www.edutamil.com |
கொலின்ஸ் கோப்லட் ஆங்கில அகராதி.
ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையில் விரும்புகின்ற, பெறுகின்ற, தருகின்ற, உயர்வானதாகக் கருதுகின்ற. ஆசைப்படுகின்ற. அனுமானிக்கின்ற. அனுபவிக்கின்ற எந்தப் பொருளையும் அடிப்படைக் கருத்தில் மதிப்பு எனக் கூறமுடியும். பிரய்ட்மன் (1978)
ஒரு சமுதாயத்தால் அல்லது சமுதாயத்தில் இருக்கின்ற பெரும்பாலானோர்களால் செய்யப்படுகின்ற பின்பற்றல். நம்பிக்கைகள், நியமங்கள் என்பனவே மதிப்புக்களாகும்.
மேலே கூறப்பட்ட பிரசித்தி பெற்ற வரைவிலக்கணங்களின்படி தனிநபரால் அல்லது சமூகத்தால் அல்லது சமூகத்தின் ஒரு குழுவினரால் சேர்க்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட எந்தப் பொருளுக்கும் அளிக்கப்படுகின்ற பெறுமதியே மதிப்பாகும். சமூகவியலில் இவ்வரைவிலக்கணம் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும் கல்வியில் இவ்வரைவிலக்கணம் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. மனிதர்கள் மதிப்புக்கொடுக்கின்ற எந்தப் பொருளையும் மதிப்புள்ளதாகக் கல்வியில் கருத முடியுமா?
அவ்வாறாயின் கல்வியில் எத்தகைய மதிப்புக்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்?ஒரு பொழுது யூகோஸ்லேவியாவில் பாடசாலைப் பாடவிதானத்தில் ‘சுய பாதுகாப்பு’ என்ற பாடத்தின் கீழ கைக்குண்டு செய்தல், எளிய துப்பாக்கிகள் செய்தல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் கண் அழிவுத்தன்மை கொண்ட விளைவுகளைக் காணமுடிந்தது.
விழுமியங்களுக்கும் மதிப்புகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய பிரச்சினை எழுகின்றது. எல்லா மதிப்புகளும் விழுமியங்கள் என்பதனுள் அடங்குமா? எல்லா விழுமியங்களும் மதிப்புக்களா? ஆங்கிலத்தில் Values என்ற சொல் மதிப்புகளையும் விழுமியங்களையும் குறிப்பதால் மேலே கூறப்பட்ட பிரச்சினை தோன்றியுள்ளது. கீழைத்தேயச் சிந்தனைகளில் மதிப்பு, விழுமியங்கள் என்பன ஒத்த பொருளில் கையாளப்படவில்லை. சிங்களமொழியில் ‘குணதர்மி’ ”புருஷார்த்த’ என்ற சொற்கள் விழுமியங்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆதிகால சிங்கள பேச்சுவழக்கில் ‘சங்கசார’ (சமூக சாரம்) என அது அழைக்கப்பட்டது.
இக்காலத்தில் விழுமியங்கள் பற்றிய வரைவிலக்கணமொன்றை பின்வருமாறு ஏ.எஸ்.பாலசூரிய (1997) முன்வைக்கிறார்.
