வழிகாட்டல் ஆலோசனை சேவையின் கோட்பாடுகள் எவை ?

வழிகாட்டல் ஆலோசனை சேவையின் கோட்பாடுகள்
www.edutamil.con


1.உளப்பகுப்பு அணுகுமுறைகள்         –     
Psycho Analytic Approaches

2.நடத்தை வாத அணுகுமுறைகள்      –     Behavioral Approaches

3. புலக்காட்சி அணுகுமுறைகள்         –     Perceptual Approaches

4. இருத்தலியல் அணுகுமுறைகள்     –       Existential Approaches

5.நியாயித்தல் அணுகுமுறைகள்

1. உளப்பகுப்பு கோட்பாடு

*சிக்மன் பிராய்ட், அட்லர், கால்யுவ், டட்டோ . ராங்க. போடீன், சுலிவான் போன்ற உளவியலாளர்களின் கருத்துகள் இக்கோட் பாட்டில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

*மனதின் தன்மை, அதன் தொழிற்பாடு தொடர்பான நுணுக்கமான நடைமுறையான பகுப்பாய்வு அடிப்படையாகக் கொள்ளப் பட்டுள்ளது. பிரச்சினைகள் ஒடுக்கப்படுவதால் உள நோய்கள் ஏற்படுகின்றன.

*மனித மனதின் இயல்பான செல்வாக்குக் காரணமாகத் தோன்றும் தேவைகள் நிறைவேறாதபோது, அவ்வாறான நிறைவு பெறாத உணர்வுகள் கீழ்ச்சென்று நனவிலி நிலையை அடைந்து,பிற்காலத்தில் தாக்கம் விளைவிக்கும். நனவுநிலை, குறை நனவு நிலை. நனவிலி நிலை ஆகிய மூன்று நிலைகளில் நனவு காணப்படும்.

இட் (id).அகம் (ஈகோ Ego), அதியகம் (சுப்ப ஈகோ Super Ego) என்றவாறாக மூன்று ஆளுமை அமைப்புகளினால் ஆளுமை உருவாகியுள்ளது.

இட்’ ஆனது உள்ளத்தின் இயல்பான செல்வாக்குக் காரணமாக சுகவேதனைக் கோட்பாட்டின்படி நடந்துகொள்ளும் (மிருக உணர்வு). ‘அதியகம்’ மனச்சாட்சி மற்றும் சமூக நியமங்களின்படி சென்று இலட்சியக் கோட்பாட்டின்படி நடந்துகொள்ளும்(தெய்வீக உணர்வு).

‘அகம்’ ஆனது இட், அதியகம் ஆகிய இரண்டையும் சமனிலைப் படுத்தியவாறு யதார்த்தக் கோட்பாட்டின்படி நடந்து கொள்ளும் (மனிதத்துவ உணர்வு).

வாய், குத, பாலுறுப்பு, மறை, வளர்பருவம் என உள – பால் விருத்திப் பருவங்களை வேறுபடுத்திக் காட்டலாம். பிள்ளைப் பருவங்களிற் பெற்ற கசப்பான அனுபவங்கள் தொடர்பாக ஒடுக்கப் பட்டவை பிற்காலத்தில் ஆளுமையிற் செல்வாக்குச் செலுத்தும்.

எதிர்த்தல் / போரிடல், பிரதியீடு செய்தல், தப்பித்துச் செல்லல் எனும் மூன்று வகையான தற்காப்பு உத்திகள் (Defence Mechanism) இங்கு காணப்படுகின்றன. உளப்பகுப்பு கோட்பாடு மூலம் கட்டிளமைப் பருவப் பிரச்சினைகளையும், பாலியல் ரீதியான சிக்கல்களையும் தீர்க்கலாம்.

