அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?

அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?
www.edutamil.com


கட்டுரை அடைவுச் சோதனைகள்

மாணவனின் பாட அடைவை மதிப்பிடுகையில் இரு பிரதான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். மாணவன், தனக்குரிய அறிவையும் உளத்திறன்களையும் வெளிப்படுத்துவதற் கான ஆற்றலில் அவனது மனவெழுச்சித் தளம்பல்கள், ஆசிரிய மாணவ தொடர்பு, உடல்நலம் முதலிய காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றால் ஏற்படும் விளைவு கணிசமான அளவா யின் மதிப்பீடு சரியாக அமையாது. எனவே மேற்குறிப்பிட்ட காரணி களினால் அதிகளவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்னும் கருது கோளை ஆதாரமாகக் கொண்டு அடைவின் மதிப்பீடு மேற்கொள் ளப்படுகின்றது. அடுத்ததாக, மாணவனது நடத்தை முழுவதையுமே எம்மால் அவதானிக்கவோ அன்றி அளவிடவோ இயலாது. எனவே, அளவிடப்படும் மாணவ நடத்தைகள் அவதானிக்கப்படாது விடப்படும் அல்லது அளவிடப்படாது விடப்படும் நடத்தைகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்னும் பிறிதொரு கருதுகோளும் மதிப்பீடு மேற்கொள்வற்கு அவசியமாகின்றது.

அடைவுச் சோதனைகள்:

பலவகையான அளவிடு கருவிகளுள் சோதனை ஒரு பிரதான வகை என்பது மட்டுமல்ல ஒரு பிரபலமான வகையுமாகும். ஒருவனது நடத்தையின் மாதிரியொன்றை அளவிடுவதற்கான ஒரு படிமுறை யான வழிமுறை சோதனையாகும். சோதனையின் உள்ளடக்கம், அதனை நிர்வகிக்கும் வழிமுறைகள், விடைகளுக்குப் வழங்கல் ஆகிய மூன்று அம்சங்களிலும் இப் படிமுறையான ஒழுங்காக்கல் புலப்பட வேண்டும். அளவிடப்படும் துறையில் தெரிவு செய்யப் பட்ட குறிக்கோள்களை மாணவர் அடைந்துள்ளனரா என அறியும் பொருட்டு அப்பாடப்பரப்பு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிற் சோதனை உள்ளடக்கம் படிமுறையாகத் தெரிவு செய்யப் பட வேண்டும். சோதனைக்குப் போதுமானளவு நேரம், அறிவுறுத் தல்கள், மாணவருக்கும் சோதனையின் தன்மைக்கும் ஏற்ற சோதனை நிலைமைகளை ஏற்படுத்துதல் போன்ற சகல அணிநலன்களும் ஒரு நியம முறையில் அமைதல் மிக அவசியமாகும். அடுத்து, மாணவர் அளித்த விடைகளுக்குப் புறவயமான அளவீட்டைப் பெறும் வகை யில் புள்ளி வழங்குதலுக்கான ஒழுங்குமுறை நிகழ்ச்சித் திட்டம் வேண்டும். இவ்வழிமுறைகளின் மூலம் அச்சோதனையின் நம்பகம். தகுதி என்பன உயர்நிலையில் பேணப்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

மாணவனின் அடைவு எனக்கொள்ளும்போது அது அறிகை, எழுச்சி, உள – இயக்க ஆட்சிகளில் மாணவரின் நடத்தை மாற்றங் களைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் அறிகை ஆட்சியில் மாணவரது அடைவை அளவிடுதல் சார்பாக இங்கு அடைவுச் சோதனைகள் விளக்கம் பெறுகின்றன.

சோதனை வகைகள் :

கல்வி அடைவின் மதிப்பீட்டில் பலவகையான சோதனைகள் இன்று செயல்வழிப்படுகின்றன. இவற்றினை ஏதாவதொரு கோட் பாட்டுக்கு அமைய ஒழுங்குபடுத்தி நோக்குதல் நன்று. பயன்கள் சார்பாகவோ அமைப்புச் சார்பாகவோ சோதனைகளை வகைப் படுத்தி நோக்க முடியும். மாணவர் தமது கருத்தைப் புலப்படுத்தும் மூன்று பிரதான வாயில்கள் வாய்மொழி, எழுத்து, செய்கை என்பன வாகும். மாணவரின் விடைகளுக்குப் புள்ளி வழங்கல் தொடர்பாக எழுத்துச் சோதனைகள் கட்டுரைவகை, புறவயவகை என இரு பிரிவுகளாக இங்கு நோக்கப்படுகின்றன.

