கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் | Karl Marx (1818-1883) Educational Philosophical Concepts

கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள்
www.Edutamil.com

கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள்

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் அதனோடு இயைந்து செல்வதற்கானதொரு கல்வித் திட்டத்தைச் சமர்ப்பித்தார். பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற அவர் சட்டத்தையும் தத்துவத்தையும் கற்றார். மார்க்ஸ் தமது தத்துவத்தை உருவாக்கும் போது ஹேகல் இன் கருத்துக்களின் செல்வாக்குக்கு உள்ளானர், இறுதியில் ஹேகலின் கருத்துக்களுக்கு நேரெதிரான கொள்கையை அவர் சமர்ப்பித்தார். ஹேக வாதவியல் இலட்சியவாதத்(Dialectical Idealissm)தைச் சமர்ப்பித்ததுடன். மார்க்ஸ் வாதவியன் உலகாயத வாதம்(Dialectical Materialism) பற்றிய கருத்தைத் தெரிவித்தார். ஹேகல், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்துடன் ஆன்மிகத்துக்கு அல்லது இலட்சியவாதத்துக்கு முதலிடம் கொடுத்தே அரசு பற்றியும் சமூகக் குறிக்கோள் பற்றியும் தன் பார்வையைச் செலுத்தினார் அக்கருத்தை நிராகரித்த மார்க்ஸ் பௌதிகப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கருதினார். இலட்சியம் அல்லது ஆன்மிகம் என்பது உலோகாயதப் பொருள்களின் விளைவே என்று எடுத்துக்காட்டினார்) இலட்சியத்தை விட பொருள் முக்கியம் என்பதைக் கருதியிருக்கலாம். மனிதனது இயல்பைப் பற்றியும் சமூகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள தொடர்பைப் பற்றியும் சமூகத்தை மாற்றுவதில் மனிதனின் முக்கியத்துவம் பற்றியும் மார்க்ஸ், கூடுதலாகக் கவனம் செலுத்தியுள்ளார். மனித நடத்தையை அடிப்படையாக வைத்து உலகை மாற்றலாம் என அவர் நம்பினார். உலக சமுதாயத்தை மாற்றுவதில் மார்க்ஸின் கருத்துக்கள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சோஷலிச நாடுகள் பலவற்றிலும் மார்க்ஸின் கருத்துக்கள் வளமடைந்துள்ளன. மார்க்ஸின் கருத்துக்களை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு மனிதனின் இயல்பைப்பற்றி அவர் சமர்ப்பித்த தத்துவக் கருத்துக்களை விளங்கிக் கொள்வது பயன் தருவதாகும்.

மனிதனின் இயல்பு பற்றி மார்க்ஸின் கருத்துக்கள்

மனிதனைப்பற்றி மார்க்ஸ் கொண்டுள்ள கருத்துக்கள் அவரது கல்விச் சிந்தனைகளை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகையினால் அவரது கல்விக் இலகுவில் விளங்கிக் கொள்ளும் பொருட்டு மார்க்ஸ் மனிதனைப் பற்றி என்ன கருத்துடையவராக இருந்தார் என்பதைப் பற்றி இங்கு ஆராயப்படுகின்றது.

டார்வின் சமர்ப்பித்த ஜீவிகளின் பரிணாமவாதம் பற்றிய கருத்துக்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மார்க்ஸ் மனிதனின் பரிணாமம் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். குரங்கிலிருந்து மனிதன் வரையிலான பரிணாமத்திற்கு அடிப்படை அம்சமாக இருந்தது ‘உழைப்பே மேலும் சமூகச் சூழலை அதற்கேற்ப அமைக்கவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது என் மார்க்ஸ் அறிமுகம் செய்தார். உற்பத்தித் திறனும் உழைப்பும் மனிதனுக்குரிய விசேட இலட்சணமாகும்.

அறிவுள்ள மிருகங்களின் தோற்றம் பற்றியும் மார்க்ஸ் கருத்துக்களை வழங்கினார். எண்னங்களின் விளைவாகப் பொருள்கள் உருவாகின்றன எனப் பொதுவாக எமக்குத் தென்படுகின்றது. ஆனால் அவர் அதற்கு வேறொரு கருத்தைக் கூறுகின்றார். அறிவு ஏற்படமுன்னரே பொருள்கள் இருந்தனவென்றும் அப்பொருள்களின் நிழல்கள் இந்திரியங்களுக்குத் தென்பட்டு எண்ணங்கள் தோன்றின என்கிறார். தோன்றினதொன்றல்ல அதன்படி பௌதிகப் பொருள்கள் என்றும் குறிப்பிடுகின்றார். சூழலில் உள்ள அறிவுப் அறிவின் விளைவாகத் பொருள் சார்ந்தவற்றின் விளைவே என்றும் பொருள்கள் எமது புலன்களுக்குப் படவேண்டும் என்றும் அவற்றை நாம் சூரிய ஒளியின் காரணமாகவே பார்க்கிறோம் என்றும் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு பொருள்களுக்கு முதலிடம் வழங்கி அறிவுள்ள விலங்குகள் தோன்றின என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். தனியாளின் மீது சூழலின் செல்வாக்குக்கு உள்ள முக்கியத்துவம் இதன் மூலம் தெளிவாகின்றது.

