www.edutamil.com |
வழிகாட்டல் ஆலோசனை சேவையானது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை பயக்கக்கூடிய ஒரு பாடநெறியாக உள்ளமையை அவதானிக்கலாம்
மனநோய்
இன்றைய சூழ்நிலையில் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அத்தகைய நபர்களோடு வாழவேண்டியவர்கள் உதவி. தேடி வருவதுண்டு. உதவியாளர் என்ற முறையில் மனநோய்க்கு மருத்துவம் பார்க்க இயலாது என்றாலும், ஆன்மிக, உளவியல் ரீதியாக உதவி செய்யலாம். நோயின் தன்மை புரிந்தால் மருத்துவரிடம் செல்ல வழிநடத்தலாம்.
பொதுவான காரணங்கள்
மனநோய்க்கு இரண்டு பொதுவான காரணங்கள் உண்டு. ஒன்று: சூழ்நிலை காரணமாகத் தூண்டப்பட்டு உண்டாவது. பெற்றோர் அன்பு கிடைக்காததாலோ, காதலிலே தோல்வி அடைந்ததாலோ. பேரிழப்பைத் தாங்க முடியாததாலோ, யுத்த தாக்கங்களினாலோ ஏற்படலாம். இரண்டாவது: உடலமைப்புக் காரணமாக உண்டாவது. பெற்றோரின் இரத்தத்திலுள்ள அணுக்களில் உள்ள குறைபாடு அல்லது சரியான அமிலம் சுரக்காததால் ஏற்படும் மரபு வழிவரும் நோயாக இருக்கலாம்.
உளவியல் அடிப்படையில் ஏற்படும் பாதிப்பிற் பெற்றோரின் கண்டிப்பு, அதிகப்படியான புறக்கணிப்பு, குற்ற உணர்வுகள், மன அழுத்தங்கள், பயங்கர அதிர்ச்சிகள் போன்றவையும்: சமுதாயச் சூழ்நிலையில் வறுமை, வேலையில்லாமை, சரியான கல்வியறிவு இல்லாமை, சரியான மதிப்பீடு இல்லாமை போன்றவையும் காரண மாகலாம். காரணங்களின் அடிப்படையில் மனநோயைப் பலவகை களாகப் பிரிக்கலாம்.
மனநோய்களின் வகைகள்
மனநோயை நோயாளியின் செயல்முறைகளை வைத்தே அடையாளம் காணமுடியும். உடலமைப்பின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மனநோய் மருத்துவர் வழியாகச் சிகிச்சை பெறுவது நல்லது. மூளையிற்பாதிக்கப்பட்டு உறக்கமின்மை, மனச்சோர்வு போன்றவை ஏற்படும் போது மருத்துவரின் உதவி தேவை. சூழ்நிலைகளினாற் செயல்களால் உள்ள பாதிப்புகளுக்கு ஆரம்ப நிலையில் என்றால் ஆலோசனைப் படுத்தல் உதவி செய்யலாம்.
நரம்புத்தளர்ச்சி சம்மந்தமான பாதிப்புகள் அளவுக்கு அதிகமான கவலையும், கலக்கமும் நரம்புத் தளர்ச்சி ஏற்படக் காரணமாகலாம். உண்மையான பிரச்சினையின் அடிப் படையில் எழுந்ததாக இருந்தால் மனஉறுதியுடன், மதிப்பீட்டு உருவாக்கத்தின் பேரில் உதவிசெய்யலாம். இதில் வெளிப்படும் அடையாளங்கள்:
1. உறக்கமின்மை
2. உடல்நடுக்கம், வலி
3. ஜீரணக் கோளாறு போன்றவை
அடையாளங்களின் பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவர் உதவியை உடனே நாடவேண்டும்.
நரம்புத்தளர்ச்சி நோயை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1.பதற்ற நோய் (Anxiety Neurosis)
2.ஹிஸ்டீரியா (Historical Neurosis)
3.ஆட்டிப்படைக்கும் எண்ணம் (Obsessive compulsive Neurosis)
4. அச்சநோய் (Phobic Neurosis)
5.மனத்தளர்ச்சி (Depressive Neurosis)
பதற்றமான சூழ்நிலை காரணமாக உண்டான நோய் சூழ்நிலை மாற்றத் தினாற் சரியாகலாம். தொடர்ந்து அழுத்தும் பயங்களினால் வரும் பாதிப்பு. உண்மையான பயம் வேறு கற்பனைப் பயம் வேறு. இதனால் வரும் பாதிப்புகளுக்கு நீண்டகால உதவி தேவைப்படுவதனால் நிபுணர்களிடம் வழிநடத்திவிடலாம். அடுத்து மனதின் பாதிப்பு உடல் நோயாக மாறிவிடும் நிலை, பேச இயலாமை, மயக்கம், முறுக்கேறிய நிலை, வாந்தி எடுத்தல் போன்ற அடையாளங்கள் வெளிப்படும்போது மிகக் கவனமாகக் கையாளவேண்டும். நிபுணர்களிடம் வழிநடத்துவது வரவேற்கத்தக்கது.
கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள். அளவுக்கு அதிகமான கனவுகள், காட்சிகள் இவற்றால் வரும் பாதிப்புகள் போன்றவையும் மருத்துவர் உதவியுடன் கையாளுதல் அவசியம். கடந்த காலத்தின் பாதிப்புகளால் ஏற்படும் மனத்தளர்ச்சி ஏமாற்றங்களை மேற்கொள்ளும் போது சரியாகும். மனத்தளர்ச்சி நோயாளிகளுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருக்கிறதா என்று சோதித்து அறியவேண்டும்.
ஏனைய பாதிப்புகள்
இன்று மனநோய் பற்றிய பாதிப்பு அதிகமாக இருப்பதால் அவற்றைப் பற்றிய நுணுக்கமான அறிவு அவசியப்படலாம். இவற்றை வாசிப்பது மிகக் கடினமாகத் தோன்றினால் இவற்றைத் தாண்டிச் செல்லலாம். நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் பற்றி பார்த்தோம். ஏனையவற்றை பார்ப்போம்:
1. மூளையின் பாதிப்பினால் வரும் முதிர்ந்த மனநோய்கள்:
1. ஜன்னி (Acute Brain Syndrome)
2. வலிப்பு நோய்
3. வெகுநாளான மூளைப் பாதிப்பு நோய் (Chronic Brain Syndrome)
4. சிறிது நாட்பட்ட மூளைப்பாதிப்பு நோய் (Sub – Acute Brain Syndrome).
எண்ணம் சார்ந்த மனமுதிர்வு நோய்கள் (Psychoses)
1. மிதமான மனச்சிதைவு நோய் (Simple schizophrenia)
2. குமரப்பருவ மனச்சிதைவு நோய் (Hebephrenia)
3. விறைப்புச் சார்ந்த மனச்சிதைவு நோய் (Catatonic Schizophrenia)
4. சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் (Paranoid Schizophrenia)
3. பாதிப்புக்குள்ளாக்கும் மனமுதிர் நோய்கள் (Affective Psychosis) 1.முதிர் மனத்தளர்ச்சி நோய் (Psychotic Depression)
2. மிதமான மனவெழுச்சி நோய் (Hypomania)
3. மிதமிஞ்சிய மனஎழுச்சி நோய் (Mania)
4. மிதமிஞ்சிய மனஎழுச்சி தளர்ச்சி நோய் (Mania Depressive Psychosis)
4. மனநலக்குறைவால்வரும் நோய்கள் (Psychosomatic Disorder)
மனநலக்குறைவால் பல நோய் அடையாளங்கள் காணப்படுகின்றன. சுவாச நோய்கள், சீரண மண்டல நோய்கள், தோல் நோய்கள், மூட்டு நோய்கள், நாளமில்லாச் சுரப்பி நோய்கள், இதய இரத்த நாளநோய்கள், மாதவிடாய் சார்ந்த நோய்கள், கர்ப்பம் சார்ந்த நோய்கள், பொய்க் கர்ப்பம் முதலியன மனநலக் குறைவால் உருவாகின்றன என நிரூபிக்கப்பட்டுள்ளன.
