வரலாற்று அரசியல் |
இலங்கை தேசம் 133 வருடகாலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று இன்று 74 வருடங்களாகின்றன. அன்று தமிழர்இசிங்களவர்இ இஸ்லாமியர் என வேறுபட்டிருக்கும் நம் இலங்கையர்கள்இ இலங்கை தேசத்தின் மைந்தர்கள் என்று ஒன்றுபட வேண்டும். என்ற குரல் இளைஞர்கள் மத்தியில் இன்று மேலோங்கி ஒலிப்பதற்கும் ஒன்றுபட வேண்டும் என்பதே இலங்கை தாய் நம் புத்திரர்களிடம் வேண்டும் ஒரே வரம்.
‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பதை எம் நாட்டின் சுதந்திர வரலாற்றால் நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும். எம்மில் ஒற்றுமை இன்மையால் தான் இந்த தேசத்தை அந்நியர்க்குத் தாரைவார்த்தோம். அந்நியர் வருகைக்கும்இ வளர்ச்சிக்கும்இ எம்மை அடிமைப்படுத்துவதற்கும் காரணமானவர்கள் வேறுயாருமல்லர் இலங்கையர்களே. பின்னர் தவறுகளை உணர்ந்து மீண்டும் ஒன்றுபட்டதால் மீண்டும் இந்நாட்டை மீட்டெடுத்தோம்.
1505 இல் கடலில் சிக்கித் தவித்து அபயம் தேடி இலங்கையில் அடைக்கலமான போர்த்துகேயர்கள். இந் நாட்டின் ஆட்சியாளர்களாக மாறியமைக்கு எம்முன்னோர் மத்தியில் சிதைந்து போயிருந்த ஒற்றுமையே காரணமானது. நம் நாட்டின் உட்பூசல்களைப் பயன்படுத்திக் கொண்டே போர்த்துக்கேயர்கள் தமது பலத்தை விஸ்தரித்துக் கொண்டனர்.
போர்த்துகேயரை அடுத்த ஆக்கிரமிப்பாளர்களான ஒல்லாந்தரின் வருகைக்கும் எம்மவர்கள் மத்தியில் வேரூன்றிய பூசல்களே காரணமாகின. கண்டி இராசதானியுடன் 1658 இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமகவே போர்த்துகேயர் வசமிருந்த கரையோரப்பகுதிகளை ஒல்லாந்தர் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டனர்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்
1796 இல் ஆங்கிலேயர்களின் கப்பல்களை திருகோணமலைத் துறைமுகத்தில் தரிக்க ஒல்லாந்தர்கள் இடமளிக்காததால் ஆங்கிலேயர்கள் முதலில் திருகோணமலையை கைப்பற்றினர் பின்னர் ஒல்லாந்தர் வசமிருந்த கரையோரப்பகுதிகளையும் கைப்பற்றினர்.
ஆனால் ஒல்லாந்தருக்கும் போர்த்துகேயர்க்கும் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய கண்டி இராசதானியைக் கைப்பற்றுவது அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை வளங்களாலும் பலத்தாலும் உயர்ந்து நின்ற கண்டி இராசதானியைக் கைப்பற்றுவது. இவர்களின் கனவாக இருந்தது. படைபலத்தால் முடியாததை தம் சூழ்ச்சியால் சாதிக்க நினைத்த ஆங்கிலேயர். தமிழ் அரசர்களுக்கும்இ சிங்களப் பிரதானிகளுக்குமிடையில் இருந்த முரண்பாடுகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு கண்டி இராசதானியையும் தம் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வந்தனர். 1815 இல் இலங்கை முழுவதையும் ஆங்கிலேயர்கள் தமது சூழ்ச்சியால், நம்மவர்களின் ஒற்றுமை இன்மைனால் தம்வசப்படுத்திக் கொண்டனர்.
அந்நியர் ஆதிக்கத்தால் அடிமைப்பட்ட எம் மக்கள் தமிழர்இ சிங்களவர்இ இஸ்லாமியர் என்ற பேதங்களையும், முரண்பாடுகளையும் மறந்து. விடுதலை வேட்டையுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் போராட ஆரம்பித்தமையே 133 வருட ஆங்கிலேய ஆட்சிக்கு விடைகொடுத்து சுதந்திர இலங்கையை எமக்குப் பெற்றுக்கொடுத்த இலங்கையின் சுதந்திர வரலாறு ஒற்றுமையின் பலத்தை உணர்த்துகின்றது.
