சனநாயகம் |
ஜனநாயகம் தொடர்பான வரைவிலக்கணங்கள் வெவ்வேறுபட்ட அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சீலி (Seely) “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க முறைமை. இதில் ஒவ்வொருவரும் இதன் பங்குதாரர்கள்” எனக் கூறுகின்றார். பார்கர் (Barker) என்பவர் “கலந்துரையாடலிலான அரசாங்க முறை என்கின்றார்”. ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) என்பவர் “மக்களுடைய, மக்களிலாலான, மக்களுக்கான அரசாங்கம்” என்கிறார். டைசி ( Dicey ) என்பவர் ஜனநாயகம் என்பது “ஒரு அரசாங்க முறையாகும். அரசினை ஆளும் அதிகாரம் சட்டரீதியாக சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களிடமும் முழுமையாக கையளிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அல்லது வர்க்கங்களிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்படமாட்டாது” என்கிறார். கார்னர் (புயசநெச) என்பவர் “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க முறையாகும் இது இறைமை அதிகாரத்தினை மக்கள் தமக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமைகளை வழங்குகின்ற ஒன்றாகும்” என்கிறார்.
சனநாயக பண்புகளாவன சமத்துவமும் சுதந்திரமும், சகிப்புத் தன்மை, சுதந்திர சமூக முறைமை, சம்மதத்திலான நிர்வாகம், கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுதல், இறைமை கோட்பாடு, அரசியல் யாப்பு ரீதியான அரசாங்க மாற்றம், மற்றும் தேர்தல் முறைமை, வாக்கெடுப்பு போன்றவற்றை கூறலாம். இதில் இரண்டு வகையான சனநாயக முறைகள் காணப்படுகின்றன.
1. நேரடி சனநாயகம்
2. மறைமுக சனநாயகம்
நேரடி சனநாயகம் என்பது நேருக்கு நேர் சனநாயகமாகும். இங்கு மக்கள் ஆட்சியில் நேரடியாக பங்குகொள்ளக் கூடியதாக இருந்தது. புராதன கிரேக்க நகர அரசுகளின் அரசாங்கத்தில் மக்கள் நேரடியாக பங்குபற்றியிருந்தார்கள். சில ஆயிரம் சனத்தொகையினைக் கொண்ட கிரேக்க நகர அரசுகளுக்கு இது பொருத்தமானதாக காணப்பட்டது.
மறைமுக ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாகவன்றி தமது பிரதிநிதிகளுடாக அரசாங்கத்தினை உருவாக்கித் தம்மைத் தாமே ஆட்சி செய்வதாகும். இது ஒரு சிக்கலான அரசாங்க முறையாகும். சரியான முறையில் பிரதிநிதிகள் செயற்படாவிட்டால் மிக விரைவிலேயே தவறான வழிக்கு அரசாங்கம் திசை திருப்பப்படலாம். பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஒரு நபர் பலருடைய நலன்களுக்காக சேவையாற்ற நியமிக்கப்பட்டவர் என்பதாகும். பாராளுமன்ற பேரவை (உழரnஉடை ழக pயசடயைஅநவெ) என்ற வடிவில் இது அமைந்திருக்கும்.
நவீன அரசுகளில் மறைமுக ஜனநாயகமே பெருமளவிற்கு காணப்படுகிறது. நிலப்பரப்பாலும் சனத்தொகையாலும் பெரிய அரசுகளாக இவை காணப்படுவதால் மக்கள் எல்லோரும் இன்று ஆட்சியில் பங்கு கொள்ள முடியாத நிலையுள்ளது. இதனால் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடாக மறைமுகமாக ஆட்சி அலுவல்களில் பங்கெடுத்து வருகிறார்கள். மறைமுக ஜனநாயகத்தில் தேர்தல் தொகுதிகள், சட்டத்துறை, நிர்வாகத்துறை, அரசியல் கட்சிகள் போன்ற முக்கிய மூலக்கூறுகள் பங்கெடுக்கின்றன.
இவ்வாறான நவீன சனநாயக பண்பானது இஸ்லாம் கூறும் அரசில் இருந்து எவ்வாறு ஒற்றுமைப்படுகின்றது மற்றும் வேற்றுமைப்படுகின்றது என்பதை நோக்குவோமானால். இஸ்லாமிய பார்வையில் அரசு என்பது விண்ணுலக இறை சட்டங்கைள மண்ணுலைகில் நிலை நிறுத்தும் , அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்கைள மக்களை எடுத்து நடப்பதை உத்தரவாதப்படுத்தும் சிவில் அரசாகும். இஸ்லாமிய அரசிலும் நாம் சனநாயகத்தை காணலாம். இஸ்லாமும் நவீன சனநாயகத்தில் கூறப்பட்ட பல விடயங்களை தன்னகத்தே வேறு ஒரு பரிணாமத்தில் உள்ளடக்கி இருக்கின்றது.;. வேற்றுமைகள் காட்டிலும் ஒற்றுமைகளை அதிகமாக காணப்படுகிறது.
