பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை? |
கி.மு.427-கி.மு.347 வரை கிறீஸிலே வாழ்ந்த ஒரு மேலைத்தேய தத்துவஞானியாவார் அக்காலத்தில் கிறீஸ் முழுவதிலும் மனிதனைப் பற்றியும் ஒரு தத்துவ விழிப்புணர்ச்சி நிலவியது.
பிளேட்டோ
பிரபஞ்சம் பற்றியும் அறவொழுக்கம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் தோன்றின. அதனால் உண்மை எது? வாழ்க்கையின் நோக்கம் யாது? இலட்சியவாழ்வு என்பது யாது? என்றவாறு. ஸ்பாட பல்வேறு கருத்துக்கள் தத்துவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. அவரது தத்துவக் கருத்து அதனடிப்படையில் தோன்றியது என்று நோக்கின், பிளேட்டோ பிறந்த காலத்தில் கிறிஸில் இரு பிரதான நகர இராச்சியங்களான எதென்ஸ் வாசிகளுக்கும் (எதெனியர்கள்) வாசிகளுக்கும் (ஸ்பார்டானியர்கள்) இடையில் அடிக்கடி போர் நடைபெற்றது. யுத்தச் சூழ்நிலை காரணமாக அந்த இராச்சியங்களில் ஊழல்களும் ஒழுக்கக் கேடுகளும் மலிந்தன. இக்காலத்தில் தோன்றிய விதண்டாவாதிகள் எனப்படும் பிரசாரகர்கள் அக்காலத்துக்குப் ஆபாசவாதிகள் (Sophists) 61601 பொருத்தமான கருத்துக்களைப் பிரசாரம் இப்பிரசாரங்களினால் சமூகத்தில் உலகியல் போற்றப்படும் நிலை தோன்றியதோடு அதன் காரணமாக ஊழல்கள் தலைவிரித்து அழிவை நோக்கிச் சென்றன. அதனால் எல்லோருக்கும் நீதியும் நியாயமும் வழங்கக்கூடிய பிளேட்டோவின் சிந்தனை செயற்பட்டது. இலட்சிய இராச்சியமொன்றைக் கட்டியெழுப்புவதில் அழைக்கப்பட்ட செய்தனர்.
பிளேட்டோ சோக்ரடீஸின் திறமை மிக்க சீடராவார். அதனால் சோக்ரடீஸின் கருத்துக்கள் பிளேட்டோ மீது ஆழமாகப் பதிந்துள்ளன. இளைஞர்களின் வாழ்க்கை இலட்சியவடிப்படையில் அமைந்திருக்குமாறு அறிமுகம் செய்யவும் சீர்கெட்டு அழிவுக்குள்ளாகிச் செல்லும் அறவியல் ஒழுக்கப் பண்புகளை மீண்டும் நன்னிலைக்குக் கொண்டு வரவும் சோக்ரடீஸ் நடவடிக்கை எடுத்ததோடு பிளேட்டோவும் அதனையே பின்பற்றினார். நோக்கம்
சோக்ரீடீஸ பின்பற்றிய வினாவிடை முறையை பிளேட்டோவும் அவ்வாறே ஏற்றுக் கொண்டார். உரையாடல் முறையென அழைக்கப்படும் இம்முறை மெய்ம்மையைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. நியாயம் எது என்று காண்பதற்காக இம்முறை உதவியது.
ஜைனகோத்திர தத்துவம், கணிதம், இயற்கை விஞ்ஞானம் ஆகியன பற்றியும் கற்ற பிளேட்டோ கல்விக் கருத்துக்களை விரிவடையச் செய்வதற்கு “அக்கடமி எனும் கல்வி நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தார். பிளேட்டோவினால் எழுதப்பட்ட தத்துவ நூல்கள் ஏறக்குறைய இருபத்தைந்து ஆகும். அவற்றுள் பெரும்பாலான உரையாடல்(கேள்வி பதில்) பாங்கிலே எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் ரிபப்ளிக் (Republic), லோஸ் (Laws), மீனோ (Meno) எனும் நூல்கள் மிகவும் பிரபல்யமானவை பிளேட்டோவின் கல்விக் கருத்துக்கள் பலவும் இந்நூல்களிலேயே உள்ளடங்கியுள்ளன.
பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள்
மனித வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டியது மெய்ப்பொருளைப் ஞானத்தைப்(Wisdom)பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகும் என இலட்சியவாதியால பற்றிய பிளேட்டோ கூறுகின்றார். வெளியுலகில் காணக்கூடிய பொருள்கள் மாதிரி உலகம்(World of forms.அல்லது உயர்ந்த மெய்ப்பாட்டு உலகில் காணப்படும் மாதிரிகளின் பிரதிகள் என பிலேட்டோம் கூறுகிறார்.
பிளேட்டோவின் தத்துவநோக்குகளுக்கமைய உண்மை ஞானம் என்பது புற உலகில் அல்லாமல் அக உலகிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் அறிவே ஆகும். அறிவின் இரு பாதைகளாவன: i. புலனுலகின் பிரச்சினைகள் பற்றிய அறிவு கற்பனை/ கற்பனையிலிருந்து அறிவைப் பெற்றக்கொள்ளல் நம்பிக்கை/ தூய்மையான நம்பிக்கையிலிருந்து அறிவைப் பெற்றுக்கொள்ளல்
அசேதன உலகு, போலித்தன்மையற்ற அறிவு உள்ளதை உள்ளபடி காணல் பொதுவான உணர்வுகள்/ உயர் கணிதத்தினூடாகப் பெற்றக்கொள்ளப்படும் அறிவு. முழுமையான விளக்கம்/ தர்க்க அடிப்படையிலான மாதிரிகள் மூலமான அகிலம் பற்றிய விளக்கம்.
இதனால் சமூகத்தில் நிலவும் ஊழல்களை மாற்றுவதற்கு தத்துவப் பயிற்சி ஒன்று தேவை. தத்துவஞானி உயர்ந்த யதார்த்தங்களை மெய்ப்பாட்டு அடையாளங்கண்டு உலகின் அல்லது மாதிரி உலகில் காணப்படும். அதற்கேற்றவாறு இவ்வுலகிலுள்ள பொருள்களையும் நிறுவனங்களையும் மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் நிலவும் ஊழல்களையும், ஊழல் நிறைந்த நிருவாகத்தையும் நீக்க முடியும். அதனால் மாதிரி உலகத்தைக் கண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய பிணைப்புக்களுக்கு ஆட்சியாளனாதல் வேண்டும் என்பது பிளேட்டோவின் கருத்தாகும். அப்பாற்பட்ட இலட்சியவாதி
இந்த அமரத்துவ மெய்ப்பாடுகளை விளங்கிக் கொள்வதற்குரிய ஆற்றல்களைத் தனிநபர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கே கல்வி திட்டமிடப்பட வேண்டும். “ரிபப்ளிக்” நூலில் அவர் இத்தகைய அமரத்துவ மாதிரிகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தத்துவஞானியை தோற்றுவிக்கலாம் என்பதைப் பற்றியே அவர் கலந்துரையாடுகின்றார். கல்வி என்பது தொழில்சார் பயிற்சி எனும் குறுகிய கருத்திலிருந்து விலகியிருக்கும் பிளேட்டோ உண்மையான கல்வி என்பது எது என்பதை Laws எனும் நூலில் எடுத்துக் காட்டுகிறார். அதன்படி தனியாளுக்குப் பூரண பிரசையாவதற்கும் நீதி நியாயப்படி ஆளுவதற்கும் இயலுமான விதத்தில் பெற்றுக் கொடுக்கப்படும் கல்வியே உண்மையான கல்வி எனப் பிளேட்டோ குறிப்பிடுகிறார்.
