ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் |John Dewey (1859-1952) Philosophy of Education

ஜோன்-  டூயி
www.Edutamil.com

ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம்

1859-1952 வரை வாழ்ந்த இவர் நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவஞானியாகவும் ஒரு கல்வியியலாளராகவும் கருதப்படுகின்றார். கொலம்பியா, சிகாகோ போன்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் பேராசிரியர் பதவி வகித்தவர் ஆவார். அவர் கல்வி பற்றியும் கல்விக் குறிக்கோள்கள் பற்றியும் கலைத்திட்டம் பற்றியும் கற்பித்தல் முறை பற்றியும் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள் இங்கு ஆராயப்படுகின்றன.

ஆற்றல் என்பது ஒவ்வொரு தனிநபரினதும் விளக்கத்துக்கு ஏற்ப மாறும் ஒன்றாகையால் எப்பொழுதும் உண்மையாகிய ஒரு மரம உண்மை என ஒன்று இல்லையென்று அவர் நம்பினார். நிலையாமை பிரபஞ்சத்தில் நிலவும் ஒரு பிரதான இலட்சணமாதலால் எக்காலத்துக்குமான கல்விக் குறிக்கோள்களை உருவாக்க முயல்வது ஒரு பயனற்ற முயற்சியென்பதும் கல்விக் குறிக்கோள்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மாறும் ஒன்று என்பதும் அவரது கருத்தாக இருந்தது.டூயியின் கொள்கைக்கு ஏற்பக் கல்வியின் அடிப்படைப் பொறுப்பு பிள்ளைகளின் பூரண ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும். பிள்ளைகளின் ஆர்வத்துக்கும் திறமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு கல்விக் குறிக்கோள்கள் தயாரிக்கப்பட வேண்டும். சமூகத் ஆர்வமும் திறமைகளும் தொடர்பாகப் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காணப்படுகின்றது. அத்தோடு காலத்துக்குக் காலம் சமூகத் தேவைகளும் மாறுகின்றன. ஆகையால் கல்விக்கு நிச்சயிக்கப்பட்ட நோக்கங்கள் இருக்க முடியாது என்பதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.

முக்கியமான விடயம். உண்மையான விடயம் இந்தக் கணப்பொழுதாகும் என்று அவர் கருதினார். அவ்வாறன்றி பிளேட்டோவைப் போல இலட்சியவாத இலக்கை வைத்துக் கொண்டு செயற்படுவதை அவர் ஏற்கவில்லை. கல்வி என்பது சிற்சில விடயங்களில் பங்குபற்றுவதைத் தவிர தயாராகுதல் அன்று என்று அவர் கூறினார். எதிர்காலத்தைக் கவனிப்பதாயிருந்தால் அங்கிருந்த ஆயத்தமாதல் தான் தோன்றாத, காணாத எதிர்கால மொன்றைப் பற்றி டூயி நம்பிக்கை வைக்கவில்லை. இக்கணத்தில் வாழ்வதே கல்வி என அவர் கருதினார். தற்காலத்தில் வாழ்வதற்கு கல்வியின் தேவையை அவர் எடுத்துக் காட்டினார்.

இரு பிரதான கருத்துக்களை டூயி நம்பினார்.

1. பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள மரபுவழிக் கற்பித்தல் முறை பயனற்றதும் பொருத்தமற்றதும் ஆகும்.

2. மனிதனின் நாளாந்த வாழ்வில் உள்ள இடைத் தொடர்புகள் கல்விக்குச் சந்தர்ப்பங்களை இயற்கையான முறையில் வழங்குகிறது.

ஜோன் டூயியின் தத்துவக் கருத்துக்களை வளப்படுத்துவதில் பலர் செல்வாக்குச் செலுத்தியுள்ளனர். ஹேகல்(Hegal) இன் கருத்துக்களும் சாள்ஸ் டாவினின்(Charles Darwin) பரிணாமவாதக் கருத்துக்களும் அவற்றுள் அடங்கும். அவை மட்டுமல்ல சாள்ஸ் பியர்ஸினதும்,(Charles Pears) வில்லியம் ஜேம்ஸினதும் (William James) பயன்பாட்டுவாதக் கருத்துக்களினாலும் அவர் வளமூட்டப்பட்டுள்ளார். அதன்படி ஆக்கப்பட்ட அவரது தத்துவம் கருவிவாதம் (Instrimentalism) என கொள்ளல் என்பது அதன் கருத்தாகும். அழைக்கப்படுகின்றது. எல்லாவற்றையும் பயன்படுத்திக்

