www.Edutamil.com |
1943ஆம் ஆண்டு கல்வி சம்பந்தமான விசேட நிருவாகக் குழுவினது கல்வி இலக்குகள், கல்வியினது பொதுவான நோக்கமாவது லௌகீக, ஆன்மீக நடப்புகளுக்காக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதலாகும். அதாவது கல்வியின் பொதுவான நோக்கம் வாழ்க்கைக்கு உதவுவதோடு ஆன்மீக வாழ்க்கைக்கும் ஆயத்தப்படுத்துவதாகும். கல்வியின் விசேட நோக்கங்கள் மூன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
(i) உள வளர்ச்சியும் மனக் கட்டுப்பாடும்
(ii) நல்லொழுக்கங்களை உள்ளடக்கிய கலாசாரம்
(iii) வினைத்திறனை விருத்தி செய்தல்.
(1943 XXIV அமர்வு அறிக்கை பக்கம் 14,15)
1972/1976 ஐந்தாண்டுத் திட்டத்திலுள்ள கல்வியின் நோக்கங்கள்
1972 ஆம் ஆண்டின் ஐந்தண்டுத்திட்டத்தில் இலங்கையில் பல கல்விச் முன்வைக்கப்பட்டன. அதில் காணப்படும் கல்வியின் நோக்கங்கள் பின்வருமாறு: சீர்திருத்தங்கள் மக்கள் முழுமையான வாழ்வை அனுபவிப்பதற்காக அவர்களது கலாசார. அறிவுசார் மட்டங்களை உயர்த்துதல்”
கல்வியில் அடங்குகின்ற கலைத்திட்டம், பாடத்திட்டம் பல்வகை அறிவுசார் துறைகளின் பயிற்சி பெறுபவர் தொகை ஆகியன பரந்த முறையில் இந்நாட்டுத் தொழில் உருப்பாங்குடன் இசைவுடையதாக இருத்தல் வேண்டும்”
“வளர்ந்து வரும் சந்ததியினருக்குத் தேவையான அறிவு, திறன்களை வழங்குதல்”
“இந்நாட்டு அபிவிருத்திக்கு எத்தகைய பயனுள்ள செயற்பாடுகள் அவசியம் என்பதைத் தெரிந்து கொள்ளல்”
1979 கல்வி புனரமைப்புக் குழு அறிக்கையின் கல்வி நோக்கங்கள் தற்கால சமூகப் பொருளாதார தேவைகளையும், எதிர்கால தேசிய எதிர்பார்ப்புகளையும், நம்முன்னோரின் கலாசாரத்துக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் அடைவதற்கான அறிவுத்திறன். அறநெறி உணர்வுகள், உடல் வளர்ச்சி, தொழில், சமூகத்திறன்களையுடைய ஆளுமைத்தன்மையை உருவாக்கி உதவ முக்கியத்துவமுடைய அறிவுத்திறன். மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள இளைஞர்களுக்கும், வளர்ந்தோருக்கும் பொருத்தமான சந்தர்ப்பங்களையும் வசதிகளையும் வழங்குவதாகும்”
1981 வெள்ளை அறிக்கையில் கல்வி நோக்கங்கள்
பாடசாலைக் என்பவற்றை காலத்தை மீள மாற்றியமைத்தல், பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், பரீட்சை ஒழுங்கமைத்தல் ஆகிய மாற்றங்களைப் பொதுக்கல்வித் திட்டத்தில் அறிமுகப்படுத்துவதன் நோக்கம் சமுதாயத்துக்கும் சமுதாய வேலைகளுக்கும்’ பொருத்தமான திறமைகளை வளர்த்து ஒத்திசைக்கின்ற வளர்ச்சியை ஏற்படுத்தி, பிள்ளையைப் பயனுள்ள முறையில் ஆயத்தப்படுத்துவதாகும்.