5. ஆளுமை வளர்ச்சியிற் பாதிப்பு (Faulty Personality Development)
பல்வேறு பாதிப்புகள் ஆளுமையின் பாதிப்பினால் உருவாகின்றன. உதவிதேடி வருபவரின் ஆளுமைக்கோளாறு பற்றித் தெரிந்தால் உதவியாளருக்கு எளிதாக இருக்கும். எனவே, இவற்றைக் கூர்ந்து கவனித்து நிதானித்து வாசிக்கவும்.
i. சந்தேக ஆளுமை (Paranoid Personality)
ii. உணர்வுமிக்க ஆளுமை (Cyclothymic Personality)
iii. சிதைந்த ஆளுமை (Split Personality)
iv. ஆட்டிப்படைக்கும் ஆளுமை (Obsessive Compulsive Personality)
v. உணர்வுமிகை ஆளுமை (Meric Personality)
vi. ஹிஸ்டீரியா ஆளுமை (Hysterical Personality)
vii. அமைதியான கொடுமையான ஆளுமை (Passive Aggrieves Personality)
ix. சமூகவிரோத ஆளுமை (Antisocial Personality)
ix. பிறர்சார்பு ஆளுமை (Dependent & Personality)
6.உணர்வுக் கட்டுப்பாட்டை இழக்கும் ஆளுமை (Explosive Personality)
இவ்வாறு வேறுபட்ட ஆளுமை உருவாகப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:
1. ஆளுமையின் வளர்ச்சியில் ஏற்பட்ட உறவுகள் (Fixations)
2. பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோரின் கரிசனக் குறைவு, வளர்ப்பு முறையில் தெளிவின்மை.
3. எவ்விதத்திலும் நிராகரிக்கப்பட்ட உணர்வு.
4. சமூக அந்தஸ்திற் குறைபாடு.
5. ஏழ்மை, வறுமை, பற்றாக்குறை.
6. ஏற்கப்படாமை, புறக்கணிக்கப்படுதல், பழிசுமத்தப்படுதல்
இவற்றிலே நோய்களுக்கு மருத்துவ உதவிபெற உடனே வழிநடத்த வேண்டும். இதிலே ஏற்படும் தாமதத்தினால் உருவாகும் பாதிப்புகள் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.
உடல் நோய்களுக்கு மருந்துகள் தருவதில் தவறில்லை அவசிய மில்லாத மனநோய்களுக்கு மருந்தை ஆரம்பித்துவிட்டு விறைப்பு. மன இறுக்கம், கோழை வடிதல் போன்ற பலவிதப் பின் விளைவுகளைக் காணும்போது அதிக வேதனை உண்டாகும். மனநோய்க்கு என்று மருந்தை ஆரம்பித்துவிட்டால் மிகக் கவனமாக நிறுத்த வேண்டும். எனவே, பின்விளை வுகள் இல்லாமல் உள்ள மருந்துகள் குறைவு. மன நோயாளிகளின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்கு மிகக் கவனமாக மருத்துவமோ, உளநல உதவியோ வழங்கப்பட வேண்டும்.
உறக்கமில்லாமையால் பாதிக்கப்பட்டு, மனம் சார்ந்த முதிர்ந்து விட்ட நோய்களுக்குக் கட்டாயம் மருத்துவ உதவி தேவை. உறங்க வைத்துத்தான் மருத்துவமே ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இத்த யோருக்கு அதிக சத்தம் போட்டுச் செபிக்கும் சூழல், அதிக நெருக் கடியான சூழ்நிலை, நோயை அதிகப்படுத்திவிடும். எந்த நோய்க்கு எந்தவித சூழ்நிலை பொருந்தும் என்று அறிந்து செயற்பட வேண்டும்.
மனநோயினால் பாதிக்கப்பட்டுவரும் நோயாளிக்கு மருத்து வத்தால் முழுமையான குணம்தர மூடியும் என்று சொல்லுவதற்கில்லை. ஆனாலும் மருந்தை உடனே நிறுத்திவிடவே கூடாது. நோயின் பாதிப்பை அறிந்த உளநல நிபுணர்களிடமோ, மனநோய் மருத்து வரிடமோ உதவிபெறுதல் அவசியம். உதவியாளர் இத்தகைய பிரச்சி னைகளைக் கையாளத் தெரியாவிட்டாலும், யாரிடம் எப்படி வழிநடத்த வேண்டும் என்று அறிந்திருக்கவேண்டும் என்பதால், இது முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உதவியாளர் மட்டுமே உதவிசெய்து ஆற்றுப் படுத்தி நலம்பெறச் செய்யும் பல சூழ்நிலைகள் உண்டு என்பதால், தொடர்ந்து வாசிக்க அன்போடு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். தொடர்ந்து வாசியுங்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உதவி செய்யப் பல வாய்ப்புகள் கிடைக்கும்.
திருமண வாழ்விற்கு ஆலோசனைப்படுத்தல் இளைஞர்களின் இதயத்தைக் கவரும் இன்னொன்று திருமணத்திற்குப் பொருத்தமான ஆலோசனைப்படுத்துவது. இளமையில் பாலுணர்வு நெருக்கடியான சூழலிற் பலவித பலவீனங்களில் மாட்டிக்கொண்ட வர்களும், தங்களுக்கென்று மனைவி, பிள்ளைகள் என்று வந்த பிறகு நல்லமுறையில் வாழ்வதையே விரும்புகின்றனர். எனவே, திருமண வாழ்விற்கு ஆலோசனைப்படுத்தும் பணி மிக மேலான பணி.
வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்துகொள்வது இளமைக் கனவுகள் விரியும்போது மனதிற்கு ஏற்றதுணை என்று மனம் விரும்பும் சில இயல்புகள். தோற்றம் உள்ள நபரை மனம்தேடி அலைகிறது. இதனாற்றான் மனம் தன்வாழ்விற்கு உரிய துணை இப்படி இருக்கவேண்டும் என்று வரம்பை நிர்ணயிக்கிறது. சிலநேரம் ஏற்ற துணையைக் கண்டுகொண்டதாக நினைத்து ‘காதல்’ என்ற பெயரில் மயங்கி, வாழ்வின் முக்கியமான இளமைப் பருவத்தை வீணாக்குவோர் பலர். ஆண்களின் இயல்புப்படி ‘காதல்’ வசப்படும் போது உணர்ச்சியின் தாக்கத்தால் காதலியைக் காணவும், பேசவும், தொடவும். உறவு கொண்டாடவும் ஏங்கி மனம் அலைபாய்கிறது. அதனாற் படிப்பை இடையில் நிறுத்தி, வாழ்க்கைச் சக்கரமே உருளா மல் நின்று போனது போல பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவோரும் உளர். ‘காதல்’ பண்ண ஒரு நபருண்டு என்ற உணர்வு, போதும் என்ற நிறைவுடன் பெண்களிற் பலர் படித்து முன்னேறி உயர்ந்து விடுபவர்களும் உண்டு. காதல் என்பது பலருக்கு வீழ்ச்சியாகவோ. சிலருக்கு உயர்வுக்குக் காரணமாகவோ அமைந்தாலும் அந்த அத்தி யாயம் திருமணம் வரை பலருக்குத் தொடர்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணம் செய்யத் துணை தேடும்போது ஆலோச னைப்படுத்தல் தேவைப்படும். துணை தேர்ந்து கொள்வதில் மனம் விட்டுப் பேசித் தனது இயல்புக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்து கொள்ளச்செய்வது மிக முக்கியமான பணி.இத்தகைய அன்பிலே கொடுக்கவும் பெற்றுக் கொள்ளவும் இடமுண்டு. திருமண அன்பிற்கு ஒரு தனித்தன்மை உண்டு. ஆளுமைக்குறைவை நிறைவு செய்யவும். குடும்ப சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், பெற்றோரின் அன்புக் குறைவால் ஏற்பட்ட பாதிப்பு மாறு வும், போரடிக்கும் நிலைமாறி வாழ்வில் அமைதி ஏற்படவும் உதவி செய்யும். எனவே, இத்தகைய திருமண அன்பின் தன்மை அறிந்து திருமணத்தில் இணைய ஆலோசனைப்படுத்தல் உதவி செய்யும்.
திருமணத்திற் கிடைக்கும் வாழ்க்கைத் துணைவர் ‘இறைவன் தரும் கொடை’ என்ற உணர்வுடன் பெற்றுக்கொண்டும் கடந்த காலத்தின் எந்தப் பாதிப்பும் திருமண வாழ்வில் நுழையவிடாமற் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்து சென்றுவிட்ட ஒன்றால். திரும்பிவர முடியாத ஒன்றால், ஒரு பயனும் இல்லை என்ற உணர் வுடன் புறப்பட்டு விட்ட நமது வாகனத்தில் இறைவன் நமக்குத் தந்த வாழ்க்கைத் துணை வரோடு இணைந்த வாழ்வைத் தொடரவேண்டும்.
