www.edutamil.com |
பாடசாலையில் ஆலோசனை வழங்கல் என்றால் என்ன?
இலங்கையின் கல்வி வரலாற்றில் பாரம்பரியமான குருகுலக் கல்வியில் மதத்தலைவர்களும் ஆசிரியர்களுமே, ஆலோசகர்களாக வழிகாட்டி வந்தனர். தொடர்ந்து பாடசாலை முறையிலும் பாட சாலை அதிபர். ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர் களுக்கு இச்சேவையை வழங்கிவந்தனர். ஆவண சான்றாதாரங் களின்படி 1950ஆம் ஆண்டிற் பாடசாலையில் பயிலும் ஒவ்வொரு மாணவனினதும் விபரங்கள் கொண்ட திரள் பதிவுகள் பேணப்பட்டன. தொடர்ந்து இத்துறைசார் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. 1981 கல்வி வெள்ளை அறிக்கையிலும். தொடர்ந்து 1982 இல் ‘யொவுன் மித்துரோ’ ஆலோசனைச் சேவையானது களனி பல்கலைக்கழ கத்திலும், சில பாடசாலைகளிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத் தினூடாகவும் விரிவுபெறலாயிற்று.
1992இல் தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கை மற்றும் 2003ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு விதப்புரைகளுக்கு இணங்க இன்று எல்லாப் பாடசாலைகளிலும் ஆலோசனை வழிகாட்டற் பொறுப் பாசிரியர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சியளித்து, நிலை யங்கள் திறக்கப்பட்டு இச்சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையின் பொதுக்கல்விக்கான புதிய கல்விச் சட்டத்தின்முன்மொழிவுகள் ‘ஆசிரியர்கள் அனைவருமே ஆலோசகர்கள்’ என்ற நிலையிற் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என எடுத்தியம்புகின்றது. மேலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் (PSI) இவ் ஆலோசனை வழிகாட்டற் சேவையானது மாணவர்களுடன், பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் பாடசாலையினூடாக வழங்கப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்கின்றது. எனவே, ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பாடசாலை அதிபர்கள், முகாமைக்குழுவினர். கல்விப் பணிப்பாளர்களும் இத்துறை சார்ந்த தேர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.
இங்கு வழிகாட்டல் என்பது பொதுவானதாகவும், பரந்ததாகவும், ஆசிரியர்களால் வழங்கக்கூடியதாகவும் (பாடத்தெரிவு வழிகாட்டல், தொழில் வழிகாட்டல்) இருக்கின்ற அதேவேளை, ஆலோசனை வழங்கல், வழிகாட்டலின் ஒரு முக்கிய கூறாகவும், விசேடமான தாகவும், முறையான பயிற்சியைப் பெற்றுப் பிரயோகிக்க வேண்டிய தாகவுமுள்ளது. பாடசாலை ஒரு சமூகத்தின் மாதிரி என்ற வகையிற் பாடசாலையில் ஆலோசனை வழங்கல் என்பது இன்று முக்கிய தேவையாக மாறிவிட்டது. ஆனால் செய்ய வேண்டியவை சரியாகச் செய்யப்படவில்லை: எது தேவையோ அது செயற்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது செய்யப்பட்டுக் கொண்டிருப்பது போதுமானதாக இல்லை. சூழ்நிலைகள் மாறிவிட்டன. இதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த ஆலோசனை வழங்கல் உதவுகின்றது.
ஆலோசனை வழங்கல் வாழ்க்கையின் நெருக்கடியான சூழ்நிலைகளினால், சிந்திக்கும் ஆற்றலை மறந்து, செயற்படும் திறனை இழந்து தவிக்கும் நபர்களை. மீண்டும் வாழ்க்கை நீரோட்டத்தோடு இணைத்து வாழச் செய்ய வேண்டியது அவசியம். எண்ணத்திலோ, உள்ளத்திலோ காயப்பட்ட வர்கள் உணர்ச்சியிலிருந்து விடுபட்டு வெளிவர வழி தெரியாத பொழுது ஆலோசனை வழங்கல் அதிகம் தேவை. இன்றையகாலச் சூழ்நிலையைக் கண்திறந்து பார்த்தால் அநேகர் ஆலோசனை வழங்குநர் (Counsellor) இன்றித் திசைமாறி அலைந்து திரிவதைக் காணமுடியும். காயப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்லாது முழு மையாக வாழவிரும்புகிறவர்களுக்கும் ஆலோசனை ஆறுதலளிக்கும்.மனித ஆற்றலில் 30% மட்டுமே நாம் பயன்படுத்துவதாக உளவிய லாளர்கள் குறிப்பிடுகின்றனர். வாழ்வு வளம் பெறவும், அதுவும் முழுமையாகப் பெறவும் வழிகாட்ட விரும்பும் நாம் அவர்களைத் தேடிச்சென்று உதவவேண்டியது அவசியம். நம்முள்ளே மறைந்து கிடக்கும் மனித ஆற்றலை அடையாளம் கண்டு பயன்படுத்த முன்வந்தால் நாமும் சிறந்த நபர்களாக வெளிப்படலாம். எனவே, மனிதரின் திறமைகளை அடையாளம் கண்டு, புதிய சமுதாயம் படைக்கும் பணிக்கு அவற்றைப் பயன்படுத்தலாம். இன்றும் பலதரப் பட்ட மனிதர்களுக்கு ஆலோசனை வழங்கல் தேவை.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்