விழுமியங்கள் என்பது தனிநபர். வளம்படுத்துகின்ற. சமூகம். அர்த்தமுள்ளதாக்குகின்ற வாழ்க்கை என்பவற்றைப் போஷிக்கின்ற, மனித குணப்பண்பாகும்”. இவ்வரைவிலக்கணத்தின்படி எல்லா விழுமியங்களும் நல்லவை. மீளத் தோன்றக்கூடியவை. மானிடவாத உளவியலாளர்களும் விழுமியங்களை இதற்குக் கிட்டிய கருத்திலேயே பயன்படுத்தினர். உதாரணமாக ஒல்பொட் “விழுமியம் சுய ஆத்மாவுடன் தொடர்புபட்டதாகும் என்கிறார். பிரபல மானிடவாத உளவியலறிஞரான ஆப்பிரஹாம் மாஸ்லோ (1971) இக்கூற்றின் வழியே மேலும் சென்று பின்வருமாறு கூறுகிறார்
மனிதனது செயலுக்கு வழிவகுக்கின்ற விழுமியங்கள் மனிதத்தன்மையினுள் நிலவுகின்ற இயற்கையின் விடயமாகும்” என விளங்கிக் கொள்ள வேண்டியவையாகும். விழுமிய மூலவளங்கள் இயற்கையானவை. அதேபோல அதனை வெளியிடும் செயலொழுங்குகளும் இயற்கையானவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். விழுமியங்களை மனித முயற்சியால், அறிவால், மனித ஆய்வு ரீதியான, பரிகாரபூர்வமான, தத்துவ ரீதியான அனுபவங்கள் மூலம் வெளியிட முடியும் விழுமியங்கள் வெளியிட்டுக் கொள்ளவேண்டியவையே தவிர கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டியவையோ ஆக்கிக் கொள்ளவேண்டியவையோ அல்ல”. விழுமியங்களை மனிதப்பிறவியின் இயற்கையான குணங்களாகக் காணும் மாஸ்லோ அவை உயிர் வாழ்க்கைக்கு வழிகோலுகின்றன என்றும் கூறுகிறார். மானிட இயல்பு பிறவியில் நல்லதே என்பது இதிலிருந்து தெரிகிறது. மானிடவாத உளவியலாளரின் பார்வை கீழைத்தேய புத்தசமயம், ஹிந்து சமயம், தாய்சமயம் ஆகியவைகளுக்கு மிகவும் நெருக்கமானது என்பது தெளிவாகிறது. பொதுவாக மேலைத்தேயச் சிந்தனைகளில் உள்ளது யாதெனில், மனிதப்பிறவி கெட்டது மோசமானது என்பதே. உதாரணமாக சிக்மன்ட் ப்ரொய்ட்டின் உளப்பகுப்பாய்வின்படி மனித சிந்தனைத் தொகுதியில் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அது ‘இட்’ அல்லது கீழ்த் தன்மைக்குச் சமீபமாகிறது இவ்வுளவியலாளர்களின் கருத்துப்படி கல்வியால் சமயம் கற்பித்தலால் சமுதாயத்தைப் பின்பற்றலால் அதியகத்தால் கட்டியெழுப்பபட்ட விடயங்களாகும். அவை எப்போதும் அகத்துடனும் அஞ்ஞானத்துடனும் மோதிக் கொள்கின்றன.
விழுமியங்களுக்கான உதாரணங்கள்
- அன்பு
- கேட்டறிதல்
- தைரியம்
- நினைவு
- உண்மை
- சுயகற்றல்
- சாந்தம்
- அகிம்சை
- சமாதானம்
- ஒழுங்குமுறை
- அறிவு
- நேர்மை
- களிப்பு
- சமத்துவம்
- காருணியம்
- இன்சொல்
- கெட்டித்தனம்
- சிநேகபூர்வம்
மேலே கேட்கப்பட்ட வினா எல்லா மதிப்புக்களும் விழுமியங்களா? என்பதற்குரிய விடை இப்போது விளங்கும். எல்லா மதிப்புக்களும் விழுமியங்கள் அல்ல. அதாவது ஒரு தனியாளோ சமூகமோ ஏதோ ஒன்றைச் செய்தால் மட்டும் அது விழுமியம் ஆகாது. மனிதர் மதிப்பளிக்கும் விழுமியங்களும் உள்ளன. அவை சமூகம் ஏற்றுக் கொண்ட நற்குணங்களாகும். அதேபோல மனிதர் மதிக்காத விழுமியங்களும் இருக்கலாம். உதாரணமாகச் சில கோட்பாட்டுவாத சமயங்கள் உள்ள சமயங்களில் சமயத் திறனாய்வு என்னும் விழுமியம் மதிக்கப்படுகின்றது.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்