தனக்கும் சமூகத்திற்கும் பயன்மிக்க அறிவை மனிதன் ஒருவன் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை பிளேட்டோ சுட்டிக்காட்டுகிறார். சமூகத்தை அபிவிருத்தி செய்வதில் உள்ள நடைமுறைத் தடைகள் குறித்த எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக பிளேட்டோ எப்போதும் தொழிற்படுகிறார். சடத்துவ உலகின் தடைகள் நேரத்துடனும் இடத்துடனும் தொடர்புபட்டவை என்பதை விளங்கிக்கொண்ட பிளேட்டோ அதற்கேற்ப தனது கல்வித் தத்துவச் சிந்தனைகளை வெளியிட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகின்றது.
சமூகம் பற்றிய பிளேட்டோவின் கருத்துக்கள்
நியாயம் அன்று நிலவிய சமூக ஊழல்களை ஒழித்துக்கட்டவும் சமூக நியாயம் உருவாக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பிளேட்டோ கருதினார். நிறைவேற்றப்படுவதற்குச் சமுதாயத்தில் வாழும் தனிப்பட்ட குழுக்கள் தத்தமக்குரிய கடமைகளையும் உரிமைகளையும் சரியாக நிறைவேற்ற வேண்டும். சமூகம் அத்தகைய மூன்று தனியார் குழுக்களைக் கொண்டதெனக் காட்டுகிறார்.
1. ஆட்சியாளர்கள் (Rulers)
2. பாதுகாவலர்கள் (Guardians)
3. நுட்பவியலாளர்கள் அல்லது உழைப்பாளிகள் (Craftsman)
அந்தந்தச் சமூகப் பிரிவினர் தத்தமக்குரிய கடமைகளையும் உரிமைகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றுவதன் மூலம் சமூக நியாயத்தை நிறைவேற்ற முடியும். கல்வித்திட்டமிடலில் சமூகத் தனிக்குழுமங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறார். இந்த வகைப்படுத்தலுக்கு ஏற்ப உயர் மட்டத்திலிருப்போர் ஆட்சியாளராவர். அவர்கள் தங்கம் போன்ற தனிநபர்களாவர். இரண்டாவது மட்டத்திலிருப்போர் பாதுகாவலர்களாவர். அவர்கள் வெள்ளியைப் போன்றவர்கள். சமூகத்தில் கீழ் மட்டத்திலிருப்போர் பித்தளை அல்லது இரும்பு போன்ற தனிநபர்களாவர். அவர்களது கடமை உழைப்பைச் செலவு செய்து உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். அந்தந்தச் சமூக வகுப்புகளுக்குரியவர்கள் தத்தமக்குரிய கருமங்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதும் அடுத்தவர்களுக்குரிய கருமங்களோடு தொடர்புறாதிருத்தலும் சமூகக் கடமையாகும். பிளேட்டோ
இந்த ஒவ்வொரு சமூகப் பிரிவினரிடமும் இருக்க வேண்டிய நடத்தைப் பண்புகளையும் குறிப்பிடுகிறார். ஆட்சியாளரிடம் ஞானம், பாதுகாவலரிடம் அச்சமின்மை நுட்பவியலாளர்களிடம் காணப்பட வேண்டிய நடத்தைப் பண்புகள் பணிவு, அடக்கம் என்பன ஆகும். இந்த மூன்று பிரிவுக்கும் உரிய தனிநபர்களைத் தோற்றுவித்தல் கல்வியின் வேலையாகும் என்று அவ குறிப்பிடுகின்றாார். இந்த மூன்று பிரிவினருக்கும் பயிற்சி அவசியம் என்றும் ஆட்சியாளருக்கு நீண்டகாலக் கல்வி அவசியம் என்றும் கூறுகின்றார்.