“மனிதனின் அடிமை நிலைமைக்கு உட்படாது உயர்ந்த மனிதராக வாழ வேண்டும்” என்பது மார்க்ஸின் மற்றொரு கருத்தாகும். காந்தியும் இதனையொத்த ஒரு கருத்தையே கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகம் பௌதிகப் பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றதோடு அவற்றின் செயன்முறைகள் வெளிச் சக்தியினாலேயே கட்டுப்படுத்தப்பட்டன. மனிதனின் விடுதலைக்காக அமைத்துக் கொண்ட இச் சமுதாயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மனிதன் அடிமை நிலைக்குள்ளாகினான். வரலாற்றின் நீண்ட காலமாகச் சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியினரைச் சுரண்ட முற்பட்டனர். அதன் பிரதி பலனாக மனிதன் அடிமை நிலைக்குள்ளானான். அதனால் ஒரு பகுதியினருடையதையன்றி முழு வர்க்கத்தினதும் சுதந்திரத்தின் பூரணத்துவத்தை தோற்றுவித்துக் கொள்ள முடியாது.

19ஆம் நூற்றாண்டில் மேலைத்தேயக் கைத்தொழில் நாடுகளில் முதலாளித்துவம் அரசோச்சத் தொடங்கியது. தொழிலாளர் வகுப்பினரைச் சுரண்டிச் சாப்பிடுதல் முதலாளித்துவத்தின் இலட்சணமாகியது. இதனால் மனிதனது சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதோடு அவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமை நிலைக்குள்ளாகாது உயர்ந்த மனிதனாக வாழவேண்டுமாயின் இந்தச் சமூக அமைப்பை இல்லாமற் செய்து ஏழை வகுப்பினரின் ஆதிபத்தியத்தைக் கொண்ட ஒரு சமூக முறையைத் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமே மனிதனின் சுதந்திரத்தைத் தோற்றுவித்துக் கொள்ள முடியும் என மார்க்ஸ் கருதினார்.

மர்க்ஸின் படி மனிதன் உழைப்பைச் செலவு செய்து வேலை செய்யும் ஒரு ஜீவியாவான், நடைமுறையிலிருந்த கல்வி முறையில் உள விருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.உழைப்பைச் செலவு செய்வது இரண்டாந்தரமாகக் கணிக்கப்பட்டது. . அதனால் அளுமை துண்டிக்கப்பட்டது. உரிய முறையில் ஒரு பூரணமான மனிதன் மனிதனின் உருவாக வேண்டுமானால் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். காந்தி கையை வளர்ச்சியடையச் செய்தல் என்பதனால் கருதப்பட்டதும் இதனை ஒத்த ஒரு நோக்கமேயாகும்.

மார்க்ஸ் சமர்ப்பித்த இந்தத் தத்துவத்தைச் செயற்படுத்துவதற்கும் அவர் எதிர்பார்த்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எத்தகையதொரு கல்வி தயாரிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துக்களை இப்போது ஆராய்வோம்.

கார்ல் மார்க்ஸின் கல்விப் பிரேரணைகள்

பொதுச்சமூகத்தின் தேவை அல்லது ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கமைய அப்போதைய கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டதுமல்லாது அது ஒழுங்கமைப்பதிலும் தடைகளை உருவாக்கியது. ஜனநாயகத் தத்துவத்திற்கும் கல்வியை அதனால் கல்வி நிறுவனங்களிலும் சகல பாடசாலைகளிலும் அரசு தலையிடாது சுதந்திரமாகவும் சமுதாயத்திற்காகத் திறந்து விடப்படல் வேண்டும். எனவும் மார்க்ஸ் கூறினார். மாணவர்களின் சமநிலை ஆளுமை விருத்தியை அதன்மூலமே உருவாக்கிக் கொள்ளமுடியும். மார்க்ஸ் கூறியவாறு சமநிலை ஆளுமையை உருவாக்கிக் கொள்ளல் கல்வியின் அடிப்படை நோக்கமாகும். சக்தி, ஆற்றலின் அடிப்படையில் சமனற்றிருப்பதுடன் உரிமைகள், சமூக அலகுகளின் அடிப்படையில் கவனிக்கையில் எல்லாத் தனியாட்களும் ஒருவருக்கொரவர் சமனானவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்லாத் தனியாட்களுக்குமுரிய சக்தியை விருத்தி செய்தல் வேண்டும். நுண்மதிச் சக்தியை மட்டும் விருத்தி செய்வது கல்வியின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அறிவு உற்பத்திச் செயன்முறை தொடர்ச்சியாகப் பெறப்படல் வேண்டும். மேலும் அறிவு. அழகியல்சார் பெறுமானங்கள் தொடர்பான கல்வி பெறப்படல் வேண்டும். உடலியல் ஒழுக்கக் சமாந்தரமாக அளிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் பூரணப்படுத்தப்பட்ட உருவாக்கிக் கொள்ள முடியும் என கார்ல் மாக்ஸ் காட்டினார். கல்வி ஆளுமையை

