www.edutamil.com |
அச்சொல்லிலிருந்த தெளிவாக விளங்குவது யாதெனில் மாணவனின் அறிவு, விளக்கம், ஆற்றல் என்பவற்றை வெளிக்கொண்டு வருதலாகும். கல்வியின் மூலம் ஆற்றல்களும் திறன்களும் விருத்தி செய்யப்படவேண்டும். கல்வி என்பதனால் கருதப்படுவது யாதெனில் வெற்றுப்பாத்திரம் என நினைத்துப் பிள்ளை மனதில் அறிவை நிரப்புவதல்ல என்பதே. பல்வேறு முறைகள் மூலம் அறிவைப்பெற முயற்சிக்கின்ற மாணவர்களுக்கு, பெற்றோர்களுக்கு, வளர்ந்தோர்களுக்கு,”பையொன்றில் பொருட்களை நிரப்புவதைப்போல மனதிற்கு அறிவைப் பொறிமுறையாக நிரம் முடியாது” என்ற எல்ட் ஹக்ஸ்லியின் கூற்று நினைவிற் கொள்ளத் தக்கதாகும்.
Max wing (1974) இன் கருத்துப்படி கல்வி என்பது ஒரு நடைமுறைச் செயன்முறையாகும். அவரது கருத்தானது ஆரம்பத்தில் கற்போரின் விருப்பத்திற்கமைய செய்முறை அனுபவங்கள் வழங்கப்பட்ட அமைகிறது. பின்னர் கொள்கை ரீதியான அம்சங்கள் வழங்கப்பட வேண்டும். என்பதாக
Taneja (1990) இன் கருத்துப்படி கல்வி என்பது ஒரு மனிதனின் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக சக்திகளை இடையறாது விருத்தி செய்கின்ற ஓர் நிலையான செயன்முறையாகும். இதிலிருந்து கல்வி என்பது ஒருவனின் முழுமையான ஆளுமையினை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை நீடித்த செயன்முறையாகும்.
நவீன பகுமுறைக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பீட்டர்ஸி ‘கல்வி’ எண்ண என்ற எண்ணக்கருவை ஆழமாகப் பகுப்பாய்வுசெய்ய முயற்சி எடுத்தார். அவரின் கருத்துப்படி ‘கல்வி’ எண்ணக்கரு மிகவும் சிக்கலான எண்ணக்கருவாகும். அது ‘சிவப்பு’ அல்லது ‘குதிரை’ போன்ற உறுதியானதொரு எண்ணக்கருவைச் சொல்கின்ற, பிரதிபலிக்கின்ற எண்ணக்கருவல்ல. ‘கல்வி’ எண்ணக்கருவினுள் செயன்முறைகளின் குடும்பமொன்று (Family of process) உள்ளடங்கியுள்ளதாக பீட்டர்ஸ் கூறுகின்றார். அவரின் கருத்துப்படி ‘கல்வி’ எண்ணக்கரு நியமமான (Normative) தொன்றாகும். கல்வி மூலம் தனியாளுக்குப் பெறுமான முறைமையொன்று கிடைக்கின்றது. அவர் “கல்வி என்பது சமூகத்தின் ஏதாவதொரு செய்முறை மூலம் தனியாளிடம் சிறந்த உளநிலை வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும்” எனத் தெளிவாகக் கூறுகிறார்.
ஆர்.எல்.பீட்டர்ஸ் கல்வியின் மூலம் ஆழமான அறிவையும் (Knowledge) விளக்கத்தையும் (Understanding) பெற்றுக்கொடுக்க வேண்டும் மேலும் கூறுகிறார். இதன்படி அவர் என ‘கல்விக்கும்’ (Education) ‘பயிற்சிக்கும்’ (Training) உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகிறார். ‘ஏதாவதொரு மட்டுப்படுத்தப்பட்ட துறையில் விசேட அறிவு. திறன்களின் தொகுதியைப் பெற்றுக்கொள்ளுதல் என்பதே ஒருவர் பயிற்சி பெறுகிறார். என்பதனால் கருதப்படுகின்றது. ஆனால் ஆழமான அறிவு, விளக்கம். ஆற்றல் உள்ள உருவாக்கும் செயன்முறை என்பதே ‘கல்வி’ என்பதனால் கருதப்படுகின்றது. (Education is the பூரண மனிதனை whole man) இத்தகைய கல்வியைப் பெற்றவனை அவர் கல்விமான் (Educated man) எனக்கூறினார். வாழ்க்கை முறைகள் கல்வியினால்” உருவாக்கப்படுவதனால் அவ்வாழ்க்கை முறை தமக்கும் சமூகத்திற்கும் பொருத்தமானவையாகும்.