பிளேட்டோவின் கல்வித்திட்டம்
ஒரு இலட்சியவாதி என்ற வகையில் கல்வியினூடாக தத்துவ அறிவை உருவாக்குவரை பிளேட்டோ இலக்காக கொண்டுள்ளார். அவரது கல்வித் தத்துவத்தில் மூன்று பிரதான நோக்கங்களை நாம் காண முடியும். ஒரு தனியாளின் தனிப்பட்ட ஆற்றலுடைமைகளை இனங்காணல்’ அறிவுப் பிரவாகத்திற்கு உதவுதல், சமூகத்தின் தேவைக்குப் பொருத்தமானவகையில் தனியாளைத் தயார் செய்தல். “ரிபப்ளிக்” நூலில் பிளேட்டோவின் கல்வித்திட்டம் தரப்பட்டுள்ளது. அந்தக் கல்வித் திட்டத்தின் அமைப்பு வருமாறு.
1. ஆரம்பக் கல்வி (முதல் 17 வருடங்கள்)
2. விசேட தலைமைத்துவப் பயிற்சியொன்றைப் பெறுதல் (17-20 வயது)
3. இடைநிலைக் கல்வி (20 வயது 30 வயது)
4. உயர் கல்வி (30 வயது 50 வயது)
5. நன்மையின் நியமத் தோற்றம் (50வயதின் பின்)
ஆரம்பக் கல்வி
உண்மையான ஆட்சியாளரை உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்க்கையை நிறைவேற்றிக் சிறுவயதிலேயே கல்வியைத் தொடங்கவேண்டுமென்பது பிளேட்டோவின் கொள்வதற்காகச் கருத்தாகும். முதற் சில ஆண்டுகளில் அல்லது குழந்தைப் பருவத்தில் பிள்ளைக்கு வீட்டில் கல்வி வழங்கப்பட வேண்டும். சரியான உடலியற் சுகாதார நற்பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதல், நல்ல மனப்பாங்கு வளர்ச்சியை ஏற்படுத்துதல் இசையோடு கூடிய விளையாட்டுக்கள், அழகியல் செயற்பாடுகள் ஆகியவற்றைப் பழக்குதல். வாழ்க்கையின் ஆரம்பக்கட்டம் பிள்ளையைப் பயிற்றுவிக்க உகந்த காலமாகும். அதனால் சங்கீதம், ஜிம்னாஸ்டிக் முதலிய பாடங்கள் மற்றும் அறவொழுக்க விருத்திக்கு உதவக் கூடிய கதைகளைச் சொல்லிக் கொடுத்தல் என்பன ஆரம்பக் கல்வியில் முக்கிய இடம் வகிக்கின்றன எனப் பிளேட்டோ வலியுறுத்துகிறார். மற்றும் ஆரம்பக் கல்வி மிக முக்கியம் எனவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார். இது தற்காலத்துக்கும் பொருத்தமான முக்கியமானதொரு கருத்து என்பது உங்களுக்கு விளங்கும்.
17-20 வயதுக்கு இடைப்பட்ட காலம் விசேட உடல்சார் பயிற்சி பெறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நோயற்ற சக்திமிக்க உடலை வளர்ப்பதன் மூலம் நாட்டைப் பாதுகாப்பதற்குத் தேவையான யுத்தப் பயிற்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்பக் கல்வியிலிருந்தே சங்கீதத்தினால் மென்மையையும், ஜிம்னாஸ்டிக் உடலியல் பயிற்சி மூலம் தைரியத்தையும் உடல் வளர்ச்சியையும் வளர்க்க எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறு உடல் உள்ளம் ஆகிய இரு அம்சங்களையும் சமனாக விருத்தி செய்வதைப் பிளேட்டோ வலியுறுத்தினார்.