 

2.நடத்தைவாத அணுகுமுறை

தோண்டைக், பவ்லோ வாட்சன், ஸ்கின்னர் போன்ற உளவியலாளர்களின் ஆராய்ச்சியினூடாக இவ் அணுகுமுறை உருவானது. சூழலில் கிடைக்கும் தூண்டலுக்கு துலங்கல் காட்டும் தன்மைக்கேற்ப நடத்தைகள் கட்டியெழுப்பப்படுகின்றன. ஒருவரின் பிரச்சினை சார்ந்த நடத்தைகள் நிபந்தனைப்பட்ட துலங்கல் அல்லது கற்றலாகின்றது. இதனை தீர்க்கலாம்; திருத்திய புதிய நடத்தையைக் கற்க வைக்கலாம்; இதனால் அவருடைய பிரச்சினையைத் தீர்க்கலாம் என இக்கோட்பாடு கூறுகின்றது.

நடத்தைகளைத் தடுத்தல், நடத்தைகளை நிபந்தனைப்படுத்தல், நடத்தைகளை மாற்றியமைத்தல் என்பவற்றின் மூலம் பொருத்தமற்ற நடத்தைகளில் தலையீடு செய்து திருத்தலாம். இவ்வாறு நடத்தைகளை இசைவுபடுத்தும் போது மிக எளிமையான மட்டத்திலிருந்து தொடங்கி படிப்படியாக எதிர்பார்க்கப்படும் நிலைக்கு இட்டுச் சென்று பிரச்சி னைக்குரியவரின் பிரச்சினையைத் தீர்க்கலாம். நடத்தைகளை உறுதி செய்வதில் நேர்வகையான மற்றும் மறைவகையான மீள வலியுறுத்தல்களின் செல்வாக்கையும் பயன்படுத்தலாம். இக்கோட்பாடு மூலம் மாணவர்களின் தவறான நடத்தைகளுக்கு தீர்வு காணலாம்.

 

3. புலக்காட்சிக் கோட்பாடு

மனிதத்துவ ரீதியில் புலக்காட்சிக் கோட்பாடுகளை ஒழுங்கமைத்தால் ஒருவரது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என இக்கோட்பாட்டை நிறுவிய கால்ரோஜஸ் எடுத்தியம்புகின்றார். சமகாலத்தில் இக் கோட்பாடே புகழ்பெற்றது. ஒருவரது ஆளுமை அவரது உயிரியல் புலக்காட்சி – சுய எண்ணக்கரு ஆகியவற்றில் தங்கியுள்ளது. உள நெருக்கீட்டிற்கும் பிரச்சினைகளுக்கும் காரணம் ஒருவர் தனது அனுப வங்களைப் பிழையாகப் புலக்காட்சி காண்பதேயாகும். ஆலோசனை நாடி தனது சுய எண்ணக்கரு, புலக்காட்சி ஆகியவற்றைத் திருத்தமாக மாற்றி அமைத்து பிரச்சினையைத் தீர்க்க ஆலோசகர் செய்யும் உதவி யையே இக்கோட்பாடு எடுத்து விளக்குகின்றது. (பிரச்சினையுடைய வரின் புலக்காட்சி உலகிற்கும் யதார்த்த உண்மை உலகிற்கும் சமநிலை ஏற்படுத்தல்.)

இப்புலக்காட்சியின் கோட்பாட்டு ஆலோசனை வழங்கலின்போது ஆலோசகர் பொறுமை, ஈடுபாடு, புரிந்துணர்வு, ஒத்த உணர்வு ஆகிய வற்றுடன் ஆலோசனை நாடிச் சொல்வதை உன்னிப்பாகச் செவிமடுத்தல் மிக முக்கியமானது. அனுதாபத்துடன் செவிமடுக்கும்போது ஒருவரின் உளச்சுமை நீங்கி துன்பம் பெருமளவு தணியும். இம்முறையில் செவிமடுத்தல் ஒரு முழுமையான பரிகார முறையாக அமைகின்றது. அத்துடன் மனிதத்துவரீதியில் அணுகி எல்லோருடைய பிரச்சி னைகளையும் தீர்க்க முடியும் எனவும் இக்கொள்கை இயம்புகின்றது.

