www.edutamil.com |
தீர்மானம் எடுத்தல் என்றால் என்ன?
தீர்மானம் எடுத்தல் (Decision – making) தீர்மானித்தல் என்பது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உள்ளது. நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்திலிருந்து இடது பக்கம்
தீர்மானம் எடுப்பதில் பலவகைகள்
1. மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தல்
மனிதன் தனது உயர் மதிப்பீடுகளால் ஏனைய படைப்புகளைவிட உயர்ந்து நிற்கின்றான். எனவே, உயர் மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானம் செய்யும்போது உறுதியுடன் செயற்படுத்தும் மன ஆற்றல் கிடைக்கும்.
2.உணர்ச்சியின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தல்
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தீர்மானம் எடுப்பது சரியல்ல. சிந்தனைத் தெளிவின்றி உணர்ச்சியின் உந்துதலால் எடுக்கும் தீர்மானங்கள் சரியானவையாக இருப்பதில்லை.
3. பொறுப்பற்ற தீர்மானம்
எது நடந்தாலும் நடக்கட்டும் என்று தீர்மானம் செய்வது பொறுப் பில்லாமல் நடந்துகொள்வது: எல்லாம் விதிப்படியே நடக்கும் என்று சொல்லித் திரிவது. விதியையும் மதியால் வெல்லலாம் என்பதை இவர்கள் அறியாதவர்கள். பொறுப்புணர்வுடன் கூடிய எந்தநபரும் தீர்மானம் செய்யும் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில்லை.
4. திட்டமிட்டபடி தீர்மானித்தல்
நாம் எடுக்கும் முடிவு எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும்? எதைத் தீர்மானிப்பது சிறந்தது? நமது திட்டத்திற்கு எந்தத் தீர்மானம் ஒத்திருக்கும் ? என்று சிந்தித்துத் தீர்மானம் செய்வது சிறந்த முறை.
5. தீர்மானிப்பதைத் தள்ளிப்போடுதல்
குறிப்பிட்ட நேரத்திற் செய்யவேண்டிய தீர்மானம் நேரம் கழித்துத் தீர்மானிக்கப்பட்டால் அதனால் ஒரு பயனும் இருக்காது. எனவே. தீர்மானம் செய்யவேண்டிய நேரத்தில் தீர்மானம் எடுத்துச் செயற் படுவது நல்லது.
6. முடிவெடுக்க வேதனைப்படுதல்
முடிவெடுக்கத் தெரியாமற் குழப்பத்துடன் வேதனையை அனுபவிப் பவரும் உண்டு. ஒன்றை எடுத்துச் சிறிது நேரம் கழித்து உடனேஇன்னொன்றை மாற்றுவர். ‘இதுதான் என் தீர்மானம்’ என்று சொல்ல முடியாமல் தடுமாறும் இயல்பு ஏற்றது அல்ல.
7. தீர்மானம் செய்வதைப் பிறருக்கு விட்டுக்கொடுத்தல்
தன்வாழ்விற்குத் தானே பொறுப்பு எடுக்கவேண்டும். பிறரைத் தீர்மானிக்கச் சொன்னால், அதனால் ஏதாவது துன்பம் வந்தாலும் எப்போதும் பிறரைக் குறைசொல்லிக்கொண்டே வாழநேரிடும். நல்வாழ்விற்கு நாமே தீர்மானம் செய்தல் சிறந்தது.
8.தீர்மானம் எடுக்க அறியாதிருத்தல்
தீர்மானம் எடுக்கத் தெரியாமல், தீர்மானம் எடுக்காமல் இருப்பதும் உண்டு. இவர்கள் முடமாக்கப்பட்டவர்கள் எனலாம். இவர்களால் தொடர்ந்து செயற்படுவது இயலாத ஒன்று. தீர்மானம் செய்யாமலே வாழும் இவர்களுக்கு வாழ்வின் இலட்சியம் என்றோ, சாதிக்க வேண்டியது என்றோ, ஒன்றும் இராது. எனவே, முடிவு எடுக்கத் தெரிந்திருப்பதும்; தீர்மானித்ததை நடைமுறைப்படுத்த அறிந்திருப் பதும் அவசியம்.