திருமணத்திற் பாலுணர்வு
பாலுறவு என்றாலே அருவருப்பானது என்ற எண்ணம் இன்றும் மாறவில்லை. அதிலே உள்ள புனிதத்தன்மையும், தெய்வீகத்தன்மையும் அதை மதிக்கச் செய்ய வேண்டும். தலைமுறை தொடர வழித்தோன்றலைக் காணச்செய்யும் உன்னதமான கருவி அது. அதிலே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையில் மாறுபட்ட இயல்புண்டு. ஓரிரு குழந்தைகள் பெறும்வரை அதை வரவேற்கும் பெண்கள், பிறகு வெறுத்து ஒதுக்கி விடுவது உண்டு. கணவரின் தேவை அறிந்து புரிந்து இணைந்து வாழவேண்டியது அவசியம். ஆண்களுக்கு உடலுறவு முடிந்த உடன், கிடைத்த நிறைவுடன் எழும்பிவிடுவது உண்டு. பெண்களுக்கு அதன் பிறகும் அணைப்பும், அன்பைத்தொடரவும் தேவைப்படும் என்பது ஆண்களுக்குத் தெரிவதில்லை. அதைப் பெண்களும் தெரியப்படுத்து வதில்லை. எனவே, கணவன் மனைவி இடையே தேவை அறிந்து, பேசித்தெளிவு செய்வது நல்லது. இந்தத் தேவை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். எனவே, இதிலே வாழ்வின் இறுதிவரை வயதாகிவிட்ட பிறகும் இணைந்து செல்லக் கற்றுக்கொண்டால் வாழ்க்கைச் சக்கரம் அதிக உரசலின்றி ஓடும். இது பற்றித் திருமணத் தயார்படுத்தலின்போது ஆலோசனைப்படுத்தல் அவசியப்படும். ‘மணவாழ்வில் மனம் மகிழ’ போன்ற நூல்கள் இதற்கு உதவி செய்யும்.
திருமணத்தின் இலக்கு
திருமணம் என்பதே அர்ப்பணம். திருமணத்தின் இலக்கு குடும்பத்தை உருவாக்குதல், உற்றதுணையாக இருத்தல், பாலுறவுத் தேவையை நிறைவு செய்தல் போன்றவை. இலக்குப் பற்றித் தெளிவில்லாததால் திருமணமான புதிதில் விட்டுக்கொடுக்க முடியாமற் பல பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. மதிப்பீட்டு முரண்பாடு. வசதிகளின் வேற்றுமை, வாழ்வின் இலட்சியத்தில் வேறுபாடு போன்ற பல வேறுபாடுகள் இருந்தாலும், தங்கள் திருமணம் பற்றித் தெளிவான இலக்கை நிர்ணயித்துச் செயற்பட்டால் பிரச்சினையைச் சமாளிக்கலாம்.
இதில் ஆலோசனைப்படுத்தும் பணி பெரிதும் உதவும். உறவினர் உட்சென்று பிரிப்பதற்குப் பதிலாக, உதவியாளர் மிகச்சிறந்த முறையில் உதவி செய்யலாம்.
மதுநோயாளரை ஆலோசனைப்படுத்தல் மது அருந்துவது என்பது செல்வந்தர்களின் அந்தஸ்தின் வெளிப்பா டாகவும், இளைஞர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களின் அடை யாளமாகவும், உழைத்துக் களைத்த தொழிலாளிகளின் உடல்வலி நீக்க உதவும் அருமருந்தாகவும் அமைகிறது. ஆனால், தொடர்ந்து குடிப்பதன் காரணமாகவும், அளவு மீறிக் குடிப்பதன் காரணமாகவும், வாழ்வின் முக்கியமான செயற்பாடுகள் பாதிக்கப்படும்போது குடியானது நோயாக மாற ஆரம்பிக்கிறது. குடி ஒரே நாளில் குடிநோயாக மாறுவது இல்லை. ஆனால், எப்போது மாறுகிறது என்பது குடிப்பவருக்குக்கூடத் தெரியாது என்பதுதான் வேதனை. ‘நான் விரும்பினால் நாளைக்குக் குடியை நிறுத்துவேன்’ என்றுதான் எந்தக் குடிகாரனும் அறைகூவல் விடுவான். ஆனால், எப்போது அவன் குடிக்கு அடிமையாகிறான் என்பது அவனுக்கே தெரிந்தாற்றானே? குடிக்காதபோது கை, கால் நடுங்குவதும், வெறித்தனமான கோபம் வருவதும் குடிப்பேயின் கரத்தில் சிக்கிவிட்டதற்கு அடையாளம். தொடர்ந்து நினைவுமங்க குடிக்கும்போது, உதவியாளர் குடிநோயாளி யோடு, அவர் குடும்பத்தாரையும் ஆலோசனைப்படுத்த வேண்டும்.
போதையினால் ஏற்படும் பாதிப்புகள்
1.உடலின் சகிப்புத்தன்மை
ஆரம்ப நிலையிற் சிறிது போதைப்பொருள் எடுத்தால் போதை உண்டாகும். காலப்போக்கில் அதைவிட அதிகமாக எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுக்கொண்டே போகும். உடலின் உறுப்புகள் போதைப் பொருளுக்குப் பழகிவிடும். சாராயம் போன்றவற்றைக் குடித்தாலும் அந்த நிலைக்கு வர வெகுநாளாகலாம். ஆனால், ஹெரொயின் போன்ற போதைப்பொருள்கள் எடுத்தால் ஒரு மாதத்திற்குள்ளாக அந்தநிலை ஏற்பட்டுவிடுகிறது.
2.கட்டுப்படுத்தும் தன்மை இழந்துபோதல்
போதைப்பொருட் பாவனையை ஆரம்பித்த ஒருவர் சில நாட்க ளுக்குப் பிறகு போதைப்பொருட்கள் கிடைக்கும்வரை பொறுத்தி ருக்க முடியாது. வெறித்தனமாகச் செயற்பட்டு எப்படியாகிலும் போதைப்பொருளை கைப்பற்றிக்கொள்ள முயலுவார். எந்தத் தடையையும் மீறி அதைப் பயன்படுத்த முனைவார்.
3. பின்வாங்கும் அடையாளம் (Withdrawal symptoms)
போதைப்பொருளைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டவர் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால். சில மணி நேரத்திற்குள்ளாகப் பின் வாங்கும் அடையாளங்கள் (withdrawal symptoms) வெளிப்பட ஆரம் பிக்கும். அதன் கொடுமை என்னவென்றால் வலி, வேதனை, வலிப்பு, மயக்கம், வாந்தி, நடுக்கம், எரிச்சல், அளவுக்கதிகமாக வியர்த்தல் போன்ற அடையாளங்கள் அநேக நாட்கள் நீடிப்பதே. எப்படியாகிலும் திரும்ப அந்தப் போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வெறித் தனமாக முயலுவார், கிடைக்காத சூழ்நிலையில் திருடவும், கொலை செய்யவும் தயங்கமாட்டார். மதிப்பு, மரியாதை என்ற நல்லுணர்வே இருக்காது.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்
4.வாழ்க்கைப்பாணி உடைதல்
போதைக்கு அடிமைப்பட்டவர்கள் தங்கள் சமுதாயக் கடமைகளைச் செய்யவும், தொடர்ந்த வேலையைச் செய்யவும் இயலாதவர்களாகவும், குடும்பப் பொறுப்பை ஏற்க முடியாதவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். மிகச்சிறிய பொறுப்பைக்கூட ஏற்க முடியாதபடி ஆளுமையிலே சிதைவு ஏற்படுகிறது. வாழ்க்கை உடைந்து சின்னாபின்னமாகி விடுகிறது.
போதையின் அனுபவங்கள்:
போதைப்பொருள் மாத்திரை போதைப்பொருள் மாத்திரை வழியாக, ஊசி, பொடி, புகைபிடித்தல் என்று பலவகையில் உடலினுட் செலுத்தப்பட்டாலும், அவற்றிற் பொதுவான சில அனுபவங்கள் உண்டு. எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று, தொடக்க நிலையில் உள்ள இன்பமான அனுபவம். கவலையை மறந்து மிதக்கின்ற ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை நாடித்தான் போதைப்பொருள்களை எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஆனால், காலை வைத்தபின் எடுக்க முடியாத ‘புதைமணல்’ என்பது அநேகருக்குத் தெரியாது. விட்டுவிட விரும்பினாலும் விடமுடியாது.
