பண்டைய காலத்திலிருந்து நூற்றாண்டு வரை இலங்கையின் உள்நாட்டுக்கல்வி

பண்டைய காலத்திலிருந்து  நூற்றாண்டு வரை இலங்கையின் உள்நாட்டுக்கல்வி
இலங்கையின் உள்நாட்டுக்கல்வி

இலங்கையிலுள்ள இன்றைய நாகரிகம் கி.மு. 543இல் இளவரசன் விஜயன் தலைமையில் இங்கு காலடி வைத்த ஆரியர் வருகையுடன் தொடங்குகின்றதென்பது பழைய வரலாற்றுப் பதிவுகளிலிருந்து தெரிய வருகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அர்கத் மகிந்தர் இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியமையே அப்போது சிங்கள இராச்சியத்தில் நிகழ்ந்த சிறப்பாகக் குறிப்பிடத்தக்க முக்கிய சம்பவமாகும்.

ஆரியர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததன் காரணமாகப் பண்டைய கல்வி முறைமையில் இந்தியப் பாரம்பரியங்கள் பல இடம் பெற்றன. எனவே புராதன காலத்தில் இலங்கையில் இருந்த கல்வி நிலையங்கள் இந்தியாவிற் காணப்பட்ட பண்டையகல்வி நிலையங்களுக்கு நிகரானவையாக விளங்கின.

இலங்கையில் வசித்த பிராமணர்கள் வேதக்கல்வி புகட்ட அமைத்த கல்வி முறைமை பற்றி வம்சகதா, ரசவாகினி, சிஹலவத்துப்பகரணய போன்ற பண்டைய வரலாற்றுப் பதிவேடுகள் மூலம் அறிய முடிகின்றது.

பிராமணர்கள் நிருவகித்த இக்கல்வி நிலையங்களில் இளவரசர்களும், உயர் குடும்பப் பிள்ளைகளுக்கும் கல்வி புகட்டப்பட்டது. இது ஒரு குருகுலக் கல்வி முறைமை அதாவது குருவின் வீட்டில் வசித்து கல்வி பயிலல் முறையாகும். இக்கல்வி முறையில் சமஸ்கிருதம், வைத்திய விஞ்ஞானம், விவசாயம்,பல்வேறு கைப்பணிகள் என்பன பாடங்களாக இடம்பெற்றன.

இலங்கையில் பௌத்தத்தின் வரவையடுத்து விகாரைகள் (கோயில்கள்) பௌத்த மத குருமாருக்கு (பிக்குகள்) தானமாக வழங்கப்பட்டன. காலப்போக்கில் ஏற்பட்ட பௌத்த மதப்பரவல் காரணமாகப் பிக்குமாரின் தொகையும் விகாரைகளின் தொகையும் பெருகின. இவ்விகாரைகள் மன்னர்களின் பேராதரவினாலும் நிலமானியங்களினாலும் பராமரிக்கப்பட்டன. இவ் விகாரைகள் பிக்குமாரின் வதிவிடங்களாகவும் கல்வி பயிலும் இடங்களாகவும் படிப்படியாக வளர்ந்து பெரிய அமைப்புக்களாக அல்லது நிலையங்களாக மாறின. அவை பௌத்தக் கல்வி அளிக்கும் நிலையங்களாகக் கடமையாற்றின பௌத்த துறவியரின் தனியுரிமையாயின. மகா விகாரை, அபயகிரி விகாரை, ஜேதவனராமய, தக்கிணகிரி விகாரை என்பன அநுராதபுரத்தில் பௌத்தக் கல்வி ஊட்டிய பிரதான நிலையங்களாகும். இவை போன்ற நிலையங்கள் திசமகாராமை, களனி ஆகிய இடங்களிலே பணிபுரிந்தன. இவை யாவும் பௌத்த துறவியரின் தனியுரிமையில் செயலாற்றின. துறவியர் அல்லாத பௌத்தர்களின் கல்விப் பயிற்சியும் பௌத்த துறவியரின் பொறுப்பில் இருந்தது.

இலங்கையின் பண்டைக் காலக் கல்வியின் கட்டமைப்பு

இலங்கையின் பண்டைய உள்நாட்டுக் கல்வி முறைமையின் அமைப்பிலே தெளிவாய் அறியக்கூடிய மூன்று கல்வி நிலைகள் உள்ளன. அவை பின்வருவன:

(i) ஆரம்ப நிலைக் கல்வியளித்த சிற்றூர்ப்பள்ளி கிராமப் குருவின் வீடு) பாடசாலை. (குருகெதர

(ii) இடைநிலைக் கல்வி புகட்டிய கோயிற்பள்ளி

(iii), உயர் நிலைக் கல்வி போதித்த பிரிவேனா.