அவற்றினுள்ளே பாடசாலையை உயிரோட்டமான, ஆக்கத்திறனுள்ள நிறுவனமாக்கல், மாணவன் பெற்றக்கொள்ளும் அனுபவங்களுடாக தொழில்சார் கல்விக்கு திருப்புதல், மாணவன் தனக்கு விருப்பமானதைத் தெரிவு செய்ய விடுவதற்கான தேவை. சுயகற்றலை ஊக்குவித்தல், புறக்காரணிகள் மூலம் மட்டுமன்றி மாணவனின் உள்ளார்ந்த விருப்புக்கள் மூலமும் கல்வியை விருத்தி செய்தல்இ ஒன்றிணைந்த கற்பித்தல் அல்லது செயற்றிட்டங்கள் மூலமான கற்றல் என்பனவும் முக்கியமானவை ஆகும்.

கலைத்திட்டம் பற்றிய கருத்துக்கள்

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சி மீது கவனம் செலுத்திய ஜோன் டூ கலைத்திட்டத்தைத் தயாரிக்கையில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை எடுத்துக்காட்டினார். இந்தப் புரட்சியின் காரணமாக அமெரிக்க விவசாயப் பொருளாதாரம் ஒரு கைத்தொழிற் பொருளாதாரமாக மாறியது. எனினும் மாறிய பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் உற்பத்திர் செயன்முறை பற்றிய ஒரு விளக்கத்தை இளம் பரம்பரையினர் பெறக் கூடியவாறு கலைத்திட்டம் தயாரிக்கப்படவில்லை.

சனநாயகக் கோட்பாடுகளுக்கேற்ப கல்வி நிருவாகம் செயற்படாமையும் அங்கு நிலவிய ஒரு பலவீனமாகும். அரசாங்கத்தின் அல்லது மற்றுமொரு சமூக நிறுவனமென ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக் கலைத்திட்டம் தயாரிக்கப்படக் கூடாது என்பது டூயியின் கருத்தாகும். எனினும் பாடசாலை அதிகாரிகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலைத்திட்டமொன்று அங்கு செயற்பட்டதோடு கலைத்திட்டத்தைத் தயாரிப்பதில் ஆசிரியர்கள் பங்குபற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இங்கு டுயி ஒரு பாடசாலைக்குச் சுதந்திரமாகச் செயற்படும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று கருதினார்.

பாடசாலையைப் பற்றிக் கருத்து வெளியிடும்போது அது ஒரு புற அழகைக் கொண்ட இடமாக மட்டுமன்றி உண்மைகள் கற்கப்படுகின்ற அல்லது பிள்ளைகள் பாதுகாக்கப்படுகின்ற இடமாகவும் இருக்க வேண்டும். எனவும் டூயி கூறினார். அது சமூக வாழ்க்கையடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தூய்மையாக்கப்பட்டு சமுதாய வாழ்க்கையுடன் தொடர்புபட்ட கற்றல் செயன்முறைகளை வழங்குகின்ற இடமாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். டூயியினால் வழங்கப்பட்ட கல்வித்தத்துவத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.

பாடசாலைக்கும் வெளிச் சமுதாயத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் காணப்படாமையும் ஒரு குறைபாடாகும். பாடசாலை சமூக மயப்படுத்தல் காரணிகளுள் ஒன்றாகக் கருதப்படுவதால் வெளிச் சமுதாயத்தினைப் பிரதிபலிக்கும் ஒன்றாகப் பாடசாலை ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிள்ளைக்குச் சமுதாயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். எனினும் சமுதாய் மயமாக்கலுக்குத் தேவையான செயலூக்கமுள்ள பிரசையாவதற்கும் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கும் ஒரு தொழிலில் ஈடுபடவும் தேவையான அறிவுத்திறன், மனப்பாங்கு ஆகியவற்றைப் பிள்ளைகளிடம் விருத்தி செய்யவும் உதவும் வகையில் அப்போதிருந்த கலைத்திட்டம் அமைந்திருக்கவில்லை. இக் குறைபாடுகள் மீது கவனம் செலுத்திய ஜோன் டூயி கலைத்திட்டத்தைத் தயாரிக்கையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய விடயங்களை எடுத்துக் காட்டினார்.

