மேலை நாடுகளில் அண்மைக்காலக் கல்விச் சீர்த்திருத்தங்கள்

மேலை நாடுகளில் அண்மைக்காலக் கல்விச் சீர்திருத்தங்கள்
 அண்மைக்காலக் கல்விச் சீர்திருத்தங்கள்

ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய ஆங்கிலம் பேசும் நாடுகளின் சமூக நிலைமைகள் வேறு பட்டாலும் கூடக் கல்விச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் பல ஒருமைப்பாடுகளைக் காணமுடிகின்றது. அபிவிருத்தியடைந்த நாடு களின் மத்தியில் ஆங்கிலம் பேசும் நாடுகளிலே கூடிய அளவுக்குக் கல்விச் சீர்திருத்தங்கள் சந்தை முறையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன. இந்நாடுகளில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்களே கல்வி முறையைத் திறம்பட இயக்கும் ஆற்றலுடை யவை எனப் பெரிதும் நம்பப்படுகின்றது. அரசாங்கத்தின் ஏகபோக அதிகாரத்தால் நிர்வகித்து கட்டுப்படுத்தப்படும் பாடசாலை முறை திறமையற்றது என்ற கருத்து அந்நாடுகளில் வளர்ந்து விட்டது. ஆங்கிலம் பேசும் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிற் காணப்படும் பொதுத் தன்மையும் இந்நாடுகள் ஒன்றுக்கொன்று செல்வாக்குச் செலுத்தும் நிலைமையையும் கல்வி பற்றிய அணுகுமுறையில் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளன.

சந்தை அடிப்படையிலான கல்விச் சீர்திருத்தங்கள் இந்நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் போட்டா போட்டி தொடர்பான பிரச் சினைக்குப் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன. அவை கல்விமுறையின் செயற்றிறனை அதிகரிக்க உதவுவதுடன் கல்வித் துறையில் அரசாங்கத்தின் தலையீட்டையும் குறைக்கின்றன. மேலும் இச்சீர்திருத்தங்கள் கல்வியை நாடும் மக்களை நுகர்வாளர்களாகக் கருதி அவர்களுடைய பாடசாலைத் தெரிவுகளுக்கு முக்கிய இடமளிக்கின்றன.

 

மேலும் வாசிக்க – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

இவ்வகையான சந்தை முறைக் கல்விச் சீர்திருத்தங்கள் இன்று உலகளாவிய ரீதியில் சுவீடன் மற்றும் கிழக்கைரோப்பிய நாடுகளில் பரவி வந்தாலும் இவை ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலேயே உருவாயின. சந்தைமுறைக் கல்விச் சீர்திருத்தங்களை நடை முறைப்படுத்துவதில் இந்நாடுகள் பெரிய அளவில் போட்டியிட்டும் வருகின்றன. இங்கிலாந்தில் சகல பாடசாலைகளும் உள்ளூர் கல்வி அதிகாரசபைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என வாதிக்கப்பட்டது. இந்நாட்டில் பாடசாலைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பாடசாலைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படல் வேண் டும் என்ற கொள்கையும் வலியுறுத்தப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதி புஷ் ‘தமது அமெரிக்கா 200 எனும் செயற்திட்டத்தின் கீழ் புதிய அமெரிக்கப் பாடசாலைமுறை ஒன்றைத் தோற்றுவித்தார். அரசாங்க, தனியார் நிதி உதவியுடன் 535 புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. லிட்டில் கொம்யூனிகேசன்ஸ் எனப்படும் தனியார் நிறுவனம் இலாப அடிப்படையிலான 200 தனியார் களைப் பெற்றோர்கள் தமது விருப்பத்திற்கேற்பத் தெரிவு செய்யும் கொள்கையை அவர் ஆதரித்தார். தனியார் பாடசாலைகளுக்கு அரசாங் கம் மானியங்களை வழங்கும் கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டார். இவ்வகையில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய கல்விச் சீர்திருத்தங்களை. குறிப்பாக சந்தைமுறைக் கல்விச் சீர்திருத்தத்தையும் தனியார் பாட சாலைகளுக்கான அரசாங்க உதவியையும் அவர் ஆதரித்தார்.

