1972ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்கள்

1972ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்கள்

1972ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்களில் ஒன்பது ஆண்டு காலம் மட்டும் பொதுக் கல்வி வழங்கப்படவேண்டும் என்ற போக்கு காணப்பட்டது. கனிட்ட இடைநிலைப் பள்ளிப்படிப்பு முடிவடைந்ததும் மாணவர் தேசிய பொதுக் கல்விச் சான்றிதழ் (தே.பொ.க.சா) பரீட்சை எழுதுவர். இப்பரீட்சைக்கு முன்னர் பத்தாம் வகுப்பின் முடிவில் நடாத்தப்பட்ட க.பொ.தனத பரீட்சைக்குப் பதிலாக நடாத்தப்படும், தே.பொ.க.சா பரீட்சையில் பெறும் அவர்களை கலைப்பாடத்துறை, விஞ்ஞானத்துறை, வணிகத்துறை என்னும் மூன்று பிரிவுகளிற் அடைவுகள் பயிலத் தெரிவு செய்யப் பயன்படுத்தப்படும். பதினோராம் வகுப்பின் இறுதியில் மாணவர் தேசிய உயர் கல்விச் சான்றிதழ் (தே.உக.சா) பரீட்சை எழுதுவர்.

ஆகவே 1972இற்கு முந்திய யுகத்தில் இருந்த 5+5+2 என்னும் வகுப்புக் கட்டமைப்புக்குப் பதிலாக 5+4+2 என்னும் வகுப்புக் கட்டமைப்பை 1972ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் கருத்திற்கொண்டன. பாடசாலை அனுமதி வயது 6 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த 9 ஆண்டு காலப்பொதுப் பள்ளிக் கல்வியானது பாடசாலையிலிருந்து விலகுவோர், உயர்கல்வியைத் தொடருவோார் உட்பட யாவர்க்கும் புகட்டப்படும் தெரிநோக்குக் கல்வியாகும். இப்பாடசாலைக் கட்டமைப்பு மாற்றத்துடன் குறிப்பிடத்தக்க முக்கிய கலைத்திட்ட மாற்றங்களும் நிறைவேற்றப்பட்டன. மேற்கூறிய முன்மொழிவுகளில் அமுல் செய்யப்பட்டவற்றையும் அமுல் செய்யப்படாதவற்றையும் இப்போது நாம் மீளாய்வு செய்வோம்.


கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள் 

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி 

 – ஆலோசனையும் வழிக்காட்டலும் 

 – PDF தரவிறக்கம் 

 – பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

பாடசாலைக் கட்டமைப்பு மாற்றம் பற்றிய முன்மொழிவுகளைப் பல கோணங்களிலிருந்து மதிப்பீடு செய்தல் அவசியம் முதலாவதாக தெரிவு இல்லாமல் அல்லது கலைத்திட்ட வேறுபாடு இல்லாமல் கட்டாய பாடசாலைக் கல்வி பயிலும் கால அளவு இன்றைய நாளாந்த வாழ்விற்கு அவசியமான கல்வியைப் பெறும் வயதுத் தொகுதி வீதத்தினரை பாதிக்கும். இரண்டாவதாக, தெரிவுக்குரிய அமைப்பு ஒன்று இருக்குமானால் அந்த அமைப்பின் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும். எத்தகைய தெரிவைச் செய்யும் போதும் கல்வியைத் தொடருவதற்குரிய தகைமைச் சித்திபெறத் தவறிய பாடசாலையிலிருந்து விலகிவிடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகுவோருக்கு பல்வகைப் பயிற்சி வழங்கும் மாற்று வழிகள் அத்தெரிவுடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், இடைநிலைப் பாடசாலை முறைமையைப் பல்வகைப்படுத்தும் முயற்சி பொருளாதார அமைப்பின் மனித தேவைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தலை உறுதிப்படுத்தல் அவசியமாகும். பல்வேறு பாடசாலைகளிடையே சமமான மதிப்பு நிலை இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் எவ்வகைப் பாடசாலைக்கு ஒரு பிள்ளை தெரிவு செய்யப்பட்டாலும் மேற்றொடர் கல்வியை உயர் வேண்டும். கல்வியைப் பெறும் உரிமை அப்பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டே ஆக வகைப்