பிள்ளைகளின் ஆர்வங்கள், தேவைகள், சவால்களுக்கு ஏற்றவாறு உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பாடங்களுக்கு இடையில் நல்லதொரு தொடர்பு ஏற்படும் விதத்தில் கலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் சுற்றல் செயன்முறையில் நேரடியாகப் பங்குபற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் சமூக வாழ்க்கையின் பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.

அதன்படி பாடசாலை அனுபவத்தை வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புறுத்துவது அத்தியாவசியம் என்பதை விளக்கியுள்ளார். வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வதற்கண்றி வாழக் கல்வி அவசியம் என டூயி காட்டும் கோட்டாடு இந்தக் கருத்துக்களின் மூலம் மேலும் தெளிவாகின்றது.

மாணவரை விளங்கிக் கொள்வதன் முக்கியத்துவம்

கல்விச் செயன்முறையில் பிள்ளை தொடர்பாகவோ சமூகம் தொடர்பாகவோ கவனம் எடுக்காமல் கற்பிக்கும் ஆசிரியர் மண் மற்றும் கால நிலையைக் கவனியாது விவசாயம் செய்யும் விவசாயிக்கு சமமானதாகப்பட்டுள்ளது. கல்வி உளவியல் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டியதுடன் பிள்ளை சக்தியும், ரசணை, விநோத அம்சங்கள், ஆர்வங்களை இனங்கண்டு அவற்றைச் செய்வதற்கு செயற்படக்கூடியதாக இருத்தல் வேண்டும் என டூயி My pedogogic Creed எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பவே கல்வி இடம்பெற வேண்டும் எனவும் செயனக்கமுள்ள பிள்ளை கருத்துக்களை உருவாக்கும் அதே சமயம் செயலாக்கமற்ற பிள்ளை அவற்றை வீணடிக்கின்றமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கலைத்திட்டம் பற்றிக் கருத்து வெளியிடும்போது கலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பாடங்களும் இளையோரிடையே உற்சாகத்தை உருவாக்குவனவாகவும் பெற்றோரின் கோலங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டனவாகவும் இருக்க வேண்டும் எனவும் ரூயி குறிப்பட்டார். சகல சமூக கோலங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டனவாகவும் இருக்க வேண்டும் எனவும் ரூயி குறிப்பட்டார்.

கற்பித்தல் முறைமையியல் பற்றிய கருத்துக்கள்

மனிதன் உபகரணங்களை உற்பத்தி செய்து கொண்டு அவற்றைப் பயன்படுத்தும் ஒரு முன்னேற்றமான விலங்கினத்தின் ஒரு பிரிவினனாகும் என டூயி விளக்குகின்றார். டார்வினின் பரிணாமவாத கருத்துக்களினால் போஷிக்கப்பட்ட அவர் மனிதனுக்கு விலங்குகளை விட உயர்ந்த மனமும் புத்தியும் கிடைத்தன என்று கூறுகின்றார். இந்தச் சிந்தனை சக்தியை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகச் செயற்பாட்டு அனுபவங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென்றும் சிந்திக்கவும் தர்க்கிக்கவும் இடமளிக்கும் கற்பித்தல் முறை ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் டூயி கூறுகின்றார்.

ஆசிரியர் மையக் கற்பித்தல் செயன்முறையை நிராகரித்த டூயி ஆசிரியரின் பணி பிள்ளைக்கு அறிவுத் தொகுதியைப் புகுத்துவது அன்றிப் பல்வேறு செயற்பாடுகளின் மூலம் பிள்ளைக்கு அறிவை வளர்த்துக் கொள்ளும் சூழலைத் தயார்ப்படுத்துதல் என்று கூறுகிறார். இதற்கு மிகச் சிறந்தது செயற்றிட்ட முறையாகும். அவதானித்தல், பரிசோதித்தல், கண்டு பிடித்தல் மற்றும் ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் உண்மையான கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அவரது நம்பிக்கையாகும்.

