கல்வியின் நோக்கங்கள் தொடர்பாக புளுமின் வகைப்படுத்தல்

கல்வியின் நோக்கங்கள் தொடர்பாக புளுமின் வகைப்படுத்தல்
www.Edutamil.com
கற்பித்தலில் செல்லல் கற்றல் என்பது ஏணியில் ஏறுவது போன்ற ஒரு செயல் முறையாகும். நீங்கள் கீழுள்ள படியில் ஆரம்பிக்க வேண்டியதுடன் படிப்படியாக மேலே ஏற வேண்டும். இலகுவானதிலிருந்து கடினமானதுக்கும், தெளிவானதிலிருந்து சிக்கலானதுக்கும் வேண்டும். கற்றல் படிப்படியாக நடைபெறவேண்டும் என்பதை தீர்மானிப்பது போன்றே பரீட்சை உருப்படிகளைத் தயாரிப்பதற்கும் கல்வியின் நோக்கங்களை வகைப்படுத்தல் மிக நல்ல வழிகாட்டலைத் தருகின்றது.

பெஞ்சமின் புளுமின் தலைமையின் கீழ் அமெரிக்க கல்வியாளர் குழுவினரால் 1948 இல் கல்வி இலக்குகள், நோக்கங்கள் வகைப்படுத்தல் கடமையை பொறுப்பேற்றனர். இங்கு அவர்களால் அறிதல், எழுச்சி, உள இயக்கம் என்பவற்றை இனங்கண்ட ஆட்சிகள் மூன்றை வகைப்படுத்தும் செயல்முறையினை விருத்தி செய்து கற்றல் கற்பித்தல் செயல்முறையில் மதிப்பீட்டுச் செயல்முறைக்காக உதவி செய்தல் அவர்களது இலக்காக அமைந்தது. அறிதல்சார் ஆட்சி வகைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் 1956 இல் பூரணப்படுத்தப்பட்டதுடன் அது அறிதல்சார் ஆட்சி தொடர்பான புளுமின் வகைப்படுத்தல் என பிரபல்யப்படுத்தப்பட்டது. எழுச்சி மற்றும் உள இயக்க ஆட்சி தொடர்பான வகைப்படுத்தல் மற்றவர்களினால் பின்னர் விருத்தி செய்யப்பட்டது. வகைப்படுத்தல் என்பதினால் கருதப்படுவது யாது என்பதை கவனிப்போம். அது கோட்பாடுகளுக்கமைவாக ஒழுங்கமைக்கப்படுவது என்பதையே கருதுகின்றது. எல்லை அல்லது ஆட்சி என்பது எளிமையாக எடுக்கப்பட்ட தொகுதியாகும் அறிவு. மனப்பாங்கு, திறன் என்ற பழைய கற்றல் மதிப்பீட்டு கட்டமைப்பை விருத்தி செய்வதென்பதாக புளுமின் வகைப்படுத்தலை. காட்டலாம்.

புளுமின் வகைப்படுத்தல் மூன்று தொகுதிகளைக் கொண்டது

1. அறிதல் ஆட்சி (அதாவது நுண்மதிசார் திறன்கள்)

2. எழுச்சி ஆட்சி (மனப்பாங்கு, நடத்தை போன்றவை)

3. உள இயக்க ஆட்சி (உடற் திறன்கள் என்பனவாகும்)

எவ்வாறிருப்பினும் புளும் மற்றும் குழுவினரும் மற்றவர்களுக்கு விபரமாக பூரணப்படுத்துவதற்காக ஒரு பகுதியினை மீதப்படுத்தினர். இங்கு என்டர்சன், கிரட்வோல், மெஸியா, சின்ட்சன், ஹேரோ, டேவி ஆகியோரின் பங்களிப்பு புளுமின் வகைப்படுத்தல் மாதிரியை முன்னேற்றுவதற்கு மிக பிரயோசனமாகியது. இவ் எல்லா ஆட்சிகளிலும் புளுமின் வகைப்படுத்தல் அடிப்படையாக அமைந்தது. ஒவ்வொரு ஆட்சிகளிலும் குறைபாடுகளின் அளவின் வரிசைப்படியிலான மட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தின் அடிப்படையிலேயாகும். எனினும் ஒரு ஆட்சியில் ஒரு மட்டத்திலிருந்து அடுத்த மட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் அம் மட்டத்தினை நன்றாக கற்றலின் பின்னரேயாகும். ஆகையால் ஒவ்வொரு ஆட்சிகளிலும் பல்வேறு தொகுதி கற்றல் விருத்தி மட்டம் உள்ளதுடன் இம் மட்டம் வரிசைக்கிரமப்படி குறைபாடுகளை விருத்தி செய்யும். இனி நாம் ஒவ்வொரு ஆட்சிகளையும் வெவ்வேறாக ஆராய்வோம்.