வாய்மொழிச் சோதனைகள் :

முன்வைக்கப்படும் வினாக்களுக்கு வாய்மொழி மூலம் மாண வர் விடைதரும் சந்தர்ப்பங்கள் எமது நாளாந்தக் கற்பித்தலில் பங்கு வகிக்கின்றன. மேலும், எழுத்துவன்மை விருத்தி போதுமான ளவு ஏற்பட்டிராத ஆரம்ப வகுப்புக்களிலும், மாணவர் தொகை சிறி தாக உள்ள வகுப்புக்களிலும், நேரத்திற் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வேளைகளிலும், மாணவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மேலதிக விளக்கங்களைக் கோரும் சந்தர்ப்பங்களிலும் வாய்மொழிச் சோதனைகள் பெரிதும் உதவுகின்றன. அத்துடன், மருத்துவம் பொறியியல், நுண்கலை போன்ற செயன்முறை அனுபவங்களடங்கிய தேர்வுகளுக்கும், வேலை கொள்வோரினால் நேர்முகத் தேர்வுகளின் போதும் ஏனைய மதிப்பீட்டு உத்திகளுக்கு அனுசரணையாகவும் வகையிலும் இவ்வகைச் சோதனைகள் பயன்படுத்தப் படுகின்றன. எனினும், இவற்றில் சில குறைபாடுகளும் இல்லாம லில்லை. சோதனை நடத்தி முடிப்பதற்கு எடுக்கப்படும் அதிகளவு நேரம் காரணமாகவும் அனுபவமும் செயல்திறனும் மிக்க தேர்வாளர்களின் தட்டுப்பாடு காரணமாகவும் இவ்வகைச் சோதனைகள் பாட அடை வின் மதிப்பீட்டுத் திட்டங்களில் அதிகளவு முக்கியத்துவம் பெறவில்லை.

கட்டுரைச் சோதனைகள் :

விடையளிப்பதில் மாணவனின் சுதந்திரமான தொழிற்பாட்டுக்கு அதிக அளவில் இவை வழிவகுக்கும். ஒரு வினாவுக்குரிய மாணவ னின் விடையானது வழமையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வசனங்களால் குறிப்பிடப்பட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துப் புலப்பாடுகள் செயற்பட்டும் காணப்படின் அவ்வினா கட்டுரை வகை யைச் சார்ந்தது எனலாம். சில சமயங்களில் விடையானது ஒரு கூற்றினாலும் குறிப்பிடப்படலாம். இங்கு மாணவன் தனது விடைக்கு மொழியைப் பயன்படுத்தி அதனை எழுத்தில் வடிவமைக் கின்றான். அதுமட்டுமன்றி குறிப்பிட்ட ஒருவினாவுக்குச் சரியான தெனக் கொள்ளப்படக்கூடிய விடையை ஒவ்வொரு மாணவனும் வெவ்வேறு மொழிநடை, ஒழுங்கமைப்பு என்பவற்றுக்கூடாகப் புலப்படுத்த முடிகின்றது. அதாவது, குறிப்பிட்ட ஒரு துலங்கல் மட்டுந்தான் சரியானது எனக் குறிப்பிடுதல் இயலாது. இதன் காரண மாக மாணவரால் அளிக்கப்படும் விடையொன்றின் தரம், செம்மை, மெருகு என்பவை தேர்வாளரின் அகவயமான தீர்ப்புக்கு இலக்காகின்றன.

கட்டுரை வகை வினாக்களுக்கு நாம் அளித்த விளக்கங்களைக் கூர்ந்து நோக்கின், இவற்றினை மூன்று துணைப்பிரிவுகளாக நோக்க முடியும். யார், எப்பொழுது, எதற்காக, எங்கு, எத்தனை, ஏன், என்ன என்னும் பதங்களுக்கூடாக வினாவப்படுபவை முதலாவது வகை யைச் சாரும். இவ்வகை வினாக்கள் யாவும் மாணவனின் நினைவு கூர்தல் என்னும் எளிய உளத் தொழிற்பாட்டை வேண்டி நிற்பனவா கும். வினாக்களுக்கான விடைகள் பெரும்பாலும் ஒரு சொல், ஓர் எண், ஒரு கூற்று அல்லது ஒரு வசனத்தில் அமையக்கூடியன. வரைவிலக்கணந் தருக, பட்டியற்படுத்துக, இனங்கா ணுக, காரணங்கள் தருக என்பன போன்ற பதங்களினால் அமைக்கப்படும். வினாக்கள் இரண்டாவது வகையாகும். மாணவரிடத்தே மட்டுப் படுத்தப்பட்ட சிந்தனைத் தொழிற்பாடுகளை இவ்வகை வினாக்கள் வேண்டி நிற்கும். ஒரு கூற்று முதல் ஒரு பந்தி வரையிலான விடைகள் வழமையாக இங்கு காணப்படுகின்றன.

