினார்.

சமூகத்திலிருந்து பிள்ளையை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றும் தனியாளின் நலன்களைத் ரூஸோ தனியானிடமிருந்தன்றி சமூகத்திலிருந்துபெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

“மனித சமூகம் செய்யும் அசுத்தங்களைச் சுத்திகரித்தல் கல்வியின் பிள்ளைகள் கல்வி கற்கும் ஊடகம் மூன்று உண்டென்றும் ஒழுங்கு முறைப்படி அந்த ஊடகங்களினூடாக அவர்கள் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் கருத்தாகும். அம்மூன்று ஊடகங்களும் வருமாறு :

 

  1. ரூஸோவின் குழந்தை, மற்றும் சிறு பிள்ளைப் பருவங்களில் பிள்ளை இயற்கைச் சூழலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் .
  2. சூழலுக்கு ஏற்றவாறு கல்வி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மனிதர்களிடமும் ஆசிரியர்களிடமும் கல்வி பெறவேண்டும்.
  3. மூன்றாவதாகப் பண்டங்களையும் பொருள்களையும் பயன்படுத்திக் கொண்டு கல்வி பெறவேண்டும் என்பது.

ரூஸோ முன்வைத்த கல்வித்திட்டம்

ஒரு பிள்ளையை நற்குண விழுமியங்களுடன் கூடிய ஒரு நபராக உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாக ருசோவால் முன்வைக்கப்பட்டது. நற்குணப்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை உலகுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் அறிவானது ஒருவனுக்கு வழங்கப்பட வேண்டும். என ருசோ சுட்டிக்காட்டினார். பலாத்காரமாக வழங்கப்படும் அறிவைக்காட்டிம் இயற்கையூடாக வழங்கப்படும் அறிவானது பெறுமதிமிக்கது என ருசோ குறிப்பிட்டார்.

ரூஸோ சமர்ப்பித்த கல்வித்திட்டம் பின்வருமாறு ஐந்து பகுதிகளைக் கொண்டதாகும்.

1. குழந்தைப் பருவம்

2. பிள்ளைப் பருவம்

3. முன் கட்டிளமைப் பருவம்

4. கட்டிளமைப் பருவம்

5. வளர்ந்த பருவம்

பிறப்பு முதல் 2வயது வரை

வயது2 இலிருந்து வயது12 வரை

12வயது முதல் 15வயது வரை 15வயது முதல் 19வயது வரை 20வயதுக்கு மேல்

குழந்தைப் பருவமும் அதற்குப் பொருத்தமான கல்வியும் பிறப்பிலிருந்து பிள்ளையின் கல்வி தொழிற்பாடுகளைக் காட்டி பௌதிக, பிள்ளைக்குப் புதிய ஆரம்பமாகிறது. சமூக சமூக சக்திகளினூடாக உடலியற் நடவடிக்கைகளைப் பிள்ளைகள் பிரதிபலிப்பர். அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்குப் பெற்றோர் சந்தர்ப்பங்களை. உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தேவைக்கதிகமாகக் கவனம் செலுத்தாதிருப்பதும் அன்பின் காரணமாக அளவுக்கதிகம் பிள்ளைக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஆகிய இரண்டும் பிள்ளைக்குப் பாதகமாகும். இப்பருவத்தில் பின்பற்றுவதே பிள்ளையின் பிரதான கூடிய கற்கை ஊடகமாகும். இதற்குத் தேவையான சூழலைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். புலன்களின் ஊடாக அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றிப் புலன்களுக்கிடையில் தொடர்பு ஏற்படும் விதத்தில் கல்வி வழங்குவது முக்கியம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் பத்திரிகைகளிலிருந்து பெறும் அறிவு கிடைக்கப் பெறவேண்டும் என்றும் சங்கீதம், நடனம், போறல் மூலம் இவ்வயதுப் பிள்ளைகளுக்குக் கற்க இடமளிக்க வேண்டும் என்றும் ரூஸோ குறிப்பிட்டுள்ளார். வேண்டும். “நற்பழக்கவழக்கங்களைப் பழக்குவதற்குப் புலன்களை விருத்தி செய்ய

பிள்ளைப் பருவமும் அதற்கு ஏற்ற கல்வியும்

2வயது தொடக்கம் 12வயது வரையிலான இக்காலம் எதிர்கால வளர்ச்சிக்கு வலிமையான அத்திவாரத்தைக் கட்டியெழுப்புகின்றது. பிள்ளைப் பருவத்தின் ஆரம்பத்தில் அறத்தையோ, மெய்ப் பொருளையோ, நற்குணங்களையோ பற்றிக் கற்பிக்க முற்படாது பிள்ளையின் மனதையும் இதயத்தையும் பிழைகளிலிருந்தும் பாபங்களிலிருந்தும் காத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இயன்றளவு நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள இடமளிக்க வேண்டும்.

பிள்ளைப் பருவத்தின் ஆரம்பக் கட்டத்தில் கை, கால், கண், காது போன்ற புலன்களைப் பயன்படுத்திக் கொண்டு அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். பிள்ளைகளின் தேவைகளுக்கும் சுவைகளுக்கும் ஊடாகக் கற்க ஊக்குவிக்கப்பட வேண்டியதுடன் விளையாட்டுக்களையும் செயற்பாடுகளையும் ஊடகமாக்கிக் கொள்ளல் இன்றியமையாததாகும். புதிய கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகக் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். அறப்போதனையினதும் ஆளுமை வளர்ச்சியினதும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பதுடன் ஆசிரியரும் அறவொழுக்க ஆளுமையைக் கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்பருவத்தில் கல்வி ஒரு விளையாட்டாக மாறியிருக்க வேண்டும். 