 

மேலும் வாசிக்க – – ஒப்பீட்டுக்கல்வி 

4. இருத்தலியல் கொள்கை

 (சுயநோக்குக் கோட்பாடு) இக்கொள்கை பொஸ், மே, சாத்ரே, விக்டர் பிரான்கல் போன்றோரின் கருத்துகளாற் போசிக்கப்பட்டது. தனியாளிடத்தே, தமது வாழ்க்கை தொடர்பான பொறுப்பு: தம்மைப் பற்றிய விளக்கம் : தமது அண்மிய நிகழ்கால நிலைமை ஆகிய விடயங்களுக்கு இடையே சீரான இணக்கப்பாடு இல்லாமையால் உளநெருக்கடிகள் தோன்றுகின்றன. ஒவ்வொருவரும் உயிரியல் உலகு, உளவியல் உலகு, ஆன்மிக உலகு என்றவாறாக மூன்று உலகங்களில் வாழ்கின்றனர்.

  • உயிரியல்,
  • உலகு
  • உளவியல்
  • உலகு
  • ஆன்மிக உலகு

தாம் வாழும் மேற்படி மூன்று உலகங்களின் நிலைமைகளுக்குப் பொருத்தப்பாடின்மை தோன்றுமாயின் அது பிரச்சினை நிலைமையை உருவாக்கும்.

புறத்தே தெரியாத போதிலும் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை தொடர்பான பொறுப்புடன் இருக்கின்றமை. ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை நிலையற்றது; நித்தியமற்றது என்பதை அறிந்தவர்களாகையால், இல்லாதிருக்கை எனும் அறை கூவலை எதிர்நோக்கும் பாரிய தேவையுடன் காணப்படுகின்றமை.

“இல்லாதிருக்கை” எனும் அறைகூவலை எதிர்கொள்ளும் சக்தியைக் கூடுதலாக அல்லது குறைவாகப் பெற்றிருப்பதால் தனிமை, விரக்தி, சுய அனுதாபம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டுக் கவலைக்கு உள்ளாகின்றமை. தனியாளின் ஆன்மிக மதிப்பு’ பிரச்சினைக்கு உள்ளாகும்போது தமது வாழ்க்கையின் உட்கிடை, பெறுமானம் என்பன தொடர்பாக குறைத்து மதிப்பிடல்.

தலையீட்டின்போது தம்மைப் பற்றியும், தமது வலிவுகள் பற்றியும், தம்மாற் செய்யக்கூடியவை பற்றியும் விளக்கத்தைப் பெற்றுக்கொடுத்து, தாம் வாழும் வர்த்தமானத்துக்குப் பொருத்தமானவராக இருப்பதற்கு உதவிபுரிவதுடன், தாம் ஆற்றவேண்டிய பொறுப்புகள் தொடர்பாக அறிந்திருக்கவும் வழிகாட்டுதல் வேண்டும்.

 

5.நியாயித்தல் அல்லது காரண-காரியக் கோட்பாடு

 