கல்வியின் நோக்கங்கள் காலத்துக்குக் காலம் மாறுகின்றன. என்பதை வெளியிடப்பட்ட அவ்வறிக்கைகளை ஆயும்போது பொதுத் தேர்ச்சிகள் என் இருவகை எதிர்பார்ப்புக்கள் புலப்படும். 1992 தேசிய நோக்கங்கள் கல்வி ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கையினது கல்வி தேசிய பொது நோக்கங்கள். முன்வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பொதுக் கல்வியின் நோக்கங்கள்
(i) தேசிய ஒன்றிணைப்பு, தேசிய அறிமுகம். தேசிய ஒற்றுமை என்பவற்றை உருவாக்குதல்
(ii) பரந்த முறையில் விரிந்து செல்லும் சமூக பொதுக் கோலத்தை உருவாக்குதல்
(iii) சிறந்ததொரு வாழ்க்கைக் கோலத்தை உருவாக்குதல் (பொருத்தமான நீரும், காற்றும் கிடைக்கும் என எதிர்பார்க்க பொருந்தக்கூடிய வாழ்க்கை முறை) முடியாத 2000 ஆம் ஆண்டுக்கும் அப்பாலும்
(iv) சிறந்த உணர்வுகளையும் மனத் திருப்தியையும் கொடுக்கின்ற தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் தேசிய, சமூக, பொருளாதார விருத்திக்கு உதவுகின்ற மானிட வள அபிவிருத்தியில் சகலரும் பங்குகொள்ளக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்குதல்
(vi) ஒவ்வொருவரையும் பற்றித் தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் கவனம் செலுத்தும் எண்ணக்கரு உறுதியாகின்ற தேசியத்துவத்தைக் கட்டியெழுப்பும் செயலில் உற்சாகத்துடன் பங்குகொள்ளல்
(vi) எப்போதும் மாறுகின்ற உலகிலே சவால்களை எதிர்நோக்கக்கூடிய வகையில் இணங்கிச் . செல்லும் கோலத்தைக் கட்டியெழுப்புதல், தமதும் ஏனையோரினதும் அபிவிருத்தி தோன்றும் வகையில் மாற்றங்களைக் கையாளுதல் ஆகிய ஆற்றல்களை வளர்த்தல்
(viii) உறுதியையும் பாதுகாப்பையும் தோற்றுவிக்கின்ற எதிர்பாராத. சிக்கலான நிலைமைகளை எதிர்நோக்கும் ஆற்றல்களை வளர்த்தல் சர்வதேச நாடுகளில் கௌரவமான ஆற்றல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றல்களை விருத்திசெய்தல்
பொதுவான தேர்ச்சிகள்
(அ) தொடர்பாடல் பற்றிய தேர்ச்சிகள்
இத்தேர்ச்சிகள் முதற்றொகுதி மூன்று துணைத் தொகுதிகளாய் அமைகின்றது எழுத்தறிவு. எண்ணறிவு, சித்திரவறிவு என்பன. எழுத்தறிவு என்பது கவனமாகச் செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறியு வாசித்தல், தெளிவாகவும் செம்மையாகவும் எழுதுதல் என்பவற்றை அடக்குகின்றது.
எண்ணறிவு என்பது: பொருள், இடம். காலம் என்பவற்றுக்கு எண்களைப் பயன்படுத்தல். எண்ணல், கணித்தல், ஒழுங்குமுறையாக அளத்தல் என்பவற்றை அடக்குகின்றது.
சித்திரவறிவு என்பது: கோடு, உருவம் என்பவற்றின் கருத்தை அறிதல், விபரங்கள், அறிவுறுத்தல்கள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கோடு, உருவம், வருணம் என்பவற்றால் வெளிப்படுத்தலும் பதிவு செய்தலும் ஆகியவற்றை அடக்குகின்றது.
(ஆ) சூழல் தொடர்பான தேர்ச்சிகள்
இரண்டாந் தொகுதித் தேர்ச்சிகள் சூழலுடன் தொடர்புடையவை. சமூகச் சூழல், உயிரியற் சூழல், பௌதிகச் சூழல் என்பன. அவையாவன:
சமூகச் சூழல் : சமூக அங்கத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வும். நுண்ணுணர்வும், திறன்களும், சமூகத் தொடர்புகள், தனிநபர் நடத்தைகள், பொதுவானதும் சட்டபூர்வமானதுமான சம்பிரதாயங்கள், உரிமைகள், பொறுப்புக்கள். கடமைகள். கடமையுணர்ச்சிகள் என்பன.