முன் கட்டிளமைப் பருவமும் அதற்குப் பொருத்தமான கல்வியும்

12-15 வயதுக் காலம் இப்பருவத்தைச் சேர்ந்ததாகும். பிள்ளைப் பருவத்தில் பெற்றுக் கொண்ட ஆரம்ப அறிவையடிப்படையாகக் கொண்டு இப்பருவத்தில் அறிவு துரிதமாக விருத்தியடையும். இப்பருவத்தில் பிள்ளைக்குத் தன்னைச் சுற்றியுள்ள உலகைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் பெற்றுக் ஏற்படும். அதனால் புவியியல், வானசாத்திரம் போன்றவற்றைக் கற்கச் சந்தர்ப்பமளிக்க வேண்டும். இக்கட்டத்தில் கல்வியின் நோக்கம் கல்வியை வழங்குவது அல்ல, கல்வியைப் கொள்ளத் தேவையான சக்தியை வழங்குவதாகும். அதற்குக் கண்டுபிடித்தல் முறையையும் செயல் மூலம் கற்கும் முறையையும் பயன்படுத்துவதே மிகவும் உசிதமானதாகும். பின்னர் படிப்படியாக நூல்களிலிருந்தும் ஆராய்ச்சி மூலமும் கற்றலில் ஈடுபடச்செய்தல் வேண்டும். சமூகப் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளவும் தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்குவதன் தேவையையும் ரூஸோ எடுத்துக் காட்டியுள்ளார். இக்கட்டத்திலும் பிள்ளைகளுக்கு உடல் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காக உடற் பயிற்சியும் தேவை. கட்டிளமைப் பருவமும் அதற்கு உகந்த கல்வியும்

கட்டிளமைப் பருவத்தைச் சேர்ந்த வயது 15-19 வரையிலானதாகும். இப்பருவத்தில் பிள்ளை கற்கவேண்டிய முக்கியமான பாடம் கட்டுப்படுத்திக் கொண்டு சமூக அவனது உள்ளத்திலே தோன்றும் ஆசைகளைக் உணர்வையும் சமூகத் தொடர்பை விருத்தி செய்து கொள்வதுமாகும். அதற்காக வரலாறு, இலக்கியம், சமயம் ஆகிய பாடங்கள் உதவும். திறந்த சிந்தனைத் திறன் வளரந்துள்ளதால் இப்பருவத்தில் பாட விடயங்களைக் கற்றுக் கொள்ளும் திறன் உண்டு. இந்த வயதில் சுயமான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய கல்வி தேவை. இவ்வயதில் விஞ்ஞானக் கல்வி கற்றல் அவசியம். வரலாறு. இலக்கியம், சமயம், உடலியர் கல்வி, அழகியற் கல்விப் பாடங்கள் கலைத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும். விழுமியங்களை விருத்தி செய்வதுங்கூடக் கலைத்திட்டத்தினூடாக நடைபெற வேண்டும்.

 

வளர்ந்த பருவமும் அதற்கு உகந்த கல்வியும்

20வயதைத் தாண்டிச் செல்வது வளர்ந்த பருவம் எனக் கருதப்படுகின்றது. இப்பருவத்தை அடைந்த பின் செம்மையான இலக்கியங்கள், மற்றும் நாடகங்கள் மூலம் கல்வி கற்று சமூக ஜீவியத்துக்குப் பழக்கப்படுவர். உலகை உரியவாறு விளங்கிக் கொள்வதற்கு சுற்றுப் பயணத்தில் ஈடபடவேண்டும். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உகந்தது. இவ்வாறு படிமுறையாக நடைபெறும் அறிவுத் திறன்களுக்கும் இயற்கையான வளர்ச்சிப் பாங்குக்கும் ஏற்ப வயது மட்டங்களுக்குப் பொருத்தமான விதத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று ரூஸோ கூறுகிறார்.

பெண் கல்வி

ரூஸோ பெண்களுக்குச் சமகல்வியைப் பிரேரித்த போதிலும் அவர் பெண்களுக்கான கல்லி விசேடமான கல்வியாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறார். எமிலி நூலில் சோபிக்கு வீட்டுக் கைத்தொழிற் பாடங்களைப் பிரேரித்துள்ளதோடு எமிலிக்கு தச்சுத் தொழிலைச் சிபாரிசு செய்கிறார்.

பிள்ளையை விளங்கிக்கொள்வதிலும் மாணவர்மையக் கல்வியை அறிமுகப்படுத்துவதிலும் ஒரு முன்னோடி என ருசோவைக் குறிப்பிட முடியும். ஏனெனில் ஒரு பிள்ளை மனிதனாக உருவாவதற்கு முன் பிள்ளையைப் பிள்ளையாகவே வாழ இடமளிக்க வேண்டும் என எமிலி என்னும் நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிள்ளை எதனை விரும்புகிறதோ அதுவே கற்பிக்கப்பட வேண்டும் எனவும் ரூசோ குறிப்படுகிறார். வாய்மொழிக் கற்பித்தலைக் காட்டிலும் நேரடி அனுபவங்களை வழங்குதல், உதாரணங்களுடாகக் கற்பித்தல், பிரச்சினை விடுவித்தல் மூலமான முறைகளைப் பயன்படுத்துதல் முக்கியமானது எனக் காட்டப்பட்டது.

கற்பித்தல் அவதானிப்புக்களை மேற்கொள்ளச் சந்தர்ப்பமளித்தல் போன்ற செயலூக்கமுள்ள

 

Leave a Comment