தத்துவம் என்றால் என்ன? What is philosophy?

தத்துவம் என்றால் என்ன?
 தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு நாம். ஆங்கிலத்தில் ‘Philosophy’ என்ற பயன்படுத்துகிறோம். ‘Philosophy’ என்ற சொல் கிரேக்க மொழியின் ‘Philos’ ‘Sophiyai எடை சொற்களிலிருந்தே தோன்றியுள்ளது. “philos’ என்ற சொல் ‘விருப்பம்’ என்று பொருள்படும் ‘Sophiya’ என்பது ‘அறிவு’ எனப் பொருள்படும். இந்தவகையில் தத்துவம் என்பது ‘அறிவில விருப்பம்’ என்று பொருள்படுகிறது. மேலும் தத்துவம் என்ற விடயம் உண்மையைத் தேடுதல் (Search for truth) எனவும் பொருள்படும். அதேபோலச் சிந்தனையாளர் என்பது அறிவில விருப்பமும் உண்மையைத் தேடுவதில் ஆர்வமும் உள்ளவர் எனப்பொருள்படும். பிளேட்டு Republic என்ற தமது நூலில் சிந்தனையாளர் என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கடை கூறுகிறார். “எல்லா வகையான அறிவினையும் தேடுவதற்கு விருப்பமுள்ளவரும் கற்பதற்கு ஆர்டை உள்ளவரும் அதன்மூலம் திருப்தி அடையாதவருமாக இருப்பவரே சிந்தனையாளராவார் சொல்லை

வேறோர் வகையில் தத்துவம் வாழ்க்கை முறை (Way of life) என்ற விளக்கப்பட்டுள்ளது. இக்கருத்தினைக் கொண்டுள்ளோர் வெளியிடுவது யாதெனில் தத்துவத்திற்கு அதற்கென விடயத் துறை இல்லை என்பதாகும். தத்துவம் என்ற விடயத்திற்குப் பரம்பரையாக வருகின்ற விடயத்துறையொன்றில்லாததால் அது முழு மானிட வாழ்க்கையுடனும் இணைந்ததொன்றாகவுள்ளது. ஜோன்டூயி காட்டுகின்றவாறு “தத்துவத்தை ஆழமாகக் கற்கும்போது அதனூடாக வாழ்க்கையிற் செல்வாக்குச் செலுத்துகின்ற அறிவு தோன்றுகின்றது”. Philosophy and practical என்ற நூலில் ஜோன் வில்சன் காட்டுகின்றவாறு வாழ்க்கைக்குத் தேவையாள நம்பிக்கைகள், விருப்பங்கள். மனப்பாங்கு என்பவற்றை ஒழுங்கான முறையில் விளங்கிக் கொள்வதற்கு முயற்சியெடுத்தல் தத்துவ செயன்முறையாகும். எல்.ஏ.றீட் Phylosophical Analysis and Education என்ற நூலில் இதனையொத்த கருத்தொன்றையே எடுத்துக்காட்டுகிறார். இவர். தத்துவத்தினூடாக வாழ்க்கைத் தத்துவத்திற்குத் தேவையான பெறுமான முறைமையை எடுத்துக் காட்டுகிறார். இதன்படி உயிரினங்களுக்கு அவசியமான இறுதிகளும், எதிர்பார்ப்புக்களும் தத்துவத்தின் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஒவ்வொருவரிடமும் வாழ்க்கைத் தத்துவம் இருத்தல் வேண்டும். அது தனியாளின் வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டுசெல்ல உதவும் வழிகாட்டியாகும். எஸ்.ராதாகிருஷ்ணன். தத்துவம் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுடன் வாழ்க்கைக்குரிய திட்டமுறைகளையும் பெற்றுக்கொடுக்கிறது” என்று கூறுகிறார்.