அறிதல்சார் ஆட்சி

மேற்குறிப்பிட்டவாறு அறிதல்சார் ஆட்சி தொடர்பான கடமைகளை புளும் மற்றும் குழுவினரால் 1956இல் பூரணப்படுத்தப்பட்டது. அவரின் வகைப்படுத்தலின் அடிப்படையில் அறிதல்சார் ஆட்சியை ஆறு மட்டங்களாக வகுத்துள்ளார். குறைந்த மட்டத்திலிருந்து உயர்ந்த மட்டம் வரை வரிசைப்படி அம் மட்டங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

  1. அறிவு
  2. விளக்கம்
  3. பிரயோகம்
  4. பகுப்பு
  5. தொகுப்பு
  6. மதிப்பீடு

1. அறிவு

இது அறிதல்சார் ஆட்சியில் குறைந்த மட்டமாகும். இம் மட்டத்தில் மாணவர்கள் அவர்கள் கற்ற முறைப்படி மிக அண்மையாக தகவல்கள், கருத்துக்கள். கோட்பாடுகள், தேற்றங்கள் போன்றவற்றை ஞாபகப்படுத்துடன் முன்வைப்பதற்கோ அல்லது இனங்காண்பதற்கோ முடியுமாயிருக்கும். இம் மட்டத்தில் நோக்கங்களை எழுதுவதற்காக பெயரிடுக. காட்டுக. வரைவிலக்கணப்படுத்துக. பட்டியற்படுத்துக. எழுதுக என்றவாறு வினைச்சொற்களை பயன்படுத்த முடியும். பின்வருவன மாதிரி நடத்தைகள் அல்லது சிறப்பான நோக்கங்களைப் பார்க்கவும்.

மாணவன் அறிதல்சார் ஆட்சியில் ஆறு மட்டங்களையும் எழுதுவர். மாணவர் ஆட்சி என்னும் பதத்தினை வரைவிலக்கணப்படுத்துவர். .

2 . விளக்கம்

அறிதல்சார் ஆட்சியில் 2 வது மட்டமான இதில் மாணவர்க்கு முன் கற்றல் அடிப்படையில் யாதாயினுமொன்றை விளங்கிக் கொள்வதற்கு, சொந்த வசனத்தில் எழுதுவதற்கு, அதன் பொருளை விளக்குவதற்கும் இயலுமாக இருக்கும். விளக்குதல், சாராம்சத்தை எழுதுவர். தமது சொந்த வசனத்தில் கூறுவர், விபரிப்பர் போன்ற வினைச்சொற்கள் நடத்தை நோக்கங்களை எழுதுவதற்குப் பயன்படுத்த முடியும். விளக்கம் மட்ட நோக்கங்களுக்கு இரண்டு உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(அ) பாடத்தின் நோக்கங்களை நடத்தைசார் அடிப்படையில் எழுதும் முறையினை

விளக்குவர். நீர் மாசுறுதல் முன்வைப்பர். என்ற பாடத்தின் சாராம்சத்தை தமது சொந்த வசனத்தில்

3.. பிரயோகம்

கற்றுக்கொண்ட உண்மைகளையும், பெற்றுக்கொண்ட அறிவினையும், பிரச்சினை தீர்ப்பதற்கும், நிஜ வாழ்க்கை நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஆற்றல் பிரயோகம் எனப்படும். அறிவை நல்ல முறையில் விளங்கி இருப்பின் மாத்திரமே பிரயோக ஆற்றலை பெற்றுக்கொள்ள முடியும். மாணவன் யாதாயினுமொறு கணித சூத்திரத்தை தெரிந்திருப்பின் ஒரு அதனை வேறொருவருக்கு விளக்க முடியும். அவர் அதனை விளங்கியிருப்பின் அவனுக்கு அதன் மாறிகளை இனங்காண்பதற்கும் மற்றும் மாறிகள் ஏற்படும் போது தெரியாத மாறிகளை காண்பதற்கும் இயலுமாக இருக்கும். ஒன்றைத் தவிர சகல மாறிகளும் உள்ள போது தெரியாதமாறியை காண்பதற்கு குத்திரத்தினை பயன்படுத்தல் பிரயோகம் எனப்படும். அறிவு. விளக்கம் இன்றி சூத்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்பது தெளிவாகின்றது. ஆதலால் அறிதல்சார் ஆட்சியில் மூன்றாவது மட்டத்தினை மாணவர்களுக்கு தெரிதலுக்கும் ஒன்றிலிருந்து இன்னொன்று மாற்றுவதற்கும் வேலைகளை பூரணப்படுத்துவதற்கும் அல்லது பிரச்சினை தீரப்பதற்கும் தகவல்களையும், கோட்பாடுகளையும் பயன்படுத்தும் ஆற்றல் கிடைக்கும்.