விலியம்கன், அல்ட் எலிஸ், கோள், ட்டோரி துரோன் ஆகிய உளவிய லாளர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது இக்கோட்பாடு. காரணமின்றிய தர்க்கரீதிக்கு அமைவாகவே தனியாள் கவலைக்கும். மனவெழுச்சிக் குழப்பத்துக்கு ஆளாகின்றமை, நலிவான குடும்பப் பின்னணி, பிள்ளைப்பருவத்தில் தோல்வி அனுபவங்கள், வளர்ந்தோரின் காரணமற்ற எண்ணங்கள் போன்றவை சிந்தனைக் கோலத்தின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றமை, காரணமின்றிச் சிந்திக்கும் ஒருவர் தமக்கு எப்போதும் பாதகமே நிகழ்கின்றது என நினைக்கின்றமை, தர்க்கரீதியான தன்மை இல்லாமையாற் போதுமான சான்றுகள் இல்லாத நிலையில் முடிவெடுக்கின்றமை, தெரிவுசெய்து கொண்ட ஒரு சிறிய மாத்திரத்தை கருத்திற்கொண்டு செயற்படுகின்றமை. நாம் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாகத் தர்க்க ரீதியான வையல்லாத முடிவுகளை முன்கூட்டியே எடுத்து, அதனைத் தாமாகக் கொண்டு நோக்குவதால் உள நெருக்கிடைகளுக்கு ஆளாகின்றமை. காரணத்துக்கு அமைவாகச் சிந்திக்காதோர், சகல விடயங்களும் மிக நன்றாக, சரியாக நிகழவேண்டுமென நினைக்கின்றமை, தாம் ஏனையோரை மாத்திரமன்றி தம்மையும் மறுதலிக்கும் நிலையை ஏற்படுத்துகின்றமை. தாம் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு விடுதல் மாத்திரமன்றி தமது வாழ்க்கையைவிட்டும் பிரிந்து செல்லும் எண்ணம் தோன்றுகின்றமை.

தலையிட்டுச் செயற்படும் சந்தர்ப்பங்களில், மனவெழுச்சிக் குழப்பங்களுக்கு உட்பட்டிருப்பதால் ஏற்படும் அனுகூலங்களையும். பிரதிகூலங்களையும் நோக்குவதன் மூலம் வழிப்படுத்தலாம்.

தர்க்கரீதியிலான சிந்தனையின்பால் வழிப்படுத்துவதற்காகப் பின்வரும் கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம்:

தாம் எதிர்கொண்ட சம்பவம் காரணமற்ற எண்ணங்கள் கவலைக்கு அல்லது மனவெழுச்சிக் குழப்பங்களுக்கு ஆளாவதன் விளைவுகள் சம்பவம் தொடர்பாகக் காரணத்துடன் நோக்கும் திறனை வழங்குதல்

 

காரணத்துடன் நோக்குதல் சௌகரிய உணர்வு ஏற்படல்

தாம் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாகப் பிறிதொரு விதமாக நோக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணம்: யாதேனுமொரு விடயம் தொடர்பாக, தம்மீது சுட்டப்பட்ட குற்றச்சாட்டு தமது வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எண்ணி, அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் ஒரு மாணவனுக்கு அந் நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு இயல்புநிலையை அடையும் திறனை வழங்குதல்.

தனிமையுணர்வு, சுயதோல்வியுணர்வு, சுய அனுதாப உணர்வு போன்ற உணர்வுகள் பொதுவான உலகப் பிரச்சினையாகவுள்ளன.

கல்வி வழிகாட்டல், ஆலோசனை கூறுதல் சேவையுடன் தொடர்புடைய கொள்கைகள் பல உள்ளன. அக்கொள்கைகள் உளவியல், சமூகவியல், உளமருத்துவவியல் ஆகியவற்றின் பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தன. சிக்மன்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கை, கார்ள் றொஜஸின் புலக்காட்சி நிகழ்வுக்கொள்கை ஆகியன ஆலோசனை கூறுதற் சேவையை விருத்தி பெறச்செய்தன.

உளப்பகுப்பாய்வுக் கொள்கையின்படி குழந்தையின் தேவைகள் பல கோணங்களில் கவனிக்கப்பட்டுப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நரம்பு நோய்களுக்கும், நடத்தைப் பிறழ்வுகளுக்கும் குழந்தைப் பருவத்திலே ஏற்பட்ட பாதிப்புகளே காரணம். பிராய்டின் உளப்பகுப்புக் கொள்கையை அடிப்படையாகக்கொண்டு ஏ. எஸ். போடீன் ‘பாலியல் உந்தலுக்கும் சமூகக் கணிப்புக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகள் பிரச்சினையைத் தோற்றுவிக்கும்’ என்றார்.