Ross (1960)) தனது Grand work of Educational theory என்னும் நூலில் இயற்கை, உள மற்றும் அறப்பண்புகள் பற்றிக் கற்றலே தத்துவம் எனக் குறிப்பிட்டார். மனிதனைக் கற்றறிதலே தத்துவம் என ரனேஜா (1990) தெரிவித்தார். மனிதனின் உடல், உள மற்றும் ஆன்மீக வளர்ச்சிகளின் மதிப்பீடாக தத்துவத்தை அவர் அறிமுகப்படுத்தினார். எதிர்கால சமூகத்தை உருவாக்குதலே தத்துவத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்னும் ஹுக் (1996) என்பாரின் கூற்றும் முக்கியமானதாகும். தத்துவத்தின் ஊடாக மனிதன் மற்றும் சமூகத்தின் மீதான நேர் மனப்பாங்கின் முன்னேற்றத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை இதிலிருந்த தெளிவாகின்றது. தத்துவம் ஒரு சமூகச் செயன்முறை எனக் குறிப்பிட்ட சீதாராம் (1989) அது விழுமியங்கள், சமூகக் காரணிகள் மற்றும் பிரச்சினைகள் என்பவற்றை மீளாய்வு செய்கின்ற ஒரு உளச்செயன்முறை எனவும் சுட்டிக் காட்டினார்.

நவீன சிந்தனையாளர்கள் தத்துவத்தைச் செயற்பாடாகக் (Activity) காட்டுவதற்கு முயற்சியெடுத்துள்ளனர். இம்முயற்சியில் பிரசித்தி பெற்ற சிந்தனையாளரான விட்கன்ஸ்டைன். “தத்துவம் கோட்பாடல்ல. அது செயற்பாடாகும்” என்று கூறுகின்றார். தத்துவம் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களில் பெரிதும் உள்ளடக்கப்பட்டுள்ளவை தத்துவப் பிரச்சினைகளின் (Propositions) தொகுப்பல்ல. அது அப்பிரச்சினைகளின் பகுப்பாய்வுசார் விளக்கமேயாகும்” என அவர் மேலும் கூறுகின்றாார். இதற்குச் சமமான கருத்தைக் கொண்டுள்ள D.J.ஓக்னர் An Introduction to Philosophy of Education என்ற நூலில் தத்துவத்தைப் பகுப்பாய்வுசார் செயற்பாடு என்றவகையிற் அவைகளாவன: காட்டுகிறார். இது மூவகைச் செயன்முறைகளாக விளக்கப்பட்டுள்ளது.

(ii) தற்போது நிலவுகின்ற கோட்பாடுகளை விமர்சன ரீதியில் பகுப்பாய்வு செய்தல் தர்க்க முறையில் எண்ணக்கருக்களைப் பகுப்பாய்வு செய்தல் (ii) புதிய எண்ணக்கருக்களையும் கோட்பாடுகளையும் கட்டியெழுப்புதல்.

கல்வித் தத்துவத்தின் அறிமுகம் என்னும் நூலில் ஸ்மித் (1965) தத்துவம் மூன்று பிரதாவு அம்சங்களைக் கொண்டது எனக் குறிப்பிட்டார் அவையாவன

i. பரந்ததன்மை

ii. ஒளிவுமறைவின்மை

iii. நெகிழ்ச்சியான தன்மை

தத்துவத்தினால் பூர்த்தி செய்யப்படுகின்ற மூன்று பிரதான தொழிற்பாடுகள் பற்றி தத்துவஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

i. மனிதனின் உண்மைத்தன்மை பற்றி வினாவுதலும் பிரதிபலித்தலும்,

ii. தத்துவத்தினால் முன்வைக்கப்பட்ட இலக்குகள், கணிப்பீடுகள், கொள்கைகள் எண்ணக்கருக்கள் என்பவற்றை மதிப்பிடல்.