இன்ப அனுபவத்தைத் தொடர்ந்து, பின்னேற்படும் துன்ப அனுப் வங்களை விபரிக்கமுடியாது. மனதை ஒன்றுபடுத்திச் சிந்திக்க முடியாது. உணர்ச்சியின்மை, ஆர்வமின்மை, அக்கறையின்மை. எரிச்சல், கிளர்ச்சி உண்டாக்குதல் இவ்வாறு ஆரம்பிக்கும் அடை யாளங்கள் அன்றாடச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கச் செய்யும். பேசுவது, நினைப்பது, தீர்மானம் எடுப்பது, செயற்படுவது எல்லாம் குறைந்துவிடும். இந்த நிலை தொடரும்போது பசியின்மை, உறக்க மின்மை, எதிர்ப்புச் சக்தியின்மை, பாலுணர்வு ஆற்றலின்மை, இப்படி யாக எல்லாச் செயற்பாடுகளுமே குறையும்நிலை ஏற்படுகிறது. போதையின் அபாயத்தைச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வுபெறச் செய்தல் அவசியம். போதை யின் கோரப்பிடியில் சிக்குமுன் பாதுகாப்பது மிகமிக அவசியம்.
தாழ்வு மனத்திலிருப்பவரை ஆலோசனைப்படுத்தல் தங்கள் உடலின் உறுப்புகளை, அதன் அமைப்புகளை, நிறத்தை உயரத்தை. அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு தாழ்வுமனம் ஏற்படலாம். உடலில் ஊனமுற்றவர்களுக்கு, ஊனமுற்றவர்களுடன் வாழுகிறவர்களுக்குத் தாழ்வுமனம் ஏற்படுவது எளிது. அதை அகற்றுவது மிகக்கடினம். இந்த உணர்ச்சி தேங்கிவிட்ட சாக்கடை நீரைப்போல உள்ளிருந்து, பாதிக்கப்பட்டவர்களை அதிக வேதனைப் படுத்தும். பார்வையற்றநிலை, நடக்க முடியாத நிலை, நொண்டி நடத்தல், செவிப்புலப்பிரச்சினை. தாழ்ந்த சாதியிற் பிறந்ததால் தாழ்வு மனம், பணம் இல்லாமையினால் ஏற்படும் தாழ்வுமனம் என்று பல காரணங்களால் தாழ்வுமனம் ஏற்படலாம். உடலளவில், உணர்ச்சி அளவில், ஆன்மிக அளவில், மனத்தளவில் தாழ்வுமனம் ஏற்படலாம். உடல் ஊனத்தைவிட மிகப் பாதிப்பை உருவாக்கும் ஊனம் மனதின் ஊனந்தான். எனவே, தாழ்வுமனம் எதனால் வந்தாலும் அதனால் வரும் பாதிப்பிலிருந்து வெளிக்கொணர ஆலோசனைப்படுத்தல் அதிகம் தேவைப்படும்.
மனதின் ஊனம்
நான் ‘தகுதியற்றவன்’ என்ற எண்ணத்துடன் எதைப் பேசவும், எதைச் செய்யவும் தயங்குவர், எந்தக் காரியத்தையும் செய்யத் தன்னார் வத்துடன் முன்வரார். எந்தத் தேர்விலும் முடிவு வருமுன்னே தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவர். தன்னம்பிக்கை இழந்த நிலையில் தடுமாறுவர். தனது குறையை மறைக்க அடுத்தவர் மீது எரிந்துவிழுவர். அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவர். தலைமைத்துவ இயல்பு இருப்பதில்லை. நீங்கள்தான் இதைச் செய்ய முடியும் என்று பாராட்டினால் எளிதாகத் தாழ்வுமனத்திலிருந்து வெளிவந்துவிடுவர். பாராட்டித் தட்டிக்கொடுக்க ஒரே ஒரு உள்ளம் கிடைத்தாலும் வாழ்வே மாறிவிடும். உதவியாளர் இப்பணியைச் செய்தாற் போதும். எளிதாக உதவி செய்துவிடலாம்.
ஆன்மிக ஊனம்
இறைவன், மக்கள், மனச்சாட்சி, வாழ்வு, சாவு என்ற எதைக் குறித்தும் பயமிருந்தால், இவர்களது ஆன்மா ஊனப்பட்டிருக்கும். குற்ற உணர்வு ஆன்மாவை அதிக ஊனமாக்கிவிடும். அச்ச நடுக்கங்கள், தாழ்வுமனதின் தாக்கங்கள் போன்றவையும் ஆன்மிக ஊனத்தின் வெளி அடையாளங் களே! அந்த ஊனத்தை மறைக்க விரும்பும் சிலர், பெருமை, அலங்காரம், ஆணவம் போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்வர். எனவே. அவையும் ஆன்மிக ஊனத்தின் அடையாளங்களே! எதில் ஊனம் அடைந்தாலும் எளிதிற் சரி செய்யலாம். ஆனால், ஆன்மீக ஊனத்தைச் சரிசெய்ய இறையருள் இருந்தால் மட்டுமே முடியும்.
ஊனமுற்றவர்களால் ஊனமுறுதல்
ஊனமுற்ற பிள்ளைகளையுடைய பெற்றோர், வாழ்விற் பாரப்பட்டு, நம்பிக்கை இழந்து தவிப்பர். ஊனமுள்ள நபரைத் திருமணம் செய்த வர்கள் மிகவும் பலவீனப்பட்டு, பாதிக்கப்பட்ட இயல்பு உடையவராய் இருப்பர். விழிப்புலனை இழந்தவர் திருமணத்தின்பின் தங்கள் வாழ்க்கைத்துணை மீது சந்தேகப்படுவது எளிது. சந்தேகம் என்பது மிகப்பெரிய ஊனம். அவசியமில்லாமல் ஏற்படும்.
நம்பிக்கைக் குறைவினால் ஏற்படும் சந்தேகம் அநேக குடும் பங்களைச் சீரழித்துவிடும். ஊனமுற்ற நிலையில் வாழ்பவர், நல்ல நிலையில் இருப்பவரைத் திருமணம் செய்தால், எங்கே அவர்கள் விட்டு விட்டு ஓடிவிடுவாரோ என்ற பயம் ஏற்படும். இப்படி ஊன முற்றவர்களைத் திருமணம் செய்பவர்களுக்கும், உடன் வாழுபவர் களுக்கும் பல பிரச்சினைகள் ஏற்படும். அவர்களுக்கும் ஆலோச னைப்படுத்தல் தேவைப்படும்.
ஊனமுற்றவர்களின் சாதனை: ஊனமுற்றவர்கள் பலர் தங்கள் வாழ்விலே, பல விதங்களிற் சாதனை புரிந்ததை நாம் அறிந்திருக்கிறோம். ஹேலன் கெல்லர் போன்றவர்கள் தங்கள் ஊனத்தை ஏற்றுச் சாதனை படைத்து வாழ்ந்து மறைந்தவர்கள்.
ரஷியாவிலுள்ள ஒரு நோயாளி ஒரு விரலைக்கொண்டே நூலை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். இவ்வாறே காலில்லாமல் நடன மாடிப் பாராட்டைப் பெற்றவர்கள். கால் ஊனமான நிலையிலே காரை ஓட்டும் சிறப்புப் பெற்றவர்கள் என பலர் உள்ளனர். இந்தியன் வங்கியில் வேலை செய்யும் மாசில்லாமணி என்பவர் கண்ணில்லாத நிலையிலும் எல்லோரையும் மனந்திரும்பும் அளவுக்கு மனதுருகும் வகையில் பேசி இசைத்துப் பாடுவார். வரலாற்றிலும், நாம் வாழும் காலங்களிலும் ஊனமுற்ற பலர் சாதனை புரிந்து வாழ்ந்து காட்டி யுள்ளனர்.
