மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்| Mahatma Gandhi’s Philosophy of Education

www.Edutamil.com

மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்

 
தலைவரும் அரசியல்வாதியும் கல்விமானுமாகிய மகாத்மா மேலைத்தேய ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து தனது தாய்நாட்டைப் பாதுகாத்துக் காந்தி கொள்வதற்காக முன்னோடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அவரது தத்துவக் கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இங்கு அவரது கல்விக் கருத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு அவற்றை இலகுவில் விளங்கிக் கொள்ள அவற்றுக்கு அடிப்படையாயமைந்த தத்துவக் கருத்துக்களை விளங்கிக் கொள்வது பயன் தரும்.

காந்தியின் தத்துவ, கல்விக் கருத்துக்கள் மீது ஏற்பட்ட தாக்கங்கள் காந்தியின் தத்துவம் உண்மையைக் கண்டறிவதாகும். தெய்வீகம் எனப்படும் கடவுள் என்பது உண்மையாகும். மனிதனின் கடமை இந்த உண்மையைக் கண்டறிவதாகும். மானிடம் மனிதத்துவம் பற்றி யதார்த்தமாகப் பார்க்கும் அவர் உடல் ரீதியாக வேறுபட்டாலும் எல்லோருக்குள்ளும் ஒரே ஆன்மா தான் இருப்பதாக காந்தி கூறுகிறார். மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர்கள் என காந்தி நம்பினார். கடவுள் என்பது உண்மையென்றும் உண்மையென்பது அன்பென்றும் கூறும் அவர் உண்மையை விளங்க வேண்டுமாயின் அஹிம்சை வழியில் வாழவேண்டும் என்றும் கூறுகின்றார். அதற்காக ஆன்மிகத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அடக்க ஒடுக்கமாக வாழ்வதால் ஆளுமை வளர்ச்சி ஏற்படுகின்றது. இவ்வாறு எல்லா நபர்களினதும் ஆளுமை வளர்ச்சி ஏற்பட்டவுடன் சமூக வளர்ச்சி ஏற்படுகின்றதென்றும் சமூக வளர்ச்சி ஆளுமை வளர்ச்சிக்குக் காரணமாகின்றதென்றும் கூறுகின்றார்.

அஹிம்சை உண்மையைக் கண்டறியும் வழி எனக் கருதிய காந்தி, எல்லோரும் உண்மையைத் தேடும் வழியைப் பழகிக் கொண்டால் சமூகத்தில் நிலவும் உயர்வு தாழ்வுகள் நீங்கி ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அதன் மூலம் அக்கால இந்திய சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமைக்குப் பிரதான தடையாக நிலவிய குலம், கோத்திரம், சாதி, நிற, வகுப்பு பேதங்களை நீக்குதல் அவரது அபிலாசையாக இருந்தது.