தீரப்பர், பயன்படுத்துவர். கணிப்பர். காட்சிப்படுத்துவர், பாவிப்பர், நிர்மாணிப்பர் ஆகியன இம்மட்டத்தில் நோக்கங்கள் எழுதுவதற்காக பயன்படுத்தக்கூடிய வினைச்சொற்களுக்கு உதாரணங்கள் சிலவாகும். பிரயோக தரப்பட்டுள்ளன. மட்ட நோக்கங்களுக்கான உதாரணங்கள் கீழே

  1. மாணவர் அறிதல்சார் ஆட்சியில் புளுமின் வகைப்படுத்தலில் சகல மட்டங்களுக்குமான கற்றல் நோக்கங்களை எழுதுவர்.
  2. மாணவர் சென்ரிகிரேட் அளவுத்திட்டத்தில் தரப்படும் வெப்பநிலையை கெல்வின் அலகுக்கு மாற்றுவர்.
  3. மாணவர் நூற்றுவீதம் தொடர்பான அறிவை பயன்படுத்தி இலாப, நட்டத்தை கணிப்பர்.

4. பகுப்பு

பகுப்பு என்பது யாதாயினுமொன்றினை அதன் உப பகுதிகளுக்கு பிரித்தலின் பின்னர் உரிய அறிவு, கொள்கை அல்லது விதியினை பயன்படுத்தி பிரச்சினை தீரப்பதற்குரிய ஆற்றலாகும். பகுப்பில் மாணவர் வேறுபாடுகளை இனங்காண்பர். வகைப்படுத்துவர், கருதுகோள்களுக்கிடையிலான தொடர்பை ஆராய்வர், காட்சி அல்லது கருதுகோளை ஒப்பிட்டு பார்ப்பர், பகுப்பாய்வு செய்வர். தொகுதியாக்குவர், ஒப்பிடுவர். குறைபாடுகளைக் கண்டுபிடிப்பர், வேறுபடுத்திக் காட்டுவர் ஆகிய வினைச்சொற்கள் பகுப்பு மட்ட நோக்கங்களை எழுதுவதற்கு பயன்படுத்துவர் பின்வருவன பகுப்பு மட்ட நோக்கங்களை எழுதுவதற்கான சில உதாரணங்கள் ஆகும்.

  1. மாணவர் பிரச்சினைக்குரிய தரவுகளை தெரிவு செய்வர்.
  2. எண்ணக்கரு இரண்டிற்கிடையிலான ஒற்றுமைகளை கலந்துரையாடுவர்.
  3. பொருட்கள் இரண்டிற்கிடையிலான கட்டமைப்பின் வேறுபாடுகளை காட்டுவர்.
பகுத்தல் என்பதன் எதிர்ச் செயற்பாடு தொகுத்தலாகும். இங்கு மாணவர் மூலம் பல்வேறு பகுதிகளை ஏதோ ஒரு வகையான தொடர்புகளைக் கொண்டு முழுமையான ஒன்றைக் கட்டியெழுப்பும் செயல்முறையைச் செய்வர். அவர்கள் தமக்கு புதியது ஒன்றுக்கான திட்டத்தினை அல்லது சிபாரிசுகளை முன்வைப்பர்.

பகுத்தலில் முழுமையை அது அமைந்துள்ள விதத்தைக் கொண்டு பகுதிகளாக்கும் செயல்முறை இடம் பெறுகிறது. எனினும் தொகுத்தலில் யாதாயினும் ஒன்றை அதன் உப பகுதிகளைஉரியமுறைப்படி ஒழுங்கமைத்து முழுமையை கட்டியெழுப்பப்படும். அல்லது புதியதொன்றை நிர்மானிப்போம். ஆதலால் ‘தொகுத்தல்’ பகுத்தலை விட கடினமான ஒரு சிந்தனைத் தொழிற்பாடாகும். ஒரு கட்டுரையை வரைதல் அல்லது கதையை தயாரித்தல், ஒப்படை ஒன்றை எழுதல், கவிதையை இயற்றுதல் என்பன உதாரணங்களாகக் கொள்ளலாம். இச்செயற்பாட்டில் அறிவு, விளக்கம், பிரயோகம், பகுத்தல் ஆகிய செயற்பாடுகளும் தொடர்புபடுவதுடன் மிக உயர்ந்த சிக்கலான ஒரு செயலாகவும் இது அமைகிறது. பகுப்பு மட்டத்தில் நோக்கங்களை எழுதுவதற்கு நிர்மானிப்பர். திட்டமிடுவர். கருதுகோளை கட்டி எழுப்புவர். செய்வர்….போன்ற வினைச்சொற்கள் பயன்படுத்த முடியும். விருத்தி

பகுத்தல் மட்ட நோக்கத்தின் உதாரணங்கள் சில வருமாறு

  1. பரிசோதனைக்கான திட்டமிடலை தயாரிப்பர்.
  2. திட்டமிடலை முன்வைப்பதற்கான குறிப்பினை எழுதுவர்.
  3. சிக்கலான கணித பிரச்சினையை தீர்ப்பர். ஐஏ. கனவுருவின் கனவளவுக்கான சூத்திரத்தினை கட்டி எழுப்புவர்

