இது மிஷின் யுகம் – ஒரு விமர்சனம்

இது மிஷின்  யுகம்
இது மிஷின்  யுகம்

அறிமுகம்

புதுமைப்பித்தன் 1933 முதல் 1946 வரையிலான 12 ஆண்டுகளே எழுத்துப் பணியில் இருந்தார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே இலக்கியம் எழுத வேண்டும் என்று அதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்றித் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் தம் கதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். மேலும் அவர் மக்களிடமிருந்து தூர விலகி நின்று கதை சொல்லாமல் மக்களோடு ஒட்டி நின்றே தம் கதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் தம் கதைகளைப் பற்றி, “பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைத்திருக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்…….” என்றும், “இந்தக் கதைகள் யாவும் கலை உத்தாரணத்திற்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலையை எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது” என்றும், “நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை. ……… தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இ~;டமான கோணங்களில் எல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு” என்றும் கூறியுள்ளார்.

புதுமைப்பித்தன் காதல், சாவு, வறுமை, காமம், பசி, பயம், சிறுமை, சீரழிவு, சோகம், குழப்பம், கொந்தளிப்பு, மந்திரம், புராணம் என்று பலவற்றைக் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவர் எடுத்தாண்ட கதைக் கருக்களை அடிப்படையாகக் கொண்டு அக்கதைகளை நாம்-

  • தனிமனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள்
  • தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள்
  • சமுதாயச் சிக்கலை மையமிட்ட கதைகள்
  • காதலைக் கருவாகக் கொண்டவை
  • நகர வாழ்க்கையின் போலித் தன்மைகளை வெளிக்காட்டும் கதைகள்
  • கேலி, கிண்டல் இவற்றைக் கருவாகக் கொண்டவை.

பேய், பிசாசு, வேதாளம் இவற்றை மையமிட்ட கதைகள்வறுமையைக் கருவாகக் கொண்டவை.  – என்று வகைப்படுத்திக் காட்டியுள்ளார் கரு. முத்தையா.

இது மிஷின்  யுகம் 

புதுமைப்பித்தன் தன் கதைகளில் சாதாரண மக்களையும் பாடுபொருளாக கொண்டு கதைகளை நகர்த்தி செல்வதை காணலாம். அத்துடன் கதைகளின் வாயிலாக கதை மாந்தர்களின் வாழ்க்கை அம்சங்களை படம்பிடித்து காட்டவும் தவறமாட்டார் அவரால் படைக்கப்பட்ட ஒரு வித்தயாசமான கதைதான் இது மி~pன் யுகம்.

தலைப்பை பார்த்தாலே கதையின் உட்கருத்தை புரிந்துக்கொள்ளலாம். ஆம் நாகரிக வாழ்க்கையின் மனிதன் இயந்திரமாக மாறிவிட்டான். காலை எழுவது, குளிப்பது, உண்பது, செல்வது, பறப்பது, பதறுவது, அடிமாடாவது, துன்பப்படுவது, எரிந்து விழுவது, உறங்குவது என்று நமது வாழ்க்கை ஒரு வட்ட பாதையிலே ஓடிக்கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கையின் எல்லா விடயங்களையும் விரைவாகவே செய்ய பழகிகொண்டும் பழக்கிக்கொண்டும் இருக்கின்றோம். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் எங்கோ ஓரிடத்தில் மனிதம் ஒழிந்துக்கொண்டிருக்கிறது. அந்த மனிதன் இன்னும்; வாழ்கின்றான் என்பதை சொல்லும் ஒரு கதைதான் இது மி~pன் யுகம்.