கல்விச் சீர்திருத்தங்களில் ஐக்கிய அமெரிக்காவும் இங்கிலாத்தும் பரஸ்பரம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் ‘காந்தப் பாடசாலைகளைப்; பின்பற்றி இங்கிலாந்தில் நகர்ப்புற தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. அவ்வாறே ஐக்கிய அமெரிக்காவின் பாடசாலை தொழில்நிலையக் கூட்டிணைப்புமுறை இங்கிலாந்தில் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும் பிரித்தானிய கல்விச் சீர்திருத்தச் சட்டத்தின் அம்சங்கள் ‘அமெரிக்கா 2000 செயற்றிட்டத்திலும் இடம் பெற்றன.

இரு நாடுகளிலும் நன்கு கல்விகற்ற ஊழியர்கள் பொருளாதாரத் துறையில் போட்டியிடும் ஆற்றலையுடையவர்களாக இருப்பர் என்ற நம்பிக்கையினடிப்படையில் கல்விச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இவ்வாற்றல் பிறநாடுகளுடன் போட்டியிட உதவும் என கருதுகின்றன. இருநாடுகளும்

இரு நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத் தங்கள் பாடசாலை படுத்தலையும் சமஅளவில் அதிகரிக்கச் செய்கின்றன. இரு நாடுகளிலும் நிர்வாகத்தில் மத்தியமயத்தையும் பன்முகப் மேலை நாடுகளில் அண்மைக்காலக் கல்விச் திருக்கங்கள்

தீர்மானங்களைச் செய்யும் பணி பாடசாலைகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் இச்சீர்திருத்தம் ‘பாடசாலை ல நிர்வாகம்’; என்றும் இங்கிலாந்தில் ‘பாடசாலைகளின் உள்ளக நிர்வாகம்’; என்றும் அழைக்கப்படுகின்றது. அதே வேளையில் மத்திய மயப்படுத்தும் போக்குகளும் தென்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு தேசிய பாட ஏற்பாடும் ஐக்கிய அமெரிக்காவில் கல்விமுறைக்கான தேசிய நோக்கங்களும் வகுக்கப்பட்டுள்ளன. காலங்காலமாகக் கல்வித் துறையில் உள்ளூர் கட்டுப்பாட்டையே வலியுறுத்தி வந்த ஒரு நாட்டில் இது ஒரு முக்கிய திருப்பமாகும்.


                         மேலும் வாசிக்க – கல்வி அடிப்படை

இரு நாடுகளிலும் காந்தப் பாடசாலைகள் என்ற புதிய கல்வி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழமையான பாடசாலைப் பயிற்சி நெறிகளுக்குப் பதிலாக மாற்றுப் பயிற்சி நெறிகளை வழங்கி மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவனவே காந்தப் பாடசாலைகள். அத்துடன் பெற்றோர்களே பாடசாலைகளைத் தெரிவு செய்யும் முறை, பாடசாலை, தொழில், வர்த்தக நிலையக் கூட்டமைப்பு என்பன இரு நாடுகளிலும் ஏற்படுத்தப்பட்டன.

ஆய்வாளர் கருத்தின்படி ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட நன்கு ஆங்கிலம் பேசும் நாடுகளும் ஏனைய 15 மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பலவழிகளில் வேறுபட்டவையாக இருக்கின்றன.