விவரிக்குக, விளக்குக, ஒப்பிடுக. ஆராய்க, காரணங்கூறுக, அபிப்பிராயந் தருக, விமர்சிக்குக என்பன போன்ற பதங்கள் மூலம் கோரப்படும் வினாக்கள் மூன்றாவது வகையாகும். இங்கு சகல மட்டத்திலுமான உளத் தொழிற்பாடுகள், பிரதானமாக புளூம் என் பார் குறிப்பிட்டுள்ள தொகுப்பு, மதிப்பீடு ஆகிய மட்டங்களிலுள் ளவை சார்பான விடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதாவது, உயர் சிக்கற் தன்மையைக் கூடுதலாகக் கொண்ட கருத்துப் புலப்பா டுகள் இவ்வகை வினாக்களின் விடைகளில் பொதிந்திருக்கும். வழமையாக, ஒரு பந்தி முதல் பல பந்திகள் வரை விடைகள் அமை கின்றன. மேற்கூறப்பட்ட மூன்று துணைப்பிரிவுகளுள்ளும் முத லிரண்டு வகை வினாக்களுக்கும் மாணவர் அளிக்கின்ற விடைகள் புறவய மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படக் கூடியனவாகும். வினாக் களை அமைக்கும் திறமையினால் புறவய மதிப்பீடு சாத்தியமாகின் றது. இறுதி வகையைச் சார்ந்த வினாக்களின் விடைகளுக்குப் புள்ளி வழங்குதலில் அகவயத் தன்மையை நீக்குதல் இயலாத விடயமாகும். சாதாரண வழக்கில் கட்டுரை வகைச் சோதனை எனக் குறிப்பிடும் போது, மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட வினாக்களே கருதப்படு கின்றன.

கட்டுரைச் சோதனையின் சிறப்பியல்புகள்:

மேலே பொதுவாக விவரிக்கப்பட்ட இயல்புகளுடன் மேலும் பல குறிப்பான இயல்புகளை நாம் இங்கு குறிப்பிடமுடியும்.

1. விடைகளை அளிப்பதில் மாணவர்க்குக் கிடைக்கும் சுதந்திரம் வினாவுக்கு வினா வேறுபடுவது இயல்பு. வினாக்களில் பயன்படுத்தப்படும் மொழிநடை, என்பன இவற்றினைக் கட்டுப்படுத்துகின்றன. பிரச்சினையானது வினாவில் குறிப்பாகக் கூறப்படுமாயின் மாணவனது விடை அமைய வேண்டிய விடய வீச்சு அல்லது ஆற்றல் வீச்சு தெளிவாக வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் வினாவானது பொதுத்தன்மை கூடிக் காணப்படுமாயின் விடையில் விடய வீச்சு, ஆற்றல் வீச்சு என்பவற்றுக்குக் கட்டுப்பாடு கிடையாது. இவ்வாறான நிலைமைகளில் விடைக்கு வேண்டிய தகவல் களைத் தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல், கருத்துக்களைப் புலப்படுத்தல் வெளிப்படுத்தல், மதிப்பீடு செய்தல் ஆகிய அம்சங்களை மாணவனது விடை கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2.பாட அடைவின் மதிப்பீட்டுடன் இதன் பயன்பாடு நின்று விடு வதில்லை. ஒருவனது படைப்பாற்றலை அளவிடுதற் பொருட் டும் இவ்வகை வினாக்களைப் பயன்படுத்த முடியும். விடை யளிப்பதிலுள்ள சுதந்திரமானது விடையளிப்போனின் விருப்பு, மனப்பாங்கு என்பவற்றுக்கேற்ப உதாரணங்களையும் விளக்க மளிக்கும் முறைகளையும் தெரிவுசெய்ய வழிவகுக்கின்றது. இதன் காரணமாக மாணவனது இயல்புகளைப் பற்றியும் ஓரளவு அறிய முடிகின்றது.

3.விடையை ஒழுங்கமைக்கும் வேகம், தேர்வுப் பதற்றம், மனோ நிலை போன்ற தனியாள் இயல்புகள் காரணமாக அவனது புள்ளியில் ஏற்படும் பாதிப்புக்கள் தாழ்நிலையில் பேணப்படு வதற்கு வழியேற்படுகின்றது. ஒவ்வொரு வினாவுக்கும் விடையளிப்பதற்கு அதிகளவு நேரம் கிடைப்பதால் மாணவ னின் மனநிலைக் குலைவு குறைந்து ஓரளவு உளச் சமநிலை ஏற்பட அவகாசமுண்டு.

4.ஏனைய வகைகளை விட இவ்வகைச் சோதனையில் வினாக் களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் பொதுமைத் தன்மை உயர்வாக இருப்பதாலும் வினாத்தாள் ஆக்கமானது நேரத்தாலும் செலவாலும் சிக்கனமாகக் காணப்படுகின்றது. எனினும் இந்த இயல்பே இவ்வகைச் சோதனைகளிற் பல குறை பாடுகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைகின்றது. பள்ளிப் பாடங்கள் யாவற்றிலும் இவ்வகை வினாக்களைப் பயன்படுத்தலாம்.

5.மாணவன் தனது மொழியாற்றலைப் பயன்படுத்தி விடைக்கான கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டியிருப்பதால் இவ்வகைச் சோதனைகளில் ஊகத்திற்கூடாகச் சரியான விடையளிக்கும் வாய்ப்பு இல்லையென்னலாம். அமைப்பு மதிப்பீட்டின் பொருட்டும் கட்டுரை வகைச் சோதனை களைப் பயன்படுத்த முடியும். இச்சமயங்களில், மாணவரது விடைகள் சிறு குறிப்புரைகளாக அல்லது விளக்கவுரைகளாக அமையக்கூடிய விதத்தில் வினாக்கள் அமைக்கப்படல் வேண்டும்.

