தகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள் யாவை?

தகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள்
www.edutamil.com

தகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள் பிரதானமாக இவை இரண்டு வகைப்படும்.

  1. சோதனை முறைகள்
  2. சோதனையல்லாத முறைகள்

1.சோதனை முறைகள்

நுண்மதிச் சோதனை, அடைவுச் சோதனை, திறன் சோதனை, உளச் சார்புச் சோதனை, சுகாதாரச் சோதனை போன்றவை இவ்வகையில் அடங்கும். கல்விசார் ஆற்றல்கள், பாட அடைவு மட்டம், அறிவாற் றல்கள், செயன்முறைத் திறன்கள், உடல் நிலைமைகள், முன்னேற்ற மட்டம் போன்றவை பற்றிய விளக்கங்களைப் பெறுவதற்காக இச் சோதனைகளைப் பயன்படுத்தலாம். குரோம்பாக் என்பார் சோதனை முறையைப் பயன்படுத்தி அடையத்தக்க குறிக்கோள்களைப் பின் வருமாறு காட்டியுள்ளார்:

 

1.எதிர்வுகூறல்

யாதேனுமொரு விடயம் தொடர்பாக முன் கூட்டியே கருத்துத் தெரிவித்தல்.

 

2.தெரிவு செய்தல்

யாதேனுமொன்றுக்குப் பொருத்தமானது எனக் கண்டறிந்து தெரிவுசெய்தல்.

3.வகைப்படுத்தல்

யாதேனுமொன்று தொடர்பாகக் காணப்படும் நிலைமையின்படி குழுக்களைப் பிரித்து வேறாக்கல்.

 

4. மதிப்பீடு செய்தல்

யாதேனுமொரு விடயம் தொடர்பாக முன்னேற்றத்தை அளத்தல்.

மாணவரது பாட அடைவு மற்றும் செயன்முறைத் திறன்கள் தொடர்பாக நடத்தப்படும் கல்வி வழிகாட்டலின்போது சோதனைமுறை பெரிதும் துணையாகும் என்பதை உணர்த்தி பொருளுள்ள வகையில் தேவையான இலக்குகளின்பாற் கலந்துரையாடலை நடத்துதல்.

2. சோதனையில்லாத முறைகள்

நேர்காணல், அவதானிப்பு, குறுகிய தகவல் அறிக்கைகள், மதிப்பீட்டு அளவுத்திட்டங்கள், வினாக்கொத்துகள், தனியாள் ஆய்வு அறிக்கைகள். வாழ்கைச் சரித அறிக்கைகள் போன்றவை இவ்வகையில் அடங்கும்.

இது ஆலோசனை பெறுபவருக்கும், ஆலோசனை வழங்குபவருக்கும் இடையே நெருக்கமான விளக்கத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற. மிக நம்பகமான தகவல் பெறத்தக்க ஒரு முறையாகும். மேலும், இது பிரச்சினை நிலைமையிலிருந்து விடுபடுவதற்காக எதிர்வரும் பரிகாரத் தலையீடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவாறு ஆலோசனை வழங்குபவருக்கும் ஆலோசனை பெறுபவருக்கும் இடையே தொடர்புகளைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கும் துணையாக அமையும்.

கவனஞ் செலுத்த வேண்டிய விடயங்கள் :