சனநாயகத்தில் அடிநாதமாக விளங்கக்கூடிய மக்கள் பங்கேற்பு, மக்கள் சபைகள் வாக்களிப்பு, மற்றும் மக்கள் பொது நலன் பேணல், பிரநிதித்துவ ஆட்சி எனும் அம்சங்களை நாம் இஸ்லாத்தில் வேறுபட்ட பெயர்களில் கடைப்பிடிக்கப்படுவதை பார்க்கலாம். மேற்கூறப்பட்ட விடயங்களையே மசூரா, பைஅத்,மஸ்லஹா,அஹ்ல் அல்- ஹில்லி வ அல் – அக்த் என்று இஸ்லாத்தில் கூறப்படுகிறது.
உதாரணமாக பைஅத் என்றால் உறுதிமொழி எடுத்தல் என்பது பொருளாகும். எந்தக் காரியம் குறித்து உறுதிமொழி எடுக்கப்படுகிறதோ அந்தக் காரியத்தில் யாருக்குச் சம்மந்தம் உள்ளதோ அவர்களிடம் தான் உறுதிமொழி எடுக்க முடியும். அப்படி எடுத்தால்தான் அது உறுதிமொழியாகும் என்று இஸ்லாம் பேசுகிறது. இதனைப்போன்றே சனநாயகமானது பல்வேறு சமூகம் சார் விழுமியங்களை பேசுகிறது. இந்த விழுமியப்பண்புகளை நாம் இஸ்லாமிய கோட்பாட்டிலும் காணலாம்.
சனநாயகத்தில் பேசப்படும் மக்கள் சமத்துவம், சமவாய்ப்பு என்பன முசாவா என்ற பெயரில் இஸ்லாத்தில் பேசப்படுகிறது. அதனைப் போன்றே அனைவருக்குமானது ஏற்றத்தாழ்வு இன்மை, மனித கௌரவம், நலன், பொறுப்புக் கூறல், வெளிப்படைத்தன்மை, உரிமைகள், சுதந்திரம் என்பன இஸ்லாத்தில் ஆலமிய்யத், இன்சான், அமானா, ஹீகூத், ஹ{ர்ரியத் என்ற பெயர்களில் பேசப்படுகிறது.
மற்றும் இஸ்லாத்தில் சில அடிப்படை நியமங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அவை சப்ஹ் வ சப்ர், தகாஉஸ், தளாமுன், லா இஸ்ராப், லா துக்யான் போன்றவற்றை கூறலாம். இவைகளையே சனநாயகமானது சகிப்புத்தன்மை, சகவாழ்வு, நல்லிணக்கம், பரஸ்பர ஆதரவு, கூட்டுப்பொறுப்பு, வரம்பு மீறாமை, ஆராஜகம் இல்லாமை நியமங்களாக கூறுகின்றது.
மற்றும் மிகமுக்கியமாக ஒரு இஸ்லாமிய அரசொன்றை கட்டியெழுப்புவதற்கு சில அடிப்படையானதும் முக்கியமானதுமான விடயங்களை இஸ்லாமிய அரசு ஏற்றுக்கொள்கிறது. அவையாவன
-
- தௌஹீத்
- ரிஸாலத்
- ரீஆ
- மஜ்லிஸ_ஷ~;~_ரா
- நீதித்துறை
- கிலாபத்
இதில் தௌஹீத் என்பது ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துகிறது. அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ்வுக்கு நிகராக எவரும், எதுவும் இல்லை. அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்கு தகுதியானவன். அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு
இருப்பது போல் வேறுயாருக்கும் இல்லை என்றும் உறுதியாக நம்புவதே தௌஹீத் எனும் ஓரிறைக் கொள்கையாகும்.
ரிஸாலத் என்பது தூதுத்துவத்தை குறிக்கிறது. ~ரியா என்பது தனிமனிதனும் சமூகமும் இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வரையறுத்து கொடுக்கிறது. அதாவது ஒரு மனிதனின் நம்பிக்கை பண்பாடு, சட்டத்திட்டங்கள், வாழ்க்கை முறை இவை அனைத்தையும் முன்வைக்கின்ற வழிகாட்டுகின்ற விடயமே ஆகும்.
இவ்வாறாக மேற்கூறப்பட்ட விடயங்களில் மிகமுக்கியமாக கிலாபத் கோட்பாடானது இஸ்லாத்தில் அடிப்படையான அம்சமாக காணப்படுவதுடன் சனநாயகம் தொடர்பான பல விடயங்களை உள்ளடக்கி இருப்பதையும் காணலாம்.