தீர்மானம் செய்ய முக்கியமாக அறிந்திருக்க வேண்டியவை
1. எதைக்குறித்துத் தீர்மானம் செய்வது என்று அறியவேண்டு மென்றால், முன்னிருக்கும் அறைகூவலை அறியவேண்டும்.
2. மாற்றுவழிகளைச் சோதித்து அறிந்து, எது நல்லவழி என்று சிந்தித்துத் தீர்மானம் செய்யவேண்டும்.
3.விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்மானம்செய்ய அறிந்து கொள்ள வேண்டும்.
4. தீர்மானம் செய்தபின் துணிந்து நிறைவேற்ற அர்ப்பணம் தேவை.
5. செயற்படுத்திக்கொண்டிருக்கும்போது வருகின்ற வேதனை களையும், விமர்சனங்களையும், மனதை வருத்துகின்ற சுட்டிக் காட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை.
6.தீர்மானித்துச் செயற்படுத்துவதை நிறைவேற்ற மன உறுதி தேவை. தீர்மானத்திற்கு நாம்தானே பொறுப்பு எடுத்திருக்கி றோம் என்று உணர்ந்தால் நாமே தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்வோம்.தீர்மானம் செய்யும் தன்மையை வலியுறுத்தாத உதவியாளர் சிறப்பாகச் செயற்படமுடியாது. தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றவன் தனது வாழ்க்கை வண்டியை ஓட்டும் ஆற்றல் பெற்றுவிடுகிறான்.
திரும்பிப் பார்த்தல்
ஆலோசனைப்படுதலின் இறுதி நிலையை நெருங்கிக் கொண்டிருக் கிறோம். ஆலோசனைப்படுத்துநர் தானாகவே இலக்கை நிர்ண யிக்கவும், செயற்படுத்த வேண்டிய முடிவைத் தீர்மானம் செய்யவும். இலக்கைச் சென்றடைய முடிகிறதா என்பதையும் மதிப்பீடு செய்து பார்க்கவேண்டும். கடந்துவந்த பாதைகளைத் திரும்பிப் பார்த்துச் செய்த தீர்மானம் சரியாகச் செயற்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்வது இறுதிநிலை. இலக்கைச் சென்றடைய முடியாதநிலை ஏற்படாமல் ஏதாவது திருத்தம் செய்யவும், மாற்று வழிகளைச் சிந்திக்கவும் உதவவேண்டும். இந்த நிலையில் ஆலோசனைப்படுத்துநர் கற்றுக்கொண்ட எல்லாத் திறமைகளையும் பயன்படுத்த வேண்டியும் வரலாம். அந்தச் சூழ் நிலைக்கு ஏற்ப உடனடியாகச் செயற்படத் தூண்டியும், சுட்டிக்காட்டியும், மாற்று வழிகளை ஆராயவும் அவசியப்படலாம்.
இலக்கைச் சென்றடையக் கீழ்க்காணும் ஆலோசனைகள் உதவியாளருக்குத் துணை செய்யலாம்:
1. தனிப்பட்ட முறையில் அடைந்த நன்மைகளைச் சுட்டிக்காட்டிப் பாராட்டலாம்.
2. இன்னும் திறமையாகச் செயற்பட முடியும் என்ற அறைகூவலை முன்வைத்து முன்னேறத்தூண்டலாம்.
3. தானாக எடுத்த தீர்மானங்களிற் செய்து முடித்த காரியங்களைக் குறித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தலாம். கவனக்குறைவாக விடுபட்டவற்றைச் சரிசெய்ய இதமாக எடுத்துரைக்கலாம்.
4. எதிர்பார்த்ததை விட, அதிக திறமையோடு இலக்கை நெருங்குவது சிறப்பு என்று சொல்லித் தொடர்ந்து முடிக்க வலியுறுத்தலாம்.