உயிரியற் சூழல் : வாழும் உலகு, மனிதன். உயிரியற்றொகுதி என்பவை பற்றிய விழிப்புணர்வும் நுண்ணுணர்வும், திறன்களும் மரங்கள், காடு, கடல், நீர், வளி, உயிரினம், தாவரம், விலங்கு, மனிதர் என்பன.
பௌதிகச் சூழல்: இடம், சக்தி, எரிபொருள், சடப்பொருள் என்பன பற்றிய விழிப்புணர்வும் நுண்ணுணர்வும் திறன்களும் பொருள்களும் அவை மனித வாழ்க்கை உணவு, உடை, வதிவிடம், சுகாதாரம், வசதி, சுவாசம், நித்திரை, இளைப்பாறுதல். ஓய்வு, கழிவுகள், மலசலம் என்பவற்றுடன் கொண்டுள்ள தொடர்புகளும்.
வாழ்வதற்கும் கற்றல்களுக்கும் பொருள்களை பயன்படுத்தும் திறன்களும் இப்பிரிவில் அடங்கும். உருப்படுத்துவதற்கும் செய்வதற்கும் கருவிகளைப்
(இ) ஒழுகலாறு, சமயம் என்பன தொடர்பான தேர்ச்சிகள்
இம்மூன்றாம் தேர்ச்சிகள் பண்புசார் மனப்பாங்குகளோடு பெரிதும் தொடர்பானவை. விழுமியப் பண்புகளுக்கு, சமய வழிபாடுகளுக்கு, அன்றாடப் பழக்கவழக்கங்களுக்கு, நற்பண்புகளுக்கு ஏற்றவாறு செயற்படுவதற்கு முடியுமான வகையில் தம்மிடம் விழுமிய தர்மங்களை வளர்த்துக்கொள்ளல் அவசியமாகும்.
விளையாட்டு, ஓய்வு பற்றிய தேர்ச்சிகள்
இந்நான்காம் தேர்ச்சிகள் மகிழ்ச்சி போன்ற உளத் தூண்டுதல்களுடன் சம்பந்தப்பட்டவை. இவை விளையாடும்போது, பல்வகை முறைகளில் ஓய்வைக் கழிக்கும் போது ஏற்படுகின்றன. உடல், உள நலனுக்கு இவை அவசியம். மேலும் ஒத்துழைப்பு வழங்குதல், குழுக்களாக விளையாடுதல், வாழ்க்கை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பொதுவான போட்டிகள் போன்றவற்றுடன் இணைந்தவை. அழகியற் கல்வி, கலைகள், நாடகங்கள், இலக்கியம், ஆய்வுகள் ஆகியன போன்ற வெளியீடுசார் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
(உ) கற்றலுக்காகக் கற்றல் பற்றிய தேர்ச்சிகள்
இவ்வைந்தாம் வகைத் தேர்ச்சிகள் வேகமாக மாறுகின்ற சிக்கலான உலகுடன் நேரடியாகத் தொடர்புடையவை. இதுவரை ஒருவர் கற்ற விடயங்களை ஆய்தல், இயைபாக்கல் ஆகியன அவசியமாகும். தொடர்ந்து மனதை ஈடுபடுத்தும் ஆற்றல் பற்றிய விளக்கம் இருத்தல் வேண்டும். அதேபோல எச்சந்தர்ப்பத்திலும் மிகச்சிறிய விடயத்தைக்கூடக் கவனிக்கும் ஆர்வம் இருத்தல் வேண்டும். இவை வாழ்க்கையில் கற்றலுக்காகக் கற்றல் தேர்ச்சியாகும். இவை தொடர்புறுத்தற் தேவைப்படுகின்றன. சாதனங்களில் ஏற்பட்ட புரட்சி பொதுவான காரணமாக விடயங்களாகும். இத்தேர்ச்சிகள் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தேசிய கல்வி …… தேர்ச்சிகளும் மீளாய்வு செய்யப்பட்டு பின்வரும் தேசிய குறிக்கோள்களாக மீண்டும் முன்வைக்கப்பட்டன.
