கல்வி மதிப்பீட்டின் பயன்கள்

 கல்வி மதிப்பீட்டின் பயன்கள்


கல்வி மதிப்பீட்டின் பயன்கள்

என்னென்ன நோக்கங்களுக்காகக் கல்வி மதிப்பீடு பயன்படுத் தப்படுகின்றதோ அதற்கொப்ப மதிப்பீட்டின் பயன்களும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. எனினும் இவற்றினைக் கற்போன் சார்பா னவை, கற்பிப்போன் சார்பானவை கல்வித்திட்டம் சார்பானவை நிர்வாகம் சார்பானவை என நான்கு பிரதான பிரிவுகளாக வகைப் படுத்தி இனங்காணமுடியும்.

கற்போன் சார்பானவை:

கற்றற் பணியில் ஈடுபடும் மாணவன் தன்னிடமிருந்து என் னென்ன விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதனை அறிவா னாயின் அது அவனது கற்றல் முயற்சிக்கு உகந்ததாக அமையும். மாணவன் தனது பணியில் ஈடுபடுவதற்கான ஓர் ஊக்கியாகவும் பின்னூட்டலாகவும் மதிப்பீடு தொழிற்படுவதால் அவனிடத்தில் உயர் வினையாற்றலை எதிர்பார்க்க முடியும். தன் முயற்சியின் முக்கி யமான படி ஒவ்வொன்றிலும் தனது முன்னேற்றத்தை மாணவன் அறிவானாயின், அதனால் ஏற்படும் மனத்திருப்தி சுய ஊக்கியாக தொழிற்படவல்லது. அத்துடன் தனது தவறுகளை உடனுக்குடன் திருத்திக்கொள்ளவும், அதன்மூலம் விரைந்து முன்னேறவும் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. இவ்வகை மதிப்பீடானது சரியான முறையில் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படு மாயின் மாணவன் தன் பணி பற்றிய சுய மதிப்பீடு ஒன்றில் ஈடுபடும் நிலையை விரைவில் அடைந்துவிட முடியும்.

கல்வி வழிகாட்டலில் மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கின்றது. மாணவர்கள் தமது பிரச்சனைக்குத் திருப்திகரமான தீர்வுகளைப் பெற உதவுவதே கல்வி வழிகாட்டலின் பிரதான நோக்கமாகும். மாணவனது ஆற்றல்களுக்கும் குறிக்கோள்களுக்குமிடையில், ஓர் இடைவெளியிருத்தல், பாடநெறிகளையும் பாடங்களையும் தெரிவு செய்தல் ஆகியனவே மாணவருக்கு ஏற்படும் பிரதான பிரச்சனைக ளாகும். இப்பிரச்சனைகள் பற்றிய தெளிவான விளக்கத்தை மாண வர்கள் அறிவார்களாயின் தமக்குப் பொருத்தமான குறிக்கோள்க ளையோ பாடநெறிகளையோ அன்றி குறிப்பான பாடங்களையோ தெரிவு செய்வதன் மூலம் தமது தோல்விகளைக் குறைத்துக் கொள் வதற்கான வழிவகைகளைத் தாமே அமைத்துக்கொள்வர்.