மேலே கூறப்பட்ட வாதத்திலிருந்து கன்னங்கரா அறிக்கை 1943தொடக்கம் 1967ஆம் ஆண்டு கல்விச் சட்டவரைவு வரை உள்ள காலப்பகுதியில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய மேற்கொள்ளப்பட்டது புலப்படுகின்றது. தொடர் முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன என்பது எவ்வகைத்தெரிவுத் தேர்வுக்கும் (11+அல்லது14+) எதிராகக் கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. ஏனெனில் அத்தகைய தெரிவுமுறை சமூக வகுப்பு வேறுபாடுகளோடு இணைந்து ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கவும் தேசிய நிலையில், சிறப்பாக நாட்டுப்புறப்பகுதிகளிலே வாழும் ஏழைகளுக்குப் பாதகமாய் அமையவும் முடியும் என்று கருதப்பட்டது.

மறுதலையாக நோக்கும் போது தொழிற் பயிற்சிசார் அல்லது தொழிற் கல்விசார் தொடர்பான தாக்க முயற்சி சமுதாயக்குழுக்களின் சாதகமான கருத்துக்களை அல்லது பெறவில்லை. ஏனெனில் சான்றிதழ் வழங்கும் நூற்கல்விக்கே கிராக்கி இருந்தது. எனவே ஆதரவைப் மத்திய பாடசாலை அறிமுகம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தவிர்க்க முடியாதவாறு தோல்வியைத் தழுவின.

பாடசாலை முறைமையின் சலிப்புத்தரும் பண்பிற்குத் தேர்வு முறையும் பங்களிப்புச் செய்துள்ளது. தேர்வு சார்பான கல்வி முறைமை அறிவுத்துறை ஆற்றல்களுக்கே முக்கியத்துவம் வழங்கியது. இவற்றுக்கே இலங்கைச் சமூகம் உயர் மதிப்பு அளித்தது.

கலைத்திட்ட பல்சீராக்கம் இல்லாமல் அறிவுத்துறை ஆற்றல்களுக்கு அளிக்கப்பட்ட மிதமிஞ்சிய அழுத்தம் கல்விமுறைமையின் மீதும் பொருளாதார அமைப்பு மீதும் விரும்பத்தகாத விளைவுகளைத் தோற்றியது. வேலையின்மை குறைத்தகைமைத் தொழில் புரிதல் என்னும் பிரச்சினைகள் தலையெடுத்தன. எனவே கல்வித்துறையை பொருளாதார அமைப்புக்கிணங்க இயக்கும் முயற்சியின் தோல்வி நாடு முழுவதையும் கடுமையாகப் பாதித்தது.


மேலும் ஆசிரியர் தொழிலை விரும்பும் பட்டநிலைக் கல்வி பயிலும்
மாணவர்களுக்கு
உதவுமுகமாக
நூற்கல்விக் கூறுகளும் உயர்தொழில்சார் கல்விக்கூறுகளும் இணைந்த
நான்கு வருடகாலக் கல்விமாணி (Li.6]) பட்டக் கல்விநெறி வேண்டுமென்பது  இக்குழுவின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிபாரிசு ஆகும்.
தொடங்கப்பட தே.க.ஆ சமர்ப்பித்த முன்மொழிவுகள் பரந்து பட்டவை பல விளைவுகளைத்
தரக்கூடியவை. ஆனால் அவற்றை அரசு பூரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆசிரியர் பயிற்சி வலய
அமைப்பு போன்றன தொடர்பாக முன்மொழியப்பட்ட சில ஆலேசனைகள் மட்டும் அமுலாக்கப்பட்டன.

  • எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் 


உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

 மேலும் வாசிக்க – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

 மேலும் வாசிக்க – கல்வி அடிப்படை

 மேலும் வாசிக்க – ஒப்பீட்டுக்கல்வி 

 மேலும் வாசிக்க – ஆலோசனையும் வழிக்காட்டலும் 

 மேலும் வாசிக்க – PDF தரவிறக்கம் 

 மேலும் வாசிக்க – பாடநெறிகள் 

 மேலும் வாசிக்க – செவ்வன் நிகழ்தகவு வளையி 

Leave a Comment