பொருத்தப்படுத்திக்கொண்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இவ்வாறு கருதப்படும். பயிற்சி என்பது இனங்காணப்பட்ட நியதிகளுக்கமைய வரையறைக்கப்பட்ட தெளிவான குறிப்பிடப்பட்ட உதவியின் ஊடாக ஏலவே தொழில்சார் திறன்களையும் புதிய அறிவினையும் பெற்றுக்கொள்ள உதவும் செயற்பாடு என குறிப்பிடும் Chiffy (1990) கல்வியையும் பயிற்சியையும் தெளிவாக வேறுபடுத்துவது கடினமானதெனவும் கருதமுடியும் எனவும் காட்டுகிறார். இவை ஒன்றிற்கொன்று மாற்றீடானவையாக
கல்வியையும் பயிற்சியையும் ஒப்பீடு செய்த Mathur & Thadani (1994) கல்வி என்பது மாணவரின் முழுமையான விருத்தியைக் குறிக்கோளாகக் கொண்ட வரையறுக்கப்பட்ட கலைத்திட்டத்தினூடான முறைசார்ந்த மற்றும் முறைசாராத முறைகளை கொண்ட தெரிவிக்கின்றனர். அவ்வாறே பயிற்சி என்பது நீடித்த செயன்முறை எனத் விசேட அல்லது தெரிவுசெய்யப்பட்ட சில திறன்களை மேம்படுத்தும் வகையில் குறுகிய காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றில் பயிற்றுனர்களால் நடத்தப்படும் மிகவும் வரையறுக்கப்பட்ட ஓர் செயன்முறையாகும். அவர்களது நோக்கில் பயிற்சி என்பது கல்வியின் ஓர் பகுதியாகும்.
கல்வி- பரிணாமமும் வரைவிலக்கணங்களும்
எழுதுதல், ஆரம்ப கணிதம் ஆகிய பாடப்பரப்புகளின் அறிவைப் பெற்றுக்கொடுத்தலே ‘கல்வி’ என ஆதிகாலச் சமூகங்களில் கூறப்பட்டது. பரம்பரை பரம்பரையாக இப்பாடப்பரப்புகளின் அறிவைப் பெற்றுக்கொள்வதும் வளர்ந்தோர் ஏற்றுக்கொண்ட அவர்கள் முன்னைய பரம்பரையிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவத் தொகுதியைப் பாடம் என்ற பெயரில் இளம் பரம்பரையினருக்கு ஒப்படைத்தலுமாகும். இளம் பரம்பரையை வளர்ந்தோர் சமூகத்தில் செயற்படும் அங்கத்தினராக்குவதற்கு, வளர்ந்தோர் சமூகம் ஏற்றுக்கொண்ட அல்லது அவர்களுக்கும் அவர்களது முன்னைய பரம்பரையால் ஒப்படைக்கப்பட்ட அறிவு, திறன், நம்பிக்கைகள் என்பவற்றை இளம் வயதினருக்கு ஒப்படைத்தலே ‘கல்வி’ எனச் சிந்திப்பதற்குப் பழக்கப்பட்டிருந்தனர் என நாம் அறிகிறோம்.
கல்வி பற்றிய நாம் அவ்வாறே ஏற்றுக்கொள்வதில்லை. மட்டுமல்ல இதற்கு முன்னும் இக்கருத்துக்களை ஏற்காதவர்கள் இருந்தார்கள் என்பதைக் கீழே குறிப்பிடப்படும் சிந்தனையாளர்கள், கல்வியியலறிஞர்கள், சமூகவியலாளர்கள் கல்வி கருத்துக்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். பற்றி முன்வைத்த மேலைத்தேய மரபுசார் கல்விச் சிந்தனையாளர்கள்
சோக்கிரட்டீஸ்
புராதன கிரேக்கத்தில் வாழ்ந்த சோக்கிரட்டீஸ், “தன்னைப்பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அறிவை வழங்கும் செய்ம்முறையே கல்வியாகும்” சுய எனக்கூறினார். இக்கருத்து இன்றைக்கும் பொருத்தமானதாகும். விளக்கத்தைப் (Self knowledge) போல வாழ்க்கைக்குப் பொருத்தமான வேறு விடயங்கள் இல்லையென்றே கூறலாம். தனது வல்லமை, ஆற்றல், குறைபாடுகள். தான் செய்வது சரியானதா, பிழையானதா என்ற வகையில் விளக்கத்தைப் பெறுவதற்கு முயற்சியெடுத்தால் அதைவிட வேறு கல்வி இல்லை. அது வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
பிளேட்டோ
கி.மு.நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ அக்காலத்து இலட்சிய அரசுக்காக ஆட்சியாளர்களை உருவாக்குவதற்காகக் கல்வியை ஆயதமாகப் பயன்படுத்தினார். Republic என்ற நூலில் அவர் கூறுகின்றபடி கல்வி உத்தமமானதும் அழகானதுமாகும். The Laws என்ற நூலில் அவர் கூறுகிறபடி கல்வியால் கிடைக்கின்ற நன்மை யாதெனில் நல்ல மனிதர்கள் உருவானது மட்டுமல்லாது அவர்கள் நல்ல முறையிற் செயலாற்றவும் பழகிக்கொள்கிறார்கள் என்பதேயாகும்.