ஒரு உணவகத்தில் (ஹோட்டலில்)) வேலை பார்க்கும் சாதாரண ஊழியன் (சர்வர்)) எத்தனை எந்திரமாக மாறியிருக்கின்றான் என்பதை அங்கு நடக்கும் பல விடயங்கள் வாயிலாக வாசகர்களுக்கு எடுத்துக்காட்டுகிறார். உணவகத்திற்கு வருபவர்கள் தனக்குத் தேவையானவற்றை கேட்கும் போது  நினைவு கூறி எடுத்துவருவது, மற்றும் பல பேர் சொல்வதையும் சரியாக பிரித்து காலம் தாழ்த்தாமல் கொண்டு வந்து கொடுப்பது, ஒரு வேலையை முடிக்கும் போதே இன்னொருத்தர் தனக்கான உணவை கேட்பது இப்படி இடைவிடாமல் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இன்றி வேலை செய்து கொண்டிருக்கும் போது, கிழே விழுந்து கிடக்கும் கைக்;குட்டையை அவன் அறிவிக்கும் போது தான,; அவனும் மனிதன் தான் என நம்ப முடிகிறது என கதை நிறைவு பெறுகிறது. இவ்வாறு ஒரு சர்வனின் வாழ்க்கை வட்டத்தை தத்ரூபமாக இக்கதை எடுத்துகாட்டுகிறது. எனவே தான் மி~pன் யுகம் என்ற தலைப்பும் மிகப்பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

புதுமைப்பித்தன் கதை ஆரம்பம் எப்போதுமே ஒரு தொடர்ச்சியாக காணப்படும். இத்தன்மையை நாம் மிஷின் யுகத்திலும் காணலாம். “நான் அன்று ஒரு முழு நீளம் பெயர்கொண்ட ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக் காரர்களுக்குந்தான் வாயில்

நுழையாத பெயர் வைக்க நன்றாக தெரியுமே..” என்று கேளி கிண்டல் தொனியில் ஏதோ ஒன்றை விமர்சனம் செய்வதாகவே கதை ஆரம்பிக்கிறது. இத்தொடக்கம் ஒரு சிறுகதைக்கு சிறந்த ஆரம்பம் என்றே கூற வேண்டும். ஏனெனில் வாசகனை வேறு திசையில் செல்ல விடாது எடுத்த எடுப்பிலோ கதைக்குள் கொண்டு சென்றால் மாத்திரமே கதைக்கருவுடன் வாசகனை ஒன்றிக்க முடியும். அந்த வகையில் இக்கதையின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது எனலாம்.

கதையை நடத்திச்செல்ல மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று எடுத்துரைத்தல், இன்னொன்று வருணனை, மூன்றாவது உரையாடல். இன்னார் இப்படிப்பட்டவர், அல்லது இது இப்படிப்பட்டது என்று அவ்வவற்றின் பண்புகளை விளக்குதல், எடுத்துரைத்தல் ஆகும். மேலும் கதையின் முக்கியச் சம்பவங்களைக் கூறுதலும் எடுத்துரைத்தலே. இதனால் எடுத்துரைத்தலைக் கதையாடல் என்றும் சொல்கிறார்கள். பின்னணியை வருணிக்கத்தான் இயலும். ஒரு கதை நடக்குமிடம் கடைத்தெரு என்றால் அந்தக் கடைத்தெருவின் பிம்பம்- அது எப்படி இருக்கிறது என்பதை நம் மனக்கண்ணில் உருவாக்குவது, வருணனை. உரையாடல், பாத்திரங்களுக்கிடையில் நிகழ்வு போன்றவைகள் மூலம் ஆகும்.