நற்பிரசையை உருவாக்கிக் கொள்வதற்கு அவ்வாறான கல்வி முறையால் மட்டுமே முடியும் என்பது அவரது நம்பிக்கையாகும். கற்றல் ஆனது உற்பத்தியையும் வினைத்திறனையும் தொடர்புபடுத்தல் வேண்டும் என்பதில் மார்க்ஸ் கவனம் செலுத்தினார். மாணவர்களின் வயதின் அடிப்படையில் பின்வருமாறு அவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

1. 9.12 வயது மாணவர்கள், நாள் ஒன்றிற்கு இரண்டு மணித்தியாலங்கள் உற்பத்திச் செயன்முறையில் பங்குபற்றல் வேண்டும்.

 

2. 13-14 வயது மாணவர்கள், நாள் ஒன்றிற்கு நான்கு மணித்தியாலங்கள் உற்பத்திச் செயன்முறையில் பங்குபற்றல் வேண்டும்.

 

3. 14-17 வயது மாணவர்கள் நாள் ஒன்றிற்கு 6 மணித்ததியாலங்கள் உற்பத்திச் செயன்முறையில் பங்குபற்றல் வேண்டும்.

இவ்வாறு மாணவரை உற்பத்திச் சம்பந்தமான செயன்முறையில் விளக்கத்தைப் ஈடுபடுத்துவதன்மூலம் விஞ்ஞானம், பெற்றுக்கொள்வதற்கும் உபகரணங்களைப் பயன்படுத்தும் ஆற்றலை ஏற்படுத்திக்கொள்வதற்கு முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தொழினுட்பம், மாணவர் தொழிற்பாடுகளில் தொடர்புகளையும் பெற்றுக்கொள்வர். ஈடுபடுகையில் அவர்கள் வெளி உலகத்துடன் நேரத் அதன்மூலம் புலன்களினூடாகக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் யதார்த்தத்தை எளிதாக விளங்கிக் கொள்ளவும் சந்தர்ப்பமளிக்கப்படுகின்றது. இதன் மூலம் பூரணமான வளர்ச்சியுற்ற மனிதனாக வாழ்வதற்கான சந்தர்ப்பமளிக்க எதிர்பார்க்கப்பட்டது.

நாட்டின் கல்வியையும் கைத்தொழிற் செயற்பாட்டையும் பிரதான தொடர்பு படுத்தவும், ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவித்துக் கொள்வதற்காகவும் மக்களைப் பாடசாலைத் திட்டங்களில் பங்குபற்றச் செய்வதன் தேவை பற்றியும் மார்க்ஸ் எடுத்துக்காட்டினார். நாட்டின் கல்வி தொழிலாளர் வர்க்கத்தின் கைகளில் வரவேண்டும் என்றும் அதன் மூலம் கல்வியில் சமசந்தர்ப்பத்தை வழங்க முடியும் என்றும் அவர் எடுத்துக் காட்டினார். கல்வியில் சம உரிமைகளைப் பாதுகாக்க முற்பட்ட ஒரு தத்துவஞானி என மார்க்ஸைக் குறிப்பிடலாம். கைத்தொழிற் புரட்சியின் காரணமாகப் பால்ய வயதுச் சிறுவர்களைக் கைத்தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்துவது மார்க்ஸின் விமரிசனத்துக்கு உட்பட்டது. கல்வியின் மூலம் புதியதொரு மனிதனைத் தோற்றுவித்துக் கொள்வதற்காயின் சிறுவர்களை அடிமைகளாக ஆக்குவதைச் சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும் என்றார். விரிவான சுய விளக்கத்தை எல்லோரும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையைக் கல்விப் பாங்கினூடாகத் தோற்றுவிக்க வேண்டும் என்பது மார்க்ஸின் கருத்தாகும்.

 

Leave a Comment