www.Edutamil.com |
இத்தாலிய நாட்டு பெண்மருத்துவரும் உளவியலாளருமாகிய மரியா மொன்ரசூரி அம்மையார் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க ஒருவராவார். 1870 இல் பிறந்த இவர் 1873 துறையில் இல் தனது பெற்றொருடன் ரோமிற்கு வசிக்கச் சென்றார். ரோமில் மருத்துவத் பட்டம் பெற்ற இவர் உளநலம் குறைந்த குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பாடசாலையிலே பணியாற்றினார்.
அங்கு பயன்படுத்தப்பட்ட விசேட கற்பித்தல் முறைகள் அம்மாணவர்கள் காரணமாக தமது திறன்களை சிறப்பாக வெளிக்காட்டியமையை உளநலம் குறைந்து அவதானித்த இ இத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதாரண பிள்ளைகளிடமும் வெற்றிகாண பெறுபேறுகளை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார். மூன்று தொடக்கம் ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கான குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்ட அம்மையாரால் மொன்ரசூரி முறை முறை முன்வைக்கப்பட்டது. என அழைக்கப்பட்ட கல்வி
மொன்ரசூரி அம்மையாரின் கல்வித் தத்துவம்
ரூசோஇ பெஸ்ரலோசி மற்றும் புரொபெல் ஆகியோரின் சிந்தனைகளையும் உள்வாங்கி மொன்ரசோரி அம்மையார் தனது கல்வித் தத்துவத்தை முன்வைத்தமை தெளிவாகின்றது. உடல் உள மற்றும் ஆன்மீக ரீதியில் இயல்பாக நிகழுகிற ஆளுமை வளர்ச்சியை ஒன்றிணைப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது மொன்ரசூரி அம்மையாரின் கருத்தாகும்.
தனியே அறிவைக் கடத்துதலுடன் மட்டும் கல்வியை வரையறுத்துக் கொள்ளலானது எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பிள்ளையைத் தயார் செய்வதைக் கடினமானதாக்கும் என இவர் கூறினார். முதலாவது வருடத்தில் வழங்கப்படும் கல்வியானது ஒவ்வொருவருக்கும் சமமானதாகவும் இயற்கைக்குப் பொருத்தமானதாகவும் இருப்பது முக்கியமானதாகும்.
பிள்ளையின் விருத்தியானது உடல், உளம் ஆகிய இரு அம்சங்களிலும் நிகழ்வதாக மொன்ரசோரி முறைமை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் ஏற்படும் குறைபாடு ஓர் கல்விசார் பிரச்சினை ஆகும். உள் வளர்ச்சியில்
“நவீன உலகிற்கான கல்வி’ என்னும் நூலில்மொன்ரசூரி அம்மையார் குழந்தைக்கல்வி பற்றிக் குறிப்பிடும்போது குழந்தையானது இயலுமானவரை தாயுடன் இருக்க வேண்டும் எனவும் சுதந்திரமாக வாழ்வதற்கான பிள்ளையின் உரிமை, உண்மைப் பொருட்களின் ஊடாகக் கல்வியை வழங்குதல், பாரம்பரியக் கற்பித்தல் முறைகளை விட்டு நீங்குதல், பிள்ளையின் இயற்கையான வளர்ச்சி குறித்துக் கவனம் செலுத்துதல், சூழலை மையமாகக் கொண்ட கல்வியை உருவாக்குதல், யற்கைவழிக் கல்விக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல் போன்றவை மொன்ரசூரி முறையின் சில சிறப்பம்சங்களாகும்.மொன்ரசூரி அம்மையாரின் கல்வித் தத்துவத்தில் பல அடிப்படைக் கொள்கைகளை அவதானிக்க முடியும்.
1. தனிநபர் விருத்தி தொடர்பான கோட்பாடு
2. சுய கல்வி தொடர்பான கோட்பாடு
ஆசிரியரும் கற்பித்தலும் பற்றிய நோக்கு
கல்வி ஓர் இயற்கையான செயன்முறை என்ற வகையிலே கல்விச் செயன்முறைக்கு உதவுதலே ஆசிரியரின் பணியாகும். தான் வகுப்பறையிலே இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி செயற்பாடுகள் யாவும் ஒழுங்காக நடைபெறும் வகையில் திட்டமிட்டு செயற்படுத்தும் ஆசிரியரே தேர்ச்சிமிக்க ஆசிரியராவார் என்பது அம்மையாரின் கருத்தாகும்.
ஆசிரியர்களையும் பெற்றோர்களையுமே சிறு பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ஆகையால் அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக நடக்க வேண்டும். அத்துடன் கற்பித்தலைக் காட்டிலும் கற்றலுக்குத் தேவையான சூழலையும் கவிவுநிலையையும் தயார் செய்வதே ஆசிரியரின் பணியாகும். மேலும் ஆசிரியரின் தேவைகளுக்காக அன்றி என்பவற்றுக்கமையவே கற்பித்தல் செயன்முறை பிள்ளைகளின் தயார் வளர்ச்சிநிலை, நாட்டம் செய்யப்பட வேண்டும் என்பது அம்மையாரின் கருத்தாகும். எப்போதும் சூழலையும் பொருட்களையும் உச்சளவு பயன்படுத்திக் கொள்வதும் முக்கியமானதாகும். பிள்ளையை வெளிக்களங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் பிள்ளை இயற்கைச் சூழலை அனுபவிக்கவும் அதனூடாகக் கற்பதற்கான சந்தர்ப்பங்களைக் கட்டியெழுப்பிக் கொள்ளவும் முடியும். சிறு பருவத்தில் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சிகளை நடைமுறை வாழ்க்கைக்கான பயிற்சிகள், புலன் பயிற்சிகள் மற்றும் போதனைசார் பயிற்சிகள் குறிப்பிடலாம். பகுப்பொருட்களுடனான கற்பித்தலின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கற்பித்தலில் வெவ்வேறு நிறங்களிலான சொல்லட்டைகளின் பயன்பாட்டையும் மொன்ரசூரி அம்மையார் குறிப்பிட்டார். மொன்ரசூரி அம்மையாரின் கற்பித்தல் செயன்முறை ஆனது தொடர்புபடுத்தல். இனங்காணல் மற்றும் ஞாபகப்படுத்தல் ஆகிய படிகளினூடாக நடத்தப்படவேண்டும்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்