ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல்

கல்வியில் ஓர் ஆய்வுப் பிரச்சினையை கண்டறிவது ஆய்வுச் செயன்முறையில் மிக முக்கியமான படியாகும் நன்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுப் பிரச்சினை உங்கள் ஆய்வுக்கான திசையை தீர்மானிக்கிறது. மேலும், ம் உங்கள் ஆய்வு முயற்சிகளை ஆர்வமுள்ள ஒரு பகுதியில் கவனம் செலுத்த உதவுகிறது. கல்வியில் ஒரு ஆய்வுப் பிரச்சினையை கண்டறிய உதவும் படிகள் வருமாறு நீங்கள் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் கல்வியியலின் கிளைத்துறை தொடர்பாக போதுமான விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். மேலே பவ்வேறு கல்வியியல் துறைகள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. இவற்றுள், உங்கள் அனுபவம். விருப்புகள், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பரிச்சியமான கல்வித்துறைபற்றி மேலும் விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். குறிக்க துறையில் கற்போதைய காலகட்டத்தில் முனைப்பு பெறும் அம்சங்கள். எழுவினாக்கள் போன்றன தொடர்பாக தேடித் பாருங்கள். இதற்காக குறித்த துறையில் வெளிவந்துள்ள அண்மைக்கால ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்றவற்றை வாசிக்க வேண்டி ஏற்படும்.

தற்போதுள்ள இலக்கியத்தை மீளாய்வு செய்தல் நீங்கள் ஆய்வுக்காக தெரிவு செய்த கல்வித்துறையில் தற்போது எவ்வாறான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஆய்வு செய்யப்படாமல் விடுபட்ட விடயங்கள் காணப்படுகின்றனவா? (தற்போதைய ஆய்வு இடைவெளி) அல்லது. தற்போதைய ஆய்வுகளில் வரையறுக்கப்பட்ட அல்லது முரண்பட்ட தகவல் உள்ளனவா, பதிலளிக்கப்படாத ஆய்வு வினாக்கள் காணப்படுகின்றதா? அல்லது மேலும் ஆய்வுக்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகள் காணப்படுகின்றதா? என்பதை கண்டறியும் நோக்கில் சார்பிலக்கிய மீளாய்வை மேற்கோள்ளல் வேண்டும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தல்: நீங்கள் கற்கும் பல்கலைக்கழகம்அல்லது நிறுவனத்தில் உள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அல்லது கல்வித்துறை நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறவும் இது சாத்தியமான ஆய்வு பிரச்சனைகளை கண்டறிய உதவும். கல்விச் சூழமைவினை பரிசீவித்து பார்த்தல்: நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும் கல்விச் சூழமைவு, ஆய்வுக்காக தெரிவு செய்த ஆய்வுப் பிரச்சினையை

மேற்கொள்வதற்குப் பொருத்தமானதா என உறுதிசெய்து கொள்ளுங்கள். சமூக எழுவினாக்கள் அல்லது காலத்தால் முக்கியம் பெறும் எழுவினாக்களை இனங்கண்டு அவற்றை முன்னிலப்படுத்தல் கல்வி பெரும்பாலும் பரந்த சமூக மற்றும் சமூக பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ள தற்போதைய சமூக அக்கறைகள். கொள்கை மாற்றங்கள். நடைமுறைகள், அல்லது கல்வி சார்ந்த சவால்களை கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்ய முயற்சி செய்தல் உதாரணமாக, தற்காலத்தில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அல்லது புதிய கற்பித்தல் முறைகள் எண்ணிம (டிஜிட்டல்) திறன்கள். STEM கல்வி முறை செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் personalized learning, Augmented learning, flipped classroom, blended learing L விடயங்கள் எனலாம்.

சாத்தியப்பாட்டினை உறுதி செய்து கொள்ளல் 

ஆய்வுக்காக தெரிவு செய்துள்ள பிரச்சினையை ஆய்வு செய்வதற்கான சாத்தியப்பாட்டினைசெய்து கொள்ளுங்கள் ஆய்வுப் பிரச்சினையை தீர்க்க தேவையான சான்றுகளை. சார்பிலக்கியங்களை பெற்றுக் கொள்ள முடியுமா. தரவுகளை இரட்ட முடியுமா. மற்றும் பங்கேற்பாளர்களை அணுக முடியுமா. உங்களுக்கு இடைக்கக்கூடிய கால் அளவு ஆய்வினை மேற்கொள்ள போதுமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆய்வின் முக்கியத்துவத்தைக் அவனியுங்கள் நீங்கள் மேற்கொள்ளவுள்ள ஆய்வுப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கள். உங்கள் ஆய்வு ஏற்கனவே இருக்கும் அறிவுக்கு பங்களிக்குமா? கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துமா? போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆய்வின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து கொள்கஓர் ஆய்வுப் பிரச்சனை கூற்றினை எழுதுக மேற்கூறிய வழிகாட்டல்களின் அடிப்படையில் ஆய்வுப் பிரச்சினையொன்றை நீங்கள் கண்டறிந்ததும், நீங்கள் ஆராய விரும்பும் பிரச்சினையொன்றை, அதன் தொடர்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெளிவாக வரையறுக்கும் வகையில் அதனை ஆய்வுப் பிரச்சினைக் கூற்றாக எழுதிக் கொள்கமுழு அளவிலான ஆய்வில் ஈடுபடுவதற்கு முன், உங்கள் ஆய்வுப் பிரச்சனை மற்றும் ஆய்வு முறையியல்களை களை சோதிக்க ஒரு சிறிய முன்னோடி ஆய்வினை மேற்கொண்டு குறித்த பிரச்சினை உண்மையில் காணப்படுகின்றதா, குறித்த ஆய்வினை மேற்கொள்ள முடியுமா என பரீட்சித்து பார்க்கலாம்.

Leave a Comment