தற்கொலை எண்ணத்திலிருப்பவர்களை ஆலோசனைப்படுத்தல் தற்கொலை என்பது இந்த நவநாகரிக உலகின் கண்டுபிடிப்பு அல்ல. வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே தற்கொலைகள் இருந்து வந்திருக் கின்றன. செனோ (Zeno) என்ற ஸ்டாயிக் தத்துவஞானி (Stoic Philosopher) தனது 98 ஆவது வயதில் தூக்குப்போட்டு இறந்தார். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடன் வாழ்ந்து பொருளாளராய்ப் பணியாற்றிய யூதாஸ் இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்து அவரைக் கொலை செய்யக் காரணமாயிருந்த குற்ற உணர்வினால் நான்டு கொண்டு நின்று, வயிறு வெடித்து மரணமானான். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில் தங்கள் உயிரைத் தாங்களே எடுப்பது ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. இந்துமதத்தில் ‘சதி’ எனும் உடன் கட்டைஏறும் வழக்கம் சமீபகாலம்வரை பழக்கத்தில் இருந்திருக்கிறது. இன்றும் தற்கொலை பண்ணுகிறவர்களைத் தடுக்கமுடியவில்லை. தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி என்றும் எதிர்பார்த்த வாழ்வு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, மதிப்பெண் கிடைக்கவில்லை என்றும் பலவிதமான காரணங்களால் தங்கள் உயிர்களைத் தாங்களே அழித்துக் கொள்வதைத் தினசரி செய்தித் தாள்களில் பார்க்க முடிகிறது. உலக மக்களின் இறப்பிற்குக் காரணமானவற்றில் 8வது இடத்தைப் பிடித்திருப்பது ‘தற்கொலை’ என உலக சுகாதார ஸ்தாபன அறிக்கை குறிப்பிடுகின்றது. தற்கொலை செய்வதிற் பலர் ஆண்கள். ஆனால் தற்கொலைக்கான முயற்சிசெய்வதிற் பலர் பெண்கள். தற்கொலை செய்து இறப்பவர்களிற் பெரும்பாலானோர் 18-30 வயதைச் சேர்ந்தவர்கள். அடுத்தது 30-50 வரையுள்ள வயதினர். அண்மைய புள்ளி விபரப்படி இளைஞர்கள் தற்கொலை செய்வதே அதிகரித்து வருகிறது. எனவே, ஏன் தற்கொலை செய்ய முனைகின்றனர்? இத்தகை யோருக்கு எப்படி ஆலோசனை வழங்குவது என்பவற்றை அறிந்தி ருப்பது அவசியமாகிறது.
தற்கொலைக்கான காரணங்கள் :
தற்கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட சமுதாயக் காரணங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் சமுதாயத்தோடு கொண்டுள்ள உறவு மிகவும் முக்கியமானது. ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி மட்டும் காரணமல்ல; அதனால், சமுதாயத்தில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதே காரணமாகின்றது. ஒரு மனிதன் சமுதாயத்தோடு நல்ல உறவோடு வாழ்ந்தால் தற்கொலைக்கு அதிக வாய்ப்பில்லை. சரியான உறவோடு வாழத் தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் தற்கொலை செய்கிறார்கள். திருமணம் செய்யாதவர்கள், வாழ்க்கைத் துணைவரை விட்டு விவாகரத்துச் செய்தவர்கள் போன்றோர். தற்கொலை செய்வது அதிகமாக இருக்கிறது. குடும்பம் சிதைந்தபின் தனிமையைச் சந்திக்கவும், தனியாக வாழ்வைத் தொடரவும் தைரிய மில்லாமல் இறப்பது மேல் என்று நினைக்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை ஆதரிக்கப்பட்டு வந்த இந்தியாவில் நுழைந்துள்ள கலாசார மாற்றம் முதியோர்களை முதியோர் இல்லத்திற்குத் தள்ளி விடுகின்றன. குழந்தைகளை வளர்க்க ஆளில்லாமல், ஏதாவது பிரச்சினை வந்தாலும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். சாதாரண, நடுத்தரக் குடும்பத்தினரின் மீது நுகர்வோர் கலாசாரம் ஏற்படுத்திய பாதிப்பினால் தகுதிக்கு மேல் கடன்வாங்கிப் பொருள்களை வாங்கிக் குவிப்பது, அதிக கடன்வாங்கி வீடுகட்டுவது, திருமணம் செய்துவைப்பது இதுபோன்ற சூழ்நிலையில் வருமானம் தடைப்பட்டுப் போவதால் ஏற்படும் தடுமாற்றம் நெருக்கடியான சூழ் நிலையை ஏற்படுத்தும்போது தற்கொலையை நாடுகின்றனர்.
இன்னொரு காரணம் மதத்தின் மீது உண்மையான பற்றின்மை, முன்பு மதம் என்பது இறைவனோடு இணைந்து நம்பிக்கையோடு வாழ உதவியது. ஆனால், இன்று அது வெறும் திருவிழாக்களும், ஆடம்பர வழிபாடுகளும், சடங்குகளும் மட்டும் அடங்கியதாக மாறி விட்டது. அது இதயத்தைத் தொடுவதில்லை. இறைவனோடு நெருக் கமான உறவுகொள்ள வழிகாட்டுவதில்லை. நிலைபேற்று வாழ்வைப் பெற்றுக்கொள்ளவேண்டி வாழவேண்டும் என்ற உணர்வும், ஏக்கமும் இல்லை. காணும் இந்த உலகமே நிஜம் என்ற எண்ணம் காரணமாக இவ்வுலக வாழ்வில் நம்பிக்கை இழந்தநிலை ஏற்படும்போது தற்கொலை ஒன்றுதான் வழி என்று நம்பச்செய்கிறது.
முக்கியமான இன்னொரு காரணம் தொலைத்தொடர்புச் சாதனங்கள், இன்றைய திரைப்படங்கள், குறுந்திரை (ரெலி) நாடகத் தொடர்கள் தற்கொலை பண்ணுவதைப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் காட்டுகின்றன. தற்கொலை எண்ணம் தீமை என்ற உணர்வே மாறிவிட்டது. மிகவும் வேதனைக்குரியது சாவைத்தவிர வேறு வழி என்ன என்று கேட்கும் அளவுக்கு நம்பிக்கையின் சாரம் குறுகிவிட்டதே.
வறுமையின் காரணமாக, வறட்சியின் காரணமாக தற்கொலை பண்ணும் நெசவாளிகள், விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இவை தவிர தற்கொலைக்கான காரணங்களாக பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
1. சீதனக் கொடுமை
2.மாமனார் மாமியார் கொடுமை
3. பாலியல் பலாத்காரம்
4. திருமணத்திற்கு முன்பு கர்ப்பம்
5.திருமணத்திற்கு வெளியே தவறான உறவு
6. தவிர்க்க முடியாது சண்டையிடுதல்
7. குடும்பத் தகராறு, பிளவுகள்
8. சொத்துத் தகராறு
9.பயங்கரமான நோய்
10.வேலையின்மை
11.பொருளாதார இழப்பு
12. அளவுக்கு அதிகமான கடன்
13. வழக்கில் தோல்வி
14.பதவி இழப்பு
15.நெருக்கமான உறவினரின் இறப்பு
எனவே, சூழ்நிலையில், மனநிலையில் இருப்பவர்களுக்கு ஆலோசனைப்படுத்தல் அவசியம். எவ்வளவுதான் முயன்றாலும் தற்கொலை எண்ணம் உடையவர்களை நாமாக அடையாளம் காண முடியாது. அவர்களாகத்தான் உதவிதேடி வரவேண்டும் அல்லது யார் மூலமாவது கேள்விப்பட்டு உதவி பெறச் சொல்லலாம். சிலர் தற்கொலை செய்வதற்கான நிர்ப்பந்தமான சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம்.
1. எப்போதும் தற்கொலை செய்யும் எண்ணத்தோடிருப்பவர்கள்
2. மனச்சோர்வு, உறக்கமின்மை, குடிபோதைக்கு அடிமைப்பட்ட வர்கள்.
3. குடும்பத்திற் பலர் தற்கொலை செய்து இறந்த சூழ்நிலை.
4. தனிமையில், விரக்தியுற்ற நிலையில், சமுதாயத்தில் உறவின்றி இருப்பவர்கள்.
தற்கொலை எண்ணமுடையவர்கள் மீது முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டியவை:
1. குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து சந்திப்பது.
2. அதிக மனக்கவலையினால் மாற்றுவழிகள் இருந்தும் சிந்தித்துக் தேர்ந்து எடுக்க இயலாமல் இருப்பதை உணர்த்துவது.
3. பிரச்சினையைச் சந்திக்க வேறுவழிகள் இருப்பதைப்புரிய வைப்பது.
4. வீட்டாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கச் செய்யலாம்.
5. அதிக மனச்சோர்வுடன் காணப்படுகின்றவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யலாம்.
6. உறங்க வைத்தோ, தளர்நிலைக்கு வரச்செய்தோ தொடர்ந்து வழிநடத்தலாம்.
7. ‘துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி’ என்பதைப் புரியச்செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இறைநம்பிக்கை பெற வழிகாட்டலாம்.
தனித்து வாழ்பவர்களிடம் காணப்படும் குறைகள் எவை?