கட்டுரை வகைச் சோதனைகளின் குறைபாடுகள்

கட்டுரை வகைச் சோதனைகளின் சிறப்பம்சங்கள் காரணமாக அவை பாடசாலை மதிப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கப்பட முடியாத ஓர் உன்னத நிலையைத் தொடர்ந்தும் பேணி வருகின்றன. எனினும் அவற்றிற் பல குறைபாடுகளும் காணப்படுகின்றன. கட்டுரை வகைச் சோதனைகளின் பயன்பாட்டிலிருந்து சிறந்த பயனைப் பெறவேண்டு மாயின் இக்குறைபாடுகளை அறிந்திருத்தல் அவசியமாகும். அப்போது தான் இக்குறைபாடுகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தாழ்த்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள முடியும். கட்டுரை வகைச் சோதனைகளின் பிரதான குறைபாடுகளைப் பாடப்பரப்பின் பிரதிநிதித்துவம், வினாக்களின் விளக்கம், புள்ளி வழங்கல் என்னும் மூன்று அம்சங்களாகத் தொகுத்து நோக்குவோம்.

1.பாடப்பரப்பின் பிரதிநிதித்துவம்:

 

பாடப்பரப்பு முழுவதை யும் இவ்வகைச் சோதனை பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பது ஒரு பிரதான குறைபாடாகும். ஒவ்வொரு வினாவுக்கும் விடையளிப் பதற்கு அதிகளவு நேரம் தேவைப்படுவதால் தேர்வுக்கென ஒதுக்கப் படும் நேர அவகாசத்துள் சோதனையை நடாத்தி முடிக்க வேண்டுமா யின் ஒரு சில வினாக்களையே வழங்க முடியும். எனவே, வினாத்தா ளில் பாடபரப்பு முழுவதிலிருந்தும் வினாக்களைச் சேர்த்துக்கொள் ளுதல் இயலாது. இதன் காரணமாகப் பாடப்பரப்பிலிருந்து சில பகுதிகளை மட்டும் தெரிவுசெய்து படிக்கின்ற மாணவருக்கும், குறிப் பிட்ட சில பாடப்பகுதிகளில் உயர் தகைமையை உடையோருக்கும் அதிட்டவசமாக சோதனை வினாக்கள் அவ்வப்பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்குமாயின், அம் மாணவர் பெறும் புள்ளிகள் அப்பாடத்தில் அவர்களது உண்மையான அடைவைச் சரிவரப் புலப்படுத்தாது.

2. வினாவின் விளக்கமும் விடையின் தரமும்:

 

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, வினாவில் எழுப்பப்பட்ட பிரச்சினையை விளங்கிக்கொள்ளுதல், அதன் தீர்வுக்கான தகவல்களை நினைவு கூர்தல், இத்தகவல்களுக்கிடையிலான காட்டும் ஒழுங்கமைப்பு போன்ற உயர் உளத் தொழிற்பாடுகளைப் புலப்படுத் துதல் ஆகிய பல அம்சங்களை ஒவ்வொரு வினாவும் அதன் விடை யில் எதிர்பார்க்கின்றது. ஆயினும் என்னென்ன அம்சங்கள் எந்தெந்த அளவுக்கு வலியுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய ஒரு திட்டவட்ட மான விளக்கத்தை வினா அளிப்பதில்லை. சில சமயங்களில், வினாவை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பதங்கள். மொழி நடை என்பன சேர்ந்து அவ்வினாவின் சரியான விளக்கத்தை மாண வன் பெறுவதற்கு இடையூறாக இருக்கின்றன. சுருங்கக்கூறின் வினாவானது என்னென்ன குறிக்கோள்களைச் சோதிக்கவுள்ளது என்பது தெரியாமற் போகின்றது. இதன் காரணமாக, வினாவுக்கு எதிர்பார்த்த விடையின் தன்மையினின்றும் முற்றிலும் வேறுபட்ட தன்மையை மாணவன் அளிக்கும் விடை கொண்டிருக்கும் நிலை மையுந் தோன்றுகின்றது.

அடுத்து, மாணவர் அளிக்கும் விடைகளும் சில சமயங்களில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. வினாவுக்குப் பொருத்தமான விடய அறிவு குன்றிய மாணவன், தனது எழுத்தாற்றலையும் தர்க்கத் திறனையும் பயன்படுத்தி, விடையை மழுப்பி விடுகின்றான். இவ் வாறு பாட விடயம் தொடர்பான தனது அறியாமையை அல்லது தவறான கருத்துக்களைத் தேர்வாளருக்குப் பிடிகெடாமல், சுற்றி வளைத்து மாணவன் விடையளிக்கும் அவ்விடை யைச் சரியாக மதிப்பீடு செய்வது பெருங் கஷ்டமாகின்றது.

3.புள்ளி வழங்கல்:

 

கட்டுரைவகைச் சோதனையானது தேர்வு நாடிக்கு மட்டும் தன் தனித்துவத்தைக் காட்டும் சுதந்திரத்தை அளித்து விடவில்லை. புள்ளி வழங்குதலில் தேர்வாளருக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது எனப் பொதுவாகக் கூறப்படுவதுண்டு. புள்ளி வழங்கு தலில் ஊடுருவும் தேர்வாளரின் அகவயத்தன்மையானது கட்டுரை வகைச் சோதனைகளின் ஒரு பெருங் குறைபாடாகும். தேர்வாளரின் அகவயத் தன்மையானது வழங்கப்பட்ட புள்ளியைப் பல வழிகளில் வழுவுடையதாக்குகின்றது.

ஒரு வினாவினூடாக அளவிட எத்தனிக்கப்பட்ட குறிக்கோள் கள் எவையென்பது பற்றியும் விடையில் எதிர்பார்க்கப்படும் வெவ் வேறு அம்சங்களின் முக்கியத்துவம் பற்றியும் தேர்வாளர் கொண் டுள்ள கருத்து அல்லது அபிப்பிராயம் ஒரு முக்கிய விடயமாகும். இவ்வபிப்பிராயம் தேர்வாளருக்குத் தேர்வாளர் வேறுபடுகின்றது. இதன் விளைவாக, வெவ்வேறு தேர்வாளர்கள் ஒரு வினாவுக்குரிய விடைக்குப் புள்ளியிடும்போது ஒவ்வொருவரும் அளிக்கும் புள்ளி கள் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படுவதுமுண்டு.

குறிப்பிட்ட ஒரு வினாவுக்குரிய விடையில் என்னென்ன அம்சங் கள் எதிர்பார்க்கப்பட வேண்டுமென்பது பற்றிய ஒரு தேர்வாளரின் அபிப்பிராயம் காலத்துடன் மாறுபாடடையும் தன்மை கொண்டது. உதாரணமாக, ஒரு தொகுதி விடைத்தாளைத் திருத்தி முடிக்க ஓர் ஆசிரியருக்கு இரு வாரங்கள் எடுத்தன எனக் கொள்வோம். அதா வது, முதலாவது விடைத்தாளுக்குப் புள்ளி வழங்கிய தினத்திலிருந்து இரு வாரங்களின் பின்னரே இறுதி விடைத்தாளுக்குப் புள்ளி வழங் கும் வேலையைச் செய்திருப்பார். அவ்வினாவுக்குரிய சரியான விடையின் தன்மை பற்றி அவர் ஆரம்பத்தில் கொண்டிருந்த கருத்து இருவாரங்களின் பின்பு மாற்றத்துக்குள்ளாகியிருந்தால், அவர் வழங்கிய புள்ளிகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட அளவில் வழுவைக் கொண்டிருக்கும்.

விடைத்தாள்களுக்குப் புள்ளி வழங்கும் வேளையில், மிகத் திறமையானது என அவர் கருதும் விடையை வாசித்துப் புள்ளி வழங்கியதையடுத்துத் தரம் குறைவாகவுள்ள விடையொன்றை வாசிப்பாரேயாயின் இவ்விடைக்கு அவர் வழங்கும் புள்ளியானது உண்மை நிலையிலும் தாழ்வாக இருக்க வாய்ப்புண்டு. இதே போன்று தரங்குறைவாகவுள்ள விடைத்தாளுக்குப் புள்ளி வழங்கிய கையோடு தரங்கூடிய விடைக்குப் புள்ளி வழங்கும்போது அதன் மதிப்புநிலை உண்மைநிலையிலும் உயர்வாக காணப்படும்.

குறிப்பிட்ட ஒரு விடைத்தாளுக்குப் புள்ளி வழங்குகையில், சில வினாக்களுக்குத் திறமையான விடைகளைத் தேர்வாளர் வாசிக்க நேர்ந்ததெனக் கொள்க. இவற்றினைத் தொடர்ந்து அவ்விடைத்தாளில் தரங்குறைவான ஒரு விடை வாசிக்கப்படினும், அவ்விடையை அதன் உண்மைத் தரத்தினின்றும் உயர்த்திக் காணும் இயல்பு சில தேர் வாளர்களிடம் ஏற்படுவதுண்டு. இது பரிவேட விளைவு எனப்படும். இதேபோன்று அடுத்தடுத்துத் தரங்குறைந்த விடைகளை அளித்த மாணவன், இறுதியாக ஒரு வினாவுக்குத் திறமை வாய்ந்த விடை யொன்றை அளிப்பினும் அதுவும் தரம் குறைத்து மதிப்பிடப்படுவது முண்டு. விடையளிப்போனின் சொற்களஞ்சியம், மொழிநடை, எழுத்துறுப்பின் அழகு, எழுதப்பட்ட பக்கங்கள் ஆகிய இன்னோரன்ன அம் சங்களும் சில தேர்வாளர்களிடம் செல்வாக்குச் செலுத்தி விடுகின்றன. மேற்குறிப்பிட்டவை தவிர விடைத்தாள் மதிப்பிடும் வேளை யில் தேர்வாளர்களின் உள, உடல் நிலைகளும் புள்ளி வழங்கலில் வழுக்களை ஏற்படுத்துகின்றன. விடையின் பிரதான அம்சங்களாவன உள, உடற் பாதிப்புக்குள்ளான தேர்வாளரின் கவன வீச்சினுள் அகப்படாவிடின் சரியான அளவீடு இடம்பெற முடியாது.

கட்டுரை வகைச் சோதனைகளை அமைத்தல்:

கட்டுரைவகைச் சோதனையின் குறைபாடுகளை அவதானிப் பின் இவை அதன் நம்பகத்தையும் தகுதியையும் பெரிதும் பாதிக்கக் கூடியன என்பது புலனாகும். எனவே கட்டுரைவகைச் சோதனை உருப்படிகளை ஆக்கும்போது சோதனைப் புள்ளிகளில் வழுக்களை ஏற்படுத்தும் காரணிகளின் செல்வாக்கை இயலுமானளவு தாழ் நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதன் மூலமே சிறந்த சோதனை உருப்படிகளை ஆக்க முடியும். இவ்வழிமுறைகளைச் சுருக்கமாக ஆராய்வோம்.

1.தெளிவாக வரையறை செய்யப்பட்ட பிரதான குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் ஆக்கப்பட வேண்டும். ஒரு விடய-திறன் அட்டவணை இத்தேவையை நன்கு பூர்த்தி செய்யவல்லது. ஒரு கட்டுரை வகை வினாவுக்குரிய விடையா னது பல துணைப்பிரிவுகளைக் கொண்டிருக்கும். எதிர்பார்க்கப் படும் விடையின் துணைப்பிரிவுகள் விடய – திறன் அட்ட வணையின் பல கூடுகளின் பிரதிபலிப்பாக அமையும்போது சோதனை உருப்படியானது மாணவனிடமிருந்து எதிர்பார்க்கப் படுவது என்ன என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.

2.முழுப்பாடப் பரப்பிலிருந்தும் வினாக்களைத் தெரிவு செய்தல் இயலாதாகையால் பாடத்தின் பிரதான அம்சங்களில் மாணவன் தனது திறமையைப் புலப்படுத்தக் கூடியவகையில் சோதனை உருப்படிகள் அமைதல் வேண்டும்.

3.சோதனையில் வினாத் தெரிவு வழங்கப்படுவதைத் தவிர்ப்பதன் மூலம் அதன் நம்பகத்தை உயர்த்த முடியும். வினாத்தாளானது பாடப்பரப்பைக் கூடுதலானளவுக்குப் பிரதிநிதித்துவம் செய்ய

4.வேண்டுமென்னும் நோக்குடன் தேவைக்கும் மேலாக வினாக்க ளை வழங்கி, வினாத் தெரிவுக்கும் இடமளிக்கும் நடைமுறை பல சந்தர்ப்பங்களிற் காணப்படுகின்றது. இம் சோதனையின் நம்பகத்தை மேலும் தாழ்வுறச் செய்யும். வினாத் தெரிவுக்கு இடமளிக்காத சந்தர்ப்பங்களில், எல்லா வினாக்களும் ஒரே கடினத்தன்மையுடன் ஆக்கப்படாது வெவ்வேறு கடினத் தன்மையுடனும், சிக்கற் தன்மை கொண்டதாயும் ஆக்கப்படுதல் நன்று. அத்துடன், கடினத்தன்மைக்கேற்ப ஒவ்வொரு வினாவுக் குமான அதி உயர்புள்ளி வேறுபடுத்திக் காட்டப்பட்டுச் சோத னைக்குத் தோற்றுவோருக்கும் தெரியப்படுத்துதல் ஒரு சிறந்த நடவடிக்கையாகும். இதன் மூலம் தனியாள் வேறுபாட்டிற் கேற்பத் தொழிற்படவும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தவும் மாணவனுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது.

5.ஒவ்வொரு வினாவும் குறிப்பான ஒரு பிரச்சினையை மையமாக வைத்துப் பின்னப்படுதல் அவசியம். இவ்வாறிருப்பின், தான் அளிக்கவேண்டிய விடையானது என்னென்ன பிரதான அம்சங் களைச் சார்ந்திருக்க வேண்டுமென்பது ஓரளவிற்கேனும் மாண வனுக்குப் புலப்பட இடமுண்டு. அத்துடன் வினாவை விளங்கிக் கொள்வதிலும் மாணவரிடையே பரந்த வேறுபாடு ஏற்படாது. அதாவது, குறிப்பிட்ட ஒரு வினாவைத் தேர்வுக்குத் தோற்றும் அனைத்து மாணவரும் ஒரே விதமாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது.

6.சோதனைக்கு விடையெழுதும் பொருட்டு வழங்கப்படும் நேரம் நியாயபூர்வமாக அமைய வேண்டும். ஒரு வினாவின் கடினத்தன் மையை, அதனை அமைப்பவராலேயே சில சமயங்களிற் குறிப் பிட முடிவதில்லை. விடையளிப்போனின் எழுதும் வேகம், சிந்திக்கும் ஆற்றல் என்பன ஆளுக்காள் வேறுபடுகின்றது.சில மாணவர்கள் விடையின் மாதிரித் திட்டம் சார்பான புறக்குறிப்பு ஒன்றைத் தயாரித்த பின்னரே விடை எழுத ஆரம்பிக் கின்றனர். மேற்குறிப்பிட்டவை போன்ற காரணங்களினால் சோதனையின் நேரத்தைத் தீர்மானிப்பது கடினமான பணியா கின்றது. ஒவ்வொரு வினாவுக்கும் மாதிரி விடையொன்றை வினாவைத் தயாரிப்பவர் எழுதிப் பார்ப்பாராயின், வினாத்தா ளுக்குத் தேவையான மொத்த நேரம் பற்றிய ஓரளவு பொருத்த மான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். எனினும், சோதனைக்குரிய மொத்த நேரமும் விடையளிக்க வேண்டிய வினாக் களின் எண்ணிக்கையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நிலைமைகளில் நேரம் தொடர்பான பிரச்சினை வேறு வடிவமெ டுக்கின்றது. இவ்வாறான நிலைமைகளில், வினாக்களின் அமைப்பில் அல்லது கடினத் தன்மையில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியேற்படும்.