கீழைத்தேய மற்றும் மேலைத்தேசத் தத்துவஞானிகளால் ஒரு தொகுதி வினாக்கள் மீளாய்வு செய்யப்பட்டதாகவும் அவற்றை மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம் எனவும் வீரசிங் (1977) சுட்டிக்காட்டினார்.

i. மனிதனதும் அவன் வாழும் சமூகத்தினதும் உண்மைநிலையை விளங்கிச் கொள்வதற்கான வினாக்கள். மனிதன் பெற்றுக் கொண்ட அறிவைச் சோதிப்பதற்கான வினாக்கள்,

(அறிவுக்கோட்பாடு ii. ஒழுக்கவிஞ்ஞானம் பற்றிய வினாக்கள். (ஒழுக்கம்) இக்கருத்துக்களுக்கமைய தத்துவமானது பரந்த பாடப்பரப்பை உள்ளடக்குகின்றனை தெளிவாகின்றது.

The Philosophy of Education என்ற நூலில் தத்துவம் என்பதைப் பகுப்பாய்வுசார் செயன்முறை என்ற வகையில் R.S.பீட்டர்ஸ் விளக்கியுள்ளார். இதற்கேற்பக் கல்வியோடு தொடர்புடைய எண்ணக்கருக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தத்துவத் துறையில் சிந்தனையாளர்களினால் ஆராயப்படுகின்ற கோட்பாட்டு முறைமைகள் சில பற்றிக் கூறப்பட்டுள்ளன அவையாவன :

  1. அதிபௌதிகவாதவியலாய்வு (Meta Physics)
  2. அறிவாய்வு (Epistemology-Knowledge)
  3. ஒழுக்கவியல் (Axiology-Ethics அழகியல்சார் பகுப்பாய்வு (Aestheties)
  4. தர்க்க சாஸ்திரம் (Logic)

சிந்தனையாளர்கள் கவனம் செலுத்துகின்ற இவ்விடயங்களைச் சுருக்கமாக ஆராய்வோம். 

பௌதிகவதீதவியலாய்வு

முற்காலத்தில் யதார்த்தத்தின் தன்மை. உலகில் மனிதன் வசிக்கும் இடம், இறைவன் இருக்கிறான் என்ற நிலைப்பாடு, ஆத்மாவின் இறவாத் தன்மை போன்ற பிரச்சினைகளை அறிவுசார் முறையிலும் தர்க்க முறையிலும் ஆராய்வதே சிந்தனையாளர்களின் பணியாகக் கருதப்பட்டது. யதார்த்தத்தின் தன்மை ஆழமாக ஆராய்தல், பல்வேறு கண்ணோட்டங்களில் பகுத்தாய்தல் என்பன தத்துவச் செயற்பாடுகளாயின. பௌதிகவதீதவாத நிலைமைகள் அவதானிக்கக்கூடிய உலகில் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் அல்லது அதற்கு அப்பாலும் விரிந்து செல்கின்றன.

பௌதிகவத்தவியல் பற்றிச் சிந்தனையாளர் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர. இலட்சியவாதிகள் (Idealists) பௌதிகவதீதவியலம்சங்களை ஆத்மாவுக்குரியனவாகக் (Spiritual) காட்டுகின்றனர். ஆத்மிக உலகம் பெளதிக உலகை இயக்குகின்றது. பௌதிகவாதிகளின் (Meterialists) நம்பிக்கைப்படி அனைத்தும் சடப்பொருள்களால் (Matter) அமைக்கப்பட்டுள்ளன. நாம் காணும் உலகிற்கு வெளியே வேறு உலகங்கள் இல்லையென அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். மனிதன். உயிரினங்கள். மரஞ்செடி கொடிகள் அனைத்தையும் பொருட்கள் என்ற வகையில் தொகுத்துள்ளனர்.

இரட்டைவாதிகளின் (Dualists) படி பௌதிகவதீதவாத நிலைமைகளை விளக்குவதற்கு ஆத்மா (Spirit), சடப்பொருட்கள் (Matter) ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. மனிதவுடல் சடப்பொருளாக அமைவதுடன் அவனது ஆத்மா ஆன்மீகமாகின்றது என அவர்கள் கூறுகின்றனர்.

அறிவாய்வு

இங்கு சிந்தனையாளர்கள் இரு வினாக்களை எழுப்புகின்றனர்.