கல்வி அனுபவம் மூலம் பெறப்படுவதாகும் என்று நம்பும் டூயி அந்த அனுபவம் தனி நபரின் அனுபவத்தை ஆழமாக்குவதற்கு உதவுவதாகவும் தற்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஆதாரமாக அமைவதாகவும் இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார். ஓர் அனுபவம் மற்றுமோர் உயர்ந்த அனுபவத்தோடு தொடர்புபட வேண்டும். அனுபவம் மூலம் பெறப்படும் அறிவு வாழ்க்கைக்கு ஏற்றதும் என்றும் நன்றாக நினைவில் பதியும் என்றும் நம்புகிறார்.

இதற்கு மேலதிகமாக பிரச்சினை விடுவித்தல், நேரடி அனுபவங்களை வழங்கல், சுயகற்றலுக்குத் திசைப்படுத்துதல் மற்றும் சகபாடிக்கற்றல் போன்ற நடைமுறைரீதியில் உயிர்ப்பான முறைகளும் குறிப்பிடப்பட்டன. பாடவிடயம் நாளுக்கு நாள் மாற்றமடைகின்ற நிலையில் பலாத்காரமாக பெருமளவு பாடங்களைக் கற்பித்தலுக்குப் பதிலாக அனுபவங்களுடாக அவர்கள் தாமே முயன்று கற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பது டூயியின் கருத்தாகும்.

பாடசாலை முறைமையின் பிரதான நோக்கமாக வேண்டியது பிள்ளையின் முழுமையான ஆளுமை வளர்ச்சியையும் சமூகமயமாக்கலையும் ஏற்படுத்துவதாக இருந்தாலும் அப்போது செயற்படுத்தப்பட்ட கல்வி முறை அந்த நோக்கங்களை அடைய உதவவில்லை என டூயி கூறுகிறார். மேலும் கற்பவற்றை மாணவன் தீரமானிக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாகும். ஆசிரியரது பணி அறிவுத் தொகுதியை மாணவலுக்குப் பெற்றுக் கொடுப்பதுவன்றி அறிவைப் பெற்றுக் கொள்ள மாணவனுக்கு வழிகாட்டுவதாகும். அவர் சமர்ப்பித்த மாணவர் கல்வியின் இயல்பு அதுவாகும். ஜீன் ஜக்ஸ் ரூஸோவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாணவர் மையக் மையக் கோட்பாட்டை டூயி நடைமுறையில் செயற்படுத்தக் கூடிய ஒரு கல்விச் செயன்முறையாக விருத்தி செய்துள்ளார்.

ஜோன் டூயியினால் சமர்ப்பிக்கப்பட்ட கற்பித்தல் முறை மாணவரின் வயது மட்டத்துக்கும் அறிவு மட்டத்துக்கும் பொருத்தமானதோடு மாணவர் விருப்பு வெறுப்புக்களுக்கும் உகந்த விதத்தில் அமைந்துள்ளது. தனியாள் ஆற்றல், திறன் ஆகியவற்றை மட்டுமன்றிக் குழு ஆற்றல், திறன் ஆகியவற்றையும் கற்பித்தலில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

கல்வியினூடாக வாழ்க்கையின் கடமைகளையும் உரிமைகளையும் விளக்க வேண்டுமென்றும் வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கும் திறனையும் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் ஜோன் டூயி குறிப்பிட்டுள்ளார். சமூக சக்திகள், சமூகத் தேவைகள் ஆகிய சமூகம் சார்ந்த சக்தி மிக்க கல்வி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பாடசாலை வாழ்க்கையுடன் தொடர்புடையதென்பதையும் பாடசாலை கற்பித்தல் முறையும் கற்பிக்கப்படும் விடய அறிவும் சமூகத்தோடு தொடர்புபட வேண்டும் என்பதையும் சமூகச் செயன்முறையுடன் தொடர்பற்ற கல்வி பயனற்றது என்பதையும் அறிவு பூர்வமான தீர்வுகளை எடுக்க ஏதுவாவதில்லை என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

– ஆலோசனையும் வழிக்காட்டலும் 

– PDF தரவிறக்கம் 

– பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

 

Leave a Comment