1. கருத்துப் பரிமாற யாரும் இருப்பதில்லை
2. பாதுகாப்பின்மை
3. தவறுகளைத் திருத்த யாருமில்லை
4. பாராட்டி, தட்டிக் கொடுப்பாரும் இல்லை
5.கவனம் செலுத்த யாருமே இல்லை
6. இன்னாருக்குச் சொந்தம் என்று உரிமை பாராட்ட யாருமே இல்லை தனித்து இருக்கும் தனிநபர் ஏதாவது குடும்பங்களில் நுழைந்தால். பலருக்குச் சூழ்நிலையை ஏற்று வாழத்தெரிவதில்லை. விவாகரத்தினால் தனித்து வாழவேண்டியவர்கள் அனுபவிக்கும் சூழ்நிலை பின்வரும் பல செயற் பாடுகளாய் வெளிப்படும்:
இலட்சிய நோக்கு இல்லாத நிலை
- எல்லாமே நின்றுவிட்டது போன்ற உணர்வு.
- எதிலுமே ஆர்வமற்றநிலை, வெறுமை, தனிமை, நெருக்கும் சூழ்நிலை.
- குழப்பமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட உணர்வு.
- எல்லாமே துண்டிக்கப்பட்ட அனுபவம்; வாழ்வதற்கு என்று எந்தக் காரணமுமே இல்லை என்னும் நிலை.
பிள்ளைகளை அவதானித்தல்
பின்வரும் விடயங்களை ஆலோசகர் அவதானித்துப் பிள்ளைக்கான ஆலோசனை வழங்கும் செயன்முறையைத் தொடரலாம்.
பொதுவான தோற்றம்
பிள்ளைகள் எவ்வாறு உடையணிந்துள்ளனர்? விழிப்போடு இருக்கின்றனரா?
நடத்தை
அமைதியாய், கவனமாய் அவதானிக்கின்றனரா? அபாயத்தைத் தேடிக்கொள்கின்றனரா? பிரியமுடையவர்களா? தற்பாதுகாப்புடை யவர்களா ? எல்லைகளை வைத்துக் கொள்கின்றனரா?
- பிள்ளையின் மனநிலை எவ்வாறு உள்ளது ?
- பிள்ளையின் அறிவு, சிந்திக்கும் ஆற்றல் எவ்வாறு?
- பேச்சும், மொழியும் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளது ? பேச்சுத்திறமை எப்படி?
- இயங்கும் திறமைகள் – அமர்ந்திருத்தல் அல்லது குதித்தல், சுதந்திரமான அல்லது வரையறைக்குட்பட்ட உடல் ரீதியான செயற்பாடுகள்.
- விளையாட்டு
- ஆலோசகருடன் பிள்ளைகளின் உறவு
குழு – தனி ஆலோசனைகள்
சிறார்களுக்கான வழிகாட்டல் விருத்திக்குப் பின்வரும் விளையாட்டுக் செயற்பாட்டு உத்திகள் பெரிதும் பயன்படுவதுடன் மறைமுகமாகச் சிறார்களைக் கற்றுக்கொள்ளவும் அவர்களைக் கற்கச் செய்யவும் வழிகாட்டுகின்றன.
குறும் மிருகங்கள்
மிருகங்களுடன் விளையாடுவதும் அவற்றைப் பற்றிக் கதைகள் சொல்வதும் பிள்ளைகளுக்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாது உறவு முறைகளுடன் தமது வாழ்வைப் பரிசீலனை செய்யக்கூடிய தாகவும் இருக்கும். உதாரணங்கள்
*”உங்கள் குணங்களைக் கொண்ட ஒரு மிருகத்தைத் தெரிவு செய்யவும்”, “சிங்கத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் (உங்களைப் பற்றியல்ல)’. ‘சிங்கம் தனக்குள்ளே எவ்வாறான மிருகம் என்பதை அறிய விரும்புகின்றேன்?”
குறிப்பு: எப்பொழுதும் மிருகத்தைப் பற்றியே கதைக்க வேண்டும்; பிள்ளையைப் பற்றியல்ல. எதிர்மாறான உணர்வுகளை ஏற்க ஆயத்தமில்லாத குழந்தைக்கு இது இலகுவாக இருக்கும்.
*குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த மிருகங்களைத் தெரிவு செய்யவும்: ஒரு படத்தை உருவாக்கும் வகையில் மிருகங்களை ஒழுங்கு படுத்தவும்.’
தலையீட்டுக்கான உதாரணங்கள்
- கவனித்தல் திறமைகளைப் பாவிக்கவும்: “நீங்கள் குரங்கையும் ஆட்டையும் ஒன்றாக வைத்தபோது சந்தோசமாக இருந்ததைக் கவனித்தேன்.’
- கூற்றுக்களைப் பாவிக்கவும்: “கோழி காண்டாமிருகத்திலிருந்து மிக அப்பால் இருப்பதை அவதானித்தேன்.”
- திறந்த கேள்விகளைப் பாவிக்கவும்: “இராட்சத பல்லியின் முன்னால் இருக்கும்போது அது எவ்வாறு இருக்கும்?”
- மணற்தட்டு மணற் பலகையானது ஒரு குழந்தையானது அடையாளங்கள் மூலம் தனது கதையைக் கூற ஒரு சிறந்த முறையாகும்.
உதாரணங்கள்
“இப் பொருட்களைப் பாவித்து மணலில் ஒரு படத்தை உருவாக்க விரும்புகின்றேன்.”
உங்களுக்குத் தெரிந்த மக்களைக் குறிக்கும் ஒரு படத்தை உருவாக்கவும்.”
“உங்களைப் பயத்துக்குள்ளாக்கும் காரியங்களைக் குறிக்கும் ஒரு படத்தை உருவாக்கவும்.”
குறிப்பு: குழந்தை பயத்தை உருவாக்கும் காரியத்தை உருவாக்கி
அதைப் புதைத்து விடலாம்.
தலையீட்டுக்கான உதாரணங்கள்
*கவனித்தலை உபயோகிக்கவும்.
குழந்தை உபயோகிக்கும் அடை யாளங்களை அவதானித்து அவற்றிற்கு அது வழங்கும் குணங் களையும், விளக்கங்களையும் இனங்காணவும் மற்றும் அவற்றை வைக்கும் இடம், இடைவெளி, அல்லது அவற்றைப் புதைக்கின்றதா? ஒன்று மற்றொன்றை அடக்குகின்ற நிலைகளில் இருக்கின்றதா? என அவதானிக்கவும்
*கூற்றுகளைப் பாவித்தல்:
ஆனால் குழப்பத்தை உருவாக்குபவை அல்ல.
* திறந்த கேள்விகளைப் பாவித்தல்.
“உங்கள் படத்தைக் குறித்துச் சொல்ல முடியுமா?””இந்த இடத்தில் என்ன நடைபெறுகின்றது?” “இது பெரிதாகவும், பலமாகவும் காணப்படுகின்றது. எப்பொழு தாவது நீங்கள் அவ்வாறு உணர்ந்திருக்கிறீர்களா?”
களி (மகிழ்வு)
உணர்வுகளை வெளிவாரியாக உணர்த்த களியானது உதவி செய்கின்றது. உணர்வுகளை இனம் கண்டுகொள்ள உதவுகின்றது. களியோடு வேலை செய்கின்றபோது எதையோ ஒன்றைச் செய்து முடித்த திருப்தி காணப்படும். உதாரணங்கள்
*களியோடு விளையாடிக் களியை அறிந்து கொள்ளவும்.
இப்பொழுது உணர்கின்ற விதத்தில் ஒரு உருவத்தை வரைந்து கொள்ளவும்.
*பாடசாலையில் உங்களைக் கேலி செய்கின்றபோது உங்கள் காணப்படும் விதத்தை வரைந்து கொள்ளவும். முகம்
தலையீட்டுக்கான உதாரணங்கள்
* ஆலோசகர் தாமாகவே பல உரு மாதிரிகளைச் செய்து பிள்ளைக்குக் தன்னம்பிக்கையைக் கொடுக்கத் தான்என்ன செய்தார் என்பதைப் பற்றிக் கதைத்தல் – bumps and spikas மாதிரிகளை நிறையச் செய்து “நான் இப்பொழுது வேலையாக இருக்கிறேன்’ எனக் கூறலாம்.
* என்ன செய்யப்பட்டிருக்கிறது எனக் கதைக்குமுன் கூற்றுகளைப் பாவித்தல்: “நீங்கள் நீண்ட நேரம் எடுத்ததை நான் கவனித்தேன், அந்த உருவத்தைச் செய்தபோது உங்கள் முகம் மிகவும் கவலையாகக் காணப்பட்டது.’
* திறந்த கேள்விகளைப் பாவித்தல்: “அந்த உருவம் நீங்கள்’ என கற்பனை செய்யுங்கள்”, “அந்த bumps இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்?”
* பிள்ளைகள் உருவங்களைச் சுற்றிவந்து வெவ்வேறு கோணங் களிலிருந்து அவற்றைப் பார்க்கலாம்.
* தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு உருவத்தைச் செய்த பின்பு இன்னுமொருவரை அடையாளப்படுத்தும் வகையில் அதற்கருகில் இன்னுமொன்றைச் செய்து வைக்கலாம். பின்பு அவ்வுருவங் களுடன் ஒரு உரையாடலை ஆரம்பிக்கலாம். “ நீங்கள் அவ்வுருவம் எனக் கற்பனை செய்து கொள்ளவும், அப்படியானால் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்கலாம்.
வரைதல், நிறந்தீட்டல், வரைபு செய்தல், கட்டியெழுப்பல்
உதாரணங்கள்
*உணர்ச்சி மிக்க விளையாட்டுகளான ‘விரட்டல் விளையாட்டு
அதாவது ஆலோசகர் பிள்ளையின் கோட்டிற்குப் பின்னால் அவரும் கோட்டால் விரட்டுதல். இருவரும் சேர்ந்து வரையப்பட்ட விளையாட்டை இரசித்தல். *உணர்ச்சி மிக்க விளையாட்டுகள் பிள்ளைகளுக்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
அவர்களின் உணர்வுகளோடு இணைவதற்குப் பதிலாக அவர்களின் கண்ணை மூடச் சொல்லி அவர்களின் உடல் எவ்வாறு உணர்கின்றது என்பதைக் கவனிக்கச் சொல்லவும். உதாரணமாக: இறுக்கமான தோற்பட்டை, தலைவலி அல்லது தளர்வாகக் காணப்படுகின் றார்களா? அவர்களின் பாதங்களை இறுக்கச் சொல்லி எவ்வாறு உணர்கின்றார்கள் என்பதற்கூடாக அவர்களை வழிநடத்தல், பாரமாக? இலகுவாக? பிறகு உங்கள் பாதங்களின் படத்தை நிலத்தில் வரையவும்.
*இன்னுமொரு வழி பிள்ளைகளை உணர்வுகளோடு இணைத்தல்;
வானம் வரை எட்டுதல். நின்றுகொண்டிருக்கும் அல்லது எட்டிக் கொண்டிருக்கும் உணர்வை எனக்கு வரைந்து காட்டுங்கள்.
இப்பொழுது உணர்கின்றதை வரைந்து காட்டுங்கள். நீங்கள் நினைக்கின்ற உலகத்தில் உள்ள மக்கள், இடங்கள், பொருட்களை கோடுகள், உருவங்கள், நிறங்கள் மூலம் முழுத்தாளையும் பாவித்து வரைந்து காட்டுங்கள்.
*உங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒரு உருவத்தினால், ஒரு கோட்டினால் அல்லது நிறத்தினால் வரைந்து காட்டுங்கள்.
*உங்களை ஒரு மரம் என்று கற்பனை செய்து வரையுங்கள். நீங்கள் அம்மரமாக நடித்தால் அது எவ்வாறு இருக்கும் ? அது எவ்வாறுஉணரும்?
*தலைவலி. கோபம், வருத்தத்தோடு உங்களை ஒரு படத்தில் வரையுங்கள். நீங்கள் ஒரு மந்திரியாக இருக்க விரும்பினால் எங்கே இருப்பீர்கள் என வரையுங்கள்.
உங்கள் கனவைப் படமாக வரையுங்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது கண்ட பயங்கரக் கனவு.
* பிள்ளை பிழைவிடப் பயந்தால் விரல் நிறத்தைப் பயன்படுத்தவும், பிள்ளைக்குப் படங்கள் மூலம் தங்கள் உணர்வை வெளிப் படுத்துவது இலகு.
*வரைபானது பலவித நெசவுகளைப் பாவிக்க உதவியாக இருக்கும். நீங்கள் அந்த மணற்தாளாக இருந்தால் எவ்வாறு உணர்வீர்கள். சுயமாக ஒரு வரைபை ஏற்படுத்தல்.
தலையீட்டுக்கான உதாரணங்கள்
* கவனித்தலைப் பாவித்தல் : உருவங்கள், விளக்கங்கள், நிறங்கள், உறவு முறைகளைக் கவனித்தல்.
* திறந்த கேள்விகளைப் பாவித்தல் : அம்மரத்தைப் போலிருப்பது
* கூற்றுகளைப் பாவித்தல் : பிழைவரும்போது உங்களைக் குறித்துக் கடினப்படுவதை உணர்தல். காரியங்கள் நடைபெறாத போது இலகுவாக அதை விட்டுவிடப் பார்க்கின்றீர்கள். புத்தகங்களும் கதைகளும் மற்றவர்களின் கதைகளும் நம்பக்கூடிய கதைகளும் பிள்ளைகளின் சூழ்நிலையைப் பிரதிபலிக்க உதவிசெய்கின்றன. அதே மட்டத்திற் காணப்படும் மற்றவர்களின் அனுபவங்கள், சிந்தனைகள், நடத்தைகள் மூலம் பிள்ளைகள் தங்களது அனுபவங்கள் உணர்வுகளைக் கதையில் காணப்படும் பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்த முயல்கின்றனர். மற்றவர்களின் உணர்வுகளை அடையாளப்படுத்தும்போது இவர்களின் உணர்வுகளை இனம்கண்டுகொள்ள முடியும் மற்றும் அவர்கள் மாற்றுவழிகளைக் கண்டுபிடித்து கதைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது காரியங்கள் சுலபமாகத் தோன்றும், தளும்புகள் குறைவடையும்.
உதாரணங்கள் இருவரும் சேர்ந்து கதைப் புத்தகங்களை வாசித்து அதைப்பற்றிக் கதைக்கவும்.
*கல்வி புகட்டும் பல்வேறுபட்ட விஷயங்களின் கீழ் கதைகளை வாசிக்கவும்: சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், கோபம், பலாத்காரம் போன்றவை.
* புத்தகங்களைப் பாவித்து பல தலைப்புகளின்கீழ் கதைகள் எழுதுதல்: நண்பர்கள், குடும்பம், புறக்கணிப்பு, மாயாஜாலங்கள், அரக்கர்கள். தேவதைக்கதைகள், கட்டுக்கதைகள். இருவரும் சேர்ந்து கதை சொல்லுதல் அதாவது ஆலோசகரும் பிள்ளையும் மாறிமாறிக் கூறுதல்.
*ஆலோசகர்: ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். பிள்ளை: அவர் குதிரையில் ஏறி நாட்டைச் சுற்றி வருவார். ஆலோசகர்: அவர் நாட்டைச் சுற்ற வரும் போது இவ்வாறு உணர்ந்தார்.
மாறிமாறிச் சொல்வதற்குப் பதிலாக நிறையப் பொருட்கள் உள்ள ஒரு பையைக் கொண்டு வந்து கதையைச் சொல்லும் அதே வேளை பையில் உள்ள பொருட்களைக் பாவித்தல்.
தானாகவே ஒரு கதை எழுத பிள்ளையை ஊக்குவித்தல்.
தலையீட்டுக்கான உதாரணங்கள்
*திறந்த கேள்விகளைப் பாவித்தல்: இக் கதையில் யாராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ன செய்திருப்பீர்கள்?
*உங்களுடைய கற்பனைத் திறமையைப் பாவித்து அதில் பங்கு கொள்ளல்.
பொம்மைகளும் மென் விளையாட்டுப் பொருட்களும் இவை பாலர் வகுப்பு மாணவர்களுக்கும் தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கும் உதவியளிக்கக்கூடியவை. அவர்களைப் பாத்திரமாக வைத்துக்கொண்டு இவ்வாறான விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுவது வழக்கம். பொம்மைக் கரடி ஒன்றைத் தனது இளைய சகோதரியாக வைத்துக்கொண்டு விளையாடுவார்கள் குழந்தைகள். இவ்வாறான விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுவதால் தமது எண்ணங்களை அந்த விளையாட்டுப் பொருட்களுக்குள்ளேயே சேர்த்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ் விளையாட்டுப் பொருட்க அவர்களது கற்பனையை வியாபிக்கக்கூடிய ஒரு வெளியீட்டு ஊடகமாக உள்ளன.
உதாரணங்கள்
*குழந்தைகள் தன்னிச்சையாகவே பாவைகளைப் பாவிக்கின் றார்கள்.
* குழந்தைகளாகவே தயாரித்து ஒரு பொம்மலாட்டம் ஒன்றை நடத்தப் பிள்ளைக்கு அழைப்புவிடுத்தல். ஆலோசகருடன் உரையாடலை ஏற்படுத்தப் பொம்மைகளைப் பாவித்தல்.
* நன்றாகத் தெரிந்த கதை ஒன்றைச் சொல்ல பொம்மைகளை உபயோகித்தல்.
* ஒரு உரையாடலை ஏற்படுத்துமுன் பொம்மைக்கு வெள்ளை நிற காலுறையும் கறுப்புநிறப் பேனையையும் பாவிக்கக் கொடுத்தல்.
தலையீட்டுக்கான உதாரணங்கள்
*விளையாடும்போது திறந்த கேள்விகளைப் பாவித்தல்: “ஹலோ சேம், இன்று விளையாட வந்திருக்கிறீரா? விளையாட்டிலுள்ள பாத்திரங்களை எனக்குக் காட்டமுடியுமா? கதையின் எந்தப் பகுதியில் நீங்கள் இருக்க விரும்புகின்றீர்கள் ? நீங்கள் கதையில் எப்பாத்திரம்?”
‘இருவரும் சேர்ந்து விளையாட்டைச் செய்யப்போகின்றோம். உங்களுடைய பாத்திரத்தை நீங்கள் தெரிவு செய்யலாம்; ஒரு பாத்திரம் பயந்த சுபாவமும் உறுதியற்றதுமாக இருக்கும். இன்னொன்று அதிகாரத்தோடு கூடிய சக்தியும் பலமும் வாய்ந்தது. இன்னும் மூன்று பாத்திரங்கள் இருக்கின்றன. அதிலொன்றைத் தேர்ந்தெடுக்க விருப்பமா?”
விளையாடும் போது ஆலோசகர் குறுக்கிட்டு நேரடியாகப் பாத்திரங் களோடு பேசலாம்: ‘வெளியே தனியாகத் தள்ளப்பட்டு பாட்டிக்குப்போகாததற்கான காரணம் என்ன? இதற்குச் செல்ல முடியா தென்றும் அதில் பங்கு பற்றத்தயங்குவதும் எதனால்?”
*ஆலோசகர் விளையாட்டின் போது திசையை மாற்றியமைத்து நேரடியாக விளையாட்டில் ஈடுபடலாம். மந்திரம் செய்வதினால் அது பயனளிக்கும் என நினைக்கவில்லை. உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வேறு எதை உங்களால் செய்ய முடியும்.
டெடிக்குச் சில நேரம் தெரியும் பிள்ளைகள் என்ன சிந்திக்கிறார்கள் என, அது உங்கள் மடியில் அமர்ந்தால் சில நேரம் அதனாற் சொல்ல முடியும். உங்களை என்ன காரியங்கள் பிரச்சினைகளுக் குள்ளாக்குகின்றன என்பது.
அனுவிற்குப் பிரச்சினை இருக்கிறது. உனக்கு – அதுபற்றி தெரியுமென நினைக்கிறேன். (இவ்வாறு செய்வது பிள்ளைக்கு அசௌகரியமாக இருப்பின் டெடியை ஆலோசகரின் காதுக் கருகிற் கொண்டு சென்று டெடி அவரின் காதில் முணுமுணுப்பது போலச் செய்யலாம்.) டெடி நினைக்கின்றது உங்களுடைய பிரச் பிரச் சினை பாடசாலைக்குச் செல்வதாக இருக்கும் என்று.
* அமைதிக்கு இடம் கொடுக்கவும்.
கற்பனாசக்தி மிக்க பாவனை விளையாட்டு
விளையாட்டுகள் மூலம் புதிய நடத்தைகள் ஏற்படும் என நம்பப் படுகின்றது. குறைந்த வயதுப் பிள்ளைகளுக்கு இது மிகவும் பொருத்த மானது.
உதாரணங்கள்
* ஆலோசகருடன் சமாந்தரமான விளையாட்டு : “கதிரைகளை இங்கே வைக்கப்போகின்றேன். அப்பொழுது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தொலைக்காட்சியைப் பார்க்க முடியும்.”
* ஆலோசகருடன் இணைந்து விளையாடல் (ஆலோசகர் பிள்ளை யுடன் விளையாட்டில் இணைந்து கொள்ளல்): “இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? பாவை, தனது உணவை அருந்த வில்லை எனவே நான் இங்கு இருக்கிறேன் பெரிய அக்கா.” தலையீட்டுக்கான உதாரணங்கள்
*கற்பனாசக்தியைப் பாவித்து நேரடியாக ஈடுபடல். * அமைதியையும் கவனித்தல் திறமைகளையும் பாவித்தல்.
விளையாட்டுகள்
விளையாட்டுகள் பிள்ளைகளுக்கு வினோதத்தையும் நல்லதொரு உறவையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாது ஆலோசனைத் தொடர்பையும் ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
உதாரணங்கள்
* Snap memory Game (ஞாபக விளையாட்டுகள்), Carom போன்ற விளையாட்டுகளை விளையாடல் (4-7வயது).
* சமூகத் திறமைகளைக் கட்டியெழுப்பிப் பிள்ளைகளை விளை யாட்டில் ஈடுபடுத்தல். விளையாட்டுகள் மூலம் வாழ்வின் சில பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க உதவுதல். அதாவது, தோல்வி, சட்டங்களைக் கடைப்பிடித்தல், ஏமாறுதல், வாய்ப்புகளைப் பெறல், வாய்ப்புகளை இழத்தல், வெளியே தள்ளி வைக்கப்படல்.
*சீட்டு, போட்டி விளையாட்டுகள், பேள்வகை போன்ற விளை யாட்டுகளை விளையாடவும் (7-11 வயது)
தலையீட்டுக்கான உதாரணங்கள்
* கூற்றுகளை உபயோகித்தல்:
முடிந்தளவு விளையாட்டைத் திறமையாகச் செய்ய முடியவில்லை என்கின்றபோது மனம் விசாரமாகக் காணப்படலாம்.
* திறந்த கேள்விகளைப் பாவித்தல்: விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் அது உங்களுக்கு எவ்வாறு இருக்கும்? கல்வி புகட்ட உ விளையாட்டுகளைப் பாவித்தல்.
* வயதிற் கூடிய சிறுவர்களுக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விளையாட்டுகளை விளையாடவிடல்.
பயிற்சித்தாள்கள்
இவை பாட நெறிகளின் தொடக்கத்தில் பிரயோஜனமாக இருப்பது மட்டுமல்லாது ஏற்கெனவே செய்த வேலைகளைப் பலப்படுத்தவும் உதவுகின்றன.
உதாரணங்கள்
பிள்ளைகளின் மதிப்பீட்டை உயர்த்தும் வகையிற் கீழ்க்காணும் பயிற்சித்தாள்களைப் பிரயோஜனப்படுத்தவும்.
தலையீட்டுக்கான உதாரணங்கள்
பயிற்சித்தாளில் காணப்படும் குறிப்புகளை உபயோகித்து பிரச்சி னைகளைப் பரிசீலனை செய்யவும். திறந்த கேள்விகளையும் கூற்று களையும் உபயோகிப்பதன் மூலம் மேலும் தொடர்ந்து பயிற்சித் தாள்களைப் பாவிக்க முயற்சித்தல்.
கதைமூலம் குணமாக்கும் முறை
சொல்லப்படும் அல்லது எழுதப்படும் கதைகள் பிள்ளையின் வாழ்க்கைப் பிரச்சினையுடன் எப்படிச் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதாக இருக்க வேண்டும்.
பிறகு இக்கதைகள் பிள்ளையின் விருப்பப்படி மாற்றுக் கதைகளாக உருவாக்கி மீண்டும் கூறவேண்டும்.
இப்புதுக்கதையின் தோற்றமானது பிள்ளை இப்புதுக்கதையைப் பற்றி அதனுடன் தொடர்ந்தும் இணைந்திருக்க உதவ முக்கியமானதாகும்.
பொருட்களை உபயோகிப்பதன் மூலம் இப்புதுக்கதையை அழகுபடுத்தவும் பலப்படுத்தவும் முடியும். உதாரணம் :
உங்கள் கூட்டாளியோடு மந்திரப் பை ஒன்றைப் பாவித்து அதிலிருந்து ஒன்றொன்றாகப் பொருட்களை வெளியே எடுத்துக் கதையை ஆரம்பிக்கவும்: ”ஒரு காலத்தில் துக்கத்துடன் ஒரு இளவரசன் காணப்பட்டான்….” நீங்கள் பையிலிருந்து எடுக்கும் பொருட்கள் அடுத்ததாகச் சொல்லும் கதையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
கதைமூலம் குணப்படுத்தும் முறையானது ஆலோசனை பெறுநர் பழைய கதையை ஒழித்துத் தமது விருப்பப்படி தம்மையும் தமது வாழ்வையும் பற்றித் தீர்மானிக்க உதவும்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்