காந்தியிடம் அஹிம்சைக் கருத்துக்கள், ஒழுக்கம், அனைவர் மீதும் அன்பு செலுத்துதல் முதலிய கருத்துக்கள் தோன்றுவதில் ஜோன் ரஸ்கின், டோல்ஸ்டோய், ஹென்றி தோரோவின் நூல்கள் ஆகியவற்றோடு அவரது ஆசிரியர் எனக் கருதப்பட்ட ராய்சாந்த்பாயின் கருத்துக்கள் என்பன பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் அவர் தென்னாபிரிக்காவில் இருந்த காலத்தில் டோல்ஸ்டோய் பண்ணையில் மேற்கொண்ட பரிசோதனை மூலம் பிள்ளையின் நடத்தை விருத்திக்கு மேலதிகமாகப் பிள்ளையிடம் உழைப்பு விருப்பத்தை ஏற்படுத்தவும் வாழ்க்கைத் தொழிற்றிறன்களை விருத்தி செய்யவும் கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது பற்றிய கருத்துக்கள் அவரிடம் தோன்றின. கயமாகக் கற்றுக்கொள்ளல் பற்றிய கருத்துக்கள் வளர அவருக்கு இந்த அனுபவம் உதவியது. உணவு சமைத்தலிலிருந்து சாக்கடைச் கத்திகரிப்பு வரை எல்லா வீட்டு அலுவல்களையும் இங்கு எல்லோரும் செய்யவேண்டியிருந்தது. மேலும் கல்வியையும் மேலதிக வாழ்க்கைத் தொழிற் பயிற்சியையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. டோல்ஸ்டோய் பண்ணையில் அவர் பரிசோதித்துப் பார்த்த மற்றுமொரு வேலைதான் குழுவாக வேலை செய்வதன் மூலம் பெரும் பயன்களை அடைந்து கொள்ள முடியும் என்பதாகும். புதிய கல்வி முறையொன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய தேவையைக் காந்தி அறிந்து கொள்ள மற்றுமொரு காரணமும் இருந்தது. அதுதான் அக்காலத்தில் இந்தியாவில் இருந்த கல்வி முறையில் காணப்பட்ட குறைபாடுகள். கல்வியின் தேவை. மக்களை அடிமைகளாகவும் தாழ்ந்தவர்களாகவும் ஆங்கிலேயரின் அடிவருடிகளாகவும் உள்ள தோற்றுவிப்பதாகும். மேலும் பாடப் போதனைக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் ஒரு சமுதாயத்தைத் ஆங்கிலம் கல்வி ஊடகமாகவும் இருந்ததால் மாணவரின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு அதன் மூலம் இடம் கிடைக்காததோடு மாணவர் கிராமத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் விலகிய ஒரு இருந்தது. மேலும் மாணவரை காரணமாக சுதந்திரமான சாராராக உருவாக அந்தக் கல்வி முறை அடிமை மனப்பாங்கிலிருந்து விடுவித்து. உளப்பாங்கைக் கொண்டவர்களாக ஆக்குவது காந்தியின் எதிர்பார்க்கையாக இருந்தது. அவரது கல்விக் கோட்பாட்டின் வளர்ச்சியடைவதாகும். அடிப்படை இலக்காக இருந்தது மாணவர் பூரண ஆளுமை

“பிள்ளையின் உள்ளத்திலும், ஆன்மாவிலும் காணப்படும் அதிசிறந்த பண்புகளைக் கூட்டாக மலரச் செய்வதே கல்வி என நான் கருதுகிறேன்” என்று காந்தியடிகள் கூறினார்கள். மக்களின் உள்ளங்களிலும் இதயங்களிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்துவது அவரது கல்விக் கருத்துக்களின் குறிக்கோளாகும்.

இதற்கான தனது கவனத்தைச் செலுத்திய காந்தியடிகள் சமகால பாரதத்தில் நிலவிய குடியேற்ற நாட்டியல்புகளையும் மக்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கிய தரித்திரத்தையும் கல்லாமையையும் மேலைத்தேயத்தவர் வளர்த்து வந்த கல்வி எண்ணக்கருக்களையும் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்தார்.

காந்தியடிகளின் கல்விக் கருத்துக்கள்

உண்மையைத் தேடிக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்ட காந்தியடிகள், அதன் பொருட்டு ஆன்மிக விருத்தி ஏற்படுவது அனாவசியமானதென்றும் அஹிம்சையைக் கடைப்பிடிப்பதால் அதை அடைந்து கொள்ளலாம் என்றும் நம்பினார். அதன்மூலம் எல்லா விதமான வாதபேதங்களையும் உயர்வு தாழ்வுகளையும் வெற்றிகொண்டு தனிநபர்களுக்கிடையில் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவது அவரது எதிர்பார்க்கையாக இருந்தது. மேலே குறிப்பிட்டவாறு டோல்ஸ்டோய் பண்ணையின் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சுயதேவைப்பூர்த்திக் கல்வி பற்றிய எண்ணக்கருவை முன்வைத்த காந்தி, அதற்கான வேலைத்திட்டத்தைத் திட்டமிட்டுத் தயாரித்துச் செயற்படுத்தினார். சாக்கடைத் தொழிலாளி வரை (தோட்டிவரை)யிலான சமூகத்தில் வாழும் எல்லோரினதும் மலர்ச்சியையும் நலனையும் ஏற்படுத்துவது அவரது எதிர்பார்க்கையாக இருந்தது. உழைப்பை மதிக்கும் எண்ணக்கருவுக்கும் அடிப்படையாக இருந்தது காந்தியின் கருத்தாகும்.