கிலாபத் என்பது இஸ்லாமிய அரசொன்றை நிறுவுவதற்கு மிக முக்கியமான விடயமாகும். அதன் அடிப்படையில் கிலாபத் என்ற அரபுப் பதமானது பிரதிநிதித்துவம், ஒருவரை தொடர்ந்து வருதல் ஆகிய கருத்துக்களை குறித்து நிற்கின்றது. ஆயினும் கிலாபத் எனும் அரபுப் பதமானது இஸ்லாமிய ஆட்சியை குறிக்கின்றது. கலீபா என்பது இஸ்லாமிய ஆட்சியாளரையும் குறிக்கின்றது கலீபா என்பதன் பன்மை வடிவமே குலபா என்பதாகும். கலீபாவானவர் மனிதன் என்ற வகையில் அல்லாஹ்வின் பிரதி நிதியாகவும், ஆட்சியாளர் என்ற வகையில் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியாகவும் இருப்பதால் இப்பெயர் வழங்கப்படுகின்றது.
மேலும் இஸ்லாமிய அடிப்படைகளுல் ஒன்றான இந்த கிலாபத் தௌஹீத், ரிஸாலத், ஷரீஆ, மஜ்லிஸ_ஷ்ஷ_ரா, நீதித்துறை போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அமைகின்றது. அதாவது கிலாபத் பொறுப்பை ஏற்கக்கூடிய ஆட்சியாளர் தௌஹீத், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலான ரிஸாலத் மற்றும் ஷரீஆவின் அடிப்படையில் தான் ஆட்சி செய்ய வேண்டும். மேலும் தீர்வுகள், முடிவுகள் எடுக்கும் போது மஜ்லிஸ_ஷ்ஷ_ராவுடன் கலந்தாலோசித்து தான் முடிவுக்கு வர வேண்டும். தனியாக முடிவெடுக்க முடியாது. அதே போன்று நீதித்துறையையும் சரிவர நடத்த வேண்டும். இவ்வாறு அமையும் போதே அங்கு சிறந்த ஒரு இஸ்லாமிய அரசு தோன்றும். எனவே இஸ்லாமிய அரசின் அனைத்தையும் உள்ளடக்கியதாக கிலாபத் அமைந்து முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூற்றுக்கள் மூலம்; சனநாயகம் சார்பாக கருத்துக்கள் இஸ்லாமிய அரசில் இருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறாக இஸ்லாமிய அரசியல் கோட்பாடானது பல்வேறுப்பட்ட சனநாயகத்தன்மை கொண்டிருப்பதை காணலாம்.
இவ்வாறு சனநாயகம் சார்ந்த ஒற்றுமையான விடயங்கள் காணப்பட்டபோதிலும் பல வேறுபாடுகளையும் நாம் காணலாம். எடுத்துக்காட்டாக சனநாயகமானது மக்கள் இறைமை பற்றி பேசுகிறது. ஆனால் இஸ்லாம் அரசியலானது தெய்வீக இறைமைக்கு
மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கிறது. இறைவன் கட்டளை படியே ஆட்சி நடைபெற வேண்டும் என்கிறது. அத்துடன் ஒரு ஆட்சியாளன் கண்டிப்பாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டே தனது ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது, ஆனால் சனநாயகத் தன்மைகளில் சமயமானது ஒதுக்கப்பட்டிருப்பதை காணலாம். முக்கியமாக ஆட்சியாளன் எம்மதத்தையும் பிரதிநிதித்துவம் படுத்துதல் கூடாது, பக்கச்சார்புடன் செயற்படக் கூடாது எனக்கூறுகிறது.
மற்றும் தனது சமயத்தின் வஹியின் வழிகாட்டல்களின (மறைநூல்கள்) அடிப்படையிலையே ஆட்சியாளன் தெரிவு செய்யப்பட வேண்டும். அதன்;படியே நடக்கவும் வேண்டும் என்ற சனநாயகத்திற்கு முரணான விடயங்களையும் நாம் காணலாம். மேலும் ஷரிஆ சட்டங்களை கூறும் போது ஷரிஆ சட்டம் என்பது இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. அது காலத்தால் அழியாதது மாற்றத்திற்கும் மாறுதலுக்கும் அப்பாற்பட்டது. மனித சிந்தனைக்கு அதில் இடமில்லை. ஏனெனில் அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள இறை செய்தியாக காணப்படுகிறது. இவ்வாறாக அனைத்து விடயங்களிலும் இறைத்துவம் பேசப்படுவதானது சனநாயகத்துடன் தொடர்பற்ற நிலையை காட்டுகிறது.
இவ்வாறாக இஸ்லாமியம் கூறும் அரசியல் தன்மைகளில் தற்காலத்தில் பின்பற்றப்படும் சனநாயகத் தன்மைகளை கொண்டிருப்பதுடன் முக்கியமான சில இடங்களில் வேறுப்பட்டு இருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.