கற்பிப்போன் சார்பானவை

மாணவர்களைத் தனித்தனியாக அறிந்துகொள்ளல், பொருத்த மான கல்விக் குறிக்கோள்களைத் தெரிவுசெய்தல், எந்தளவுக்குக் கல்விக் குறிக்கோள்கள் அடையப்பட்டுள்ளன என்பதனைத் தீர்மா னித்தல், மேற்கொள்ளப்பட்ட போதனை முறைகளில் முன்னேற்றங் களை ஏற்படுத்தல் என்பன ஆசிரியப் பணியின் முக்கிய அம்சங்களா கும். வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவனும் ஏனையவரிலிருந்து பல்வேறு அம்சங்களில், பல்வேறு முறைகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றான். இத்தனியாள் வேறுபாடுகளை ஆசிரியர் அறிவதன் மூலமே தமது பணியைத் திறம்பட அமைக்க முடியும். மாணவரின் விருப்பு வெறுப்புக்கள், உளச்சார்புகள், ஏற்கனவேயுள்ள பாட அடைவு, சமூகப் பொருத்தப்பாட்டு நிலை போன்ற வற்றை ஆசிரியர் நன்கு அறிதல் அவசியம். கல்விக் குறிக்கோள்கள் ஏராளமாகக் காணப்படுகின்ற போதும் தமது மாணவருக்கு மிகவும் அளிக்கும். பொருத்தமானவை எவையென இனங்கண்டு, அவற்றினைத் தெரிவு செய்து கற்பிக்கும் ஓர் ஆசிரியரின் பணி சிறந்த பலனை இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட குறிக்கோள்களுள் எவையெவை எந்தெந்த அளவுக்கு அடையப்பட்டுள்ளன என்பதனை மதிப்பிட வேண்டிய பொறுப்பு ஆசிரியர்க்குண்டு. குறிப்பிட்ட ஒரு விடயத் தைக் கற்பிப்பதற்குச் சரியான வழிமுறைகள் பல காணப்படலாம். சில கற்பித்தல் முறைகள் அதிக நேரத்தையும் மாணவரிடத்தே உற்சாகமின்மையையும் ஏற்படுத்தலாம். ஒரு சில மாணவருக்குப் பிடித்தமான முறைகள் ஏனைய மாணவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். மிகக் குறுகிய ஒரு முறையானது சில மாணவரி டத்தே அதிக பலனையும் ஏனையோரிடம் குறைந்தளவு பலனையும் அளிக்கவல்லதாகக் காணப்படலாம். தான் மேற்கொண்ட அணுகு முறைகளில் எவை குறிப்பிட்ட மாணவர் தொகுதிக்கு மிகப் பொருத்தமானவை. எம்முறைகளில் என்னென்ன முன்னேற்றங் களை ஏற்படுத்த வேண்டும் என்பதனை ஆசிரியர் அறிந்துகொள்வ தற்கு மதிப்பீடு உதவியாக உள்ளது.

புளூம் என்பாரின் கருத்துக்கமைய மதிப்பீட்டுக் கருவிகளை உருவாக்குதலிலோ அன்றிச் சிறந்த மதிப்பீட்டுக் கருவிகளைத் தெரிவு செய்தலிலோ ஈடுபடும் ஆசிரியர்கள் தமது கற்றற் பணியில் புதிய உத்வேகத்துடனும் ஆக்கத்திறனுடனும் ஈடுபடுவர். மதிப்பீட் டுக் கருவிகள் பற்றிய தமது ஈடுபாட்டின்போது கல்விக் குறிக்கோள் கள் பற்றிய தெளிவான விளக்கத்தை ஆசிரியர் பெறமுடிகின்றது. இத்தெளிவான விளக்கம், கற்றல் நிலைமைக்கேற்ப பலதரப்பட்ட, சிக்கலான கற்றல் அனுபவங்களை விருத்தி செய்வதற்கு வழிவகுக் கின்றது எனவும் புளூம் குறிப்பிடுகின்றார். ஒருமுகப்படுத்தப்பட்ட கலைத்திட்ட ஆக்கமும் மதிப்பீட்டுக் கருவிகளின் பிரயோகமும் நடைமுறையிலிருப்பினுங் கூட இங்கு கூறப்பட்ட நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கல்வித்திட்டம் சார்பானவை:


நடைமுறையிலுள்ள கல்வித்திட்டமானது மாணவரிடத்தே ஏற் படுத்துகின்ற மாற்றங்கள் எவையென்பதே இங்கு முக்கியமாகக் கருதப்படுகின்றது. பின்பற்றப்படுகின்ற கல்வித்திட்டம் அல்லது பாடத்திட்டத்தின் பல்வேறு அம்சங்களில் வலுவானவை எவை நலிவானவை எவை என்பதனை ஆசிரியர் அறிந்துகொள்வதற்கு மதிப்பீடு மிகவும் உதவியாக இருக்கும். பாடவிதான ஆக்கமும் நடை முறைப்படுத்தலும் மையநிலைப்படுத்தப்பட்டுள்ள நிலைமையிலும் கூட இம்மதிப்பீடு பயனுள்ளதாகக் காணப்படும். ஒரு பாடநெறியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய இயல்புகளை இனங் காண உதவுதலே மதிப்பீட்டின் பெரும் பணியாகும். வகுப்பறையில் ஆசிரியர் கைக்கொள்ளும் பாடப்பரப்பு, கற்பித்தல் துணைப்பொருள் கள், அணுகுமுறை என்பவற்றில் பொருத்தமான தெரிவுகளை மேற் கொள்ள இது உதவுகிறது. சுருங்கக்கூறின் கல்வித்திட்டத்தின் கற்பித்தல் திறன்கள், ஏற்படும் மனப்பாங்குகள் என் பவற்றில் காணப்படக்கூடிய குறைபாடுகள் பொருத்தப்பாடின்மை கள் என்பவற்றை இனங்கண்டு ஏற்ற பரிகாரங்களை காண்பதற்கான ஆலோசனைகளையும் விதப்புரைகளையும் முன்வைப்பதற்கும், முடியுமான சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தவும் மதிப்பீடு பேருதவி புரிகின்றது.

நிர்வாகம் சார்பானவை:

பாடஅடைவு சார்பாக மாணவரைத் தெரிவுசெய்தல், வகைப் படுத்தல், தகுதிநிலை குறித்தல் என்பன சாதாரணமாக எல்லாக் கல்வி நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் பணிகளாகும். குறிப்பிட்ட ஒரு தரத்திலுள்ள மாணவர்களை ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக்கிக் கற்பிக்க வேண்டிய அவசியம் பல பாடசாலைக் ளுக்கு ஏற்படுவதுண்டு. இச்சந்தர்ப்பங்களில் ஓரளவுக்கு ஒத்த தன்மை கொண்ட குழுக்களாக அவர்களைப் பிரிப்பதற்கு மாணவரின் அடை வுச் சோதனைப் புள்ளிகள் கருத்திற் கொள்ளப்படுகின்றன. சில சமயங்களில் பொதுச் சோதனையொன்றைப் பயன்படுத்தி மாண வர்களைக் குழுக்களாக்கும் வழிமுறையும் மேற்கொள்ளப்படுவ துண்டு. வகுப்பில் சில மாணவர்கள் பெரும்பாலான சராசரி மாண வர்களின்றும் பெருமளவில் விலகிக் காணப்படக்கூடும். இவ்வாறு விதிவிலக்காகக் காணப்படும் மாணவர்களை, அதாவது அதியுயர் தகைமையுடையோரையோ அல்லது கல்வியில் பின்தங்கியோரையோ இனங்கண்டு வழிகாட்டுதலும் ஒரு பிரதான நிர்வாகப் பணியாகும். இதன் பொருட்டுச் சில சமயங்களில் விசேட மதிப் பீட்டுத் திட்டங்கள் வகுக்கப்படுவதுமுண்டு. மாணவரின் முன்னைய நிலை, தற்போதைய நிலை ஆகிய இரண்டினையும் கொண்டு அவனது எதிர்காலக் கல்வி விருத்திக்கு வழிகாட்டுதல் பாடசாலையின் பணியாகும். மாணவரின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சி யில் பெற்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், பாடசாலைப் பணிகளின் தோல்விகளைக் குறைத்து வெற்றி வாய்ப் புக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைக்கொள்ளல் என்பனவும் பாடசாலையின் கடமைகளாகும். இவை தவிர, குறிப்பான சில கல்விப் பிரச்சனைகள் பற்றி ஓரளவுக்கேனும் ஆய்வு களை நடத்தித் தீர்வுகாண வேண்டிய அவசியமும் பாடசாலை களுக்கு உண்டு. சிறந்த மதிப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கு மாயின் இவ்வாறான நிர்வாகம்சார் பிரச்சனைகள் பலவற்றிற்குத் தீர்வு காணல் இலகுவாகின்றது.

Leave a Comment