கதைத்தொடக்கத்திலையே கதை எங்கே நடக்கிறது என்று சொல்லிவிடுவது வாசகரின் சிரமத்தை குறைக்க உதவும். இக்கதையில் இடம்பெறக்கூடிய வர்ணனையானது நம்மை உணவகத்தின் உள்ளே கொண்டு சென்றுவிடுகிறது. “ஹோட்டலுக்குள் சென்றேன், உள்ளே எப்பொழுதம் போல் அமளி: கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள், இதைக்கொண்டு வா, அதைக் கொண்டு வா! என்ற அதிகாரங்கள்: இடையிலே உல்லாச சம்பா~ணை சித்தரிப்பு. போய் உட்கார்ந்தேன்…” மேற்கூறப்பட்ட சில எடுத்துகாட்டுக்கள் நம்மை அறியாமலே கதைக்களம் நம்மை ஹோட்டலுக்குள் கொண்டு சென்று விடுகிறது. இதன்மூலம் நாம் இப்போது இருப்பது ஒரு உணவகத்தின் உள்ளே என்ற உணர்வும் இக்கதையின் கருவும் நம் மனசுக்குள் உள் நுழைய, மேற்கூறப்பட்ட தொடக்கம் துணையாக அமைகிறது. அந்த வகையில் புதுமைப்பித்தனின் கதைக்கள விவரிப்பு, வர்ணனை என்பன இது மி~pன் யுகம் என்ற படைப்பில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அடுத்ததாக கதையின் மொழிநடையையானது புதுமைபித்தனுக்கே உரித்தான பேச்சு நடையினை நாம் காணலாம். கதை ஆரம்பம் தொடக்கம் முடியும் வரையும் எழுத்து தமிழோட கூடிய அன்றாடம் நாம் பயன்படுத்தும் பிரதேச வழக்குச் சொற்களையும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளமை கதையோட்டத்திற்கு உயிரூட்டுகின்றது. தமிழுடன் கலந்த ஆங்கில நடையானது ஒரு உணவகத்தில் இடம்பெறக்கூடிய சர்வ சாதாரணமான விடயமாகும். அதனை அப்படியே ஒரு

சிறுகதையில் உயிரோட்டமாக கொடுப்பது என்பது மிகவும் கடினமான விடயம். ஆனால் புதுமைப்பித்தன் இதனை அழகாக தனது படைப்பில்; பயன்படுத்தியுள்ளார். எடுத்தகாட்டாக:

“ஸார், என்ன வேண்டும்? 

“சரி, சரி, ஒரு பிளேட் பூரி கிளங்கு”

ஒரு ஐஸ் வோட்டர்”

“ஸேவாரி எதாகிலும் கொண்டு வா”   போன்ற சில சொற்றொடர்களை குறிப்பிடலாம். அத்துடன் மொழிநடை கையாளும் போது அதில் வாசகன் அக்கதையுடன் ஒன்றித்து விடுவது போன்ற ஒரு வகையான உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைகிறது.

“என்ன கிருஸ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? 

இதோ வந்துவிட்டது ஸேர்? இவ்வுரையாடலில் இயல்பாகவே வாசகன் வாசிக்கும் போது தன்னை முதலாளியாக நினைத்து  ஏவள் தொனியில் கூற்றை வாசிப்பதும,; அதனைத் தொடர்ந்து வாசகன் கிருஸ்ணா வாக மாறி மீண்டும் அடிமைத் தொனியில் விடையளிப்பதுமாக வாசகன் கதையுடன் இணைந்து பயணிக்க கூடியதான மொழியமைப்பு இக்கதையின் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். எனவே புதுமைப்பித்தனின் படைப்புக்களில் பேசக்கூடிய ஒரு படைப்பாக இச்சிறுகதை காணப்படுவதற்கும் இதன் மொழிநடை அமைப்பு பிரதான வகிபங்காகும்.

இவ்வாறாக சிறப்பான மொழிநடை காணப்பட்டப்போதிலும் இக்கதையில் பிரதேச வாதம் அதிகமாக காணப்படுவது சிறு குறை எனலாம். அதிகமாக பிரதேச வழக்குச்சொற்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சில சொற்களுக்கு அர்த்தம் புரிவதும் அதனை உச்சரிப்பதும் சற்று கடினமாக அமைந்துள்ளமை இக்கதை ஓட்டத்தினை சற்று தாமதப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக- “குஞ்சலாடு, பாஸந்தி”  “ராம நீஸமாந மவரு”