(1) அறிவு என்றால் என்ன? (2) அறிவைப் பெறுவது எவ்வாறு?

அறிவைப் பெற்றுக்கொடுக்கும்போது அறிவைப் பெற்றுக்கொடுப்பவருக்கும் பெறுபவருக்குமிடையே எத்தகைய தொடர்பு இருக்கவேண்டுமென்பதும் திர்மானித்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஒழுக்கவியல்

நம்பிக்கை, பெறுமானம் என்பன பற்றிய பகுப்பாய்வே ஒழுக்கவியலாகும். சிந்தனையாளர்கள் இங்கு இரு பிரச்சினைகளை எடுத்துக் காட்டுகின்றனர். அவையாவன:

(1) எவை நல்லொழுக்க வகையில் சரியானவையாகவும் நல்லவையாகவுமுள்ளன. இங்கு பெறுமானங்கள், நல்லொழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட எண்ணக்கருக்கள், பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

 

(2) நல்லொழுக்கம்சார் சரியான தன்மை, நல்ல தன்மை என்பவற்றின் இயல்பைத் தீர்மானித்தல் அழகியல் சார் பகுப்பாய்வு உலகில் எப்பொருட்கள் அழகானவை? எப்பொருட்கள் அழகியல்சார் அழகுசார் குறைபாடுகள் பூரணத்துவமும் குறைபாடுகளும் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன வினாக்களுக்கு விடை காணுதல் அழகியல் சார் பகுப்பாய்வு எனப்படும். உடைய தர்க்கசாஸ்திரம் சிந்தனைசார் பிரச்சினைகளைத் தர்க்க முறையில் முறையாகச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கு வழிகாட்டுதல்.

 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

– ஆலோசனையும் வழிக்காட்டலும் 

– PDF தரவிறக்கம் 

– பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

 

தத்துவமும் கல்வித் தத்துவமும்

பொதுவான தத்துவத்திற்கும் கல்வித் தத்துவத்திற்குமிடையே வேறுபாடுள்ளதா? அவ்வாறின்றோ கல்வித் தத்துவம் என வேறொரு பிரிவைப்பயில்வது எவ்வாறு? என்பவற்றை ஆய்து அவசியமாகும். கல்வித் தத்துவத்திற்கும் பொதுவான தத்துவத்திற்கும் இடையில் ஒருவகையா தொடர்பு காணப்படுகின்றது.

மாணவர்களுக்குப் பொதுவான தத்துவத்தினூடாகக் கற்பிக்கப்படுகின்ற பௌதிகவதீத விடயங்கள் அறிவாய்வு, ஒழுக்கம் என்பன கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் விதம் ஆராயப்ப வேண்டியதாகும். பௌதிகவதீதவியல் பற்றிச் சிந்தனையாளர் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம். ஆத்மா நிலையானது என எண்ணும் சிந்தனையாளர்கள் மனிதன் இறைவனை விளங்கிக் கொள்ளுதல் அவசியம் எனக் கருதுவதுடல் அவனது கல்வி (பெறும் அறிவு. திறன்கள்) மனிதன் உலகில் வாழும் குறுங்காலத்திற்கேற்ப ஒழுங்கமைக்கப்படவேண்டும் எனவும் நம்புகின்றனர். நிலையான ஆத்மா பற்றிய நம்பிக்கையில்லாச் சிந்தனையாளர்கள் இவ்வாழ்க்கையிலேயே கல்வியால் தனியாளுக்குக் கிடைக்கக்கூடிய அதி பயனையும் முன்னேற்றத்தையும் பெறச் செய்தல் கல்வியின் இலக்காக இருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