5. மதிப்பிடல்

வெளி அளவு கோலுடன் அல்லது நோக்கத்துடன் செய்யும் ஒரு தொழிற்பாடாகும். வெற்றியினை அடைந்து கொள்ளல் அல்லது தீர்மானமொன்றை எடுக்கும் செயல்முறை மதிப்பீடு எனப்படும். யாதாயினுமொரு அளவு கோலுடன் அல்லது விசேட நியமத்தின் அடிப்படையில் மாணவனைக் கணிப்பிடல், பெறுமானமளித்தல் அல்லது விமர்சித்தல் செய்யப்படும். இவ் அளவு கோல் உள்வாரியாக அல்லது வெளிவாரியான ஒன்றாக இருக்கலாம். மதிப்பீடு என்பது அறிவு ஆட்சியில் உயர் மட்டத்தில் உள்ளதுடன் அதற்குள் உள்ள மட்டங்கள் ஐந்துக்குரிய செயற்பாடுகள் இங்கு அவசியமாகும். இவ் மதிப்பீடு முறை இரண்டு உள்ளன.

  1. உள்வாரியான சாட்சிகளின் அடிப்படையான மதிப்பீடு
  2. வெளிவாரியான அளவு கோலுடன் மதிப்பிடல்

மேலுள்ள இரு வகைக்குமான உதாரணங்கள் இரண்டு வருமாறு

  1. முன்வைக்கப்பட்ட சாட்சி, தீரப்பு தொடர்பாக போதுமான அளவு தீர்ப்பு வழங்குவர்.
  2. எழுத்து ஆவணங்களை தரக்க முறையில் முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதை மாணவர் தீர்மானிப்பர்.
  3. சமகால வெளியீடுகளை ஒப்பிட்டு புதிய சிறுகதை, இலக்கிய கலந்துரையாடுவர்,

அறிதல்சார் ஆட்சியில் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள்

 

இதுவரை நாம் அறிவுசார் ஆட்சி வகைப்படுத்தலை சுற்றோம். இவ்வாட்சியில் விருத்திக்காக கடந்த 10 வருட காலத்தினுள் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை என்பதை இனி நாம் ஆராய்வோம், ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் புளுமின் மாணவரான என்டர்சனால் இவ் வகைப்படுத்தலை மீண்டும் சுற்று மாற்றங்கள் சிலதை ஏற்படுத்தினார்.

 

அறிதல் அறிவுசார் ஆட்சியில் ஆறு மட்டங்களின் பெயர்ச் சொவி இயல்பின் வினைச்சொல் இயல்புக்கு மாற்றுதல் ஒரு சிபாரிசாகும். மேலும் சில தொகுதிகளின் அல்லது மட்டங்கள் புதிதாக பெயரிடப்பட்டது.

ஒவ்வொரு மட்டங்கள் தொடர்பான தெளிவான விளக்கம் அதன் மூலம் பெறப்படுகின்றது என்பது 2001 ஆம் வருடத்தில் என்டர்சன் மற்றும் கிரதவோல் சேர்ந்து புளுமின் nவகைப்படுத்தலை மீண்டும் விமர்சனப்படுத்தி நிர்மானிப்பதற்கு முன்னர் பெறுமானமளித்தல் நிலைநிறுத்தப்பட்டது பின்வரும் அட்டவணையின் மூலம் அவ் வேறுபாடுகள் காட்டப்படுகின்றன.

  1. ஞாபகத்தில் வைத்திருத்தல்
  2. விளங்கிக் கொள்ளல் பிரயோகித்தல்
  3. பகுப்பாய்வு செய்தல்
  4. நிர்மானித்தல்
  5. பெறுமானமளித்தல்
  1. ‘அறிவு’ தொகுதியில் ஞாபகப்படுத்தி வைத்திருத்தல் எனவும்,
  2. ‘விளக்கம்’ விளங்கிக் கொள்ளுதல் எனவும்.
  3. பிரயோகம் – பிரயோகித்தல்
  4. பகுப்பு – பகுப்பாய்வு செய்தல்
  5. ‘தொகுப்பு’ நிர்மானித்தல் எனவும்
  6. மதிப்பீடு – பெறுமானமளித்தல் அவரினால் புதிதாக பெயரிடப்பட்டன்.

எழுச்சி ஆட்சி

 