5. ஆலோசனை பெறுநர் தானே தனது செயற்பாடுகளையும், நிகழ்வுகளையும் திரும்பிப்பார்த்துச் சரி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திவிடலாம்.
எப்போதும் ஒரு நிலையைச் சரியாக முடித்த பிறகே அடுத்த நிலைக்குச் செல்வது நல்லது. ஒரே நேரத்தில் ஓரடி எடுத்து வைப்பது சுலபமானதும்கூட. தொடங்கியதை முடிக்கும்வரை, தொடர்ந்து நிறைவுசெய்ய வேண்டிய பொறுப்பை, உதவியாளர் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும்.
முடிவுக்குக் கொண்டுவருதல் (Termination)
- ஆலோசனைப்படுத்தலை எப்பொழுது எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது முக்கியமான கேள்வியாகும்.
- நல்ல இனிய உறவாக இருக்கிறது என்று தொடரவேண்டியது இல்லை.
- உதவிபெற வருபவர்தான் எப்போது நிறுத்தவேண்டும் என்று தீர்மானம் செய்யவேண்டும்.
- ஆலோசனைப்படுத்தலில் முடியாத நிலையிருந்தால், உதவியாளர் இன்னும் சந்திப்பைத் தொடர்வது நல்லது என்று சொல்லலாமே தவிர கட்டாயப்படுத்தமுடியாது.
- உதவிபெறுநர் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டதை உணரும்போது நிறுத்திவிடலாம். நண்பர்கள் பிரிவது போல இதமாகப் பிரிந்துவிடலாம். அதே சமயத்தில் உதவியாளர் உதவி தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அழைப்பு விடுக்கலாம்.
- சிலர் தொடர்ந்து உதவிபெறுவதை வலியுறுத்தலாம். அப்படிப் பட்ட சூழ்நிலையில் ஆலோசனைப்படுத்துநர் தீர்மானம் செய்து.
- எப்போது நிறுத்துவது நல்லது என்று தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிட வேண்டும். அப்படி நிறுத்தும்போது உறுதியோடும் அன்போடும் தெளிவாகச் சொல்லிச் சந்திப்பை முடிவுக்குக் கொண்டு வரலாம்.
- ஆலோசனை பெறுநரே, தாங்கள் தீர்மானம் செய்து செயற் படும் நிலைக்கு வந்துவிட்டதை எடுத்துச்சொல்லிப் பாராட்டி, நம்பிக்கையுடன் வாழச்செய்ய வேண்டும்.
- இறக்கை முளைத்துப் பறக்கக் கற்றுக்கொண்ட பறவை, தொடர்ந்து தாய்ப் பறவையோடு தங்கவேண்டியது இல்லை. ஒவ்வொரு நிலை யிலும் உள்ள அனுபவத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்பதை தாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
இரண்டு விதத் தடைகள் ஏற்படலாம்
- உதவி பெறுபவர் உதவியாளரோடு ஒருவித ஆழ்ந்த உறவை உருவாக்கி இருக்கலாம்.
- உதவியாளரே இந்த உறவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பயப்படலாம்.
எந்தத் தடைகளையும் தாண்டி, ஆலோசனைப் படுத்தும் பணி நிறைவுக்கு வரவேண்டும். அதுவே சிறந்தது, வரவேற்கத்தக்கது. உதவியாளர் தொடர்ந்து இப்பணியை வேறு நபர்களுக்குச் செய்ய இறைவன் வாய்ப்புத் தருவார் என்று
நம்ப வேண்டும். நல்ல உள்ளத்தோடும், திறந்த மனதோடும் நடந்தால் ஏராளமானபேர் உதவிவேண்டி, கரம் நீட்டிக்கொண்டிருப்பது புரியும். இறைவனே அழைத்ததால் தொடங்கிய பணியை இறுதிவரை நடத்தி நிறைவுறச் செய்வார் என்று நம்பவேண்டும். இறுதிச் சந்திப்பின்போது இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டுப் பிரிந்து செல்லலாம். தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இரு தூண்களைப் போன்று நம்மைத் தொடர்ந்து வழிநடத்தும்,