கல்வி வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும் என்பதன் விளக்கம் யாது?

கல்வி வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும் என்பதன் விளக்கம்
www.edutamil.com


கல்வி என்பது வழிகாட்டலாகும். வழிகாட்டல் என்பது கல்வியாகும். சமகாலத்திற் கல்வியும் வழிகாட்டலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலமைந்துள்ளன. கற்றல் – கற்பித்தல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு ஆசிரியருக்கு மிக முக்கியமாக வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் தொடர்பான தேர்ச்சி அவசியமானது.

மனித வரலாற்றின் தொடக்கத்தில் மனிதர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தமக்குள் இருந்த அறிவு டையோரின் உதவியையும், சமயத் தாபனங்களைச் சேர்ந்தோரினது உதவியையும் பெற்றனர். அது அக்கால எளிமையான சமூகத்துக்குப் பொருத்தமானதாக இருந்துள்ளது. எனினும், பத்தொன்பதாம். நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் நிகழ்ந்த துரிதமான கைத்தொழில் மயமாக்கம் காரணமாக, அமெரிக்கச் சமூகத்தில் தொழில் வாய்ப்புகளைத் தெரிவுசெய்து கொள்வதில் இளைஞர்கள் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டமையால். தொழில்வழிகாட்டற் செயன்முறை, தன்னை தொழிற்துறையுடன் இணைத்துக் கொண்டது. அதற்கமைய இளைஞர்களுக்குத் தொழி லொன்றைத் தெரிவுசெய்து கொள்வதற்கு உதவும் நோக்குடன் 1908இல் அமெரிக்கரான பிரான்க் பாசன் என்பார் பொஸ்டன் நகரில் தொழில் அலுவலகமொன்றினைத் தாபித்து, வழிகாட்டல் சேவையை அறிமுகஞ் செய்தார். அது தற்போது பல்வேறு துறைகளிற் பரவியுள்ளது. அதுவே வழிகாட்டற் சேவை வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்படுகின்றது.
 

பிரான்க் பாசன் முன்வைத்த தொழில் வழிகாட்டல்:

1. தனியாள் பகுப்பாய்வு ஆலோசனை வழங்குபவர், தொழிலை எதிர்பார்ப்பவரின் அதாவது ஆலோசனையைப் பெறுபவரின் பண்புக் கூறுகளை விசாரணை 2. தொழில்சார் பகுப்பாய்வு ஆலோசனை வழங்குபவரின் உதவியுடன் தொழிலை எதிர்பார்த்தல் தாம் விரும்பும் வெவ்வேறு தொழிற்றுறைகளிற் காணப்படும் சந்தர்ப் பங்கள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி அறிந்துகொள்ளுதல்.

3. தனியாள் பகுப்பாய்வையும், தொழில்சார் பகுப்பாய்வையும் ஒப்பிடுதல் ஆலோசனை பெறுபவரும், வழிகாட்டுபவரும் சேர்ந்து மேற்படி இரண்டு பகுப்பாய்வுகளது இணக்கப்பாடுகள், இணக்கமின்மைகளைப் பற்றி கலந்துரையாடுவர். அதன்மூலம் குறித்த ஆளுக்குப் பொருத்தமான தொழிலைத் தெரிவுசெய்து கொள்வதற்கு வழிகாட்டல் வழங்கப்படும்.

வழிகாட்டலானது

மாணவருக்கு, பாடசாலையுடன் இசைவடைவதற்கும், கற்கைப் பரப்பைத் தெரிவு செய்து கொள்வதற்கும் வழங்கப்படும் உதவிச் சேவையாகும்.

                                                                                                            -டருமன் கெலி (1914)-

மாணவன் பாடசாலையையும், வாழ்க்கையின் தாக்கங்களையும் வெற்றிகொள்வதற்காகப் பிரயோகிக்கப்படும் ஒரு தலையீட்டுச் செயன் முறையாகும்.

                                                                                               – விலியம் பெரொக்டர் (1925) –

 

அபிவிருத்தி சார்ந்த ஒரு செயன்முறையாகும். அது தனியாளின் தொழில்சார் கல்வி, தனிப்பட்ட சமூக அனுபவங்கள் தொடர்பாக வழங்கப்படுதலாகும்.