புளுமின் வகைப்படுத்தலில் எழுச்சி ஆட்சியை விபரமாக முன்வைக்கப்பட்து. 1964 இல் புளும், சிரதவோல், மெசியா ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. மற்ற ஆட்சியில் போன்று இவ் ஆட்சி கற்பித்தல், பயிற்சி, பாடம் திட்டமிடல் கற்பித்தலில் வினைத்திறனுடையதான மதிப்பீட்டுக்கான பொருத்தமான அமைப்பை வழங்கியது. இவ் ஆட்சியில் நோக்கங்கள், மனப்பாங்கு, நம்பிக்கை, ஆர்வம், பெறுமதி, பெறுமதியளித்தல், எழுச்சி போன்ற சமூக இயைபு ஆகியற்றுக்கு எல்லைப்படுத்தப்பட்டள்ளது. ஆதலால் கற்பித்தல் விளைவாக எழுடச்சி ஆட்சியில் மேற்கூறிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் எழச்சி விருத்தி என் கருத்துரைக்கலாம். எனினும் இப்பகுதிகளில் விருத்திக்காக நீண்ட காலம் தேவைப்படலாம் அறிவு ஆட்சியைப் போன்று அவற்றை இனங்காணல், அவதானித்தல், அளத்தல் இலகுவாக செய்ய முடியாது. எப்படியிருப்பினும் கல்வி அளவீட்டில் புதிய விருத்தியுடன் எழுச்சி விருத்தியை அளவிடுவதற்கு நேர் மற்றும் நேரில் முறைகள் பலவற்றை பயன்படுத்த முடியும். இது பின்னர் உள்ள அமர்வில் விபரிக்கப்படும். கிரத்வோல்லின் தலைமையின் கீழ் மேலுள்ள குழுவினால் எழுச்சி ஆட்சி ஐந்து மட்டங்களாக வகுக்கப்பட்டது. எனினும் இவ் வகைப்படுத்தல் அறிவுசார் ஆட்சியுடன் ஒப்பிடும் போது நோக்கங்களை எழுதுவதிலும், மதிப்பீடு செய்வதிலும் குறைந்த முக்கியத்துவம் காட்டப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது. எழுச்சி ஆட்சிக்குரிய வகைப்படுத்தல் பின்வரும்

  1. கவனத்தை ஏற்றுக் கொள்ளல்
  2. துலங்கள் (Responding)
  3. மதித்தல் (Evaluing)
  4. ஒழுங்கமைத்தல் (Organization)
  5. பல விழுமியங்களின் மூலம் ஒரு நடத்தையைக் கட்டியெழுப்பல். (Interrnalizing)(தூண்டல்) (Receiving)

இனி நாம் ஒவ்வொரு மட்டங்களையும் வேறுவேறாக கவனிப்போம்.

 

1. ஏற்றுக்கொள்ளல்

ஏற்றுக்கொள்ளல் என்பது ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் மீது கவனம் செலுத்துவதற்கு யாதாயினுமொன்றை கேட்பதற்கு உள்ள விருப்பம் அல்லது ஆயத்தம் எனலாம். இங்கு பயன்படுத்தக் கூடிய வினைச்சொற்களுக்கு உதாரணமாகக் கேட்பார, அவதானம் செலுத்துவர், பங்குபற்றுவர். செவிமடுப்பர். கலந்துரையாடுவர். ஏற்றுக்கொள்வர். வாசிப்பர் போன்ற வினைச்சொற்களை காட்டமுடியும். ஏற்றுக்கொள்ளல் மட்டத்திற்கான உதாரண நடத்தைகள் சில

1. மாணவர் பாடத்தில் ஆர்வத்துடன் பங்குபற்றுவர். 2. மாணவர் ஆசிரியர் கூறுவதை அவதானத்துடன் கேட்டு குறிப்பை எழுதிக் கொள்வர்.

 

2. துலங்கள் 
 

இம் மட்டத்தில் மாணவர் செயற்பாட்டுடன் பங்குபற்றுவதுடன் துலங்களைக் காட்டுவர். துலங்குவர். வரைவிலக்கணப்படுத்துவர், விளக்குவர். எதிர்பார்ப்பர், பங்களிப்புச் செய்வர். வினவுவர். எழுதுவர் போன்றவை இம் மட்டத்தில் நோக்கங்களுக்காக எழுதக்கூடிய வினைச்சொற்கள் சிலவாகும். இவ்வாறான வினைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதக்கூடிய நோக்கங்கள் சிலவருமாறு உ+ம்:

  1. மாணவர் குழுக்கலந்துரையாடல் செயற்பாட்டுடன் பங்குபற்றுவர்.
  2. மாணவர் விடயங்களை விளக்கிக் கொள்வதற்காக
3. மதிப்பளித்தல்
 
இது எழுச்சி ஆட்சியில் மூன்றாவது மட்டமாகும். இங்கு தாம் கற்ற விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைப்பர், அவற்றை பெறுமானமளிப்பர், பொருத்தமானவற்றை அல்லது தகுதியற்றவை என எண்ணும் நடத்தைகள் அல்லது செயற்பாடுகளை நிராகரித்து தெரிவு செய்யப்பட்ட நல்லவைகளை ஏற்றுக் கொள்வர். பெறுமானமளிப்பர், தர்க்கிப்பர், வாதிப்பர், சவால் விடுவர். எதிர்ப்பர், அனுமதிப்பர், விமரசிப்பர் போன்ற வினைச்சொற்கள் இங்கு பயன்படுத்த முடியும். உதாரண நோக்கங்கள் இரண்டு வருமாறு.
  1. மாணவர் ஜனநாயக நிர்வாக முறைமையில் நம்பிக்கை வைப்பர்.
  2. மாணவர் கவிதைப் புத்தகத்தில் இலக்கியம்சார் பெறுமானங்களை விமர்சிப்பர்.