சிற்றூர்ப்பள்ளி அல்லது கிராமப் பாடசாலை

சிற்றூர்ப்பள்ளியில் வாசிப்பு, எழுத்து என்னும் பாடங்கள் சார்பான அடிப்படைப் போதனை மட்டும் அளிக்கப்பட்டது. குருவின் வீடே சிற்றூர்ப்பள்ளியாக விளங்கினது. சிற்றூரில் வசித்த பிள்ளைகளிற் பெரும்பாலானவர்கள் ஆரம்ப நிலைக் கல்வி பயில இத்தகைய வீட்டுமையச் சிற்றூர்ப்பள்ளிக்குச் சென்றார்கள். இத்தகைய பள்ளிகள் மேலை நாட்டுப் பாடசாலைக் கல்வி இலங்கையில் அறிமுகம் ஆகும் வரை தொடர்ந்து இயங்கின.

அத்தரகம பண்டாரகம என்பவர் இயற்றிய ‘வடங்களி பொத்த’ என்னும் செய்யுள் தொகுதி கண்டி இராச்சிய காலச் சிற்றூர்ப்பள்ளிகளிற் பாடநூலாகப் பொதுவாகப் பயிலப்பட்டது. அங்கே போதிக்கப்பயன்படுத்தப்பட்ட ‘வாசகங்கள்’ அல்லது வாசிப்பு நூல்களின் பட்டியலில் பின்வருவன இடம்பெற்றன என்று திரு பீ.பீ.ஜே.ஹேவவசம் கருதுகிறார்:

நம்பொத்த (பெயர்நூல்) சிற்றூர்கள், துறவியர் மடங்கள், நாட்டின் பௌதீக உறுப்புகள் என்பவற்றின் பெயர்கள் மகுல்லக்குன -(மங்கலலட்சணம்)-புத்தர் பிரானின் உடம்பின் மீது காணப்பட்ட மங்கல

அடையாளங்களின் பட்டியல்

கணதேவிஹெல்லா    –    கணேசர் துதி

பத்தினிஹெல்ல பத்தினி தெய்வத்துதி

புத்த கஜ்ஜய சகஸ்கடய

எழுத்துப் பயிற்சிக்கு மணல் பரவிய தட்டுக்கள்/தாம்பாளங்கள் பயன்படுத்தப்பட்டன. வாய்மொழி மரபு முறைகள் கற்பித்தல் முறைகளாகப் பிரயோகிக்கப்பட்டன. இவற்றின் பயனாகப் பொருளறியாத மனனம் அல்லது உருப்போடுதல் நேரிட்டது.

இத்தகைய ஆரம்ப நிலைக்கல்வியூட்டிய சிற்றூர்ப்பள்ளியமைப்பிலே ஒழுங்கு கட்டுப்பாட்டைக் கண்டிப்பாகப் பேணிய பள்ளியாசிரியரே தலையாய காரணியாக ஆதிக்கம் செலுத்தினார்.

மிக மிகச் சில பிள்ளைகளே ஆரம்ப நிலையின் பின்னரும் தொடர்ந்து கல்வி பயின்றனர். இவ்வாறு தொடர்ந்து கல்வி பயிலாதவர்கள் தமது சாதிப்பிரிவுக்குப் பொருத்தமான தொழிற் பயிற்சியைப் பெற்றோரிடமிருந்தும் தொழில் வல்லாரிடம் இருந்தும் பெற்றனர்.

கோயிற் பள்ளி

இடைநிலைக் கல்வி பெற விரும்பியவர்கள் கோயிற் பள்ளியில் அல்லது துறவியர் மடத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்களிற் பெரும்பாலானவர்கள் பௌத்த துறவியாக விரும்பினர் அல்லது மருத்துவம், சோதிடம் போன்ற உயர்சிறப்புத்தொழிற்கல்வி பெற விழைந்தனர். இக்கோயிற்பள்ளியின் கலைத்திட்டதிலே ஏட்டுக் கல்விக்குரிய பாடங்களும் தொழிற் கல்விக்குரிய பாடங்களும் இடம்பெற்றன. அக்கலைத்திட்டத்திலே சமய போதனை அல்லது பௌத்தப் போதனை இன்றியமையாத அங்கமாக இடம் பெற்றது. மேலும் சோதிடம் மருத்துவம் போன்ற உயர் சிறப்புத் தொழிற் பாடங்களும் சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைப் பாடங்களும், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழித்துறைப்பாடங்களும் அங்கு முக்கியத்துவம் பெற்றன. கோயிற் பள்ளியில் பௌத்தத் துறவிகளே ஆசிரியராகக் கடமை புரிந்தனர். இத்தகைய பள்ளிகள் தமது பராமரிப்புக்காகப் புரவலர்களான மன்னர்கள் வழங்கிய மானிய நிலம் போன்ற நன்கொடைகளைப் பெரிதும் சார்ந்திருந்தன.