அந்த வகையில் இலங்கைத் தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்து இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பினை 1919ம் ஆண்டு உருவாக்கினர். பல இனஇ மத, மொழிப் பிரிவினர்கள் உள்ளடக்கிய இவ்வமைப்பு ஏற்பட்ட வேளையில் இதன் தலைவராக சேர்.பொன். அருணாசலம் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலை முக்கிய சிங்களத் தேசியத் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இவர் விளங்கினார் என்பது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் இலங்கை தேசிய காங்கிரஸ் இன ஓற்றுமையினதும்இ தேசிய ஒருமைப்பாட்டு நிலையினதும் சின்னமாக காணப்பட்டது என்பதனையும் காட்டுகின்றது.
எனினும் காலப்போக்கில் தலைவர்களின் கருத்து வேறுபாடுகள், முரண்பாடான செயற்பாடுகள்இ விட்டுக்கொடுப்பு இன்றி ஒற்றுமை சிதைந்து பல பிளவுகள் ஏற்பட்டு. அதன் விளைவாக இனரீதியானஇ கொள்கை ரீதியானஇ அமைப்புக்கள் தோற்றம் பெற்று. அதன் வழி பல கட்சிகளின் உருவாக்கத்திற்கும் வித்திட்டதனை நாம் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
அந்தவகையில் 1919ம் ஆண்டு உருவான தேசிய காங்கிரஸ் தமிழ்இசிங்களத் தலைவர்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான முரண்பாட்டினால் தேசியகாங்கிரஸில் இருந்து வெளியேறிய சேர். பொன். அருணாசலம் 1921 இல் ‘தமிழ் மகாசபை’ என்ற அமைப்பினைத் தோற்றுவித்தார் அவ்வாரே தேசிய காங்கிரஸில் முற்போக்கு எண்ணங்கொண்ட A.E. குணசிங்க கருத்து வேறுபாட்டினால் 1923 இல் ‘இலங்கை தொழிற்சங்கம்’ ஒன்றினை நிறுவி செயற்பட்டார். மேலும் கண்டி சிங்களவர்களுக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்காமையினால் அதிலிருந்து பிரிந்த கண்டி சிங்களவர்கள் உள்ளுர் நிர்வாக முறையினை வலியுறுத்தி 1926 இல் “கண்டிய தேசிய அசம்பிளி” என்ற அமைப்பினை உருவாக்கி கொண்டதுடன். இவர்கள் இலங்கை சமஷ்டி ஆட்சி முறையினைக் கொண்ட நாடாக மாற்றப்பட வேண்டும். என்ற வாதத்தினை முதன் முதலில் முன்வைத்தவர்களாகவும் விளங்கினா.;
மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர்களுள் ஒருவரான S.W.R.D பண்டாரநாயக்க பிரிந்து 1937 இல் ‘சிங்கள மகாசபை’ என்ற அமைப்பினை ஏற்படுத்திக் கொண்டார். இவ்வாறு இலங்கை தேசிய காங்கிரஸ் 1942 ம் ஆண்டு நடைபெற்ற களனி மகாநாட்டில் தலைவர்களின் கருத்து முரண்பாட்டினால் அதிலிருந்து விலகிய னு.ளு. சேனாநாயக்க 1946 இல் ஆண்டில் ‘ஐக்கிய தேசிய கட்சியை’ ஆரம்பித்து செயற்பட்டார். 1947 இல் சிங்கள மகாசபா ஊடாக ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொண்ட ளு.று.சு.னு பண்டாரநாயக்க கருத்து முரண்பாட்டினால் தனது ஆதரவாளர்களுடன் ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி 1951 இல் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை’ ஸ்தாபித்தார்.
இவ்விதம் இலங்கை தேசிய காங்கிரஸ் இனரீதியாகவும், வர்க்க ரீதியாகவும்இ பிரதேச ரீதியாகவும்இ சித்தாந்த ரீதியாகவும். பிளவுபட்டு கொண்டவேளை இலங்கை தமிழர் வேறாக 1944 ‘அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்’ என்ற அமைப்பினையும் மலையகத் தமிழர் வேறாக 1939 ‘இலங்கை இந்திய காங்கிரஸ்’ என்ற அமைப்பினை உருவாக்கி பின்னர் 1954 ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ என்ற அமைப்பாக மாற்றமடைந்து செயற்படஇ முஸ்லிம் மக்கள் வேறாக 1924 “அகில இலங்கை முஸ்லிம் லீக்” என்ற அமைப்பினை உருவாகியமை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒற்றுமை சிதைந்து ஏற்பட்ட விளைவுகள் வரலாறு உணர்த்தி நிக்கும் விடயமாகும்.