இச்சிறுகதையின் கதையோட்டம்; எவ்விடத்திலும் சோம்பல் தட்டாமல், தலைப்பில் கூறப்பட்டதை போன்று மி~pன் வேகத்தில் விருவிருப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. உணவகத்தின் உள்ளே சென்றதுமே ஓட்டம் பிடிக்க ஆரம்பிக்கும் கிருஸ்ணன் இறுதியாக “கைக்குட்டை கீழே விழுந்து விட்டது ஸேர்”  என்ற இடத்தில் ஒரு சிறு நிமிடம் மனிதனுக்கே இயல்பான அடக்கத்தை வெளிகாட்டுகிறான். வெளிகாட்டி திரும்பும் போதே ஒரு குரல் “ஒரு ஐஸ்கிரீம்” மீண்டும்

ஓட்டம் பிடிக்கிறான். இவ்வாறாக அந்த உணவகம் எவ்வாறு வேகமாக இயங்கி கொண்டே இருக்கிறதோ அவ்வேகத்தை வாசகர் மனத்திலும் கொண்டுவந்திருப்பது கதையோட்டத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

வழமையாக கதையாசிரியர்களால், கதையின் நாயகனாக படைக்கப்படுபவர்கள், சற்று உயர்ந்த இடத்தின் வைத்தே படைக்கப்படுவர். ஆனால் இச்சிறுகதை சமூகத்தில் அடிமட்டத்தில்  தொழில் புரியும் சாதாரண மனிதனை அல்லது ஒரு உழைப்பாளியை படம்பிடித்து காட்ட முற்படுகிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. காலம் காலமாக தோட்டத் தொழிலாளர்களையும் சாதியையும் வர்க்க முரண்பாட்டையும், முதலாளித்துவத்தையும் பேசிய இலக்கியங்கள் இச்சிறுகதையின் வாயிலாக உடைக்கபட்டு எங்கோ ஒரு மூலையில் சர்வராக பணியாற்றக் கூடிய ஒரு பணியாளனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதனூடாக அத்தொழிலின் கடினத்தன்மையையும் சமூகத்திற்கு சுட்டிக்காட்டுகிறது. அந்தவகையில் சமூக நிலைமைகளை எடுத்தியம்பவதிலும் இச்சிறுகதை ஒரு படி மேலே நிற்கிறது.

ஒரு சிறுகதை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளபட வேண்டும் எனில் சிறுகதைக்கே உரித்தான இலக்கணங்களை கையாளுதல் வேண்டும். அது போன்றே சிறுகதை இலக்கணங்களின்  ஒன்று தான் பாத்திர படைப்பு. குறைந்த அளவு பாத்திரங்கள் இடம்பெறுதல் சிறுகதைக்கு உகந்ததாகும். அந்தவகையில் இச்சிறுகதையும் குறிப்பிட்டே சொல்லக்கூடிய பாத்திரங்கள் மட்டுமே காணப்படுகிறது. அதிலும் ஆசிரியர் ,முதலாளி, அடுத்ததாக முக்கியமாக கிருஸ்ணன் அத்துடன் உணவகத்திற்கு வருகைத்தரக் கூடிய வாடிக்கையாளர்கள் போன்றவர்களை குறிப்பிடலாம். இதில் கதைக்களத்திற்கு தேவையானவர் அக்குறிப்பிட்ட சர்வர் மாத்திரமே என்றபடியால் கதை முழுதும் சர்வரின் நடமாட்டத்தை மாத்திரமே புதுமைப்பித்தன் உலாவ விட்டுள்ளார். இதன் காரணமாகவே கதை தொடக்கம் முதல் முடியும் வரை குறிப்பிட்ட சர்வர் மாத்திரமே வாசகன் மனதில் இடம்பெறக் கூடியதாக இருக்கிறது. இதற்கு மாறாக அதிகமாக பாத்திரங்களின் வருகை காணப்படுமாயின் கதையில் ஒரு குழப்பத்தன்மை ஏற்பட்டு கதைக்கருவை சரியான முறையில் வாசகனுக்கு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏனவே பாத்திர படைப்பானது பொருத்தமானதாக அமைந்துள்ளது எனலாம்.