பிளேட்டோ தனது ‘சட்டம்’ எனும் நூலில் மேலும் குறிப்பிடும்போது வெறுப்புக்குரிய வற்றை முழுமையாக நீக்குவதற்கும் விரும்பத்தகுந்தவற்றை விருப்புடன் தழுவிக்கொள்வதற்குமென பயிற்சிச் செயன்முறையாக கல்வி கருதப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பற்றிய பிளேட்டோவின் இன்னோர் கருத்தானது மாணவனுக்கு வழங்கப்படும் அறிவு பயன்மிக்கதாகவும் சமூகப்பயனுள்ள சிலவற்றை மாணவன் கற்கவும் வேண்டும் என்பதாகும்.
ரூஸோ
தத்துவப் புரட்சியொன்றையேற்படுத்திய பிள்ளையின் சுதந்திரம் பற்றி முழு உலகத்துக்கும் எடுத்துக்கூறிய 18-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜீன் ஜேம்ஸ் ரூஸோ கல்வி இயற்கையோடு ஒட்டியதாகத் தோன்றுகின்ற செய்முறைமையெனக் காட்டுகிறார். இயற்கைவாதியான ரூஸோ எழுதிய Emile என்ற நூலில், “பிள்ளைக்குக் கல்வியை அவனது ஆற்றல்கள். தேவைகள், விருப்பங்கள் என்பவற்றுக்கேற்பப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறார். இதனாலேயே அவரை நாம் பிள்ளை மையக்கல்வியின் கருத்தா எனக்கொள்கிறோம்.
‘எமிலி’ எனும் நூலில் ஒரு மனிதனும் ஒரு பிரசையும் ஒரே நேரத்தில் முடியதென குறிப்பிடப்பட்டிருக்கும் அதேசமயம் முதலில் ஒரு மனிதன் உருவாக்கப்பட்ட பின் விவசாயத்தின் மூலம் பயிர்கள் உருவாக்கப்படுதல் போல் உருவாக்கப்பட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி உருவாக்கப்பட *மூலம் மனிதர்கள்
ரூசோ தனது கருத்துக்களை மேலும் கூறும்போது ஒரு மனிதனாக உருவாகு முன் ஒரு குழந்தை குழந்தையாகவே வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
ஜோன் டூயி
அமெரிக்கப் பிரசையான செய்முறைவாதச் சிந்தனையாளரான ஜோன் டூயி, “கல்வி வாழும் செயன்முறையே தவிர எதிர்காலத்தில் வாழ்க்கைக்கு ஆயத்தமாக்குவதென்பது” என்று கூறுகிறார். அவர்களின் கல்விக் கருத்துக்களின் பங்களிப்பு அக்காலத்தில் முன்னேற்றமான கல்வியை (Progressive Education) உருவாக்குவதற்குக் காரணமாயிற்று. “கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்கமைப்பதும் மீளமைப்பதுமாகும்” என மேலும் கூறுகிறார். அவர் தமது கல்விச் சிந்தனைகளில் அனுபவங்களுக்குப் பண்புசார் பொருளைக் கொடுக்கின்றார். சிறந்த அனுபவங்கள் மூலம் சிறந்த கல்வி பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் அதன்மூலம் தனியாள் விருத்தியும் ஏற்படுகின்றது. வெளியிட்டார். அவர் காட்டுகின்றவாறு மரபுமுறைப் பாடசாலைகளில் என் செயற்பாடற்ற கற்பித்தலின் காரணமாக மாணவன் பெற்ற அனுபவங்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கவில்லை. பிள்ளை சூழலுடன் மோதுவதன்மூலம் பிரச்சினை தீர்த்தல், ஆய்வுகள், கண்டுபிடிப்புக்கள், செயற்பாடுகள் ஆகியவற்றின் மூலம் பெறுகின்ற செயன்முறை அனுபவங்கள் கல்வியைப் பொறுத்தவரை சிறந்தவை என ஜோன் டூயி கூறினார்.
ரூயி (1916)
கல்வியானது நிகழ்காலத்திற்கு ஏற்றதாகவும் அதேசமயம் எதிர்காலத்தின் முன்னேற்றமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடியதாகவும் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இயற்கையும் அனுபவமும் எனும் நூலில் கல்விக்கென இல்லை எனில் கல்வி அடிக்கடி மாற்றத்திற்குட்பட நேரிடும். வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள் மேலும் கல்வியானது ஓடும் நீரைப்போல தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பின் அதற்கென ஒரு மையப் புள்ளியோ அல்லது திசையோ இருக்க மாட்டாது.
