ஆய்வுச் செயன்முறையின் இரண்டாவது படிநிலை சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடுவதாகும். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்வதையே சாரபிலக்கிய மீளாய்வு எனச் சுருக்கமாக கூறலாம். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல உண்ணாட்டு மற்றும் சர்வேதச ஆய்வாளர்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பர். இவை சகமதிப்பாய்வு ஆய்வுச் சஞ்சிகைகள் (Per-eviewed joumals). கல்விசார் ஆய்வுச் சஞ்சிகைகள் (Acales als) ஆய்வு மாநாட்டு வெளியீடுகள் (Conference Proceedings அறிக்கைகள் (Report) நூல்கள் சுவைக்களஞ்சியம், முதுமாணி மற்றும் கலாநிதி பட்ட ஆய்வறிக்கைகள் எனப் பலவகைகளில் காணப்படும். இவற்றில் இருந்து தனது ஆய்வுத் தலைப்புடன் தொடர்ப்படும் வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமரசனரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும் ஆராய்ந்து எழுதப்படும் பகுதியையே சார்பிலக்கிய மீளாய்வு என்கிறோம். மற்றும் தற்போதைய தகவல்களை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் மற்றும் பிற ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட விடயங்களைக் கொண்டு சுருக்கமாக எழுதப்பட்ட பகுதியாகும் என Crowel (2011) கூறுகிறார்.
சார்பிலக்கிய மீளாய்வு என்பது உங்கள் ஆய்வுத் தலைப்பில் கடந்த கால ஆய்வு நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpose for research) ஆய்வுச் செயன்முறையின் மூன்றாவது படிநிலையாக ஆய்வுக்கான நோக்கம். குறிக்கோள்களை குறிப்பிடுதல் உள்ளது. இதில் ஆய்வின் பிரதான நோக்கம் முக்கியமானது. உத்தேச ஆய்வுக்கான குறிப்பான, துல்லியமான பிரதான நோக்கத்தினை குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியமாகின்றது ஆய்வின் பிரதான நோக்கத்தினை எடுத்துக் காட்ட முடியாவிட்டால், குறித்த ஆய்வை வாசிப்பவர்கள் உங்கள் ஆய்வு பற்றிய தெளிவினை பெற மாட்டார்கள். ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடைந்து கொள்ளும் பொருட்டு ஆய்வு குறிக்கோள்களையும் எழுதிக் காட்டுதல் வேண்டும்
ஆய்வுக் குறிக்கோள்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
தர்க்கரீதியான மற்றும் ஒத்திசைவானவானதாக எழுதப்படல் வேண்டும்.(Logical and coherent)
சாத்தியமான குறிகோள்களாக இருத்தல் வேண்டும் (feasible)
யதார்த்தமான குறிகோள்களாக அமைதல்வேண்டும்.(realistic)
அளவிடப்படக் கூடியதாக குறிக்கோள்கள் காணப்படல் வேண்டும் (neamble). ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடையும் வகையில் (தொடர்புபட்டதாக)
குறிக்கோள்கள் தெளிவாக எழுதப்பட்டு இருத்தல் வேண்டும் (in clearly meet the purpose of the study)
ஆய்வுக் குறிக்கோள்கள் எழுதும் போது ஆய்வுக்கான சார்ந்த, சாரா மாறிகளை தொடர்புபடுத்தி (தனித்த மாறி இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக எழுதுதல் வேண்டும்.
ஆய்வுக் குறிக்கோள்களை எழுதும் போது அவை வினைச் சொற்களைக் கொண்டதாக எழுத வேண்டும்.
கண்டுபிடிக்க (to find out) ( Identify)
தீர்மானிக்க (lo deleine) (m.compure)
கணிப்பிட (Io calculate)
சரிபார்க்க (to serily
பரிசீலிக்க (locxation)
தெளிவற்ற (செயல் வினைசொற்கள் அல்லாத பதங்களை கொண்டு குறிக்கோள்களை எழுத வேண்டாம் |உதாரணம் பாராட்ட appreciate புரிந்து கொள் – to understand. Bi-to believe).
