www.Edutamil.com |
உள இயக்க ஆட்சி தொடர்பாக டேவியின் வகைப்படுத்தல் இவ் வகைப்படுத்தல் வேலை உலகு மற்றும் வாழ்க்கைத்திறன்கள் விருத்திக்கு மிகவும் பொருத்தமுடையது. இது மட்டம் ஐந்தினை கொண்டதுடன் தாழ்ந்த மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை ஒழுங்கு முறைப்படி ஒழுங்கமைக்கப்படும்.
1. போலச் செய்தல் (Imitation)
2. கையாள்தல் (Manipulate)
3. தவறின்மை (Precission)
4. இணைப்பு (Articulation)
5. ஏற்றுக்கொள்ளல் (Naturalisation) என்பனவாகும்.
இது மிக எளிய வகைப்படுத்தலாக இருப்பதுடன் விளங்கிக் கொள்வதற்கும்
1. போலச் செய்தல்
இங்கு மாணவர்கள் ஒருவர் செய்த விடயத்தை பார்த்துக் கொண்டு அதே போல அதனை மீண்டும் செய்வதையே கருதுகின்றது. அல்லது அவதானித்துக் கொண்டு… செய்வதாகும். உதாரணமாக ஆசிரியர் நடிப்பதைப் போன்று பார்த்துக் கொண்டு அதேவிதமாக நடிப்பதற்கு முயற்சிப்பர். பார்த்தெழுதுவர். பின்பற்றுவர். போலச் செய்வர். இயற்கையாக நிர்மாணிப்பர். மீண்டும் செய்வர் போன்றவை இம்மட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடியவினைச்சொற்களாகும்.
2.கையாளுதல்
வழங்கபடும் அறிவுறுத்தலுக்கமைய அல்லது ஞாபகத்தில் ஒன்றினை மீளநிரமாணம் செய்தல் கையாலுகை எனப்படும். ஆசிரியரின் அறிவுறுத்தலுக்கமைய பொருட்களைத் தயாரித்தலை உதாரணமாகக் காட்ட மாணவர் விளையாட்டுப் முடியும். மீள்நிரமாணம் செய்வர். கட்டியெழுப்புதல், செயற்பாட்டில் ஈடுபடுவர். உருவாக்குவர் போன்ற வினைச்சொற்கள் இங்கு பயன்பட முடியும்,
3. தவறின்மை
ஒரு செயலினை நம்பிக்கையுடனும் உதவியின்றியும் செய்வதற்கேற்ற ஆற்றல் மூன்றாம் மட்டமாகும். விஞ்ஞான பாடத்தில் உதாரணம் சிலதை எடுப்போம்.
எந்தவொரு உதவியுமின்றி மிக உயர் நம்பகத்தன்மையுடன் இரசாயன பரீட்சையினை செய்வதற்கு மாணவர் முன்வருவர், மாணவர் நுணுக்குக்காட்டியை பயன்படுத்தும் முறையினை மற்ற மாணவர்க்கு காட்சிப்படுத்திக் காட்டுவர்-
4. இணைத்தல்
இம் மட்டத்தில் மாணவர் தமது சிறப்பான திறன்களை ஒன்று சேர்த்து சிக்கலான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சிக்கலான செயலில் ஈடுபடமுடியும். பல்வேறு மற்றும் நவீன தேவைகளுக்கு முகம்கொடுப்பதற்கு அவருக்கு பல்வேறு செயற்பாடுகளில் ஒன்றாக இணைப்பதற்கு இயலும், இம் மட்டத்தில் பயன்படுத்தக்கூடிய வினைச்சொற்கள் கட்டியெழுப்புவர். தொடர்புபடுத்துவர். முன்னேற்றுவர். ஒன்றாக இணைப்பர்… போன்றவை இதிற் சிலவாகும்.
5. ஏற்றுக்கொள்ளல்
இது உள இயக்க ஆட்சியில் உயர் மட்டமாகும். ஒரு செயலை ஞாபகப்படுத்தி செய்யாது சுய இயக்கத்துடன் செய்வதற்கு உரிய மட்டத்தை நிபுணத்துவம் பெற்றுக் கொள்வது இங்கு நடைபெறும். இனி அவர் குறிப்பான தேவைக்கேற்ப ஒரு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு, அதற்குத் தேவையான நோக்கங்கள் மற்றும் முறையியலை தயாரித்துக்கொள்வதற்கு இயலுமாக இருக்கும்.
முகாமைத்துவம் செய்வர். திட்டமிடுவர். புதிய நிர்மாணம் செய்வர், போன்ற வினைச்சொற்கள் இவ் உயர் மட்டத் திறனில் காட்டுவதற்கு பயன்படுத்தமுடியும்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்