செய்யுள் நயம் ஆய்தல் |
தமிழ் மொழியில் செய்யுள் சிறப்பிடமும் உயர் நிலையும் கொண்ட பகுதியாகும். எமது தமிழ் புலவர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சீரிய கருத்துக்களையும், உணர்வுகளையும் ஓசை நயம், சொல் நயம், பொருள் நயம், ,னிமை ததும்ப அழகிய சொல்லோவியங்களால் வெளிப்படுத்தியுள்ளனர். ,தில் காதல், வீரம், சோகம், பெருமிதம், மகிழ்ச்சி போன்றவை வெளிப்படும்.
கவிஞனுடைய ஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகள் தாமே ததும்பி வழிவதே செய்யுள் என்று வேர்ஸ்வேர்த் கூறுகிறார். இப்படிபட்ட இலக்கியங்களை மாணாக்கர் கற்றுணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அண்மைகாலமாக பள்ளி மாணவர்களிடத்தில் ,லக்கிய ஆர்வம் அல்லது ரசனை குன்றி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. செய்யுளை நுகர்வதற்கு தொடர்ச்சியான வாசிப்பும், ஈடுபாடும் அவசியம். ,தனை உணர்ந்து மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுதல் வேண்டும்.
செய்யுள், கவிதை, பாடல் போன்றவற்றை படித்து ,ன்புறுவதற்கு சிறந்த புலமையுடன் மொழியார்வமும் அவசியம். செய்யுளை உய்த்துணர்வதற்கு பொருள், உணர்ச்சி, கற்பனை, அழகிய வடிவம் என்பன இன்றியமையாதனவாகும். ஆனால் இந்நான்கும் ஒரு செய்யுளில் ஒருங்கே அமையப்பெறுவது அரிதாகும். ஒரு செய்யுள் சிறப்புற அமைவதற்குறிய முக்கிய அம்சங்களை நோக்குவோம்.
சொல் நயம்
சொற்கள் என்பவை கருத்தை உணர்த்தக்கூடிய குறியீடுகள் என்பர் அறிஞர். எமது பண்டைய புலவர்கள் அழகிய சொற்களால் கவிதைகளை வடித்தனர். ஆனால் தான் அச்செய்யுட்கள் அழியாக் காவியங்களாய்; திகழ்கின்றன. உரைநடை, கவிதை என்பவற்றிற்கு பயன்படுத்தப்படும் சொற்களில் வேறுபாடில்லை. ஆனால் அவற்றைக் கையாளும் விதத்தில் வேறுபாடுண்டு. சிறந்த செய்யுளில் அமையும் சொற்கள், இடம், சூழ்நிலை, உணர்ச்சி, கலை, என்பவற்றிற்கு ஏற்றவாறு அமைந்து செய்யுளை சிறப்பிக்கச் செய்கின்றன.
(உ:ம்) அருவிகள் வயிரத்தொங்கல்;!
அடர் கொடி பச்சைப் பட்டே!
குருவிகள் தங்கக்கட்டி!
குளிர் மலர், மணியின் குப்பை!
எருதின் மேற் பாயும் வேங்கை!
நிலவு மேல் எழுந்த மின்னல்!
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள், பாரடா நீ!
-பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)
ஓசைநயம்
பா என்பது ஓதும் போது உணர்வதற்கு ஏதுவான பரந்துபட்ட ஓசை செய்யுளை உரத்துப் படிக்கும் போது ஒலிகள் இயங்குகின்றன. அந்த இயக்கத்தில் ஏற்படும் ஒழுங்கே ஒலிநயம் எனப்படுவது ஓசைமிக்க செய்யுளே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஓசை நயத்தை சொற்களால் விளக்க முடியாது. அதனைப் புலன்களால் மட்டுமே உணர முடியும்.
(உ:ம்)
பஞ்சியொளிர் லிஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவில கஞ்சநிகர்; சீறடி யளாகி
அஞ்சொலின் மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்
(கம்பராமாயணம்)
இராமனைக் கவர்வதற்கு வரும் சூர்ப்பணகையின் அழகு கொஞ்சும் நளின நடைக்கு ஏற்ப கவிதையின் சந்தத்தை அமைக்கும் கம்பன் திறத்தை இப்பாடலில் கண்டு இன்புறலாம்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்
உணர்ச்சி
உணர்ச்சி என்பது உள்ளத்திலிருந்து எழும் நிகழ்ச்சியாகும். ,ன்பமும், துன்பமும் முக்கியமான உணர்ச்சிகள், ஒரு விடயம் நமக்கு சாதகமாக அமையப்பெறின் இன்ப உணர்ச்சியும், அதுவே நமது தேவைக்கு மாறாக அமைந்து தீங்கையும் தருமாயின் துன்ப உணர்ச்சியும் ஏறபடுகின்றது.