எல்லோரினதும் நலனைக் கவனிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஒரு ஆன்மிகப் போஷாக்கு எனப்படும் ஒரு பயிற்சி எல்லோருக்கும் தேவை. அதனால் தலை, கை மற்றும் இருதயம் ஆகிய மூன்றினதும் ஒருவகையான சமனான வளர்ச்சி ஏற்படும் விதத்திலான கல்வி அமைய வேண்டும் என காந்தி வலியுறுத்தினார். அக்காலத்தில் இந்தியாவில் பிரத்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கருத்துக்களையும் தேவைகளையும் நிறைவு செய்வதற்கான கல்வி முறையே இருந்து வந்தது. அதனால் அன்று சிலருக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. கற்றோர் கல்லாதோர் பேதத்தை ஏற்படுத்திய அந்தக் கல்வி முறை சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்குச் காரணமாக அமைந்தது.

அந்தக் கல்வி முறையின் மற்றொரு பண்பு அது தலையை மட்டும் போஷிக்குமொன்றாக அமைந்திருந்ததுவாகும். உள்ளமும் கையும் இங்கு புறக்கணிக்கப்பட்டிருந்தன. சம வளர்ச்சியுடைய நபர்கள் அதனால் தோன்றவில்லை. சுதந்திரமானதும் நியாயமானதும் ஒருமைப்பாடுடையதுமான ஓர் அரசைக் கட்டியெழுப்ப அவர்கள் பொருத்தமானவர்கள் அல்லர். அதனால் தலையை மட்டுமே போஷிக்கும் அக்கல்வி முறையை ஒதுக்கிவிட வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

ஏழு இலட்சம் கிராமங்களைக் கொண்ட இந்தியாவில் அன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இழக்கின்ற கிராமங்களைப் பாழாக்கும் ஒரு கல்வி முறையாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அது ஒரு தடையாக இருந்தது. கல்வி தனியார் வாழும் சூழலிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் உறுதியாகக் கூறினார்.

அன்று செயற்படுத்தப்பட்டது இம்சைப்படுத்தும் கல்வி என்பது காந்தி மகானின் கருத்தாகும். கற்பதற்குக் கட்டாயப்படுத்துவதும் தண்டனை வழங்குவதும் அதன் பண்புகளாகும். அது இம்சித்தலாகும். அஹிம்சைச் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அஹிம்சைக் கல்வி செயற்படுத்தப்பட வேண்டும். பாடசாலையில் அரசோச்ச வேண்டியது பயம் அன்று மகிழ்ச்சி ஆகும்.

காந்தியின் தத்துவத்துக்கு அடிப்படையாக அமைந்தது கிராமியப் பிள்ளைகளாகும். அக்காலத்தில் நிலவிய கல்வி முறையின் பலவீனங்களைச் சமாளித்துக் கொள்ளவும் அவரது தத்துவத்தைச் செயற்படுத்தவும் ‘நய்தலிம்’ (Naithalim) எனும் புதிய முறையொன்றைக் காந்தி அறிமுகம் செய்தார்.

நய்தலிம் எனும் புதிய கல்வி முறை

காந்தி 1942 இல் அறிமுகம் செய்த நய்தலிம் எனும் புதிய கல்வி முறையில் கீழே குறிப்பிடப்படும் மூன்று புதிய தத்துவங்களும் அடிப்படையாக அமைந்துள்ளன.

1. கற்றலென்றும் கற்பித்தல் என்றும் ஒரு பேதம் இருக்கக் கூடாதென்பது கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், கற்கும் மாணவன் ஒருவன் என்ற பேதம் இருக்கக் கூடாது. இருவரும் ஒரே வேலையில் ஈடுபடுகிறார்கள். அதாவது உண்மையைக் கண்டுபிடித்தல் இருவரதும் செயலாகும். அதன் காரணமாக ஆசிரிய மாணவர் பேதம் ஒழிய வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். ஒரே நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஈடுபடுத்திக் கொள்ளப்படும் ஒரு செயன்முறையே கற்றல்-கற்பித்தல் செயன்முறை.

2.செயல், அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாகப் பிணைந்துள்ளன என்பது அறிவும்-வேலையும்(Knowledge and work) ஒன்றாகப் போகவேண்டும். கல்வியைச் செயலின்றிப் பெறமுடியாது சமூகத்தில் ஒரு பகுதி அறிவுக்காகவும் மற்றொரு உண்மையாகக் பகுதி செயலுக்காகவும் ஈடுபடுவது பொருத்தமானதன்று. அவ்வாறிருந்தால் வகுப்புப் பேதம் ஏற்படமுடியும். ஆகையால் செயல், அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று காந்தி கூறினார். அப்போது தான் உண்மையான கல்வி ஏற்படும் என்கிறார். இதன்படி பாடங்களைப் படிப்பிக்கும் போது கோட்பாட்டுக் கல்வியை மட்டும் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதால் கல்வி பூரணமடைவதில்லை. நடைமுறைச் செயற்பாடுகளின்றிப் பெறப்படும் கல்வி வெற்றியடைய மாட்டாது. காந்தியின் கருத்துப்படி மனதை விருத்தி செய்யச் செயற்பாடுகள் உதவுகின்றன. அவரின் கருத்துப்படி நூல் நூற்றலும் ஒரு தியானமாகும்.