அல்பிரட் லைட்ஹெட்
ஆங்கிலேயரான லைட் ஹெட்டின் கருத்துப்படி “கல்வி என்பது அறிவைச் செயன்முறையாகப் பயன்படுத்தும் கலையைக் கைப்பற்றிக் கொள்வதாகும் அவர் கல்வியின் நோக்கங்களாக “செயன்முறை அறிவை உருவாக்குதல், தனியாள் விருத்தியைப் போஷித்தல் ஆகியவற்றைக் கண்டார்.
பேர்ட்ரன்ட் ரஸல்
பிரபல ஆங்கில சிந்தனையாளரான ரஸல், “தனியாள் விருத்திக்குச் சந்தரப்பங்களை வழங்கி, தடைகளை விலக்கி, கலாசார அருங்கொடைகளை ஒப்படைத்து, சமூகத்துக்குப் பயனுள்ள தனியாளை உருவாக்கும் செயன்மறையாகும்” என்று கல்வியை அறிமுகப்படுத்துகிறார். பர்ட்ரன்ட் ரஸலினது வரைவிலக்கணத்தில் இதுவரை குறிப்பிடப்படாத கல்வியினது விளக்கப்பட்டுள்ளது. அதாவது கலாசார ஒரு பங்களிப்பு அருங்கொடைகளை ஒப்படைத்துக் கல்வியின்மூலம் ஏற்படுகின்ற தனியாளது சமூகமயச் செயன்முறையாகும். அதேபோலப் பயனுள்ள அறிவினையும் செயன்முறை ஆற்றலையும் உடைய அவற்றின் காரணமாக ஆக்கபூர்வமாக சிந்திக்கக்கூடிய மட்டுமே சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாவர்.
குட் தயாரித்த கல்விக் கலைக்களஞ்சியத்தில் கல்வி என்பது தனியாள் தனது அறிவு, திறன். மனப்பாங்கு என்பவற்றினூடாகச் செயன்முறைப் பெறுமானமுள்ள ஆளுமையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குட் கல்வியால் ஏற்படுகின்ற ஆளுமை விருத்தியையே பெரிதும் வலியுறுத்துகின்றார்.
கீழைத்தேய மரபுசார் கல்விச் சிந்தனையாளர்கள் இதுவரை நாம் மேலைத்தேய கல்விச் சிந்தனையாளர்கள் சிலர் வெளியிட்ட வரைவிலக்கணங்களைக் கற்கிறோம். கீழைத்தேய சிந்தனையாளர்கள் கல்வி பற்றிக் கூறியுள்ள முறையின் பக்கம் எம் கவனத்தைச் செலுத்துவோம்.
மகாத்மாகாந்தி
20ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிரேஷ்ட அரசியல்வாதியும் சமூக சேவையாளரும் அஹிம்சைவாதியுமான மகாத்மா காந்தியுடைய கல்விக் கருத்துக்கள் அவர் முன்வைத்த வார்தா கல்வி முறையில் அடங்கியுள்ளன. நான் வளர்ந்தோரிடமும் கல்வி எனக் குறிப்பிடுவது பிள்ளையிடமும் உடல், உள்ளம், ஆன்மா என்ற வகையில் உயர் நிலைகளை வெளிக்கொணர்தலையே”. ‘Educate’ என்ற இலத்தீன் சொல்லின் பொருள், ‘வெளிக்கொண்டு வருதல்’ என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன்மூலம் மகாத்மா காந்தி கருதியது யாதெனில், சகல பிரிவுகளிலும் தனியாளிடமுள்ள ஆற்றல்களின் உச்ச விருத்தி கல்வி மூலம் நிறைவேற்றிக்கொள்ளப்பட வேண்டும்” என்பதாகும். அவர் கல்வி மூலம் தனியாள் நிறை ஆளுமை விருத்தியை விரும்பினார் என்பது தெளிவாகின்றது. அக்காலத்தில் இந்தியாவில் அந்நிய ஆட்சிமுறையில் நிலவிய முழுவதும் நூற்கல்வி முறையிலான கல்வி முறையை அவர் கண்டித்தார். கல்வி முறையில் நூற்கல்வி சார், செயன்முறைசார், தொழில்சார் தன்மை இருக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட மகாத்மாகாந்தி ‘வார்தா கல்வி முறை’ மூலம் இந்தியாவுக்குத் தொழில்மையக்கல்வி முறையொன்றை முன்வைத்தார். Harijan எனும் சஞ்சிகைக்கு (1997) இவர் எழுதிய கடிதத்தில் உண்மையான கல்வி என்பது பிள்ளையின் ஆன்மீக, அறிவுசார். உடலியல் அம்சங்களை உயர்த்துகின்றதும் அதுசார்ந்த உள்ளார்ந்த திறந்களை விருத்திசெய்வதும் ஆகும் என குறிப்பிட்டார்.