4. ஒழுங்கமைத்தல்

 

இம் மட்டத்தில் மாணவரால் பெறுமான எண்ணக்கரு கட்டியெழுப்பப்படும் அல்லது ஒழுங்கமைத்துக் கொள்வர். உள்ளார்ந்த பிச்சினை உள்ள நிலைமைகளை தீரத்துக் கொண்டு விளக்கம் பெற்று பெறுமான முறைமையை விருத்தி செய்வர். அதன் மூலம் உள்ளார்ந்த ரீதியான நிரந்தரமானதும் அடித்தளம் உள்ள வாழ்க்கை கோலத்தை அடிப்படையாகக் கொள்வர். இன் அவர்கள் தத்துவ அல்லது அனுபவத்தை போதுமான அளவு மதிப்பர், நம்பிக்கையுடன் வெளியிடுவர். அபிவிருத்தி செய்வர். கட்டியெழுப்புவர், பாதுகாப்பார். ஏற்றுக்கொள்வர். முன்னேற்றுவர். மாற்றி நிர்மானிப்பர், ஒழுங்கமைப்பர். ஒப்பிடுவர் போன்ற ஒழுங்கமைப்பு மட்டங்களில் பயன்படுத்க்கூடிய வினைச்சொற்களுக்கு உதாரணங்கள் சிலவாகும். பின்வருவன உதாரண நோக்கங்கள் இரண்டாகும்

  1. மாணவர் ஜனநாயக சமூகத்தில் பிரஜையின் உரிமைகள் போன்று கடமைகளும் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்வர்.
  2. நிர்வாகம், சுதந்திரத்திற்கிடையிலான தொடர்பு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்வர்.

5. சிக்கலான விழுமியங்களைக் கொண்டு ஒரு நடத்தையைக் கட்டியெழுப்புதல்.

 

எழுச்சி ஆட்சியில் கற்றல் விளைவுகளில் இது மிக உயர்ந்த நிலையாகும். இக் கட்டத்தை அடையும் ஒரு தனி நபர் தம்மால் கட்டியெழுப்பிய விழுமியங்களை எல்லாம் ஒருங்கிணைத்து தமக்குரிய ஒரு வாழ்க்கைப் பாதையை தீர்மானித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் அவன் நடத்தையில் ஒரு உறுதியான தன்மை காணப்படும். இம் மட்டத்தில் நோக்கங்களாகப் பயன்படுத்தக்கூடிய வினைச்சொற்கள் நடப்பர். காட்சிப்படுத்துவர், தாக்கத்தை ஏற்படுத்துவர், பிரச்சினை தீர்ப்பர், செயல்களில் ஈடுபடுவர் போன்றவைகளை காட்டமுடியும். மாதிரி நோக்கங்கள்.

  1. நல்ல சுகாதார பழக்கங்களை காட்சிப்படுத்துவர்.
  2. இணங்க முடியாத சந்தர்ப்பங்களாயினும் மற்றவர்களின் கருத்துக்களை கௌரவிப்பர்.

3.உள இயக்க ஆட்சி

இனி நாம் புளூமின் கல்வி நோக்கங்களின் வகைப்படுத்தலின் இறுதி ஆட்சியில் உள்ளோம். இவ்வாட்சி உடல் இயக்க மற்றும் அவற்றின் நிர்வாகம் உள்ளடங்குகின்றது. உடல் இயக்க திறன்கள் என்பது ஒருவரின் உடல், தசைகளின் அசைவுகளுடன், உள் கட்டமைப்புடன் வினைத்திறனுடன் கட்டுப்படுத்துவதற்கும், இணைத்துக்கொள்வதற்கும் அதன் மூலம் எதிர்பார்க்கும் செயல்களின் வெற்றியையும் பூரணப்படுத்திக் கொள்வதற்குமான ஆற்றலுமாகும். (சேதர 1984) எவ்வாறிருப்பினும் பொது மக்களை அறிவுறுத்தல். தொடர்பாடல், தகவல் சொழிநுட்ப உபகரண பயன்பாடு போன்ற வியாபார, சமூக ஆற்றல்களின் தற்போதைய . உள் இயக்க ஆட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆட்சியில் நோக்கங்களை வகைப்படுத்தலை தனித்தனியாக முன்வைத்துள்ளனர். சிம்சன் மற்றும் ஹெரோனின் வகைப்படுத்தல், கற்பித்தல் பிள்ளை விருந்தியில் மிகவும் பொருத்தமாயுள்ளதாக எண்ணுவதுடன் டேவியின் வகைப்படுத்தல் மிகவும் பொருத்தமாக அமைவது வேலை, வாழ்க்கை தொடர்பான விருத்திற்கேயாகும். இனி நாம் ஒவ்வொன்றாகக் கற்போம்,

உள இயக்க ஆட்சியில் சிம்சனின் வகைப்படுத்தல்

இவ் வகைப்படுத்தல் 7 மட்டங்களை உடையது. பிள்ளைகளின் உள இயக்க விருத்திக்காக இது மிகப் பொருத்தமாகும். அவ் ஏழு மட்டங்களும் வருமாறு.