3.கல்வி பிள்ளையைச் சுதந்திரமான ஒருவனாகவும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவனாகவும் ஆக்குவதாக அமைய வேண்டும் கல்வி பிள்ளையிடம் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் தோற்றுவிக்கும் ஒன்றாதல் வேண்டும். அவன் வயது வந்த ஒருவரின் அடிமையாக இருக்கக் கூடாது. சுய முயற்சியால் ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றவர்களது தண்டனைக்கும் சொல்லுக்கும் வளையும் ஒரு நபரிடம் சுய தோன்றாது. அது ஒரு சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான ஒரு சூழலில் ஆகும். பாடசாலை அத்தகைய ஓர் இருக்க வேண்டும். இங்கு ஜனநாயக சமூகம் ஒன்றை உருவாக்கிக் கொள்வது அவரது நோக்கமாக அமைந்தது. தனியாள் வளர்ச்சி அவரது தத்துவத்தில் முதலிடம் பெற்றது. தனியாளிடம் உள்ள இயல்பான திறன்களை உச்ச அளவுக்கு வளர்த்துக் கொள்ள கல்விச் செயன்முறை தயாரிக்கப்பட வேண்டும்.

 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

– ஆலோசனையும் வழிக்காட்டலும் 

– PDF தரவிறக்கம் 

– பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

காந்தியின் கல்விப் பிரேரணைகள்

பிள்ளைப்பருவம். முதியோர் பருவம் எனக் கல்வியைப் பிரிக்க முடியாது எனக் குறிப்பிடும் காந்தி அது ஓர் வாழ்க்கை நீடித்த செயன்முறையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடகிறார். அவரது கல்வித் தத்துவம் மூன்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. உடல் ரீதியான பயிற்சி (6085). நுண்ணறிவுப் பயிற்சி (தலை) மற்றும் ஆன்மீகப் பயிற்சி(இதயம்) என் இனங்காணப்பட்டன. அத்துடன் சில பிரதான பிரேரணைகளையும் இனங்காண முடியும்.

அவை

1 ஆரம்பக்கல்வி சகலருக்கும் கட்டாயமானது

2. கைத்தொழில் ஒன்றைச் சுற்றி கல்வியானது ஒழுங்கமைக்கப்பட வேண்டும்
3. கல்வியினூடாக சுய ஆற்றல் இடம்பெற வேண்டும்
4. தாய்மொழிக் கல்வி வழங்கப்பட வேண்டும்
5. கல்வியானது பலாத்காரமாக வழங்கப்படக் கூடாது காந்தியின் கல்வி முறையானது 4 பிரதான நிலைகளாக வகுக்கப்படலாம்.
 
  • 7 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளுக்கான முன் ஆரம்பக்கல்வி
  • 7-14 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கான ஆரம்பக் கல்வி
  • 14 வயதுக்க மேற்பட்டவர்களக்கும் இளையோருக்குமான பின் ஆரம்பக்கல்வி
  • முதியோர் கல்வி

மேலே குறிப்பிட்ட கல்வி சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு காந்திமகான் ஆலோசனைகள் பலவற்றைச் சமர்ப்பித்தார். அவை பற்றிக் கீழே ஆராயப்படுகின்றது.

 
மாணவர் மையக் கல்வி

இது காந்திமகானின் ஒரு கல்விப் பிரேரணையாகும். இதன் கருத்து மாணவனை ஆதாரமாகக் கொண்டு கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதாகும். கல்வி வாழ்க்கையினூடாக, வாழ்வதற்காக வாழ்நாள் முழுவதும் பெறப்பட வேண்டும். கல்விக்கும் வாழ்க்கைக்குமிடையில் தொடர்பு இதிலிருந்து தெரிகிறது. வாழ்வதற்கு உணவையும் உடையையும் வழங்கிக் கொள்ள வேண்டும்.