‘ஒருவன் தனது புலக்காட்சிக்கு ஏற்பவே தான் வாழும் சூழலை விளங்கிக்கொள்கின்றான். அதுபோலவே உலகத்தையும் நோக்குகிறான்’  எனக் கார்ஸ் ரொஜஸ் கூறினார். அவரவர் அனுபவத்துக்கு ஏற்ப உலகிற் சஞ்சரிக்கும்போது பிழையான புலக்காட்சி விளக்கங்கள் தோன்றும். அவை ஒருவனைப் பாதிக்கும். சமநிலையடைவது சாலச்சி றந்தது. எனினும், ஒத்த சமநிலையை எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது. ஒத்த சமநிலைய டையாதவன் ஆளுமைக் குறைபாடுகளைப் பெறவும் வாய்ப்புண்டு.

பிரட்ரிக் பேர்ள், கெஸ்ரோல்ட் ஆகியோர் ‘தேவைகள் பூர்த்திய டையாதவிடத்து உளநோயாளிகள் கூடுவர்’ என்றனர். மேலும் கெஸ்ரோல்ட் உருவத்துக்கும், பின்னணிக்குமிடையேயுள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டினார். அவர் பயன்படுத்திய முக்கிய வாசகம் இவ்விடத்தில் இப்பொழுதே’ என்பதாகும்.

20ஆம் நூற்றாண்டில் எழுந்த இருத்தலியற் கொள்கை ‘தத்தமது வாழ்வுக்குத் தாமே பொறுப்பு’ என்கின்றது. உளப்பகுப்பியலாய்வுக்கு முக்கியம் கொடுக்காது. ஒருவனது வாழ்வில் இன்றைய நிலைக்கு முக்கியம் கொடுக்கவேண்டும் எனக் கூறுகிறது. தன்னைத் தானே உணரச்செய்தலுடன் உயிரியல், உளவியல் ஆகிய ஒன்றிணைத்துக் கைகொடுப்பதே ஆலோசனை கூறுதல் என்கின்றார் பிராங்கன். இது ‘லோகோ தெரபிக்குச்’ சமமான முறை என்று கூறினார்.

பகுத்தறிவுவாதம் ஒருவன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாத விடத்துத் துன்பத்துக்கு ஆளாவான் எனக் கூறுகின்றது. நடத்தைவாதிகள் நிபந்தனைப்பாட்டையும், மீளவலியுறுத்தலையும் அடிப்படையாகக் கொண்டு நல்ல நடத்தைகளை உருவாக்கலாம் என்கின்றனர். ஸ்கின்னரு டைய இக்கொள்கை மனித நடத்தையை உருவாக்கும் விஞ்ஞானக் கொள்கையாக இருக்கின்றது. சமூகக் கற்றற் கொள்கையாளர்கள் மீள வலியுறுத்தலின்றியே, சில உதாரண புருஷர்களைப் பின்பற்றி நல்ல நடத்தைகளை உருவாக்கலாம் என விளக்கியுள்ளார்கள்.

தனியாளுக்குத் தமது உள்ளார்ந்த ஆற்றல்களை இனங்காண உதவி புரிவதால் சகல பிரச்சினைகளையும், அறைகூவல்களையும் தனியே வெற்றிகொண்டு வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளத்தக்க ஒருவராக மாற்றலாம். உதாரணமாக, பெற் றோரை இழந்தமையாற் கவலைக்குள்ளாகி, பாடசாலை செல்வதை நிறுத்திய கட்டிளமைப் பருவப்பிள்ளைக்கு. தான் தொடர்பாகவும்,தனது குடும்பம் தொடர்பாகவும் உள்ள பொறுப்பை எடுத்துக்காட்டி பாடசாலைக்கு வருகை தருவதிலும், கற்றலிலும் விருப்பத்தை ஏற்படுத்தல்.

 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

 – ஆலோசனையும் வழிக்காட்டலும் 

 – PDF தரவிறக்கம் 

 – பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

Leave a Comment