(உ:ம்)
துரு பதன் மகனை – திட்டந்
துய்நன் உடன்பிறப்பை
இருபகடை என்றாய்- ஐயோ
இவர்க்கு அடிமை என்றாய்
இது பொறுப்பதில்லை- தம்மி
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழுந்தான்- அண்ணன்
கையை எரித்திடுவோம் (பாஞ்சாலி சபதம்)
இப்பாடலில் வீமனின் வாயிலாக பாரதியின் உணர்ச்சி துடிப்பை காண்கிறோம்.
கற்பனை
கற்பனை என்பது புலன்கள் நேராக ஒரு பொருளை அனுபவிக்காத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்கு கொண்டு வந்து அப்பொருளிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்றும் ஓர் ஆற்றலாகும். கற்பனையின் தத்துவமானது படைப்பாளனுக்கு மட்டுமே புலனாகும். சாதாரணமாக அறிவுக்கு எட்டாது இருப்பினும் கவிஞன் தான் அனுபவித்தவற்றை நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றான். ,தற்கு துணையாவதே கற்பனை
(உ:ம்)
வண்மை இல்லை ஓர் வறுமை ,ன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் ,ன்மையால்
உண்மை இல்லை பொய் உரை ,லாமையால்
ஒண்மை இல்லை பல்கேளவி; ஓங்கலாள்
(கம்பராமாயணம்)
இது சோழ நாட்டின் சிறப்பை கூறும் வர்ணனையால்; பொதுவாக நாட்டின் எதிர்காலத்தைப்பற்றிப் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரும் புலவர் கண்ட ஒப்பற்ற கற்பனைக் காட்சியாக உள்ளது.
பொருள்நயம்
கருத்து புலப்படாத பாடல்களில் சுவை ,ருக்காது அவை வெறுமனே சொற்சேர்க்கை மட்டுமே. கருத்து வளமும் உண்மையும் தான் தரமான இலக்கியமாகும். புலவன் காணும் உண்மை நாம் உலகிற்காணும் உண்மை அன்று அவன் கூறும் உண்மை எப்படியிருக்க வேண்டும் என்பதை உரைப்பது.
(உ:ம்)
வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு ,வள்
உயிர்த் தவச் சிறிது காமமோ பெரிதே
(குறுந்தொகை)
இங்கு இயற்கை வர்ணனையில் உள்ள வேர்ப்பலா நல்ல அறிவுரையை குறிப்பால் புலப்படுத்துகின்றது. எவ்வளவு பெரிய பலாப்பழமாக ,ருந்தாலும் வேரில் காய்த்துப் பழுத்தால் வேர்க்கு ஒரு வகைச் சுமையும் இல்லை. இடையூரும் இல்லை அதுபோல் திருமணம் செய்து கொண்டு இவளைக் காப்பற்று என்ற அறிவுரை அமைந்துள்ளது.
செய்யுள் நயத்தை ஆய்ந்து எழுதத்; தொடங்கும் முன், பின்வருவனவற்றையும் குறித்துக் கொள்ளல் வேண்டும்.
1. புலவன் கூறப்புகுந்தது யாது?
2. புலவனின் உணர்ச்சி செய்யுளில் எங்கனம் வெளியிடப்படுகின்றது?
3. செய்யுளில் கற்பனை ,ருக்கின்றதா?
4. செய்யுளில் வர்ணனை ,ருக்கின்றதா?
5. செய்யுளில் அலங்காரங்கள் அமைந்துள்ளனவா?
(அ) உவமை
(ஆ) உருவகம்
(, ) தற்குறிப்பேற்றம்
(ஈ) வஞ்சப்புகழ்ச்சி
(உ) உயர்வு நவிற்சி
(ஊ) பிறிது மொழிதல்
(எ) சிலேடை
இவற்றுள் எவை எங்கனம் எடுத்தாளப்பட்டிருக்கின்றன?
6. இனிமை, எளிமை பொருளாழமுடைய செய்யுளில் காணப்படுகின்றனவா?
7. எழுத்துநயம், சொல்நயம், ஓசைநயம், கருத்து நயம் ஆகியன செய்யுளில் காணப்படுகின்றனவா? அவை புலவனின் உணர்ச்சி வெளியீட்டுக்கு எவ்வளவிற்கு துணை புரிகின்றன.
பின்வரும் பாடலை படித்து அதில் சொல்லப்படுகின்ற செய்தியை அறிந்து இன்புறுவோம்.