பிரிவேனாக்கள்

துறவிகள், துறவியர் அல்லாதார் ஆகிய இருசாராரும் கல்வி பயில அநுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் பண்டைய இலங்கைக் கல்வியமைப்பில் உச்சநிலைக்கல்வி அல்லது உன்னத் நிலைக்கல்வி வழங்கும் நிலையங்களாகத் திகழ்ந்தன.

பிரிவேனாக்களின் ஆசிரியர்களிற் பெரும்பாலோர் பெளத்த துறவியர் ஆவர். காலப் போக்கிலே துறவியர் அல்லாத கல்விமான்களும் பிரிவேனாக்களின் ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டனர். இதன் விளைவாகத் தொடக்கத்தில் சமயக் கல்வியைப் பிரதானமாகப் புகட்டிய இக்கல்வி நிலையங்களின் கலைத்திட்டம் விரிவாக்கம் பெறநேரிட்டது. பிரிவேனாக்களின் விரிந்த, பரந்த கலைத்திட்டத்திலே பின்வரும் பாடங்கள் அடங்கியிருந்தன

சமயத்துறை அறிவு

  • வேதங்கள்
  • ஒப்பியற் சமயம்/சமய ஒப்பீட்டுக் கல்வி
  • சிங்கள், பாளி, சமஸ்கிருத மொழிகள்
  • வரலாறு
  • இலக்கணம்
  • தருக்கம்

பாரம்பரியத்தின் அங்கங்களாகக் மேற்குறிப்பிட்ட வாய்மொழிப் பாடங்களைப் பண்பாட்டுத்துறையறிவு. என்னும் வகுதியில் அடக்கலாம். இவற்றுடன் உயர் சிறப்புத் தொழிற் பாடங்களான சட்டம், வானவியல், மருத்துவம், கட்டடக்கலை, ஓவியம் போன்றனவும். பிரிவேனாக்களின் இவ்விரிவாக்க கலைத்திட்டத்தில் இடம் பெற்றன.

கலந்துரையாடல்/சொல்லாடல்/ஓதல்’ உச்சாடனம்/விவாதம்/சொற்போர் என்பன பிரதான கற்பித்தல் முறைகளாக அநுசரிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்த நாலந்த போன்ற பல்கலைக்கழகங்கள் இலங்கையில் அப்போது இருக்கவில்லை. ஆனால் இப் பிரிவேனாக்கள் வழங்கிய கல்வி மிக உயர்ந்த தரத்தைப் பேணியது. இங்கு ஆசிரியர்-மாணவர் உறவு மிக நன்றாகக் காணப்பட்டது.

மன்னர் பேராதரவும் மக்கள் ஆதரவும் பிரிவேனாக்களின் நிருவாகத்துக்குத் தேவையான முக்கிய காரணிகளாய் விளங்கின. எனவே பிரிவேனாக் கல்வி நிலையங்கள், பிற கல்வி நிலையங்கள் என்பவற்றின் வெற்றிகரமான பராமரிப்பு ஸ்திரமான அதாவது தளம்பலற்ற அரசியல் நிலையில் தங்கியிருந்தது. தொடக்க காலப் பிரிவேனாக்கள் அனுராதபுரத்திலே நிறுவப்பட்டன.

மகாவிகாரை:-பண்டைய இலங்கையின் பெருமை மிக்க கல்விநிலையங்களிலே ஒன்றாகும். கி.பி. 412இல் மகாவிகாரைக்கு விஜயம் செய்த சீனப் பௌத்த துறவியான “பாஹியன்” இருவருடகாலம் இதிலே தங்கியிருந்தார். அத்துறவி இங்கு விஜயம் செய்த போது மூவாயிரம் மாணவத் துறவியர் மகாவிகாரையில் வசித்தனர். அபயகிரி, ஜேதவனராமய என்பன அநுராதபுரத்தில் இருந்த முக்கியமான பிற கல்வி நிலையங்கள் ஆகும்.