தத்துவத்தில் அடங்கியுள்ள நல்லொழுக்கங்கள் கல்வித் தத்துவத்தில் விசேட செல்வாக்கைச் செலுத்துகின்றன. பாடவிதான உள்ளடக்கம், கற்பித்தல் முறைகளைக் கையாளுதல், வகுப்பறையில் ஒழுக்கக்கட்டுப்பாடு என்பவற்றின்மீது ஒழுக்கவியலின் செல்வாக்குத் தெளிவாகக் காணப்படுகின்றது. உதாரணமாக. கணிதம் கற்பித்தல் உடற்பயிற்சி கற்பித்தலை முக்கியமானதா? பிள்ளையின் தேவைகள், அனுபவங்கள் ஒழுங்கமைக்கப்படவேண்டுமா? விட விருப்புகள், ஈடுபாடுகள் என்பவற்றுக்கேற்ப மாணவர்களுக்கு உடல்சார் வழங்குதல் ஒழுக்கவியலுக்கு முரணானதா? போன்ற பிரச்சினைகளைத் தீர்மானிக்கும்போது நிச்சயமாக ஒழுக்கவியல் அடிப்படையொன்று இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தண்டனைகள்

கல்விக்கும் தத்துவத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. அக்ராவெல்லின் (2000) கருத்து இதனை விளக்குகின்றது. தத்துவம் இன்றிய கல்வி குருட்டுத்தனமான பயிற்சி எனவும் கல்வியில்லாத தத்தவம் பெறுமதியற்றது எனவும் அக்ராவெல் தெரிவிக்கின்றார். இதற்கமைய கல்வி என்னும் கலையானது முழுமை பெறுவதற்கு கல்விக்கும் தத்துவத்திற்கும் இடையே நெருக்கமான தொடர்பைக் கட்டியெழுப்பவது அவசியமாகும்.

ரனேஜாவினால் வெளியிடப்பட்ட கருத்திற்கமைய கல்வி என்பதன் பொதுவான கருத்து ஒரு பிள்ளையின் அறிவாற்றல், உடல், மனஎழுச்சி மற்றும் நற்பண்புகளின் விருத்திக்குச் சரியான முறையில் வழிகாட்டல் ஆகும். முன்னரே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலேயே கல்வி தொழிற்படுகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. முன்கூட்டிய தீர்மானங்களிற்கேற்ப பிள்ளையை விருத்தி செய்வதற்காக தத்துவப்பின்னணியைத் தயார்செய்தலும் அதனை மதிப்பிடலுமே தத்துவத்தின் தொழிற்பாடாகும். கல்விப்பிரச்சினைகள் தொடர்பாக மூன்று பிரதான அம்சங்கள் குறித்து தத்துவஞானிகள் கவனம் செலுத்துகின்றனர்.

  1. அறிவு பற்றிய பிரச்சினைகள் (அறிவின் தோற்றம்)
  2. மதிப்பீடு பற்றிய பிரச்சினைகள் (ஒழுக்கம் சார் பிரச்சினைகள்)
  3. பிள்ளையின் உண்மையான உறவுகள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள். (ஒழுக்கவியல்)

இங்கு கல்விக்கோட்பாடு என்பது யாது? அதில் உள்ளடக்கப்படவேண்டியவை யாவை? என்பன தத்துவவியலாளரது கவனத்திற்குட்பட வேண்டிய அம்சங்களாகும்.

தத்துவத்தில் பயில்கின்ற பிரிவான அறிவாய்வுக்கும் கல்விக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். எல்லாத் தத்துவங்களிலும் அவற்றிற்கே உரித்தான அறிவின் தன்மையும் அறிவைப்பெறும் முறைகளும் ஆராயப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பயன்பாட்டுவாதத்தத்துவத்தின்படி “ஜோன்டூயி” இன் எல்லா அறிவையும் தனிநபர் பெறுவது அனுபவத்தைக் கொண்டு விஞ்ஞான முறைகளைப் பின்பற்றியேயாகும். “பிளேட்டோ” உயிரி அறிவைப் பெற்றுக்கொள்வது முதலில் பிறப்பிலே பெறுகின்ற உரு உலகிலேயாகும்.(World of Forms) பிற்பட்ட வாழ்க்கையில் இவ்வறிவு நினைவுபடுத்தப்படுகின்றது. இதனை உடன்பிறந்ததொன்றதாக (innate) பிளேட்டொ கருதுகிறார்.

 

Leave a Comment