சிலர் ஆய்வுக் குறிக்கோள்களை மேலும் சிறிய ஆய்வு விளாக்களாக அல்லது / ஆய்வுக் ககுதுகோள்களாக எழுதிக் காட்டுவர் ஆய்வுக் குறிக்கோள்களை அடையும் வகையில், குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் வினாக்கள், ஆய்வு வினாக்கள் எனப்படும். இவை ஒவ்வொரு ஆய்வுக் குறிக்கோள்கள் அடையும் வகையில் பிரதான வினாக்களாகவோ, சி வினாக்களாகவோ எழுதப்படும் ஆய்வு வினாக்களிலும் ஆய்வுக்கான மாறிகளை (தனித்த மாறி இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) பொருத்தமான முறையில் தொடர்ப்படுத்தி வினாக்களை உருவாக்குதல் வேண்டும். அதேபோன்று, சிலர் ஆய்வுகளை முன்னெடுக்கும்போது ஆய்வுக் கருதுகோள்களை அமைத்துக்காட்டுவார். தொகைசார்ந்த ஆய்வுகளிலேயே கருதுகோள்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மாறிகளுக்கு இடையில் எத்தகைய தொடர்புகள்/வேறுபாடுகள் உள்ளன என்பது தொடர்பாக ஆய்வாளரது தற்காலிக எதிர்பார்ப்பு அல்லது தற்காலிக விளக்கமே ஆய்வுக் கருதுகோள் எனப்படும். எனவே இவற்றை தெளிவாக உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்
தரவுகளை சேகரித்தல் (Collecting data)
ஆய்வுச் செயன்முறையில் தரவு சேகரித்தல் முக்கிய இடம்பெறுகிறது. ஆய்வு குறிக்கோள்களை அல்லது அல்லது ஆய்வு வினாக்களை ளை அடைந்து கொள்ளும் பொருட்டு, உரிய பங்கேற்பாளர்களிடமிருந்து பொருத்தமான தரவு சேகரிப்பு கருவிகள் கொண்டு தரவுகளைத் திரட்ட வேண்டும் ஆய்வாளர் பயன்படுத்தும் ஆய்வு அணுகுமுறை. ஆய்வு வடிவமைப்பு ஆகியவற்றை பொருத்து தரவு சேகரிப்பு கருவிகள் வேறுபடலாம். ஆய்வுக் குறிக்கோள்களுக்கு /ஆய்வு வினாக்களுக்கு விடை தேடுவதற்காக நீங்கள் பயன்படுத்தவுள்ள பொருத்தமான தரவு சேகரிப்பு கருவிகளை தெளிவாக இளங்கண்டு அவற்றை விருத்தி செய்வது ஆய்வாளரது கடமையாகும்
தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (IData analyzing and interpreting)
ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்காக பயன்படுத்திய, தரவு சேகரிப்புக் கருவிகளின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை எவ்வாறு பகுப்பாய்வு செய்யப் போகிறீர்கள் என்பது தொடர்பாக தெளிவான விளக்கம் ஆய்வாளர் கொண்டிருத்தல் வேண்டும் சிலர் தரவு பகுப்பாய்வு பகுதியில் தெளிவற்ற வாசகங்களை எழுதுகின்றனர். (உதாரணம்: தரவுப் பகுப்பாய்வுக்காக விவரண புள்ளியியல் முறை பயன்படுத்த படும்.பொருத்தமான நுட்பங்களை கொண்டு பகுப்பாய்வு செய்யப்படும் போன்ற) இது பிழையானதாகும் ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றிலுமுள்ள மாறிகளை (தனித்த மாறி, இரு மாறிகள், பல் மாறிகள் அடையாளம் கண்டு அவற்றின் போக்குகளை, அவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகள், இணைபுகள் வேறுபாடுகள் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் துல்லியமான பகுப்பாய்வு நுட்பங்களை குறிப்பிடல் வேண்டும். இதன் போது தரவுப் பகுப்பாய்வு தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள தெளிவினை வெளிக்காட்ட முடியும் அதேபோன்று, பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பின்னர் பெற்றுக் கொள்ளப்படும் கண்டுபிடிப்புக்களை பொருத்தமான அட்டவணைகள், வரைபுகளில் இட்டு அவற்றை வாசகர்கள் தெளிவாக விளங்கும் வகையில் வியாக்கியானம் செய்தல் வேண்டும்.
ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)
ஆய்வுச் செயன்முறையின் இறுதிப்படிநிலை ஆய்வறிக்கை எழுதுவதாகும். ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றிய விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துகூறத் தயாரிக்கும் ஆவணமே ஆய்வறிக்கை எனப்படும். ஆய்வறிக்கையை எழுதியபின்னர் மேற்கொண்ட ஆய்வினை மதிப்பிடுவது ச செய்தல் முக்கியமாகும். ஆய்வின் தரம், ஆய்வின் தகுதியுடைமை (செல்லுபடியாகும் தன்மை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை மதிப்பிடல் அவசியமாகின்றது. நீங்கள் கற்கைக்காக ஆய்வறிக்கையை எழுதும் போது அதன் தரம், கியத்துவம் என்பன பரீட்சகர்களினால் மதிப்பீடு செய்து முடிவுகள்