இது இவ்வாறு இருக்க 1931 இல் டொனமூர் அரசியல் திட்டத்தில் அறிமுகமான 21 வயதிற்கு மேற்பட்ட ஆண்இ பெண் வேறுபாடு இன்றி சகலருக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னர் மக்கள் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றியடைய முடியாது. என உணர்ந்த அரசியல் வாதிகள் சாதாரண மக்கள் நலனில் அக்கரை செலுத்த வழிவகுத்தது. சில இயக்கங்கள் அரசியல் கட்சியாக உருவாகின உதாரணமாக ‘சூரியமல் இயக்கம’; 1935 இல் முதன் முதலில் ‘லங்கா சமசமாஜ கட்சியாக’ உதயமாகியது. பின்னர் அன்று முதல் இன்று வரை இன அடிப்படையில்இ கொள்கை அடிப்படையில்இ தலைமைத்துவ போட்டிஇ கருத்து முரண்பாடுகள் போன்ற இன்னோரான காரணங்களினால் பிளவுபட்ட அரசியல் தலைவர்கள் அவ்வப்போது பல்வேறு கட்சிகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. இதனால் அரசியல் ஸ்;தீர தன்மைக்கு இன்றுவரை தாக்கம் செலுத்தி நிற்;பது வரலாறு உணர்த்தும் ஒற்றுமை இன்மையின்; விளைவாகும். லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து முரண்பட்ட சில தலைவர்கள் விலகி 1943 ‘கம்யூனிஸ்ட் கட்சியை’ அமைத்தனர். அடுத்து தலைமைத்துவ பிரச்சினையால் இதில் இருந்து விலகிய கொல்வின் சு.னு சில்வாவினால் 1945 இல் ‘போல்சிவிக் லெனினிஸக் கட்சியை’ ஆரம்பித்தார். எனினும் 1946 உருவான ஜக்கிய தேசிய கட்சியும் 1951 இல் உருவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இலங்கை தேர்தல் முடிவுகளில் அதிக செல்வாக்கு செலுத்தி ஆதிக்கம் செலுத்திய வரலாற்றை காணலாம். பின்னர் 1978 இல் அறிமுகமான விகிதாசார தேர்தல் காரணமாக இரண்டு பிரதான கட்சிகளின் ஊடாக கூட்டு அரசாங்க முறைக்கு வழிவகுத்ததனால் படி படியாக பல்வேறு சிறிய கட்சிகள் வளர்ச்சியடைந்து நிலையற்ற கொள்கைஇ தலைமைத்துபோட்டிஇ கட்சிதாவல்கள்இமற்றும் பல்வேறு முரண்பாடுகள் இன்றும் அரசியலில் தாக்கம் செலுத்துவதை நாம் காணலாம். உதாரணமாக 2016 இல் தாமரை மொட்டு சின்னத்தில உருவான ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’. இதே போன்று தலைமைதுவ முரண்பாட்டினால் ஐ.தே. கூட்டனியில் இருந்து விலகிய சஜித்பிரேமதாச தலைமையில் தொலைப்பேசி சின்னத்தில் 2020 ம் ஆண்டு உருவான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ இவ்வாராக எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு கட்சிகள் உருவாகி அரசியல் ஸ்தீர தன்மைக்கு பலவழிகளிலும் பங்கம் ஏற்படுத்துவதுடன். இன்று நம் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார பின்னடைவு, எரிவாயு, பெற்றோலிய வளபற்றாக்குறை, நீண்ட வரிசை அத்தியாவசிய மற்றும் சகல பொருட்களினதும் அதித விலையுயர்வு போசாக்கு இன்மை, எதிர்கால சிறுவர்களுக்கு மந்தபோசனை ஏற்பட்டு கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தல். பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழக கல்வி வரை பாதிப்புஇபாரிய பின்னடைவு மருத்துவ வசதி குறைவடைந்து பல உயிரிழப்பு, பல்வேறு