அடுத்து முக்கியமாக இச்சிறுகதை வெறுமனே ஆசிரியரின் கதைக்கூறலாக மாத்திரம் அன்றி பாத்திரங்களையும் பேச வைத்துள்ளமை சிறப்பானதாகும். ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் அனைத்துமே ஆசிரியர் கூற்றாக மாத்திரமே இடம்பெறும் போது வாசகனுக்கு கதையின் மீது ஆர்வம் குன்றக்கூடியதாக அமையும். ஆனால் இங்கு

கதை முழுதும் உரையாடல் முறையில் அமைக்கப்பட்டிருப்பது கதைக்கு பலத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

பொதுவாக புதுமைப்பித்தன் கேளி கிண்டல்களை கலந்த சமுதாயக் விழிப்பணர்வை ஏற்படுத்தக்கூடியவர். அதனை நாம் மி~pன் யுகத்திலும் காணலாம். எடுத்துக்காட்டாக “ஹோட்டல் காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்கும் வாயில்  நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே” என்ற கூற்றின் ஊடாக அவர் வாழ்ந்த காலத்தில்; நாடகத்துறையினரின் செயற்பாடுகளை விமர்சிக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதை கருத்திற்கொண்டு இச்சிறுகதையினூடாக அதனை விமர்சித்திருப்பதை அவதானிக்கலாம். மேலும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டகிறார். நமது காலம் காலமாக ஒரு பழக்கம் தான் யந்திரங்களை நம்புவது. எவ்வளவு அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும் நமது மக்கள் யந்திர வாசனையை விட மாட்டார்கள் என்பதனை சுட்டிக்காட்ட “எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி” எனப்போகின்ற போக்கில் கூறிவிட்டு செல்கிறார். ஆகவே இக்கதையினூடாக ஆசிரியரின் சமூகப்பார்வையும் சமூக அவலங்களை சுட்டிக்காட்டப்பட ஆர்வமும் வெளிப்படுவதை நோக்கலாம்.

இவ்வாறு கதையானது ஒரு விருவிருப்பான தன்மையுடன் நகரந்துக்கொண்;டு போகும் போது, ஒரு கட்டத்தில் கைக்குட்டை கீழே விழுந்து விட்டது என்று கூறி அதனை எடுத்துக்கொடுக்க கீழே குனிகிறான். மாறாக ஆசிரியரால் எடுக்கப்படுகிறது. இந்த இடத்தில் நாம் இருவிடயங்களை அவதானிக்கலாம். ஒன்று அவ்வளவு வேலைப்பழுவிலும் கைக்குட்டையை எடுத்துக்கொடுக்க முற்படுகின்ற கிருஸ்ணனின் மனிதத்தன்மை வெளிப்பட்டு நிற்கிறது. என்னத்தான் இயந்திரமாக ஓடிக்கொண்டிருந்தாளும் அவனும் ஒரு மனிதன் தான் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இன்னொரு பக்கம் ஆசிரியர் சர்வரை, கைக்குட்டையை எடுக்க விடாமல் தானே எடுத்துக்கொண்ட தன்மையானது மனிதத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அதாவது இவ்வளவு நிற்காமல் வேலை செய்கிறான் இவனிடம் நாம் வேலை வாங்குவதா? அவனுடைய நிலையையும் நாம் மதிக்க வேண்டும் என்ற மனப்பாங்கை மறைமுகமாக வாசகர் மனதில் நிலைநிறுத்த புதுமைப்பித்தன் முயற்சித்து இருக்கிறார். ஆகவேதான் இக்கதையில் மனிதத்துவம் பேசப்படுகிறது. அவ்வாறு பேசப்படும்போது சர்வரின் மூலமாகவும் ஆசிரியரின் மூலமாகவும் மனிதத்துவம் வெளிகாட்டப்படுவதுடன் இந்த மி~pன் யுகத்தில் வாழ்ந்தாலும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதை மிஷின் யுகம்” நமக்கு உணர்த்தி நிற்கிறது.

Leave a Comment