உயர் கல்வி
அவர் பிரேரித்திருந்த 30வயதுக்கும் 50வயதுக்குமிடைப்பட்ட உயர் கல்வி ஆட்சியாளருக்கு உரியதாகும். பௌதிக உலகின் நிகழ்வுகளை விளங்கித் திறந்த சிந்தனையையும் தர்க்க சிந்தனையையும் அறிந்து கொண்டு படிப்படியாகப் பௌதிகமல்லாத நிகழ்வுகளை விளங்குவதற்கு வழிநடத்தப்பட்டது இவ்வுயர் கல்விக் கட்டத்திலாகும். நன்மை பற்றிய மாதிரியை ஆட்சியாளருக்கு விளங்க உயர்கல்வி வழங்கப்படுதல் அவசியம் என்று கருதப்பட்டது. மாதிரி உலகத்தை விளங்கிக் கொண்ட நபர் அம்மாதிரிகளுக்கு ஏற்றவாறு நாட்டை ஆளுவார். அதன் மூலம் கல்வி நன்மையாகித் தனியாளும் கொண்டவராகுவர், எல்லா விலங்கினங்களும் சிறந்த சிறப்பியல்புகளைக்
வயது 50-55 இடைப்பட்ட காலம் பயிலுனர் இராச்சியப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அது திருப்திகரமாக இருந்தால் இராச்சியப் பாதுகாவலரொருவராக நியமிக்கப்படுவார். அப்போது அவர் பிறருக்காக பகல் இரவு கஷ்டப்படும் ஒருவராகிறார், சிறந்ததொரு ஆட்சியாளராவதற்கு தார்மீக ஆட்சியாளரொருவராவதற்கு நீண்டகாலக் கல்வியும் குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியும் தேவைப்படுகின்ற 50வயதினைப் பூர்த்தி செய்தவர்களால் மட்டுமே உண்மையான தத்துவ அரசராக முடியும். “ஆட்சியாளர்கள் தமக்கும் நாட்டுக்கும் பொறுப்புடையவர்களாவர். அதற்குந் தேவையான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
பிளேட்டோவின் கல்விச் சிந்தனை பற்றிய நோக்கு
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பிளேட்டோவின் கல்விச் சிந்தனைகள் இன்னும் முக்கியம் வாய்ந்தவை. கல்வி ஒழுங்கமைப்பு அரசுரிமையாதல் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்குதல், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் உயர் கல்வியை மட்டுப்படுத்துதல், போதுமான முதிர்ச்சியடையும் வரை விஞ்ஞானம், தத்துவம் ஆகிய பாடங்களைக் தாமதப்படுத்துதல் முதலியன பற்றிய அவரது விமரிசனங்கள் மிக முக்கியமானவையாகும். கிரேக்க கற்பித்தலைத் சிறந்த கலாசாரத்தையும் அழிவிலிருந்து காத்துக் கொள்ளச் ஜனநாயகத்தையும் ஆட்சியாளர்களைத் தோற்றுவித்தல் பிளேட்டோவின் கல்வியின் பிரதான நோக்கமாகும்.
புரண ஒழுக்க விருத்தியுடன் கூடிய ஞானமுடைய தனியாளைக் கல்வியின் மூலம் தோற்றுவிக்க வேண்டும் என்பது பிளேட்டோவின் பிரேரணையாகும். பூரண ஆளுமை வளர்ச்சிக்காகக் கல்வியைப் பயன்படுத்த வேண்டும் வலியுறுத்துகின்றனர். என்ற கருத்தைத் தற்கால கல்வித் தத்துவவியலாளர்கள் கூட பிளேட்டோ பிரேரித்த பொதுவான கட்டாயக் கல்வி பற்றிய கருத்தையும் தற்காலத்தில் அனைத்து அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தப் பொது ஆரம்பக் கல்வியை ஆண் பெண் இரு சாராருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டினார்.