துறையினர்க்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனமை. போன்ற இன்னோரான பல இன்னல்களுக்கும்இ துன்பங்களுக்கும் மக்கள் இன்று எதிர்க் கொண்டுள்ளமைக்கும், மக்கள் வறுமை நிலைக்கு தள்ளபட்டமைக்கும் இன்று அவ்வப்போது ஏற்படும் பாரிய மக்கள் போராட்டத்திற்கும்இ காரணமாக அமைவது. நம்மவர்களின் அசாதாரணமானஇ தான்தோன்றிதனமான தூரநோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடே ஆகும். அதாவது நம்மவர்களினால் தூரநோக்கற்று உருவாக்கப்பட்ட முதலாம், இரண்டாம்; குடியரசு அரசியல் திட்டத்தின் பாரிய குறைபாடுகள். அதனால் அரசியல் தலைவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற அளவற்ற அதிகாரம்இ அதிகார துஸ்பிரயோகம் இதில் அவ்வப்போது அரசியல்வாதிகளின் நலன் சார்ந்து உருவான 18ம்இ 20ம் சீர்திருத்தம் மற்றும் பொறுத்தமற்ற வெளிநாட்டு அரசியல் கொள்கை காரணமாக இன்று இந்தியா – சீனா பிடிக்குள் சிக்கி உக்ரேன் நாட்டிற்கு ஏற்பட்டது போன்ற அசாதாரண நிலைக்கு தள்ளப்படும் துர்பாக்கிய நிலைக்கும் காரணம் அரசியல் வாதிகளின் முரண்பாடுகள்இ தலைமைத்துவபோட்டிஇ நிலையற்ற அரசியல்கொள்கைஇ கட்சிசார்பான தலைவர்களின் செயற்பாடுஇ சுயநல செயற்பாடுகள்இ காரணமாக காலம் காலமாக மேற்கூறியவாறு வரலாற்று அரசியல் உணர்த்தும் ஒற்றுமையின் சிதைவே காரணம் எனலாம்.
இன்று நாடு எதிர்நோக்கியுள்ள இன்னல்களுக்கு ஓரளவான அடிப்படை தீர்வாக அமைய கூடிய “சர்வகட்சி ஆட்சியை கூட ஸ்தாபிக்க முடியாது திண்டாடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு, நம்மவரிடம் காணப்படும் ஒற்றுமையின் சிதைவே காரணமாக அமைகின்றன. எனவே வரலாற்று அரசியல் உணர்த்தும் ஒற்றுமையின் சிதைவின் விளைவுகளை பரிசீலித்து. ஒற்றுமையின் தேவையை உணர்ந்து இன,மத, மொழி, கொள்கைஇ தலைமைத்துவபோட்டி, போன்ற எல்லா முரண்பாடுகளையும் விடுத்து ஒன்றுபட்டு செயற்பட்டால் இன்று நம் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு துன்பங்களுக்கு தீர்வாக அமையலாம் என்பது இவ்விடத்தில் குறிப்பிடதக்க ஒன்றாகும்.
இறுதியாக பிளேட்டோவின் சிந்தனையில் அவருடைய ஆசிரியரான சோக்கிரதீசின் கோட்பாடு “அறிவுடையோரே ஆளுதல் வேண்டும்” “அறிவுடைமையே பண்பும் இன்பமும் ஆகும்” என்பதும்இ ஒற்றுமையின் தேவையும் எதிகால நாட்டின் சுபிட்சத்திற்கும் ஆட்சியின் சிறப்பிற்கும் வரலாற்று அரசியல் உணர்திய விடயங்களை படிப்பினையாக கொண்டு நாம் நம்மவர்களின் எதிர்காலத்திற்கு சிந்தித்து செயற்படல் நன்றே………..
உசாத்துணை
• இலங்கையின் அரசியற் திட்டங்களின் பரிணாம வளர்ச்சி -வேலுப்பிள்ளை குணரத்தினம் – 2008
• உயர்தர அரசியல் சிந்தனைகள் – பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா – 2006
T. சிவபாலன் (பிரதி அதிபர்) BA,PGDE
கே/தெஹி ஸ்ரீ கதிரேசன் தேசிய பாடசாலை
………………………………………………………………………………………………………………………………………………….
- எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
- உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும்