www.edutamil.com |
அளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ?
இவற்றுள் மிக முக்கியமான இயல்பு தகுதியாகும். ஆனால், ஒரு சோதனையானது உயர்தகுதியுடையதாயிருப்பதற்கு நம்பகம் அவசி யமான நிபந்தனை என்பதால், இங்கு நம்பகம் என்னும் இயல்பு முதலில் எடுத்தாளப்படுகின்றது.
மேலும் வாசிக்க – கல்வி அளவீடும் மதிப்பீடும்
நம்பகம் :
ஒரு கருவியானது எதனை அளவிடுகின்றதோ அதனை எந்த அளவுக்குச் செம்மையான அளவீடாகத் தருகின்றது என்பதனை நம் பகம் என்னும் பதம் குறிப்பிடுகின்றது. அதாவது இதே சோதனை யைக் கொண்டு மாறாத ஓர் இயல்பினை எத்தனை தடவை அள விட்டாலும் பெறப்படும் அளவீடு ஒரே பெறுமதியாக இருக்க வேண் டும். ஒரு சோதனையைப் பயன்படுத்தி மாணவனை சோதித்துப் பெறும் புள்ளியானது அச்சோதனையை வெவ்வேறு சந்தர்ப்பங் களில் பயன்படுத்தும்போது அவன் பெறும் புள்ளிகளிலிருந்து அல்லது சமவலுவான வினா உருப்படிகளைக் கொண்ட வேறொரு சோதனை மூலம் பெறப்படும் புள்ளிகளிலிருந்து வேறுபடாதிருக்க வேண்டுமென்பது புலனாகின்றது.
எந்த அளவீடாயினுஞ்சரி அதனுள் வழுக்கள் புகுந்து விடு வதைத் தவிர்க்க முடியாது. இவ்வழுக்களின் ஆதிக்கத்தை நியாய மான அளவுக்குக் குறைப்பதுவே அளவீட்டு நிபுணர்களின் பிரதான நோக்கமாகும். பயன்படுத்திய வினாக்கள், மாணவரின் ஊக்கநிலை, ஆயத்தநிலை, பதற்றம், சலிப்பு ஆகிய உள நிலைகள், உடல்நல நிலை, விடையளிக்கையில் அவனுக்கு உதவுகின்ற அதிட்ட ஊகங்கள், கவனக்குறைபாடுகள் என்பனவும் புள்ளி வழங்குவோனின் வழுக் கள், கோடல்கள் என்பனவும் மாணவன் பெறும் சோதனைப் புள்ளி களில் வழுக்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட இயல்பினை அள விடும் முயற்சியில், ஒரே அளவிடு கருவியானது திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டுப் பெற்ற அளவைகளின் சராசரிப் பெறுமானம் எடுக்கப்படுமாயின், அளவீட்டில் ஏற்படும் தற்செயல் வழுக்கள் ஈடு செய்யப்படும். ஆனால், மாணவர் சார்பான வழுக்களும் கருவி சார்பான வழுக்களும் அப்படியானவையல்ல. அத்துடன் மாண வனின் ஒரே இயல்பினைப் பல தடவைகள் திரும்பத்திரும்ப இயலாத செயலாகும். இவற்றுள் மாணவர் சார்பான வழுக்கள் நேரத்துக்கு நேரம் மாறுபடும் தன்மை கொண்டன. மேலே குறிப்பிடப்பட்ட வழுக்களை ஏற்படுத்தும் காரணிகளை நோக்கும் போது அவற்றுட்சில முக்கியமற்றனவாகவோ அல்லது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாதனவாகவோ அல்லது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாதனவாகவோ கருதத் தோன்றும். ஆயினும் இவை யாவற்றினதும் கூட்டு விளைவானது அளவிடு கருவியின் நம்பகத்தைப் பெரிதும் பாதிக்கவல்லன.
நம்பகத்தைத் துணிதல்:
நியமம்சார் சோதனைகளின் நம்பகத்தைத் துணிவதற்கான அனைத்து முறைகளும் ஒரே மையக்கருத்தைக் கொண்டனவாகும். ஒரு மாணவனது அடைவுநிலை பற்றி ஒரு கருவிமூலம் பெறப்பட்ட அளவீடானது மாறாது இருக்க வேண்டும் என்பதே இவ்வடிப்படைக் கோட்பாடாகும். உதாரணமாக, மாணவர் குழு ஒன்றுக்கு ஒரு சோதனை வழங்கப்பட்டுப் புள்ளிகள் பெறப்பட்டன என்போம். அளவிடப்பட்ட இயல்பு சார்பாக ஒவ்வொரு மாணவனும், குறிப் பிட்ட ஒரு நிலையை வகிப்பான். அதேசோதனையைப் பயன்படுத் தியோ அல்லது அதையொத்த இன்னொரு சோதனையைப் பயன்படுத்தியோ பிறிதோர் அளவீட்டை நாம் மேற்கொள்வோ மாயின், அக்குழுவின் ஒவ்வொரு மாணவனும் தாம் முன்பு வகித்த அதே நிலையைத் தொடர்ந்தும் வைத்திருப்பாரா என்பதிலேதான் அச்சோதனையின் நம்பகம் தங்கியுள்ளது.
ஒவ்வொரு மாணவனுக்கும் குறிப்பிட்ட ஓர் அடைவைச் சுட் டிக்காட்டும் ஒரு சோடி அளவீடுகள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், இரு புள்ளி தொகுதிகளையும் ஒரு வரைபாற் குறிப்பிடலாம். ஒரு தொகுதி அடைவு புள்ளிகளைக் கிடை அச்சிலும் மறுதொகுதி அடை வுப் புள்ளிகளை நிலைக்குத்து அச்சிலும் எடுத்து, இரு அளவீடுகள் சார்பாகவும் ஒவ்வொரு மாணவனது நிலையையும் ஒவ்வொரு புள்ளியால் குறிக்கும் போது ஒரு சிதறற் படம் கிடைக்கின்றது. இச் சிதறற் படத்தின் வடிவம் அச்சோதனையின் நம்பகத் தன்மைபற்றி விளக்கம் பெற உதவுகின்றது. சிதறற் படத்திலுள்ள புள்ளிகளின் கோலம் எந்த அளவுக்கு ஒரு நேர்கோட்டை அணுகுகின்றதோ அந்த அளவுக்குச் சோதனையின் நம்பகம் உயர்வாக உள்ளதென விளக்க மளிக்க முடியும். புள்ளிகளின் கோலமானது குறிப்பிட்ட எத்திசை யையும் புலப்படுத்தாது பரந்துபட்டுக் காணப்படுமாயின், சோதனை யின் நம்பகம் தாழ் நிலையை அணுகி நிற்கும்.
இது தவிர, கணிப்பு முறையால் ஒரு சோதனையின் நம்பகத் தைத் தீர்மானிப்பதற்கான நான்கு முறைகள் வழக்கில் உண்டு. ஒரு சோதனையை மீண்டும் நடாத்துதல், சமவலுவான பிறிதொரு சோதனையையும் நடாத்துதல், ஒரு சோதனையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமவலுவான பகுதிகளாகப் பிரித்தல் ஆகிய நடை முறைகள் சார்பாக இக்கணிப்பு முறைகள் ஒன்றுக்கொன்று வேறு படுகின்றன. அத்துடன், வெவ்வேறு கணிப்பு முறைகளுக்கூடாகப் பெறப்படும் நம்பகக்குணங்கள் வேறுபட்ட இயல்பு கொண்டவை யாகவும் வேறுபட்ட எண்பெறுமானமுடையனவாகவும் காணப் படும். இங்கு, சோதனையின் நம்பகமானது நம்பகக்குணகம் என்னும் ஓர் எண்சுட்டியால் குறிப்பிடப்படுகின்றது. நம்பகத்தின் உச்ச எல்லையை 1 என்னும் எண் குறிக்கின்றது. நடைமுறையில் இச் சுட்டியானது பூச்சியத்துக்கும் ஒன்றுக்கும் இடையிற் காணப்படும்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்