சுதந்திர சுயாதீனமான ஒருவராக வேண்டின் அவர் தமது கருமங்களைத் தமக்காகச் செய்துகொள்ள வேண்டும். அதன் பொருட்டு அறிவும் செயலும் ஒன்றாகத் தொடர்புற வேண்டும். இதற்கு மிகச் சிறந்த பாடமாக அவர் கருதியது ஆடை நெய்தலாகும். அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட குணவொழுக்கங்களை வளர்க்கும் ஒரு கல்வி முறையை வழங்குவதற்கு அது ஒரு தொழிலைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறினார். விசேடமாக 7வருட ஆரம்பக் கட்டாயக் கல்வி அவ்வாறு அமைய வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. விஞ்ஞானம், கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவற்றையும் இந்தப் புடைவை நெய்யும் தொழிலை ஆதாரமாகக் கொண்டே கற்பித்தார். தனியாளிடமோ தங்கியிருக்கக் கூடாது. பாடசாலை பாடசாலைக்குத் தேவையான உணவு. அரசிலோ ஆகியவற்றைப் பாடசாலையிலேயே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். அது தன்னிறைவுக் கல்வி முறையாகும். இதனையே மாணவர் சமுதாயத்துக்குத் தன்னால் ஒரு சேவை மையக் கல்வி முறை அவர் கருதினார். என உணர்வு ஏற்படுவதால் நடந்துள்ளது

பிள்ளைகளிடம் தேசாபிமானத்தை ஏற்படுத்தவும் இந்த முறை உதவும் தொழிற் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளவும் இதன்மூலம் இடம் கிடைக்கிறது. வேலை செய்வதால் புலன்களுக்குப் பயிற்சியும் உடல் வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் கல்வி முன்னேற்றத்துக்கும் கல்வி முன்னேற்றம் பொருளாதார முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைகின்றதென்பது விளக்கப்பட்டுள்ளது. அவரது கருத்தின்படி “செயல் மூலம் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறை ஆரம்பக் கல்வியாகும்”.

தாய்மொழி கற்பித்தல் ஊடகமாதல்

“கற்பித்தல் ஊடகம் தாய்மொழியாதல் வேண்டும்” என்பது காந்திகளின் மற்றுமொரு பிரேரணையாகும். இந்தியாவில் பல மொழிகள் பயன்படுத்தப்படுவதால் இதனை வெற்றிகரமாகச் செயற்படுத்துதல் மிகக் கஷ்டமாகும். இருந்தபோதிலும் சுதந்திரமான. சுயாதீனமான ஒரு மக்கள் தொகுதியைத் தோற்றுவிப்பதற்குத் தாய்மொழியில் கற்பித்தல் அத்தியாவசியமானதாகும் எனக் குறிப்பிட்டார். அவர்கள் தாய்மொழியில் கற்றுக் கொண்டால் மட்டுமே சுதந்திரமாகச் சிந்திக்க முடியும் என்பது நவீன உளவியலாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் வழங்கும் முக்கியத்துவத்தை இன்று ஏராளமான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆரம்பக் கல்வி வாழும் வழியாக அமைய வேண்டும் என்று கருதிய அவர் ஒவ்வொரு கிராமத்திலும் ஓர் ஆச்சிரமத்தை அண்டித் தாய்மொழியில் கற்பிக்கும் ஆரம்பப் பாடசாலை ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

காந்தியின் கல்வித் தத்துவதின் சில விசேட இயல்பகள் கீழே தரப்பட்டுள்ளன. ஒழுக்க வளர்ச்சிக்கு உயரிய இடம் வழங்கல், சுய ஒழுக்கத்தை முன்னேற்றதல், ஓர் வாழ்க்கை நீடித்த செயன்முறையாகக் கல்வி, கல்விச் செலவின் பொருட்டு பிள்ளை உழைத்தல், சமூகத் தேவைகளுக்கேற்ப கல்வியை வழங்கல் ஆண்களுக்கம் பெண்களுக்கும் சமமான கல்வி வழங்கல், சமூக மற்றம் வளர்ந்தோர் கல்வி வழங்குதல், பாடப்பத்தகங்களை தயாரித்தல். பாலியற்கல்வி வழங்குதல் போன்றவை முக்கியமானவை ஆகும். இலங்கை போன்ற வளர்முக நாடுகளக்கு அவற்றின் பயன்படுத்தமுடியும். கல்விசார் பிரச்சினைகளத் தீர்ப்பதற்கு காந்தியின் கருத்துக்களைப்

 

Leave a Comment