                                                                                                                ரொபட் மதிவ்சன்-

ஒருவருக்கு, வாழ்க்கைக் காலத்துள் ஏற்படும் தீர்க்கமான சகல சந்தர்ப் பங்களையும் பொருத்தமான முறையில் எதிர்கொள்ளும் சக்தியை அவரிடம் கட்டியெழுப்ப உதவும் செயன்முறை.

                                                                                                             -ஆன் ஜோன்ஸ் (1984)-

மேற்படி விடயங்களின்படி வழிகாட்டலும், ஆலோசனையும் எனும் இரண்டு எண்ணக்கருக்களினுள் அவற்றுக்கேயுரித்தான சில சிறப்பான நன்மைகள் உள்ளன என்பது தெளிவாகிறது.

வழிகாட்டல்

திசைமுகப்படுத்தல் + நிவாரணம் + அபிவிருத்தி + வழிப்படுத்தல். ஒருவனைப் பொருத்தமான திசையில் திசைமுகப்படுத்தல். பொருத் தமற்ற திசையிலிருந்து தவிர்த்தல், பொருத்தமான நிலைமைகளை நிபந்தனைகளை மேம்படுத்தல், சிறப்பறிஞர் சேவையின்பால் வழிப்படுத்தல் ஆகிய படிமுறைகளைக் கொண்டது.

லோசனை வழங்கல்

 

நிவாரணம் + அபிவிருத்தி + பரிகாரம் + வழிப்படுத்தல் *ஆலோசனை வழங்கலானது வழிகாட்டலின் மிகமுக்கிய கூறாகும்.

பொருத்தப்பாட்டை மேம்படுத்த சிறப்பறிஞர் சேவைகளின்பால் வழிப்படுத்தல் மற்றும் பரிகார ரீதியான தலையீடுகளை நடை முறைப்படுத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது.

ஒருவரின் தெரிவு செய்யப்பட்ட சில நிலைமைகளுக்காக வழங்கப்படும் உதவி. * ஒருவரின் ஒட்டுமொத்த விருத்திக்கு முக்கியமானது. இதற்கமைய வழிகாட்டற் செயன்முறையின் ஒரு கூறாக ஆலோசனை அமையும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு எண்ணக் கருக்களுக்குமுரிய செயன்முறைகள் கூட்டாக நிகழும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

வழிகாட்டலானது பெரும்பாலும் தீர்மானமெடுக்கும் தன்மையோ, சிந்தனையோ போதிய விருத்தி அடையாத நிலையில் உள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள், அவ்வாறான தன்மையுடைய வயது வந்தோர். பல்வேறு ஆளுமையாதல்களுக்கு உள்ளானவர்களுக்கு மிகப் பொருத்தமானது. சிந்தனைச் செயன்முறையிற் குறிப்பிடத்தக்க அளவு பிரச்சினைகள் இல்லாத, தம்மைப்பற்றித் தீர்மானமெடுக்கும் தன்மையற்ற, அதனூடாகத் தமது நடத்தையை மாற்றிக்கொள்ளும் சக்தியைத் தூண்டும் திறனைக்கொண்ட ஆட்கள் தொடர்பாக, ஆலோசனைச் சேவை மிகப் பொருத்தமானது.

எனினும், குறித்த நிபந்தனைகளின் கீழ் சமயோசிதமாக, அதாவது சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான வகையில் இந்த இரண்டு எண்ணக் கருக்களையும் இணைத்த வகையிற் கையாள்வதால் நல்ல பெறுபேற்றைப் பெறலாம். பாடசாலைத் தொகுதியிற் காணப்படும் குறிப்பான நிலைமைகளின்போது வழிகாட்டல் மாத்திரம் போது மானதாக மாட்டாது. எனவே, உளவியற் கல்வி வழங்கும் ஆலோச னைச் செயன்முறையும் பாடசாலைக்காகத் தற்போது நடைமுறையில் உள்ளது. அதனைப் பின்வரும் நான்கு பிரிவுகளின்கீழ் எடுத்துக் காட்டலாம்.

  1. கல்விசார் வழிகாட்டலும், ஆலோசனையும்
  2. தொழில்சார் வழிகாட்டலும், ஆலோசனையும்
  3. தனியாள் உளவியல்சார் வழிகாட்டலும், ஆலோசனையும்
  4. குடும்ப வழிகாட்டலும், ஆலோசனையும்.