பிள்ளைகளுக்குக் கற்பிக்கையில் விளையாட்டு முறை, போலச்செய்தல், இசை, கதை சொல்லல், நடித்தல் முதலிய நுட்ப முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பிளேட்டோ சமர்ப்பித்துள்ள கருத்து உளவியலாளர்களின் அபிப்பிராயங்களுடன் பெருமளவுக்குப் பொருந்துகின்றது. கல்வியின் மூலம் உளப் பயிற்சி, உடற்பயிற்சி, மனப்பாங்கு வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப, இடைநிலைக் கல்வி பெறுவோர்களுக்குக் கற்பிக்க வேண்டியவை பற்றி பிளேட்டோ கூறியுள்ள ஒரு பிரேரணை தற்காலக் கலைத்திட்டத் தயாரிப்பாளர்களுக்குப் பெறுமதி மிக்க வழிகாட்டலாகும்.
பரவசம் அல்லது வலியே ஒரு பிள்ளையிடத்தே ஏற்படும் ஆரம்ப உணர்வு என பிளேட்டோ தனது சட்டம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு தனியாளை இவ்வுணர்வுகளைச் சிறந்தமுறையில் கையாளச் செய்வான் மூலம் உளரீதியாக பூரணமடைந்த மனிதனாக மாற்றுவதே கல்வி எனக் குறிப்பிடப்படுகிறது. பிளேட்டோவால் முன்வைக்கப்பட்ட கலைத்திட்டத்தின் மூலம் சுயநலவாதிக்குப் பதிலாக சமநிலை ஆளுமைமிக்க மனிதனை உருவாக்குவதை இது நோக்காகக் கொண்டிருந்தது. இக்கலைத்திட்டம் மூன்று அடிப்படை பண்புகளை நாம் இனங்காண முடியும்.
1. கலைத்திட்டம் பொதுவானதாக இருத்தல் வேண்டும்.
2. இது ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும்.
3.வயது மட்டம் விருப்புமட்டம் என்பவற்றிற்குப் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும்.
பெற்றோரே முதலாவது ஆசிரியர்களாக இருக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் கல்வியை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் எனவும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் பிளேட்டோ வலியுறுத்துகிறார். ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவர் என்பதும் பிள்ளையைப் பற்றியும் பாடவிடயம் பற்றியும் போதிய விளக்கம் உள்ளவர் என்பதும் முக்கியமானதாகும்.
இன்று பெரிதும் விரிவடைந்துள்ள வாழ்நாள் முழுவதும் கல்வி பற்றிய கருத்தை முதன்முதலில் பிளேட்டோவே அறிமுகப்படுத்தினார். பெண் கல்வியின் முன்னோடியும் பிளேட்டோவே எனக் கருதலாம். பெண்கள் ஆட்சியாளர்களாக வரத் தகுதியுடையவர்கள் என்றும் அவர்களுக்குப் புதியதொரு கல்விமுறை வழங்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார். பிளேட்டோ ஆரம்பித்த அக்கடமி முதல் மேற்குலகப் பாடசாலை எனக் கருதப்படுகின்றது. அந்த அக்கடமியும் அதன் கற்பித்தல் முறையும் தற்காலப் உதவியுள்ளன. பாடசாலைகளை நடைமுறைப்படுத்துவதில் பெரிதும்
பிளேட்டோ நலன்புரி அரசையே எதிர்பார்த்தார். தனியொருவனது தேவையைவிட அரசின் தேவை முதன்மை பெறும் ஓர் அரசுக்காகவே அவர் கல்வித் தத்துவக் கருத்துக்களைச் சமர்ப்பித்துள்ளார். பிளேட்டோ சகல சமூக வகுப்பினருக்கும் ஏதாவது பயிற்சி வழங்கப்பட வேண்டும் என ஏற்றுக் கொண்டதோடு ஆட்சியாளருக்காக நீண்டகாலக் கல்வியொன்றைப் பிரேரித்துள்ளார். பிளேட்டோவின் சமூகப் பகுப்பு சனநாயக விரோதத் தன்மையைக் கொண்டிருந்தாலும் எல்லோருக்கும் ஓரளவு கல்வி வழங்கப்படுவதன் முக்கியத்துவம் தெளிவாகின்றது. Laws எனும் நூலில் வரும் கருத்துகளிலிருந்து
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்