  1. புலக்காட்சி (Perceptual abilities)
  2. தொடைகள் (Sets)
  3. வழிகாட்டப்பட்ட துலங்கல்கள் (Guided Response) 4. பொறித்தன்மை (Mechanism)
  4. சிக்கலான துலங்கள் வெளிப்பாடு (Complex overt Response)
  5. பொருத்தப்பாடு (Adaptation)
  6. நிபுணத்துவம் (Origination)
  7. இனி நாம் இவ் உள இயக்க மட்டங்களை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

1. புலக்காட்சி

சிம்சனின்படி இது உன இயக்க விருத்தியில் தாழ்ந்த மட்டமாகும். யாதாயினும் செயலில் ஈடுபடுவதற்குத் தேவையான வழிகாட்டல் தொடர்பாடலின் மூலம் இனங்காண்பர், தெரிவு செய்வர். வேறுபடுத்துவர் போன்ற செயற்பாடுகளை பயன்படுத்தி இம் மட்டத்தின் நோக்கங்களை அல்லது அளவிடுவதற்குரிய செயற்பாடுகளை விபரிக்க முடியும்.

2. ஆயத்தம்

 

இவ் இரண்டாம் மட்டத்தில் மாணவர் யாதாயினும் ஒரு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தத்தைக் காட்டுவர். அவ் ஆயத்தத்தை காட்டுவதற்காக தயாரிப்பர், ஆயத்தப்படுத்துவர். ஆரம்பிப்பர் போன்ற வினைச்சொற்களைப் பயன்படுத்த முடியும். யாதாயினும் செயல் தொடர்பாக உள, உடல், மனவெழுச்சிக்கு முன் ஆயத்தமாதல் இதில் அடங்கும்.

3.வழிகாட்டப்பட்ட துலங்கள்

துலங்களின் கீழ் மாணவர்க்கு வழங்கப்பட்ட வழிகாட்டலின்படி யாதாயினுமொன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுப்பர். அவ் வழிகாட்டலின் அடிப்படையில்அதேபோன்று செய்வர், பின்பற்றுவர், போலச் செய்வர் போன்ற வினைச்சொற்களை இங்கு பயன்படுத்த முடியும், பின்வரும் மாதிரி நோக்கங்களைப் பார்க்கவும்.

  1. ஆசிரியர் காட்சிப்படுத்திய செயற்பாடுகளை மாணவர்கள் அதே போன்று மீண்டும் செய்துகாட்டுவர்.
  2. ஆசிரியரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி மாணவர்கள் மாத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு முயற்சிப்பர்.

4. பொறித்தன்மை

 
இம் மட்டத்தில் மாணவர்க்கு வழங்கப்படும். அறிவுறுத்தல்களின்படி கற்ற ஒரு திறனை முன்னேற்றம் செய்யும் காரணத்தினால் ஆற்றலை காட்சிப்படுத்துவர். உதாரணமாக மாணவர் இலங்கைப் படத்தினை வரைவதற்கு ஈடுபடுவர். தயாரிப்பர். செயற்படுவர். வடிவமைப்பர். பூரணப்படுத்துவர் போன்ற வினைச்சொற்களை இங்கு பயன்படுத்த முடியும்.
 

5. சிக்கலான துலங்கள் வெளிப்பாடு

இப்போது மாணவர் சிறப்பான இயக்க ஆற்றலை பெற்றுள்ளனர். அவற்றுக்கு சிக்கலான செயலில் மிகச் சரியாக செய்வதற்கு ஆற்றல் பெற்றுள்ளார். சரியாக தொடர்புபடுத்துவர், இணைப்பர், காட்சிப்படுத்துவர்…. போன்ற மாதிரி வினைச்சொற்களை காட்ட முடியும்.

6. பொருத்தப்பாடு

 

இங்கு மாணவர் தாம் சிறந்த முறையில் முன்னேறியுள்ள ஆற்றலை புதிய நிலைமையின் கீழ் பொருத்தப்பாடு செய்வர். அதாவது தேவையானவாறு மாற்றியமைப்பர். பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவாறு மாற்றிக்கொள்வர். மாற்றுவர். தீர்ப்பார். தொடர்புபடுத்துவர். மீள ஒழுங்கமைப்பர் போன்ற வினைச்சொற்களைப் பயன்படுத்த முடியும்.

7. நிபுணத்துவம்

சிம்சனின் அடிப்படையில் நிபுணத்துவம் என்பது உள இயக்க ஆட்சியில் உயர் மட்டமாகும். தற்போது மாணவர் நிரமாணம் சார் ஆற்றல்களை பெற்றுள்ளனர். தற்போது சிக்கலான செயற்பாடுகளில் ஈடுபடமுடியும். அச் செயற்பாடுகளை காட்சிப்படுத்க்கூடிய முறையில் திட்டமிடுவர். மாற்றியமைத்து நிர்மாணிப்பர், முன்னேற்றி அமைப்பர், குறைபாடுகளைக் கண்டு சரியாக்குவர் போன்ற வினைச்சொற்களைப் பயன்படுத்த முடியும்.