ரவீந்திரநாத் தாகூர்
வங்காளத்தைச் சேர்ந்தவரான ரவிந்திரநாத் தாகூர் கலைஞரும் கல்வியியலறிஞருமாவார். “கல்வி சிந்தனையாளரும் என்பது சமாதானத்தை விருத்திசெய்யும். தெய்வத்தினதும் உலகத்தினதும் மனிதனதும் ஐக்கியத்தைப் போஷிக்கும் செயன்முறையாகும்” என்பது இவரது நம்பிக்கையாகும். கல்வி மூலம் மனிதன் உற்பத்தி செய்யப்படுவதல்ல மனிதன் ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பது இவரது கருத்தாகும். பிரசித்தி பெற்ற சாந்தி நிகேதனை மையமாகக் கொண்டு அழகியல்சார் கல்வி விருத்திக்கு அவர் பெரிதும் பணியாற்றினார். அழகியல்சார் கல்வி மூலம், “மனவெழுச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான கல்வியைப் (Education of the emotions) பெற்றுக்கொடுக்க அவர் முயற்சியெடுத்தார்.
கல்வி ஆனது சமநிலையான ஒன்றாகவும் அத்துடன் மனிதனின் உடல், சமூக, கலாசார. அறிகை மற்றும் விருத்திக்கு வழியேற்படுத்தும் ஒன்றாகவும் இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Aggrawel இன் கருத்தானது ஒரு மனிதனின் உள்ளத்தைச் சுதந்திரமாகத் தொழிற்பட இடமளிப்பதே கல்வியின் உண்மையான குறிக்கோள் என்பதாகும்.
எஸ்.ராதாகிருஷ்ணன்
பிரபல இந்திய சிந்தனையாளரான ராதாகிருஷ்ணன் கல்வி பற்றிப் பின்வரும் கருத்தைக் கொண்டுள்ளார். “கல்வி உளப்பயிற்சியையும் ஆத்மீகப் பயிற்சியையும் கொடுக்கவேண்டும்”. கல்வி மூலம் அறிவு விருத்தியைப்போல ஞான விருத்தியையும் பெற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஜிடு கிருஷ்ணமூர்த்தி
இவர். *கல்வி என்பதன் உண்மையான பொருள் யாதெனில் பெற்றுக்கொள்வதேயாகும். தன்னைப்பற்றிய விளக்கத்தை (அறிவை)ப் பெற்றுக்கொள்ளுதல் அடிப்படை நோக்கமாகும். சமூகவியலறிஞர்களும் கல்வி விளக்கம்.என்ற பண்டைய சமூகவியலறிஞர்களைப் போலவே நவீன சுய எண்ணக்கருவிற்கு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர்.
எமில் டர்ஹய்ம்
சமூகவியலின் பிதா எனக்கருதப்படுகின்ற பிரான்ஸ் நாட்டவரான எமில் டர்ஹய்ம், கல்வி என்பது சமூக வாழ்க்கைக்கு ஆயத்தமாகின்ற ஒரு கூட்டத்தினருக்காக வளர்ந்தோரால் கொண்டு நடத்தப்படுகின்ற செயன்முறையாகும்” என்று கூறுகிறார். அவரது கருத்துப்படி, “கல்வி என்பது சமூகமயமாக்கமாகும்” சமூகவியலறிஞர்கள் கல்வியின் அவதானம் செலுத்துவதால் சமூகமயமாக்கல், கலாச்சார அருங்கொடைகளை ஒப்படைத்தல் சமூக சமூக நோக்கங்களில் கூடிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கூடிய அவதானத்தைச் செலுத்துகின்றனர்.
கல்வி பற்றிய பல்வேறு வரைவிலக்கணங்களை இதுவரை கற்ற அவ்வரைவிலக்கணங்களிலிருந்து கல்வியில் பல்வகை நோக்கங்களும் குறிக்கோள்களும் உள்ளன உங்களுக்கு என்பது தெளிவாகும். மேலும் இவ்வரைவிலக்கணங்களில் ஒத்த தன்மைகளும் வேறுபாடுகளும் உள்ளன என்பதும் உங்களுக்கு விளங்கும். இந்த வகையில் ஆர்.எஸ். பீட்டர்ஸ் கூறுகின்றவாறு ‘கல்வி’ எண்ணக்கருவில் செய்முறைகளின் சமூகமொன்று உறுதிப்படுத்தப்படுகின்றது.