1. கல்விசார் வழி காட்டலும், ஆலோசனை வழங்கலும் கற்றல் கற்பித்தற் செயன்முறை சார்ந்ததாக ஆசிரியர் – மாணவர் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளின்போது உதவி புரிதலையே இது குறிக்கின்றது.

மாணவர் தொடர்பாக……..

*புலக்காட்சிக் குறைபாடுகள் – பாடப் பிரிவுகளைத் தெரிவு செய்வதில் இடர்ப்பாடுகள்

* பாடப் பாண்டித்தியம் தொடர்பான பிரச்சினைகள் கற்றலுக்கான சுயஊக்கல் குறைவாக இருத்தல்

*கவனத்தைச் செலுத்துவது தொடர்பான இடர்ப்பாடுகளும், பிறவும்

ஆசிரியர் தொடர்பாக.. வெவ்வேறு கற்றல் – கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பான இடர்ப்பாடுகள்

*மாணவரின் பாட அடைவு குறைவாக இருத்தல் மாணவரிடத்தே ஆர்வத்தைப் பிறப்பிப்பதில் உள்ள இடர்ப்பாடுகள்

 

*மாணவரது கிரகிப்பு ஆற்றல் தொடர்பான பிரச்சினைகள் மாணவரது பல்வகைமையின்படி பிரகார நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலுள்ள இடர்ப்பாடுகளும் பிறவும்.

2. தொழில்சார் வழிகாட்டல்

எதிர்கால வேலை உலகம் தொடர்பான விளக்கத்தைப் பெற்று. அசௌகரியங்களின்றியும், அர்த்தபுஷ்டியான வகையிலும், அதில் பிரவேசிப்பதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்குதலையே இது குறிக்கின்றது.

* காணப்படும் தொழில்வாய்ப்புகளும், அவற்றின் முக்கியத்துவமும்,விண்ணப்பம் கோரும் காலவரையறைகளும், விண்ணப்பம் தயாரிக்கும் விதமும்.

*இருக்கவேண்டிய தகைமைகள். திறன்கள், ஆளுமைப் பண்புக் கூறுகள், தகைமைகளைப் பெறுவதில் முக்கியத்துவம் பெறும் கற்கைநெறிகளும், நிறுவனங்களும்.

* ஆட்சேர்க்கும் திட்டமும், அது தொடர்பான ஒழுங்கு விதிகளும், ஆட்சேர்ந்த பின்னர் எதிர்கால தொழில் வாழ்க்கைச் சந்தர்ப்பங்களும்.

 

3. தனியாள் சார்ந்த வழிகாட்டல்

ஒருவர் தனது வலிவுகளையும், நலிவுகளையும் இனங்கண்டு, தன்னைப் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற் கும் அதனூடாக நாளாந்த பணிகள் மற்றும் இருப்புத் தொடர்பான பிரதிகூலமாக அமையும் உளநிலைமைகளைத் தவிர்த்துக் கொள் வதற்கும் உதவி செய்தலையே இது குறிக்கின்றது.

ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் தொடர்பாக

  • வகுப்பறையில் கவலையுடன் இருத்தல்.
  • பாடசாலைக்கு வருவதில் விருப்பம் காட்டாதிருத்தல். பாடசாலைச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடந்துகொள்ள முடியாமை, மலசலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்திக் கொள் வது தொடர்பான பிரச்சினை.
  • நட்புத் தொடர்புகளைப் பேணிவரமுடியாமையும் பிறவும். இடைநிலைப் பாடசாலை மாணவர்கள் தொடர்பாக
  • மனதை ஒரு குறிக்கோளின்பாற் செலுத்தி வைத்திருப்பதில்
 

இடர்ப்பாடு.

பாடசாலை அல்லது ஆசிரியர்கள் தொடர்பாக அதிக அச்சம். * சமூகத் திறன்கள் குறைவாக இருத்தல் தொடர்பான கவலை. *பெற்றோரின் செல்வாக்கு அதிகமாக இருத்தல். பாலியல் தொடர்பான பிரச்சினைகளும், பிறவும்.

4. குடும்ப வழிகாட்டல்

மாணவன் உள்ளாகியிருக்கும் பிரச்சினை நிலைமையை நீக்கு வதற்காகப் பெற்றோரின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களது ஈடுபாட்டுடன் செய்யப்படும் உதவி புரிதலாகும்.
 

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

 – ஆலோசனையும் வழிக்காட்டலும் 

 – PDF தரவிறக்கம் 

 – பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

 

Leave a Comment