இப்பிரிவேனாக்கள் அமைதி நிலவிய காலங்களிற் செழித்தோங்கின. அவை தென்னிந்தியப்படையெடுப்புக்கள் நிகழ்ந்த போது மன்னர் ஆதரவு குன்றிய காரணத்தினாலும் பொதுவாழ்க்கை சீர்குலைந்த காரணத்தினாலும் தளர்ச்சியுற்றன. இந்நிலையில் பிக்குமார் மறைவிடங்களுக்குச் சென்று அறிவுக்கருவூலங்களைப் பேணிக்காத்தனர்.

சிங்கள இராச்சியம் படிப்படியாகத் பிரிவேனைகள் நிறுவப்பட்டன. தென்பகுதிக்குப் பெயர்ந்ததும் தென்பாகத்திலும்

கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்தேச இலக்கியம் புகழ்பெற்ற புலவர்களான துறவிகள் தலைமை வகித்த பெருந்தொகைப்பிரிவேனைகள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

பிரிவேனாவின் பெயர்

அமைவிடம் – பெப்பிலியான தலைமை தாங்கிய மதகுரு

சுநேத்திராதேவி

தொட்டகமுவ – தி(ரி)பிடகமங்கல தேரோ சிறீ ராகுல தேரோ

வனரதன தேரோ

விஜயபா – பத்மாவதி

சிறிமேவன் – கேரகல

றைகம்

வேதகமமைத்திரி தேரோ

உள்நாட்டுக் கல்வி முறைமையின் சிறப்பியல்புகள்

மேற்போந்த சொல்லாடலின் அடிப்படையில் எமது உள்நாட்டுக் கல்வியின் சிறப்பியல்புகளை இப்போது இனங்காண முயலுவோம்.

முழுமையாக நோக்கும் போது அக்காலக் கல்வி முறைமை உயர்ந்தோர் அல்லது மேலோர் சார்பாயிருந்தது. இந்தியாவில் உள்ளது போலச் சாதிப் பாகுபாடு இங்கு கடுமையாக இருக்காவிட்டாலும் சாதியமைப்பே அக்காலக் கல்வி முறைமையின் மேலோர் சார்பு நிலைக்குக் காரணம் ஆகும். அதனால் கல்வி சமூக மதிப்பு நிலைப் பெயர்ச்சியின் அதாவது அந்தஸ்து மாற்றத்தின் ஊடகமாகச் செயற்பட முடியவில்லை.

எனவே மன்னர் குலப் பிள்ளைகளும் பிரபுக்கள் குலப் பிள்ளைகளும் உயர் கல்வியை நாடக்கூடியதாயிருந்த போதும் காணப்பட்டது. குடி மக்களின் படிப்பறிவு மட்டம் தாழ்நிலையிற் ஆயினும் சிற்றூர்ப்பள்ளி, கோயிற் பள்ளி என்பவற்றின் செல்வாக்குக் காரணமாகக் குடிமக்கள் கூடத் திருப்திதரும் முறையில் பொதுக் கல்வி பெற்றிருக்கலாமெனச் சிகிரியாச் சுவரோவியங்கள் உணர்த்துகின்றன.

சமயத்துறைக் கல்விக்கும் அறநெறிக் கல்விக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பௌத்த குருமார் உபதேசங்கள், கிரியைகள், சடங்குகள் என்னும் முறைசாராக் கல்வி வழிகள் மூலம் பொது மக்களின் உள்ளங்களில் ஒழுக்க விழுமியங்களைப் பதித்தார்கள். பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பு தாழ்நிலையில் காணப்பட்டது. எனினும் நடனம், ஓவியம் போன்ற பாடங்களில் அவர்கள் உயர்சிறப்புத்தொழிற் கல்வி பெறும் வாய்ப்பு இருந்தது.

அழிவுற்ற பழைய நகரங்களில் இப்போது கிடைக்கும் சின்னங்கள், பழைய நூற்சான்றுகள் என்பன மூலம் நீர்ப்பாசனம், கட்டடக்கலை, சிற்பக்கலை, மரச் செதுக்குக் கலை, விலங்கு வைத்தியம், சோதிடம் மருத்துவம், படைத்துறைப் பயிற்சி என்னும் துறைகளில் தொழிற்கலை விஞ்ஞானம் உயர் முன்னேற்றம் அடைந்தமையை அறிய முடிகின்றது.

 

Leave a Comment