“கண்டனென் கற்பினுக்கணியை கண்களால் தென்திரை அலைகடல் ,லங்கைத் தென்னகர் அண்டநாயக வினித்தியைமும் பண்டுள் துயருமென்றனு மன்பன்னுவான்”
(கம்பராமாயணம்)
சீதையை தேடிச்சென்ற அனுமன் தான் அவனை கண்டமைபற்றி இராமனுக்கு எடுத்துரைக்கின்றான்.
பொருள்-தெய்வநாயக! கடல் சூழ்ந்த இலங்கையிலே கற்பினுக்கு அணிகலனாக விளங்குகின்ற பிராட்டியாரை என் கண்களால் நானே கண்டேன். இனி அவளது கற்புடைமையைப் பற்றிய ஐயத்தையும் அது பற்றிய துன்பத்தையும் விட்டுவிடுவாயாக என்று சொல்லி மேலும் கூறுகிறான்.
கண்டெனன் என்றே அனுமன் செய்தியை கூறத்தொடங்குகிறான். “சீதையை கண்டேன்” எனத் தொடங்குவானாயின் அவனது நிலை என்னாயிற்றோ என்று இராமன் இலங்கியிருத்தல் கூடும் அடுத்ததாக கற்பினுக்கணியை என்கின்றான். கண்ணனும்; பெருந்தேவியை என்று கூறினான். அவள் எந்த நிலையில் இருக்கின்றாளோ என்ற ஐயமும் இராமனுக்கு தோன்றுதல் கூடும். அந்த ஐயத்தை முற்றாக நீக்கவே சீதை கற்பிற்சிறந்து விளங்குகின்றாள். என்பதை உணர்த்தவே கற்பினுக்கணியை என்று கூறினான். “கண்டெனன் கண்களால்” என்று கூறியமை சீதையின் நிலையை பிறர் வாயிலாக அறிந்து கொண்டு வரவில்லை தானே நேரில் சென்று தன் கண்களால் தானே கண்டதை வலியுறுத்துவதாக அமைகின்றது. ,ங்கு கம்பன் சொற்களை எவ்வாறு பயன்படுத்தியுள்ளான் என்பது புலனாகின்றது. இனி “கண்களால் என்பதற்கு சீதையின் விழிகளால் என்றும் பொருள் கூறுவது சாலும். அவள் “கற்பினுக்கணி என்பதை அவள் கண்களே காட்டின என்று கூறுவதும் பொருத்தமாயிருக்கின்றது. ,ராமனை பிரிந்த துயரத்தினால் அவனையே எண்ணிக் கொண்டு கண்களில் நீரருவி பாய இருந்ததை அனுமன் தனது கண்களால் நேரிற் பார்த்தமையால் சீதை “கற்பினுக்கணியாய்” விளங்குகின்றாள். என்பதை உணர்ந்து கொண்டான் எனலாம்.
எனவே செய்யுள் ,லக்கியத்தை ஆழ்ந்த புலமையுடனும்;, ஈடுபாட்டோடும் வாசிக்கும் போதே கவிஞன் சொல்லப்புகுந்த உண்மைகருத்தை உணர்ந்து கொள்ள முடியம். மாணாக்கர் செய்யுள்களை தேடிக்கற்க வேண்டும். ,ன்புற பொருள் உணர்தல் வேண்டும். பொருள் புரியாது விடின் மீண்டும் மீண்டும் வாசித்தல் வேண்டும். சொற்களின் கருத்தை ஆழ்ந்து ரசிக்க வேண்டும். தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் அதனை எழுத்து வடிவில் நயம் அறிந்து எழுதும் போதும் சிறந்த தேர்ச்சி பிறக்கும் ,த்தகைய தொடர்பயிற்சிகள் மொழித்திறனை விருத்தி செய்யும் .
எனவே நல்ல ,லக்கியங்களை கற்றுத் தேர்ந்து, அதன் சுவை அறிந்து வாழ்வில் ,ன்புறுவோம்.
உசாத்துணை
பேராசிரியர் எம்மார் அடைக்கலசாமி – தமிழ் ,லக்கிய வரலாறு
தென்புலோலியூர் ம. கணபதிப்பிள்ளை – தமிழ்மொழி வழிகாட்டி
தமிழ்மொழி கற்பித்தல் (வளநூல்) – தமிழ்நாட்டு பாடநூல் கழகம்
மு.வரதராசன் – தமிழ் இலக்கிய வரலாறு
முத்துசாமி தேவராஜ்
ஆசிரியர் ஆலோசகர்
தமிழ் பிரிவு
வலயக் கல்விக் காரியாலயம்
தெஹியோவிட்ட
- எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
- உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும்