தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை 1961

தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை 1961
தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை 1961

 

கல்வி துறையில் சகல கூறுகளையும் பரிசீலித்து கல்விச் சீர்திருத்தத்திற்குரிய விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் ஜே.ஈ.ஜெயசூரியவின் தலைமையில் தேசிய கல்வி ஆணைக்குழு 1961இல் நியமிக்கப்பட்டது. விதந்து கூறிய சிபாரிசுகளில் அது முக்கியமானவை பின்வருமாறு:-

 

அனுமதிஅகவையும் கட்டாய பாடசாலைக் கல்வியகவையும்

பாடசாலைக்கல்விக்கேற்ற இலட்சிய அனுமதிஅகவை 6ஆக இருத்தல் தகும் என்று இவ்வாணைக்குழு கருதியது. ஆனால் பாடசாலை முன்நிலைக்கல்விக்குரிய வசதிகள் இல்லாமையைக் கருத்திற் கொண்டு இக்குழு பாடசாலை அனுமதி அகவை 3ஆத இருக்க வேண்டுமெனச் சிபாரிசு செய்தது 6-16 என்னும் அகவை வீச்சு கட்டாய பாடசாலைக் கல்விக்குப் பொருத்தமான காலப்பகுதியென இக்குழு கருதியது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் நடைமுறைச்சிரமங்கள் காரணமாக 5-14 என்னும் அகவைக்காலப்பகுதியை அது கட்டாய பாடசாலைக் கல்விக்கேற்ற காலமாகச் சிபாரிசு செய்தது.

மேலும் வாசிக்க – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

பயிற்றுமொழி ஊடகம்

 

ஆங்கிலம் பயிற்று மொழி ஊடகமாக இருக்கும் நிலை காலப்போக்கில் அற்றுப் போக வேண்டும் என இவ்வாணைக்குழு கருதியது. மேலும் பெருந்தோட்டப் பாடசாலைகள் சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளோடு ஒருங்கிணைய வேண்டும் எனவும் ஐந்தாம் வகுப்புத் தொடக்கம் ஆங்கிலம் விருப்பத் தெரிவுக்குரிய இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் இக்குழு சிபாரிசு செய்தது.

 

கூட்டுக்கல்வி

 

ஏற்கனவே ஒரு பாலார் பாடசாலைகளாக உள்ளவை தொடர்ந்தும் அவ்வாறு பணி புரிய, ஏனைய பாடசாலைகள் யாவும் இருபாலாருக்கும் ஒருங்கு பயிலும் கூட்டுக்கல்வி அளிக்க வேண்டுமென இவ்வாணைக்குழு சிபாரிசு செய்தது. பாடசாலை வலயங்கள். ஒரு குறிப்பிட்ட புவியியற் பகுதியில் உள்ள பிள்ளைகளை ஒரு பாடசாலையில் சேர்த்துக்கொள்ள உதவுமுகமாக பாடசாலை வலயங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மற்றொரு குறிப்பிடத்தக்க சிபாரிசு ஆகும். இம் முன்மொழிவு அதாவது ஆலோசனை பின்னர் 1964 தொடக்கம் அமுல் செய்யப்பட்டது

 

பட்டதாரி ஆசிரியர் பயிற்சி விரிவு

 

பயிற்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்கள் உயர்சதவீதத்தினராக இருத்தலை (சேவையில் சேர்க்கப்பட்ட 3300 பட்டதாரிகளில் 825பேர் மட்டுமே பயிற்சி பெற்ற பட்டதாரிகள்) இக்குழு கவனத்திற் கொண்டது. அதனால் அது வித்தியோதய, வித்தியாலங்காரப் பல்கலைக்கழகங்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியை ஏற்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க பகுதிநேரக் கல்விநெறிகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் அது விதப்புரை செய்தது. 

 

கல்விமாணிக் கல்விநெறி

 

மேலும் ஆசிரியர் தொழிலை விரும்பும் பட்டநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுமுகமாக நூற்கல்விக் கூறுகளும் உயர்தொழில்சார் கல்விக்கூறுகளும் இணைந்த நான்கு வருடகாலக் கல்விமாணி (Li.6]) பட்டக் கல்விநெறி வேண்டுமென்பது இக்குழுவின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிபாரிசு ஆகும். தொடங்கப்பட தே.க.ஆ சமர்ப்பித்த முன்மொழிவுகள் பரந்து பட்டவை பல விளைவுகளைத் தரக்கூடியவை. ஆனால் அவற்றை அரசு பூரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆசிரியர் பயிற்சி வலய அமைப்பு போன்றன தொடர்பாக முன்மொழியப்பட்ட சில ஆலேசனைகள் மட்டும் அமுலாக்கப்பட்டன.

  • எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும்

 

Leave a Comment