இந்நாடுகளில் துரிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட பின்னர் வளர்ச்சி வேகம் குறைந்து வேலையின்மைப் பிரச்சினையும் பண வீக்கமும் ஏற்பட்டது. உள்ளூர்ச் சந்தையில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்த முற்பட்டது. இந்நிலையில் ஒரு தீர்வாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார, அரசியல் ஒருமைப்பாட்டை நாடின. இதற்கென ஐரோப் பிய பொருளாதார சமூகம் (EEC) துரிதமாக வளர்க்கப்பட்டது. மறுபுறம் பொருளாதாரத் துறை சார்ந்த போட்டா போட்டிப் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் நிலைமை காரணமாக புதிய கல்விக் கொள்கைகளை இந்நாடுகள் உருவாக்கின. ஆயினும் இவை ஆங்கிலம் பேசும் நாடுகளின் சந்தைமுறை சார்ந்த கல்விச் சீர்திருத்தங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன.

இவ்வேறுபாட்டிற்கு ஒரு முக்கிய பின்னணி உண்டு. கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் ஆங்கிலம் பேசும் நாடுகள் சார்பளவில் வீழ்ச் சியையே அனுபவித்து வந்துள்ளன. இந்நாடுகளின் சமூக-பொருளாதார குறிகாட்டிகள் இந்நாடுகளை அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளின் வரிசையில் பின் தள்ளியுள்ளன. வாழ்க்கைத் தரத்தைப் ஐக்கிய அமெரிக்காவும் பின்வாங்கி விட்டது. ஆயினும் இவை தவிர்ந்த ஏனைய மேற்கைரோப்பிய நாடுகளின் அந்தஸ்து இன்று உயர்ந்துள்ளது. கல்வித்துறைச் சாதனைகள் பற்றிய சர்வதேச ஒப்பீட்டு ஆய்வுகளின்படி இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவையும் மிஞ்சி விட்டன. தமது கல்லித் துறைச் சாதனைகளையிட்டு இந்நாடுகள் திருப்தியடைந்துள்ளமை. யினால் தீவிரமான கொள்கை மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவை யற்றவை என அவை கருதுகின்றன.


                                                 மேலும் வாசிக்க – PDF தரவிறக்கம் 

முக்கியமாக, ஆங்கிலம் பேசும் நாடுகள் பின்பற்றும் சந்தை முறைக் கல்விச் சீர்திருத்தங்கள் பெரும்பாலான ஏனைய மேற்கு நாடுகளின் சித்தாந்தங்களுடன் ஒத்து வரவில்லை. கல்விச் சந்தையில் எப்பாடசாலை சிறந்தது என்பதைப் பெற்றோரே தெரிவு செய்ய வேண்டும். பாடசாலை ஆசிரியர்களும் நிர்வாகிகளும் பெற்றோர்களைக் கவரும் முறையில் திறமையாகப் பாடசாலைகளை நடாத்த வேண்டும். இதனைச் செய்ய அரசாங்கத்தின் விதிமுறைகளும் பிரமாணங்களும் பயன்படாது. பாடசாலைகளுக்கிடையில் ஏற்படும் சந்தை அடிப்படை யிலான போட்டியே பாடசாலைகளின் செயற்றிறனை மேம்படுத்தும். பெற்றோர்கள் பாடசாலைகளைத் தெரிவு செய்யும் உரிமையைப் பெறுவதால், திறமை யான பாடசாலைகளே நிலைத்து நின்று வளர்ச்சியுறும். மக்களால் விரும்பப்படாத தகுதியற்ற பாடசாலைகள் மறைய நேரிடும். இவ்வகையான சந்தைமுறை உபாயங்களைக் கல்வித் துறையில் கையாள இம்மேற்கு நாடுகள் மறுத்தன.

எடுத்துக்காட்டாக ஜேர்மனியின் சித்தாந்தம், சமூக சந்தைப் பொருளாதாரம் எனப்படும். இதன்படி சந்தைச் சக்திகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் சந்தை முறையாக இயங்க அரசாங்கத்தின் உதவியும் உத்தரவாதமும் தேவையே. இங்கிலாந்தின் சந்தைச் சார்புக் கல்விச் சீர்திருத்தங்கள் கல்வி முறையைத் தனியார் மயப்படுத்தி வியாபா ரமாக்கி விடுவதால் ஜேர்மனிக்குப் பொருத்தமானவையல்ல. அவற்றை மக்கள் நிச்சயமாக எதிர்ப்பர். பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைக்காது. பாடசாலைக் கல்வியும் தொழிற்கல்வியும் முக்கிய சமூகப் பணிகள். எனவே அரசாங்கம் அவற்றை ஒழுங்குபடுத்துவது மிகவும் அவசியமானது என்பதே மேற்கு ஐரோப்பாவில் பரவலாக ஏற்கப்படும் கருத்தாகும்.