தேசிய கல்வி முறைமைக்கான இலக்குகள்
தேசிய இலக்குகள்
தேசிய கல்வி முறைமையானது தனி நபருக்கும் சமூகத்திற்கும் பொருத்தமான பெரும்பாலான தேசிய இலக்குகளை அடைவதற்குத தனி நபர்களுக்கும் குழுவினருக்கும் உதவி செய்தல் வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கையின் பெரும்பாலான கல்வி அறிக்கைகளும் ஆவணங்களும் தனி நபர் தேவைகளையும் தேசிய தேவைகளையும் நிறைவு செய்வதற்காக இலக்குகளை நிர்ணயித்துள்ளன. சமகால கல்வி அமைப்புகளிலும் செயன் முறைகளிலும் வெளிப்படையாகக் காணப்படும் பலவீனங்கள் காரணமாக நிலைபேறுடைய மனித விருத்தியின் எண்ணக்கரு திட்ட வரம்பினுள் கல்வியினூடாக அடையக் கூடிய பின்வரும் இலக்குத் தொகுதியினை தேசிய கல்வி ஆணைக்குழு இனங்கண்டுள்ளது.
மனித கௌரலத்தை கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருக்குள் தேசியப் பிணைப்பு, தேசிய முழுமை,தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் மூலமும் இலங்கை பன்மை சமூகத்தின் கலாச்சார வேறுபாட்டினை அங்கீகரித்தல் மூலமும் தேசத்தைக் கட்டி எழுப்புதலும் அங்கீகரித்தலும் பேணுதலும். இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும். மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்கு தக்கவாறு முகங்கொடுத்தலோடு தேசிய பாரம்பரியத்தின் அதிசிறந்த அம்சங்களை மேம்படுத்தும் சமூக நீதியும், ஜனநாயக வாழ்க்கை முறை நியமங்களும் உள்ளடங்கிய சுற்றாடலை உருவாக்குதலும் ஆதரிப்பதும். ஒருவரது உள், உடல் நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கடப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த இடையறாத அக்கறை உணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தையும் மேம்படுத்தல். நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்க சிந்தனை, தற்றுணிவு. ஆய்ந்து சிந்தித்தல், பொறுப்பு, வகைகூறல், மற்றும் விருத்திசெய்தல். உடன்பாடான அம்சங்களை
தனிநபரதும் தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தை போஷிக்கக்கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடியதுமான ஆக்கப் பணிகளுக்கான கல்வி ஊட்டுவதன் மூலம் மனித வள அபிவிருத்தி
தனிநபர்களின் மாற்றத்துக்கு ஏற்ப இணங்கி வாழவும் மாற்றத்தை முகாமை செய்யவும் தயார்படுத்தவும் விரைவாக மாறிவரும் உலகில் நிலைமைகளைச் சமாளிக்கும் தன்மையை விருத்திசெய்தல் சிக்கலானதும் எதிர்பாராததுமான
நீதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமுதாயத்தில் கௌரவமானதோர் இடத்தைப் பெறுவதற்கு பங்களிக்கக்கூடிய மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்,
அடிப்படைத் தேர்ச்சிகள்
கல்வியினூடாக விருத்திசெய்யப்படும் பின்வரும் அடிப்படைத் தேர்ச்சிகள் மேற்குறித்த தேசிய இலக்குகளை அடைவதற்கு வழிவகுக்கும்.
தொடர்பாடல் தேர்ச்சிகள்
தொடர்பாடல் பற்றிய தேர்ச்சிகள் நான்கு துணைத்தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை. எழுத்தறிவு. எண்ணறிவு. சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்பத் தகைமை
எழுத்தறிவு :
கவனமாகச் செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல். சரியாகவும், செம்மையாகவும் எழுதுதல், பயன்தரு வகையான கருத்துப்பரிமாற்றம்.