பாடநூல்கள், பாடக்குறிப்புகள், அல்லது பயிற்சிகளிற் காணப் படும் பதங்கள், கூற்றுக்கள், எண் உதாரணங்கள் என்பவற்றை வினாக்களில் புகுத்துவதை இயன்றளவுக்குத் தவிர்க்க வேண்டும்.

7.வினாத்தாளில் இடம்பெறும் அறிவுறுத்தல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் வேண்டும். அறிவுறுத்தல்கள் நீண்டிருப் பின், அவை தேர்வுநாடியினால் வாசிக்காமலும் விடப்படலாம். அறிவுறுத்தல்கள் தெளிவான விளக்கத்தையளிப்பதிற் குறைபாடி ருக்குமாயின் தேர்வுநாடியின் தொழிற்பாடு பொருத்தமற்ற திசையில் ஊக்குவிக்கப்படலாம்.

சோதனைக்குரிய வினாக்களைத் தெரிவுசெய்து முடித்ததும் அவற்றினை அப்பாடத்துறையின் வல்லுநர் ஒருவரின் மீள்பார் வைக்கு உட்படுத்துதல் வேண்டும். கட்டுரை வகைச் சோதனைக்குப் புள்ளி வழங்குதல்:

விடைகளுக்குப் புள்ளி வழங்கும் பணியில் தேர்வாளரின் அகவயத் தன்மை பங்கு கொள்கிறது என்பதே கட்டுரை வகைச் சோதனைகளின் பெருங் குறைபாடாகும். சோதனையைத் திட்டமிடு தல், புள்ளி வழங்குதல் ஆகிய இரு நிலைகளிலும் பொருத்தமான சில வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் இக்குறைபாட்டின் விளைவை நாம் தாழ்த்த முடியும். சோதனையைத் திட்டமிடும் நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை ஏற்கனவே கண்டுள்ளோம். எனவே, புள்ளி வழங்கும் நிலையில் மேற்கொள்ளப் பட வேண்டியவை பற்றி இங்கு நோக்குவோம்.

1. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு விரிவான புள்ளி வழங்கல் திட்டம் இருக்க வேண்டும். விடையில் எதிர்பார்க்கப்படும் பிரதான அம்சங்களைப் பட்டியற்படுத்திக் கொண்டோ அல்லது மாதிரி விடையொன்றைத் தயாரித்து வைத்துக் கொண்டோ விடைத் தாள்களைப் பார்வையிடத் தொடங்கலாம். மாணவரின் விடைகளை வாசித்துக் கொண்டு செல்கையில், ஏற்கப்படக் கூடிய புதிய அம்சங்கள் காணப்படும்போது அவற்றினை கனவே தம்மிடமுள்ள விடை அமைப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விடையின் மாதிரி அமைப் பொன்று உருவாக்கப்பட்ட பின் மாணவரது விடைகளை இதனுடன் ஒப்புநோக்கிப் புள்ளிகளை வழங்கலாம். மாதிரிப் புள்ளி வழங்கல் திட்டமானது சோதனை வினாக்கள் தயாரிக் கப்படும் வேளையிலேயே உருவாக்கப்படுதல் மிகச் சிறந்தது. முதலில் எழுமாற்றாகச் சில விடைத்தாள்களைத் தெரிவு செய்து பார்வையிடுவதன் மூலம், இப்புள்ளிவழங்கற் திட்டம் அமைக் கப்படும் நடைமுறையும் பின்பற்றப்படலாம். எல்லா மாணவரின் விடைத்தாள்களையும் மேலெழுந்த வாரியாகப் பார்வையிட்டு அவற்றினை வெவ்வேறு தரத்திலுள்ள பல தொகுதிகளாகப் பிரித்து மதிப்பிடுதல் புள்ளி வழங்கலின் பிறிதொரு வழிமுறையாகும். ஒவ்வொரு தொகுதியையும் தனியே எடுத்து, அதனை விடையின் தரத்தினடிப்படையில் மேலும் பல துணைத் தொகுதிகளாக ஒழுங்குபடுத்தலாம். இறுதியாக, விடைகளுக்குப் புள்ளிகளோ தரங்களோ வழங்கப்படலாம்.

