(1) அமைப்பு மதிப்பீடு
(2) கூட்டு மதிப்பீடு
(3) தகுதிநிலைகாண் மதிப்பீடு
(4) ஆய்ந்தறி மதிப்பீடு
இவற்றுள் முன்னைய இரண்டுமே பாட அடைவின் மதிப்பீட்டுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அமைப்பு மதிப்பீடு: ஒரு பாட அலகில் அல்லது பாடத்தொட ரின் இடைநடுவே மேற்கொள்ளப்படும் மதிப்பீடு இதுவாகும்.குறிப்பிட்ட பாடவிடயத்தைக் கற்பித்த ஆசிரியர் அக்கற்றற் பணியில் மாணவன் எத்தகைய விளக்கத்தை அல்லது திறனைப் பெற்றுள் ளான்.என்னென்ன அம்சங்கள் அவனால் கற்கப்படவில்லை என் பவற்றை அறியும் பொருட்டு நடத்தப்படும் இவ்வகை மதிப்பீடானது ஆசிரியருக்கும் மாணவருக்கும் மாணவரது முன்னேற்றம் பற்றிய பின்னூட்டலை வழங்குகின்றது. பாட அலகு அல்லது பாடத்தொட ரின் கற்பித்தல் நிறைவடையுமுன்னர் இவ்வகை மதிப்பீடு மேற் கொள்ளப்படும் காரணமாகப் போதனை முயற்சிகளில் தேவையான மாற்றங்களை அல்லது திருத்தங்களை உரியவேளையில் ஏற்படுத் தும் வாய்ப்பினை இது ஆசிரியருக்கு வழங்குகின்றது.
கூட்டு மதிப்பீடு: போதனைத் திட்டம் ஒன்றின் முடிவில், பாடசாலைத் தவணை அல்லது ஆண்டிறுதியில் பாடப்பரப்பு முழு வதிலும் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு இவ்வகையைச் சாரும். உதாரணமாக குறிப்பிட்ட பாடத்தைக் கற்பித்து முடித்ததும், அப்பாடத்தின் எல்லா அம்சங்களிலும் மாணவன் பெற்ற தேர்ச்சி யின் மொத்த விளைவைக் குறிப்பிடுவது கூட்டு மதிப்பீடாகும். இவ்வகை மதிப்பீடானது, மாணவருக்கு இறுதிப்புள்ளிகள் அல்லது தரங்களை வழங்குவதற்கு பெரிதும் பயன்படுகின்றது.
தகுதிநிலைகாண் மதிப்பீடு: பாடசாலையின் அல்லது கல்வித் திட்டம் சார்பான நிர்வாகத் தேவைகளின்பால் பெரும்பாலும் இவ்வகை மதிப்பீடு பயன்படுத்தப்படுகின்றது. மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தல், குறிப்பான அல்லது சிறப்பான சில இயல்புகளின்பால் மாணவரின் தராதரத்தை அல்லது தேர்ச்சி நிலையைத் தீர்மானித்தல் போன்ற நிலைமைகளில் இவ்வகை மதிப்பீடுகள் மூலமே தீர்வுகள் பெறப்படுகின்றன. கூட்டு மதிப்பீட்டிற் பயன்படுத்தப்படும் சோத னைகளும் சில சமயங்களில் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுத் தேர்ச்சியினை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத் தேவைகளின்போது இது சாத்தியமாகும். ஆனால் ஏனைய சந்தர்ப் பங்களில் மதிப்பீட்டின் நோக்கத்தைப் பொறுத்துச் சோதனையின் உள்ளடக்கம். இங்கு நியதிசார் மதிப்பீடுகளும் நியமம்சார் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படுவதுண்டு.
ஆய்ந்தறி மதிப்பீடு: பரிகாரமுறைக் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் ஆய்ந்தறி மதிப்பீடு மிகப் பொருத்தமானதாகும். குறிப்பான சில அம்சங்களில் மாண வரின் குறைநிறைகளை அறியும் பொருட்டுப் பயன்படுத்தப்படும்
ஆய்ந்தறி சோதனைகள் இவ்வகை மதிப்பீட்டுக்கு வழிகோலும். பொதுவாக இச்சோதனைகள் கூட்டு மதிப்பீட்டுக் கருவிகளின் சாயலையும் அமைப்பு மதிப்பீட்டுக் கருவிகளின் சாயலையும் ஒருங்கே கொண்டிருக்கும். சோதனையின் உள்ளடக்கம் வழமை யாகக் குறுகியதாகக் காணப்படும். இப்படிச் செய்வதன் மூலம் முக்கியமானவை எனக் கருதப்படும் குறிப்பான குறிக்கோள்கள் தொடர்பாக சோதனையின் உருப்படிகளை அமைக்க முடிகின்றது.