யுனெஸ்கோ அறிக்கை – கல்வி பற்றிய புதிய போக்கு நவீன யுனெஸ்கோ அறிக்கை தொடர்ச்சியாக மாறுகின்ற உலக சமுதாயத்திற்குப் பொருத்தமான வகையில் ‘கல்வி’ மாறவேண்டுமெனக் கூறுகின்றது.
கல்வியின் மூலம் நாம் எதிர்பார்க்க வேண்டியவை எவை?
எவ்வகையில் கல்வி வழங்கப்படவேண்டும்? போன்ற பிரச்சினைகளை அசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர். வளர்ந்தோர், கல்வித்துறையிற் பொறுப்பாகச் செயற்படுவோர் ஆகிய அனைவரும் எதிர்நோக்குகின்றனர். இவை வளர்ச்சியடைந்த. வளர்ச்சியடைந்துவருகின்ற நாடுகள் அனைவற்றிற்கும் பொதுவானவை. 1970இல் யுனெஸ்கோவினால் கல்வி விருத்தி பற்றிய விபரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேசக் கல்வி ஆணைக்குழுவினது அறிக்கையில் ‘கல்வி’ பற்றிக் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணத்தை நாம் இப்போது ஆராய்வோம். யுனெஸ்கோ முன்வைத்த இவ்வறிக்கை உலகக் கல்வியை நிகழ்காலத்துடனும் எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தி வாழ்வதற்காகக் கற்றல் (Learning to be) எனக் கூறுகின்றது. இது பவுரே அறிக்கையென அழைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் பிரான்ஸ் நாட்டில் கல்வி அமைச்சராக இருந்த எட்கார் பவுரே இவ்வாணைக்குழுவின் தலைவராகக் கடமையாற்றியமையே ஆகும்.
இவ்வறிக்கையில் கல்வி “வாழ்வதற்காகக் கற்றல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கருதப்படுவது யாதெனில், வாழ்க்கைக்குப் பொருத்தமில்லாத பயனில்லாத விடயங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை மனனம் செய்வதல்ல வாழ்வதற்குப் பொருத்தமான, அதற்காக அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற, தேவைப்படுகின்ற அறிவு திறன். மனப்பாங்கு என்பவற்றைச் சேகரிக்கும், பயன்படுத்தும் செயன்முறையெனக் கல்வி வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்பதேயாகும். இதன்படி கற்றல் என்பது வாழ்க்கைக்குப் பொருத்தமான உள உடல் அனுபவங்களைப் பெறுதலேயாகும். இவ்வறிக்கையில் தற்காலக் கல்வியுடன் தொடர்புடைய இரு புது எண்ணக்கருக்கள் முன்வைக்கப்பட்டன. வாழ்க்கை முழுவதும் கல்வி (life-long education), கற்றல் சமூகம் (leaning society) என்பவையே அவை. “தமது வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபடுவதற்குச் சகலருக்கும் முடியுமானதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் கல்வி பற்றிய எண்ணக்கரு கூறப்பட்டுள்ளது. கற்றலில் ஈடுபட்டுள்ள சமூகத்தினது அடிக்கல்லாகும். எனக்
1990 இல் நடைபெற்ற ஐ.நா. ஜோமியன் சங்கத்தின் அனைவருக்கும் கல்விக்கான மாநாட்டில் கல்வியினூடாக சமத்துவம் வழங்கப்பட வேண்டியமைக்கான தேவை வலியுறுத்தப்பட்டது.
உலகக் கல்வி சம்பந்தமான புதிய சிந்தனை, 21ஆம் நூற்றாண்டில் எவ்வாறான கல்வி இருக்கவேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கைப்படுத்த நியமிக்கப்பட்ட சர்வதேசக் கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையேயாகும். இவ்வறிக்கை (Learning The treasure within) என 1996-ல் வெளியிடப்பட்டது. இவ்வாணைக்குழுவின் தலைவராக ஜேக்ஸ் டொலோரெஸ் செயற்பட்டார். இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்ட கல்வி எண்ணக்கரு மிகவும் பண்புசார்பானதாக இருந்தது. இந்நூற்றாண்டில் முன்னொருபோதும் இல்லாத வகையில் அறிவு. தொடர்பாடல், பிரசாரம், களஞ்சியப்படுத்தல் ஆகியவற்றின் காரணமாகக் கல்வி மீது இரு தேவைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு புறம் பாரிய அளவில் தொடர்ச்சியாகத் தோன்றுகின்ற அறிவைச் செலுத்துதலும் இவ்வறிவு விரிவிற்குப் பூரணமாக உட்படாமல் தனியாள் விருத்தியையும் சமூக விருத்தியையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதலுமாகும்.