  1. நேர்காணலின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்தும் விதம், பொருத்தமான இடம், நேரம் போன்றவை தொடர்பாக நேரகாலத் துடனே திட்டமொன்றினைத் தயாரித்துக்கொள்ளல்.
  2. ஆலோசனை பெறுபவரை நட்புடன் வரவேற்று; கலந்துரையாடல் முடிவுவரை அந்நிலையைத் தொடர்ந்தும் பேணிவருதல். நம்பகத்தன்மை உச்சமட்டத்திற் பேணப்படுகிறது எனும் உணர்வை ஏற்படுத்தல்.
  3. ஆலோசனை பெறுபவரின்பால் உச்ச அளவு செவிமடுத்திருக் கின்றமை உணரப்படும் வகையிற் கண்ணோடு கண் தொடர்பையும், மெய்நிலையையும் வைத்திருத்தல்.
  4. கலந்துரையாடலின் போது ஆலோசனை பெறுபவருக்கே முக்கிய இடம் உரித்தாகும்.
  5. நேர்காணல் முறையின் அனுகூலங்கள் : ஆலோசனை வழங்குபவரதும், ஆலோசனை பெறுபவரதும் நெருக்கமான தொடர்கள் மூலம், மிக நம்பகமான தகவல்களைக் கண்டறியலாம்.
  6. பொருத்தமான வினாக்கள் மற்றும் வழிப்படுத்தல்கள் மூலம் பிரச் சினைகளின் மறைவான அம்சங்களை வெளிக்கொணரலாம். வெளி யிடப்படாத கருத்துக்கள், மனவெழுச்சிகள் ஆகியன தொடர்பான விளக்கத்தை ஆலோசனை பெறுபவரின் வாய்மூலமல்லாத தொடர்பாடல் மூலம் பெறலாம்.
  7. வேறு முறைகள் மூலம் சேகரிக்கும் தகவல்களின் செம்மையைச் சோதிக்கலாம்.
  8. பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளவரின் கூற்றுக்குச் செவி மடுத்தல் மற்றும் அவருக்குக் கருத்துத் தெரிவிக்கச் சந்தர்ப்பமளித் தலானது பிரச்சினை நிலைமை நீங்குவதற்குப் பொருத்தமான பரிகார மாக அமையும்.
  9. அவதானிப்பு/கூர்ந்து நோக்குகை (Observation) அவதானிப்புக்கு உள்ளாகுபவர் வெளிக்காட்டும் தன்மைகள் மற்றும் நடத்தைகளைக் கண்டு தகவல் பெறத்தக்க வலிமைமிக்க ஒரு முறை இதுவாகும். இதுதொடர்பாகப் போதிய பயிற்சியுடைய ஓர் ஆசிரியர் தாம் நேரடியாகக் காணும் நம்பகமான தரவுகளை அவதானிப்பதன் மூலம் பெறமுடியும்.
  10. அவதானிப்பின் போது கவனஞ் செலுத்தவேண்டிய விடயங்கள் : திட்டவட்டமான ஒரு நடத்தையை மாத்திரம் தெரிவுசெய்து கொள்ளல். அவதானிப்பின் குறிக்கோள்கள், நடைமுறைப்படுத்தும் விதம், கால/நேர வரையறை ஆகியன தொடர்பாகத் திட்டத்தை நேரகாலத் துடன் தயாரித்துக்கொள்ளல்.
  11. தெரிவு செய்துகொண்ட நடத்தைக்குரிய நிலைமைகளைக் குறிப்பாகவும், திட்டவட்டமாகவும், உப பகுதிகளாகவும் பிரித்து சிறிய கூற்றுக்களாக அல்லது வினாக்களாக உள்ளடக்கி அவதானிப்புப் பத்திரத்தைத் தயாரித்துக் கொள்ளல்.
  12. தெரிவு செய்துகொண்ட நடத்தையை அவதானிக்க வேண்டிய சந்தர்ப்பங்களையும், இடங்களையும் வெவ்வேறாக அவதானிப்புக்கு உட்படுத்தும் சந்தர்ப்பம் நாள் முழுவதிலும் பரம்பியிருக்குமாறு முற்பகல், பிற்பகல் என்றவாறு பயன்படுத்தல். ஒரு தடவையில் ஒரு மாணவனை / மாணவியை மாத்திரம் அவதானித்தல்.
  13. அவதானிப்பு மிகச் செம்மையாக அமைவதற்காக ஒரு குறித்த மாணவனை / மாணவியை அவதானிப்பாளர்கள் இருவர் அவதா னித்தல். அகவயமாகவன்றி, புறவயமாகத் தரவுபெறுதல். குழு நடத்தையொன்றினை அவதானிப்பதாயின் சில அவதானிப்பாளர் களை ஈடுபடுத்துதல்.
  14. அவதானிக்கும் சந்தர்ப்பத்தில் பதிவு செய்வதை (எழுதிக் கொள்வதை) தவிர்த்தல்.
  15. அவதானிப்பு முடிவடைந்த உடனேயே விடயங்களை மறந்து
  16. விடமுன்னர். தரவுகளைப் பதிவு செய்து கொள்ளல்.
  17. வசதியிருக்கும் சந்தர்ப்பங்களில் அவதானிப்புக்கு உள்ளாகு பவரின் கௌரவத்துக்கோ, நடத்தைக்கோ தடங்கல் ஏற்படாத வகை யில் அவரது நடத்தைகளையும், கூற்றுகளையும், மின் இலத்திரனியல் முறையில் ஒலிப்பதிவு – ஒலி ஒளிப்பதிவு செய்து கொள்ளல்.
  18. அவதானிப்பு முறையின் அனுகூலங்கள் : அவதானிப்புக்கு உள்ளாகு பவரின் நடத்தைகள், தன்மைகளின் சிறப்பம்சங்களை அந்தந்தச் சந்தர்ப்பத்திலேயே ஆய்வு செய்யலாம்.
  19. சொல்சார்ந்த தொடர்பாடல் மூலமும், சொல்சாரா தொடர்பாடல் மூலமாகவும் வெளிப்படுத்தப்படும் நிலைமைகளை இனங்காண முடியும்.
  20. வேறு முறைகளில் சேகரித்த தகவல்களை உண்மையானவையா? இல்லையா? என்பதை அதாவது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
  21. போதுமான காலவரையறையினுள், வெவ்வேறு சந்தர்ப்பங்களிற் பெற்ற அவதானிப்புகள் மூலம் பிரச்சினை தொடர்பாக தெளிவான மனப்படத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
  22. அவதானிப்பு முறையினால் ஏற்படக்கூடிய பிரதிகூலங்கள் : ஒரு தடவையில் அவதானிப்பதற்காக ஒரு குறித்த நடத்தையை மாத்திரம் தெரிவு செய்துகொள்ள வேண்டியுள்ளமையால் முழுமை யான அவதானிப்புக்கு நீண்டகாலம் தேவைப்படல்.
  23. நனவிலி நிலையில் ஏற்படத்தக்க அகவயத் தன்மைமீது நிலை கொண்ட தீர்மானமெடுக்க இடமுள்ளமை. சுருக்கமாகக் குறித்துக் கொண்ட விடயங்களைப் பிள்ளை வியாக்கியானம் செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றமை.
  24. பதிவு செய்த குறிப்புகளின் சிக்கல் தன்மை காரணமாகத் தவறான முடிவுகளை எடுத்தல்.
 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

 – ஆலோசனையும் வழிக்காட்டலும் 

 – PDF தரவிறக்கம் 

 – பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

Leave a Comment