2.பார்வையிடப்படும் விடைத்தாள்களுக்குரியவர்களைத் தேர் வாளர் இனங்காணுவரேயாயின் புள்ளியிடலில் அகவயத் தன்மை அதிகரித்துக் காணப்படும். எனவே, இயன்றளவுக்குத் தேர்வுநாடியை இனங் காணாத நிலையிற் புள்ளியிடல் வேண்டும். இதன் மூலம் தேர்வாளரிடம் ஏற்படக்கூடிய கோடல், பரிவேட விளைவு என்பவை புள்ளிகளில் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்புத் தாழ்த்தப்படுகிறது.

3.குறிப்பிட்ட ஒரு வினாவுக்கான அனைத்து விடைகளையும் பார்வையிட்டுப் புள்ளி வழங்கிய பின்னர் அடுத்த வினாவுக்கான விடையைப் பார்வையிட ஆரம்பிக்கும் வழிமுறை சிறந்ததெனக் கருதப்படுகின்றது. இவ்வாறு செயற்படும் போது, குறிப்பிட்ட வினாவுக்குரிய விடையைப் பார்வையிட்டு முடியும் வரை அவ் வினாவுக்கான விடையின் அமைப்பு மனதில் தொடர்ந்து இருப்பதற்கு வாய்ப்புண்டு. 

4.குறித்த ஒரு வினாவுக்குரிய விடைகளைப் பார்வையிட்டு முடிந் ததும் விடைத்தாள்களின் ஒழுங்கைக் குலைத்துவிட்டு அடுத்த வினாவுக்கான விடையைப் பார்வையிடத் தொடங்கலாம். இச் செயன்முறையானது புள்ளி வழங்கலில் பரிவேட விளைவைத் தவிர்க்க உதவுகின்றது.

5.ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வாளர்களைத் தெரிவு செய்து அவர் கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக விடைத்தாள்களுக்குப் புள்ளி வழங்கும்படி ஒழுங்கு செய்யலாம். ஒவ்வொரு மாண வனுக்கும் அத்தேர்வாளர்கள் அளிக்கும் புள்ளிகளின் சராசரிப் பெறுமானமானது அவரவரின் இறுதிப் புள்ளியாகக் கருதப்பட லாம். வேறு தேர்வாளர்கள் கிடைக்காத சந்தர்ப்பங்களில், ஒரு தேர்வாளரே சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் அதே விடைத் தாள்களுக்குப் புள்ளிகளை வழங்கலாம். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் வழங்கிய புள்ளிகளின் சராசரிப் பெறுமதியை இறுதிப் புள்ளியாகக் கொள்ளலாம்.

அமைப்புக் கட்டுரைவகை வினா:

 
கட்டுரைவகைச் சோதனையின் ஒரு பிரதான குறைபாடு புள்ளி வழங்கலில் அகவயத் தன்மையென்பதனை அறிவோம். புறவயத் தன்மையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியால் சோதனையின் பிரதான நோக்கத்தையோ அல்லது அதன் ஒரு பகுதி யையோ தியாகஞ் செய்ய வேண்டியேற்படலாம். எனவே, இவ்விரு நிலைப்பாடுகளுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையில், அதாவது கட்டுரை வகையின் சிறப்பம்சங்களை விட்டுக் கொடுக்காமலும் அதேநேரத்தில் புள்ளியிடலில் புறவயத் தன்மையை அதிகரிக்கச் செய்யவும் அமைப்புக் கட்டுரை வகை வினாக்கள் ஒரு பொருத்த மான முறையாக உருவாகின.

முதலில், ஒரு கட்டுரைவகை வினா மூலம் சோதிக்கப்பட வேண்டிய பிரதான குறிக்கோள்கள் பொதுமைத் தன்மை கூடுதலாக வுள்ள குறிப்பான குறிக்கோள்களாக இனங்காணப்படுகின்றன. அடுத்து, தர்க்க ரீதியாகவும் பாடப்பொருள் ரீதியாகவும் ஒன்றுட னொன்று தொடர்புடைய சில படிகளாக முழு வினாவுக்குரிய விடை நோக்கப்படுகின்றது. ஒவ்வொரு படியிலும், பொருத்தமான சிறு வினாக்கள் அமைக்கப்படுகின்றன. தேவையையொட்டி, இவை, வெவ்வேறு மட்டத்து உள ஆற்றல்களை அளவிடக் கூடியவையாக

அமைக்கப்படலாம். இவ் வினாக்கள் ஒவ்வொன்றும் அவ்வினாத் தொகுதிக்குரிய முழு விடையின் அர்த்தமுள்ள ஒரு பகுதியை அதன் விடையாகக் கொண்டிருக்கும். இங்கு, மாணவரின் துலங்கலுக்குக் கட்டுப்படுத்திய சுதந்திரம் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு படியும் குறிப்பாகக் கூறக்கூடிய ஒரு சரியான விடையைக் கொண்டிருப்ப தால் புள்ளி வழங்கலில் புறவயத் தன்மை உயர்வாகக் காணப்படுகின் றது. இவ்வகைச் சோதனையானது ஏனைய வகைகளுடன் இணைந்து, கல்வி அடைவின் மதிப்பீட்டை முழுமையாக்க உதவுகின்றது.

 

Leave a Comment