இந்நிலையில் மேற்கைரோப்பிய சீர்திருத்தங்கள் முற்றிலும் வேறுபட்ட திசையில் செல்ல நேரிட்டது. அரசாங்கத்தின் சட்டபூர்வமானகட்டுப்பாட்டைப் பேணி உறுதிமுறையில் அவை அமைந்தன. ஐரோப்பிய ஆய்வாளர்கள் கல்லிப் பிரச்சினையைக்கல்விச்சார்புடையதாகக் கருதவில்லை. பொருளாதாரப் பிரச்சினையின் ஓர் அம்சமாகவே அவர்கள் கல்விப் பிரச்சினையை நோக்கினர். அந்நாடுகளின் அரசியல், பொருளாதார முறைகள் இறுக்கமான தொடர்புடையவையாதலின் அரசியல் கட்டுப்பாட்டினூடாகப் பாடசாலைகளின் செயற்றிறனை மேம்படுத்த முற்பட்டனர்.

முதல் நடவடிக்கையாக மாணவர்களின் கல்வித் தேர்ச்சியை மதிப்பீடு செய்யும் கல்விச் சீர்திருத்தம் அந்நாடுகளில் அறிமுகம் செய்யப் பட்டது. நெதர்லாந்தில் 8 – 11 வயதுப் பிள்ளைகளின் கல்வித் தேர்ச்சியை மதிப்பிடும் தேசிய திட்டமொன்று 1986 இல் வகுக்கப்பட்டது. சுவீடன் நாட்டில் இரண்டாம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய மதிப்பீட்டுப் பரீட்சைகள் 1989 இல் நடாத்தப்பட்டன. போர்த்துக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் முதலிய நாடுகளில் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி மதிப்பீடு தேசிய ரீதியாக சட்டபூர்வமாக்கப்பட்டது. இம்மதிப்பீட்டுப் பரீட்சைகள் தேசிய ரீதியான கல்வித் தராதரங்கள், நியமங்கள் பற்றி முடிவு செய்ய உதவின.

இவ்வைரோப்பிய நாடுகள் கல்வி நிதியைத் திறமையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. செலவுகள் எவ்வாறு எழுகின்றன, எவ்வாறு மாறிச் செல்கின்றன என்பதை அவதானிக்கப் புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

பாடசாலை முறையின் மீது அரசாங்கத்துக்குள்ள உரிமையை நிலைநாட்டும் நோக்குடன் இந்நாடுகளின் ஆசிரியர் பயிற்சி முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சகல ஐரோப்பிய பொருளாதார சமூக நாடுகளும் இத்துறையில் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்துள்ளன. ஆசிரியர்களின் பயிற்சிக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி நெறிகள் பெருமளவுக்கு பல்கலைக்கழகங்களிலேயே நடாத்தப் படுகின்றன. அவர்களுடைய உயர் தகுதிகள் அவர்களைக் கண்டனங்களிலிருந்து காப்பாற்றும் என அந்நாட்டுக் கல்வியாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் இந்நாடுகளின் பாடசாலை நிர்வாகத்தில் தீர்மானம் மேற் கொள்வதில் பெற்றோர்கள் பங்கு கொள்வதை உறுதி செய்ய அதிகாரப் பரவலாக்கம் ஒரு முக்கிய கல்விச் சீர்திருத்தமாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. மிகக் கடுமையாக மத்திய மயப்படுத்தப்பட்டிருந்த பிரஞ்சுக் கல்விமுறையிலும் நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.

 
  • எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும்
உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Comment