உள இயக்க ஆட்சியிற்கான ஹெரோவின் வகைப்படுத்தல்

B. ஹெரோலின் வகைப்படுத்தலில் உடலியல் பொருத்தப்பாடு. உடல் இயக்க நிறுவாகம், யாதாயினும் ஒன்றை நடத்துவதற்குரிய ஆற்றல். மற்றும் யாதாயினும் ஒன்றை மிக விரைவாக விருத்திக்கு மிகப் பொருத்தமானது. இம்மாதிரியில் உடற் செயற்பாட்டுகள் கருத்துடைய செயற்பாடுகளாக மாற்றப்படலாம் என்பதன் அடிப்படையிலேயே விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வகைப்படுத்தல் ஆறு மட்டங்களை உடையது.

  1. பிரதிபலிப்பு இயக்கம் (Reflex Movement)
  2. iஅடிப்படை இயக்கம் (Fundamental Movement) III: புலக்காட்சி (Perceptam)
  3. உடந்திறன்கள் (Physical abilities)
  4. பயிற்சி இயக்கம் (Skilled Movement)
  5. யாதாயினுமொன்றை தொடர்பாடலினூடாக விளக்கிக் கொள்ளல் (No discussive
  6. communication) என்பனவாகும். இம் மட்டங்கள் ஆறினதும் விளக்கங்களைப் பார்ப்போம்.

1. பிரதிபலிப்பு இயக்கம் (Reflex Movement) இயங்கக்கூடிய

இயற்கையான சுயமாக தாக்கம் என சிந்தனையில்லாமல் நிறைவேற்றக்கூடிய உடல் எதிர் செயற்பாடாகும். அறிமுகப்படுத்தலாம். இது

 

2. அடிப்படை இயக்கம் (Fundamental Movement)

ஆரம்ப அல்லது அடிப்படை ஆற்றல் செய்வதற்குரிய ஆற்றல் என்பதே இதன் கருத்தாகும். அதாவது எளிய செயற்பாடுகளை செய்வர். அமைவிடம் மாற்றத்திற்கு உட்படும். துலங்குவர். உட்காருவர், வீசுவர் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.

 

3 .புலக்காட்சி ஆற்றல் (Perceptam)

இது அடிப்படை துலங்களினால் காட்டப்படும் மட்டமாகும். பல்வேறு உடலியல் புலக்காட்சிக்கு துலங்காட்சியாக ஒரு ஆற்றலுக்கு கூடுதலாக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் ஆற்றலைக் குறிக்கும். இங்கு செயலுடன் விபரிப்பதற்கு எழுதுவர், ஆய்வர், தொட்டுணர்வர். வேறுபதுத்திக் காட்டுவர் போன்ற வினைச்சொற்கள் பயன்படுத்தலாம்.

4.உடற்திறன்கள் (Physical abilities)

இதன் மூலம் உடல் பொருத்தப்பாட்டினைக் காட்டுகின்றது. இப்போது பிள்ளை சக்தியை யாதாயினும் ஒன்றை விரைவாக செயற்படுவதற்குரிய ஆற்றல், நிருவகித்தல் மற்றும் குறைபாடுகளுக்கு முகம்கொடுக்கும் ஆற்றல், நிருவகித்தல் மற்றும் குறைபாடுகளுக்கு முகம்கொடுக்கும் ஆற்றல்களை விருத்தி செய்துள்ளனர். குறைபாடுகளை பெற்றுக்கொள்வர், மீண்டும் செய்வர். முன்னேற்றுவர், நடத்துவர் போன்ற வினைச்சொற்கள் இம் மட்டத்தில் நோக்கங்களாகப் பயன்படுத்தப்படும்.

 

5.பயிற்சி இயக்கம் (Skilled Movement)

இது சிக்கலான செயற்பாடாகும். இங்கு மாணவர் உயர் மட்டத்தில் செயலை நடத்த முடியும். இயக்கங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம். வண்டியை ஓட்டுவர். ஒன்னைக் கட்டி பல் எழுப்புவர், இசைக் கருவிகளை வாசிப்பர். சிக்கலான ஆற்றலை கண்காட்சிப் படுத்துவர் போன்றன இம் மட்டத்தில் வினைச் சொற்களுக்கு உதாரணங்களாகும்.

6. யாதாயினுமொன்றை தொடர்பாடலினூடாக விளக்கிக்கொள்ளல்
(discussive communication)
 

இது உள இயக்க ஆட்சியின் உயர் மட்டமாகும். இங்கு ஒரு நபர் கருத்துடன் செயலில் உயர் மட்டத்தில் நடத்துவதோடு தேவையான திறன்களையும் விளக்கத்திறன்களையும் பெற்றுக்கொள்வர்.

கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்

 – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

– கல்வி அடிப்படை

– ஒப்பீட்டுக்கல்வி

– ஆலோசனையும் வழிக்காட்டலும் 

– PDF தரவிறக்கம் 

– பாடநெறிகள் 

 – செவ்வன் நிகழ்தகவு வளையி 

 

1 thought on “கல்வியின் நோக்கங்கள் தொடர்பாக புளுமின் வகைப்படுத்தல்”

Leave a Comment