நவீன உலகில் நிலவுகின்ற “உலகமயமாக்கற் செயன்முறை (globalization), உலகக் கிராமம்” (global village) ஆகிய தொனிப்பொருள்களும் கல்விக்குப் புதிய இலக்குகளை அளித்துள்ளன. இதன் காரணமாக எல்லாப் பிள்ளைகளுக்கும் இவ்வெல்லையில்லா அறிவுத் தொகுதியை வழங்குதல் மட்டும் போதுமானதல்ல. ஒவ்வொரு தனியாளுக்கும் வாழ்க்கை முழுவதும் கற்கும் சந்தர்ப்பங்களில் உச்சப்பயனைப் பெறுவதன்மூலம் அவருடைய அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை விரிவாக்கிக் கொண்டு தொடர்ச்சியாக மாறுகின்ற சிக்கலான இடைத்தொடர்புடைய உலகுக்குத் தம்மைச் சரிப்படுத்திக் கொள்வதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இச்சவாலினை எதிர்கொள்வதற்காக உலகக் கல்வி தங்கியுள்ள நான்கு தூண்கள் (Four pillars ot eduction) பற்றிய அறிக்கையீற் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்லுகின்ற கல்வியை முறைகளுக்கேற்பவேயாகும். ஒழுங்கமைக்க அவையாவன, வேண்டியது அறிவைப் பெறக் அதனால் வாழ்க்கை இந்நால்வகைக் முழுவதும் கற்பித்தல் செயலில் ஈடுபடுவதற்காகக் கற்றல் (learning to do) ஏனையவர்களுடன் வாழக்கற்றல் (learning to கற்றல். (Learning to know) live together), வாழக்கற்றல் (learning to be) என்பனவே. இவை ஒவ்வொன்றையும் பற்றி மேலும் ஆராய்வோம். தற்காலக் கல்விக்குப் பொறுப்பாகச் செயற்படும் ஆசிரியர் என்ற இச்சவால்களைப் பயனுள்ள வகையில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிக் கவனமெடுத்தல் வேண்டும். வகையில்
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்
1. அறிவைப்பெறக்கற்றல் அறிவைப் பெறுவதற்குக் கற்றல்
இக்கருத்தாவது அறிவு முறைமையைச் சேகரிப்பதைவிட அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறைகளை அறிந்துகொள்ளல், புகழுடன் வாழ்தல், தொழில்சார் திறன்களை விருத்தி செய்தல், தொடர்பாடலுக்குப் பழகுதல் என்பதேயாகும். பரந்த பொதுக் கல்வியைப் பெறுவதுடன் சிறிய விடய அளவுகளை ஆழமாக் கற்கவேண்டியுள்ளது. மேலும் வாழ்க்கை முழுதும் அளிக்கப்படுகின்ற கல்விச் சந்தர்ப்பங்களில் உச்சப்பயனைப் பெறுவதற்காகக் கற்பதற்குக் கற்கவேண்டும் (leam to learn).
2. செயலில் ஈடுபடுவதற்காகக் கற்றல்
அறிவைப் பெறுவதற்குக் கற்றல், செயலில் ஈடுபடுவதற்குக் கற்றல் ஆகிய இரண்டையும் வேறுபடுத்திக் கொள்ளமுடியாது. ஆனாலும் விசேடமாகச் செயலில் ஈடுபடுவதற்காகக் கற்றல் என்பது தொழில்சார் பயிற்சியைப் பெறுதலும் தொழிற்றிறன்களை விருத்திசெய்து கொள்ளுதலுமாகும். அத்தோடு குழுக்களாக வேலை செய்யவும் அதில் பங்குகொண்டு தேர்ச்சிகளை (Competencies) விருத்தி செய்து கொள்ளவும் வேண்டும். இதைத்தவிர இளைஞர்களின் பல்வேறு சமூக, தொழில் அனுபவங்களின் துணையுடன் செயல்களில் ஈடுபடுவதற்குக் கற்கவேண்டியுள்ளது. இவை பிரதேச மட்டத்திலும் முறைமை சாராதவைகளாக இருக்கலாம். அல்லது தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டு பயில்கின்ற முறைசார் மட்டத்திலான பாடநெறியாக இருக்கலாம்.