எண்ணறிவு:
பொருள், இடம், காலம் என்பவற்றுக்கு எண்களைப் பயன்படுத்தல். கணித்தல், ஒழுங்குமுறையாக அளத்தல். எண்ணுதல்,
சித்திர அறிவு: கோடு, உருவம் என்பவற்றின் கருத்தை அறிதல், விபரங்கள், அறிவுறுத்தல்கள், எண்ணங்கள் ஆகியவற்றை கோடு, வெளிப்படுத்தலும் பதிவுசெய்தலும். உருவம். வர்ணம் என்பவற்றால்
தகவல் தொழில்நுட்ப தகைமை : கணனி அறிவு, கற்றலில், தொழில் சுற்றாடலில், சொந்த வாழ்வில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை ICT பயன்படுத்தல்.
ii. ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்
ஆக்கம், விரிந்த சிந்தனை, தற்றுணிவு. தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவித்தல் நுணுக்கமான மற்றும் பகுப்பாய்வுச் சிந்தனை, அணியினராகப் பணிசெய்தல். தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும் கண்டறிதலும் முதலான திறமைகள் நேர்மை, சகிப்புத் தன்மை. மனித கௌரவத்தை கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள்.
மன எழுச்சிகள், நுண்ணறிவு
சூழல் தொடர்பான தேர்ச்சிகள் இத்தேர்ச்சிகள் சூழலோடு தொடர்புறுகின்றது. சமூகம் உயிரியல், பௌதீகம்.
சமூகச் சூழல்
உயிரியல் சூழல்
வேலை உலகிற்குத் தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள் அவர்களது சக்தியை உச்சநிலைக்கு கொண்டுவருவதற்கும் அவர்களது ஆற்றலை போசிப்பதற்கும் வேண்டிய தொழில்சார் திறன்கள். பொருளாதார விருத்திக்குப் பங்களித்தல். அவர்களது தொழில் விருப்புகளையும் உளச்சார்புகளையும் கண்டறிதல். அவர்களது ஆற்றல்களுக்கு பொருத்தமான வேலையை தெரிவுசெய்தல். பயனளிக்கக்கூடியதும் நிலைபேறுடையதுமான ஜீவனோபாயத்தில் ஈடுபடல்.
சமயமும், ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகள் அன்றாட வாழ்க்கையில் மிகப் வாழ்க்கையில் ஒழுக்க நெறி. அறநெறி, சமயநெறி தொடர்பான நடத்தைகளை
பொருத்தமானவற்றை தெரிவுசெய்யவும் நாளாந்த பொருத்தமுற மேற்கொள்ளவும், விழுமியங்களை தன்மயமாக்கிக்கொள்ளலும் உள்வாங்கலும்,
ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல் விளையாட்டுப் பற்றிய தேர்ச்சிகள். அழகிய கலைகள், இலக்கியம், விளையாட்டு மெய்வல்லுநர் போட்டிகள், ஓய்வு நேரப் பொழுதுபோக்குகள், மற்றும் வாழ்வின் ஆக்கபூர்வ செயற்பாடுகள் மூலம்: வெளிப்படுத்தப்படும் இன்ப நுகர்ச்சி, மகிழ்ச்சி, மனவெழுச்சிகள் இவை போன்ற மனித அனுபவங்கள்,
கற்றலுக்குக் கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்
விரைவாக மாறுகின்ற, சிக்கலான ஒருவரில் ஒருவர் தங்கிநிற்கின்ற உலகொன்றில் ஒருவர் சுயாதீனமாக கற்பதற்கான வலிமையளித்தலும் மாற்றயமைக்கும் செயல்முறை ஊடாக மாற்றத்திற்கேற்ப இயங்கவும் அதனை முகாமை செய்யவும் வேண்டிய உணர்வையும் வெற்றியையும் பெறச்செய்தல்.