3. ஏனையவர்களுடன் வாழக்கற்றல்
கல்வியில் இது இல்லாமல் இருப்பது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. தற்கால உலகில் குற்றங்கள் நிறைந்தும் ஒழுக்கம் குறைந்தும் காணப்படுகின்றன. வரலாறு முழுவதிலும் மோதல்கள் ஏற்பட்டிருந்தாலும் தற்காலத்தில் மேலும் பயங்கரக் காரணிகள் தோன்றுகின்ற அதே வேளையில் கடந்த நூற்றாண்டில் மனித இனம் சுய அழிவை நோக்கிச் செல்லும் தன்மை அதிகரித்துள்ளது. முழுச்சமூகமும் மற்றவர்களை விளங்கிக் கொள்வதற்கு முன்பு தன்னைப்பற்றி விளங்கிக் கொள்ளவேண்டியுள்ளது. இது சம்பந்தமாக இளம் வயதினருக்கு குடும்பமும் பாடசாலையும் உதவவேண்டும். பல்கலாசாரப் பெறுமானங்களை அறிந்துகொள்ளல். பரஸ்பர புரிந்துணர்வு, சமாதானத்தைப் பாதுகாத்தல், தொடர்பாடற்றிறன்களை விருத்திசெய்தல், மற்ற இனத்தவரினதும் சமயங்களினதும் பெறுமானங்களைக் கௌரவித்தல் ஆகியவற்றைக் கற்கவேண்டும். மோதல்களை ஒழிப்பதற்குப் பாடசாலையினுள் அஹிம்சையைக் கற்பிப்பதற்கும் பொது இலக்கை நோக்கிச் செயற்படுவதற்குப் பயிற்சி அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இக்குழு வாழக்கற்றல் என்ற அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் கல்விமூலம் ஒவ்வொருவரிடமும் சமமான ஆளுமை விருத்தி ஏற்படவேண்டுமென்பதை ஒத்துக்கொண்டது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் கல்வியின்மூலம் அழகியல்சார் உணர்வுகளை விருத்தி செய்து கொள்வதற்கும் சுயாதீன விமர்சனம் சார் சுதந்திரமான சிந்தனைகளை விருத்திசெய்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். இதற்காக இளம்வயதினருக்குக் கல்வி மூலம் கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் என்பவற்றிற்குச் சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். அத்தோடு அழகியல் கலைகள், விளையாட்டு, விஞ்ஞானம், கலாசாரம், சமூகம் ஆகிய அம்சங்களை விருத்திசெய்து கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டும். ஒருவரிடமுள்ள திறன்கள். உடலாற்றல்கள், நினைவுகூரும் ஆற்றல், தொடர்பாடற்றிறன்கள் ஆகியவற்றை விருத்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்படவேண்டும்.
ஏற்கனவே நீங்கள் கற்ற கல்வி பற்றிய பழைய வரைவிலக்கணங்களிலிருந்தும் வரைவிலக்கணங்களிலிருந்தும் கல்வியினது பங்களிப்பை நன்கு விளங்கிக் கொண்டிருப்பீர்கள். நவீன ஆசிரியர் என்ற வகையில் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான பொறுப்புப்பற்றி ஒரு விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்குமென எண்ணுகிறோம். கல்வி நிறைவேற்றப்படவேண்டிய பணிகளைச் சுருக்கமாகக் கூறுவோம்.
- தனியாள் கண்ணோட்டத்தில்
- சமமான ஆளுமை விருத்தி
- காலத்தின் தேவைக்கேற்ப அறிவு. திறன், மனப்பாங்கு என்பவற்றின் விருத்தி
- நடத்தை விருத்தி
- நற்பிரசைக்கான பயிற்சி
- தன்னைப்பற்றி விளங்கிக் கொள்ளல்
- வாழ்வதற்குக் கற்றல்
- வாழ்க்கை முழுதும் கற்றல்
- மற்றவர்களுடன் வாழும் ஆற்றலை விருத்தி செய்தல்
- சமூகப்பாதுகாப்பு,
- சமூக விருத்தியும் முன்னேற்றமும்
- பல்கலாசார சமூகத்தைக் கொண்டு நடத்துதல்
கல்வி என்றால் என்ன குறிப்பிடவேண்டியுள்ளது. என்பதை விளக்கும்போது ஆசிரியர் தொடர்பாக ஒரு விடயத்தைக் கல்வி என்பதனால் கருதப்படுவது யாதெனில் சில விடயங்களை மனப்பாடம் செய்துகொண்டு பரீட்சையில் சித்தியடைதலே என்று நினைத்தல் தவறு என்பது இப்போது உங்களுக்கு விளங்கும். கல்வி என்பது வாழ்வதற்காகக் கற்றல் ஆதலால் வாழ்க்கையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிடைக்கின்ற அறிவைப்பயன்படுத்தி அதன்மூலம் அனுபவங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுபவங்களைப் பெறவேண்டுமானால், பயன்படுத்த வேண்டுமானால் பெறுகின்ற அறிவை மிக நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும். அதனால் ஆசிரியர்கள் கல்வி பற்றிய தற்காலச் சிந்தனைகளைத் தெளிவாக விளங்கிக்கொண்டு கற்பிக்கவேண்டும்.
- சமூக நிதி
- பொருளாதார வினைத்திறன்
- தேசிய ஒருமைப்பாடு
- அனைவருக்கும் கல்வி
- சமத்துவம் எனும் எண்ணக்கரு என்பவைகளாகும்.